சமீப பதிவுகள்

செய்திப் பார்வை 08.09.2017

saudi

தலைப்புச் செய்திகள்:

இங்கிலாந்து சிறைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

சவூதி அரேபியா கடந்த வருடம் செய்த சீர்திருத்தத்தை அவசரமாக (விரைந்து) மறுபரிசீலனை செய்கின்றது

சீனா மற்றும் பாகிஸ்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆப்கானிய கொள்கையை மாற்றியமைக்க முற்படுகின்றனர்

இங்கிலாந்து சிறைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையில் குறிப்பிடப்படாத அளவு அதிகரித்திருப்பது “கவலையளிக்ககக்கூடிய” போக்காக உள்ளது. இதற்கு மூல ஆதாரமாக விளங்குவது “சமூக பிரிவு (சமூகபிளவு)”. லேண்ட்மார்க் அறிக்கை குற்றவியல் நீதியிலுள்ள இனவெறியை பற்றி இங்கு குறிப்பிடுகிறது. தொழிற் கட்சி எம்.பி. டேவிட் லாம்மி எதற்காக முஸ்லிகளின் எண்ணிக்கை சிறைசாலையில் கிட்டத்தட்ட 50% வரை அதிகரித்துள்ளது என்பதை பற்றிய தகவல் இல்லை என்று குறிபிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “வெளிப்படைத்தன்மை இல்லாதது பொறுப்புணர்வை குறைமதிப்பிற்கு(கேள்வி கணக்கிற்கு) உட்படுத்துகிறது.” ஏனெனில் முஸ்லிம் சிறைவாசிகளின் எண்ணிக்கை தற்போது 13,200 ஆகும்.கணக்கீட்டின் படி இதன் பொருள் என்னவென்றால் முஸ்லிம்கள் 15% பேர் சிறைவாசிகள் ஆவர். ஆனால், அவர்கள் பிரிட்டிஷ் மக்கள் தொகையில் 5% மட்டுமே முஸ்லிம்கள் உள்ளார்கள். அவரது அறிக்கையில் குற்றவியல் நீதி அமைப்பிலுள்ள இனவெறியையும் மேலும் அவரது குறிப்பில் நீதிமன்றங்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் பிரதிவாதிகளின் ‘மதம் பற்றிய பதிவுகள் ஏதும் இல்லை என்றும் இதனால் முஸ்லீம் மக்கள் ஏன் சிறையில் அதிகரித்து உள்ளார்கள் என்றும் பதில் கூற முடியாது எனவும் கூறுகிறார். 2016 ல் டேவிட் கேமரூனால் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் அறிக்கை வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது, அதில்: “கவலையளிக்ககக்கூடிய” போக்காக உள்ளதாகவும், இதன் அபயகராமான மூல ஆதாரமாக விளங்குவது இன பாகுபாடும், “சமூக பிரிவும்(சமூகபிளவு)”, ஆகும். இதன் வீரியத்தைப்(அபாயத்தை) பற்றி நாம் மிக குறைவாகவே அறிந்து வைத்துள்ளோம். முஸ்லிம்கள் மேலுள்ள விசாரணை முடிவோ அல்லது தீர்ப்பின் முடிவோ இது போன்ற விளைவுகள் (முஸ்லிம்களின் எண்ணிக்கை சிறையில் அதிகரித்திருப்பது) ஏற்படுவதற்கு காரணமா..? சிறைச்சாலைகளில் காவலில் வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமிற்கு மாற்றப்படுகிறார்களா? நாம் இந்த பிரச்சனையைப் பற்றி அறிந்திராவிட்டாலும், இதை மிக தீவிரமாக அணுக வேண்டும். சமத்துவ மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் டேவிட் ஐசக், ஹஃப்ஃபோஸ்ட் பிரிட்டனிடம், ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை நாம் உற்று நோக்கினால், நம்முடைய இஸ்லாமிய எதிர்ப்பு இதனுடன் தொடர்புடையதை நாம் அறியமுடியும். ஆனால் இது ஏன் நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. “இதனால்தான் நமக்கு தேவையான வெளிப்படையான தகவல்கள் வெளியிடப்பட்ட வேண்டும். அதன்மூலம் முஸ்லிம்கள் சிறையில் ஏன் அதிகரிக்கிறார்கள் என்பதையும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் காணலாம். ” என்று கூறினார். சமீப வருடங்களில் சிறைச்சாலைகளில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு அதிகரிப்பதை அவர் கவனித்ததாக டாக்டர் ஹக் தெரிவித்தார் மேலும் அவர், எனக்கு ஆச்சரியமாக இல்லை ஏனெனில் “இது குற்றவியல் நீதி அமைப்பு முழுவதும் நடக்கிறது”. இது ஒரு சமூக வெற்றிடத்திற்குள் நடப்பதில்லை”. ஏனெனில் குற்றம் சார்ந்த சந்தேகத்திற்காக தனிநபர்களை இலக்காகக் கொண்ட சட்ட அமலாக்க அதிகாரிகளின் பாரபட்ச நடைமுறையும், முஸ்லிம்களை குற்றவாளிகளாகவே சித்தரித்து பழக்கப்பட்ட அவர்களின் கலாச்சார நடைமுறையுமே ஆகும். இஸ்லாமிய வெறுப்புணர்வு உடைய அதிகாரிகளால் கறுப்பின மக்களிடம் எவ்வாறு பாகுபாடு கட்டினார்களோ அதேபோல முஸ்லிம் ஆண்களிடமும் நடந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் உடைய மக்கள் குற்றவியல் நீதி அமைப்பை வழிநடத்துகின்றனர். இதன் காரணமாகவே சிறைச்சாலைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நினைக்கிறேன் என்று டாக்டர் ஹக் ஹஃப்ஃபோஸ்ட் பிரிட்டனிடம் தெரிவித்துள்ளார்.

