சமீப பதிவுகள்

டென்மார்க்கின் குடிமக்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைக்கு (ஹிஜாப்) தடை விதிக்க விரும்புகிறார்கள்

ban-on-hijab

டேன்ஸ் என்று சொல்லக்கூடிய டென்மார்க்கின் குடிமக்களின் கணக்கெடுப்பில், 10 பேரில் 6 பேர் பொது இடங்களில் ஹிஜாப் மற்றும் முகத்திரையின் தடையை ஆதரிக்கின்றனர் என்பதை ஒரு சமீப ஆய்வில் தெரியவந்தது.

மார்கஸ் நுத் (Danish Liberal Party) இந்த கணகெடுப்புப் பற்றி கூறும்போது:

“… இது சமுதாயத்தில் பெண்களுக்கான ஒடுக்குமுறையாகும் …” என்று கூறியது.

கருத்து:

ஹிஜாப் மற்றும் முகத்திரையின் மீது ஏற்பட்டுள்ள இந்த விவாதங்கள் புதியதோ அல்லது ஆச்சரியத்திற்குமான விஷயமோ இல்லை. ஏற்கனவே 2010 ல் 53% டேன்ஸியர்கள் ஹிஜாபின் தடைக்கு ஆதரித்தவர்கள் என்பதை இணையதளங்களில் நாம் காணலாம். பெல்ஜியத்தில் இதேப்போல் நடந்த ஹிஜாபின் தடைக்கு, ஐரோப்பிய நீதிமன்றங்கள் “ஜனநாயக சமூகத்தில் இதுவும் ஒரு தேவையான விஷயம்” என்றும் “மக்களின் தனிப்பட்ட சுதந்திரமாக இது உள்ளது” போன்ற கருத்துக்களை கூறி ஹிஜாபுக்கு சாதகமாக தீர்ப்பளித்தன. இதற்க்கு பின், டென்மார்க்கில் இந்த விஷயம் சூடுபிடித்து, அங்குள்ள மக்கள் தன் நாட்டில் முகத்திரையை தடை செய்ய அரசிடம் கோரிக்கையாக வைத்துள்ளனர்.

ஆகவே, டென்மார்க்கில் மட்டுமல்லாமல் மேற்கத்திய உலகம் முழுவதிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்கும் நேரம் மிக நெருக்கமாக இருப்பதுடன், இவர்களின் நோக்கத்தை நாம் தெளிவாகப் புரிந்து அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

முகத்திரை பெண்கள் மீது கடமையா அல்லது சுன்னத்தா என்று சில முஸ்லிம்களுக்கிடையில் வாதங்கள் நடந்து, பெரும்பாலான மத்ஹபுகள் முகத்திரையை கடமையாக கூறவில்லை என்று முடிவுக்கு வந்து, ஏற்கனவே, அழுத்தப்படுகின்ற மற்ற இஸ்லாமிய அடையாளங்களுக்கு இந்த முகத்திரையின் தடை பெரிய அச்சுறுத்தலை முன்வைக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையான விஷயம் முற்றிலும் வேறுபட்டது.

இந்த விஷயம் “முஸ்லிம் பெண்களின் உரிமைக்காகவோ”, “தனிப்பட்ட சுதந்திரமோ”, அல்லது “மத்ஹபுகளின் ஆதாரங்களைக் குறித்தோ” கிடையாது. மேலும், இது தனிப்பட்ட மக்களைச் சார்ந்த ஒரு விஷயமோ அல்லது சமுதாயத்தில் தழுவி வாழக்கூடிய ஒரு விஷயமாகவோ நாம் பார்க்கக்கூடாது.

டேனிஷ் (டென்மார்க்கின்) அரசியல்வாதிகள் உரிமை, சுதந்திரம் அல்லது பெண்களின் நல்வாழ்வைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட டேனிஷ் பெண்கள் வன்முறைக்கு உட்பட்டு மேலும் 37% பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு ஆய்வின் படி தெரிந்த தகவல். இந்த மாதிரி குற்றங்கள் நடக்கும் நாட்டில், இவற்றை தடுக்க எங்கே போனது தடைகளும், சட்டங்களூம்? எங்கே போனது சிறப்பு முயற்சிகளும், பொது விவாதங்களூம்?

டேனிஷ் ஆட்சியாளர்கள் தன் நாட்டு பெண்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதும் இல்லை அவர்களை முழு மனதுடன் கவனித்துக்கொள்வதும் இல்லை, மேலும் முஸ்லிம் பெண்களை அதை விட குறைவாக தான் கவனிக்கிறார்கள். டேனிஷ் அரசியல்வாதிகள் தம் மக்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் துணியின் ஒரு துண்டு பற்றியும் கவலைபடுவதில்லை என்றால் முஸ்லிம் பெண்களின் துணியான ஹிஜாபைப் பற்றி ஏன் கவலைபடுகிறார்கள்!!!…

இஸ்லாமை எல்லா புறத்திலிருந்திலும், அனைத்து வடிவங்களிலும் எப்படியாவது தாக்குவது மட்டும் தான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. முஸ்லிம்களின் துணியை மட்டுமல்லாமல் இஸ்லாமிய குழுக்கள், தனிநபர்கள், கருத்துக்கள், எண்ணங்கள், நூல்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றையும் நாளுக்கு நாள் தாக்கிக்கொண்டே வருகிறார்கள்.

முகத்திரையானது ஹிஜாபுடன் சேர்த்து வெறும் மத்ஹபுகளின் மாற்றக்கருத்தாக பார்க்காமல், அல்லாஹ்வுக்கு(சுபு) கீழ்படிவதற்கான ஒரு அடையாளமாக நாம் இதை பார்க்க வேண்டும். அதனால் தான் இது தாக்குதலுக்குக் காரணமாக உள்ளது மேலும், இதை தடை செய்ய மேற்கத்திய ஆட்சியாளர்கள் மிக ஆர்வமாக உள்ளனர் என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துக்கொள்ளவேண்டும்.

இந்த விஷயத்தை நாம் சுலபமாக எடுக்காமல், இதை தொலைநோக்குப் பார்வையிடவேண்டும். முஸ்லிம் சமூகங்கள் இந்த தடையயைப் பற்றி தனிப்பட்ட கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், ஹிஜாபை முன்வைத்து இது இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். இன்று முகத்திரையை தாக்கியவர்கள் நாளைக்கு ஹிஜாபை கண்டிப்பாக தாக்குவார்கள் என்று உணரவேண்டும்.

இதுப்போன்ற இஸ்லாத்தின் மீதான கொடூரமான சட்டங்கள் நம்மை எப்படி பாதிக்கும் என்று முஸ்லிம்களாகிய நாம் தீர்மானிக்க வேண்டும்!.நாம் இதை ஏற்றுக்கொள்கிறோமா அல்லது நிராகரிக்கிறோமா?. இதுப்போன்ற சட்டங்களை தலை வணங்குவோமா அல்லது எதிர்த்து நிற்போமா?. நாம் முடிவு எடுப்போம், அல்லாஹ்(சுபு) நம்மோடு இருப்பான்..

Comments are closed.