மிக தீவிரமான இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் பிரிட்டிஷ் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஊடுருவி விட்டது, எனவே இங்கிலாந்தின் சிறைகளில் உள்ள பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது ஆச்சரியமல்ல.

சவூதி அரேபியா கடந்த வருடம் செய்த (பொருளாதார) சீர்திருத்தத்தை அவசரமாக (விரைந்து) மறுபரிசீலனை செய்கின்றது

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள, NTP 2.0 எனும் திட்டத்தை குறிப்பிட்டுகின்ற அதிகாரப்பூர்வ ஆவணத்தின் படி, தேசிய மறுசீரமைப்பு திட்டத்திற்கு (National Transformation Program) மிக அதிக கவனம் செலுத்துகின்ற, மேலும் “தெளிவான ஆளுகையினால்” புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் மறுசீரமைப்பு முக்கிய நிதி அல்லது ஆற்றல் தொடர்பான இலக்குகளை எந்த விதத்திலும் மாற்றாது, ஆனால் இதை சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானின் விஷன் 2030 உடன் பொருந்தி பார்க்க வேண்டும். ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களுக்கு சவூதி அரசாங்க அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. தேசிய மறுசீரமைப்பு திட்டத்தில் (National Transformation Program) குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் இயற்கையான வளர்ச்சியை எட்டுவதற்கு முழுமையாக ஒருங்கிணைக்கும் அளவில் தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்படவில்லை என, துபாயின் ஆபத்தை கட்டுபடுத்தும் துறையின் மூத்த ஆய்வாளர் கிரஹாம் க்ரிஃபித்ஸ் கூறியுள்ளார். சவூதி அரேபியா கடந்த வருடம் செய்த (பொருளாதார) சீர்திருத்தத்தை அவசரமாக (விரைந்து) மறுபரிசீலனை செய்வதற்கு காரணம் இருக்கிறது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது ஏனெனில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அசல் NTP சவுதி அதிகாரத்துவத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. அரசு சார்ந்த ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் 2020 ஆம் ஆண்டுக்குள் இலக்குகளை அடையவதற்கு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சவூதி இளவரசரின் விஷன் 2030 ஆல் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் விதமாக, ‘தொலைநோக்கு 2030′ என்கிற மிகப் பெரிய திட்டத்தை,சில நாட்களுக்கு முன்பு சவுதி அரசு கொண்டுவந்தது. அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ‘அரம்கோ’வின் பங்குகளை விற்பது என்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தனக்கு வேண்டிய அளவு, முதலீட்டு செலவுகளுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள முடிவு செய்து இருக்கிறது. NTPயின் மறுவரைவு மூலம் எதுவும் பாதிக்கப்படவில்லை. விஷன் 2030 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது, அதைப் பற்றிய சாதக பாதகங்களின் பொது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கடந்த டிசம்பருக்கு முன்பே NTP ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்தைப் பற்றி உள்ளூர் ஊடகங்களில் குறிப்பிடபட்டிருந்தது. இறுதியாக, அவணத்தின்படி NTPயில் குறிப்பிடபட்டுள்ளத்தை மாற்றம் செய்து விஷன் 2030 உடன் இணைக்கப்பட வேண்டும். NTP பின்னர் விஷன் 2030-ன் 12 திட்டங்களில் ஒன்றாக ஆனது. இதன் விளைவாக திட்டத்தின் ஆரம்பத்தில் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஆற்றல், நிதி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சரகம் உட்பட பல அரசாங்க நிறுவனங்களும் நேரடியாக ஈடுபடவில்லை. இதிலுள்ள ஆபத்து என்னவென்றல் திட்டங்களை மாற்றி, மாற்று பாதையில் பயணிப்பதால் மீண்டும் மீண்டும் இது ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும். என்று கூறுகிறார் துபாயின் ஆபத்தை கட்டுபடுத்தும் துறையின் மூத்த ஆய்வாளர் கிரஹாம் க்ரிஃபித்ஸ். நீங்கள் உங்கள் இலக்குகளை உங்கள் விருப்பத்திற்கிணங்க மாற்றியமைத்து, அதற்கு ஏற்றவாறு கோப்புகளை திருத்தல், திட்டங்களை மறு உருவாக்கம் செய்தல், அரசாங்க கட்டமைப்புகளை பயன்படுத்துதல் இது போன்ற வேளைகளில் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் உண்மையான வேலை செய்வதற்கு ஒருபோதும் முன்வரவில்லை. ஆவணத்தில் சொன்னபடி ஜூலை மாதம் முதல் புதிய NTP அரம்பிக்கும்போது அதற்கேற்றவாறு பணிசெய்ய பட்டறைகளும் தயாராயின. இந்த பணியானது அக்டோபர் மாதம் இறுதி வரை தொடரும். இந்த புதிய NTP திட்டத்தை வடிவமைக்க அரசாங்கத்தின் பாதி அமைச்ச்சரவை ஈடுபட்டன. பார்வையாளர்கள், ரியாத் நகரில் ஒரு ஆடம்பர ஹோட்டல் அடித்தளத்தில் உள்ள பட்டறைகளில் ரகசியமாக ஒரு உறுதிமொழியை கையெழுத்திட கேட்கப்படுகிறார்கள். அரசாங்க ஊழியர், மற்றும் நிபுணர்கள் தங்கள் laptopல் மூளையைக் கசக்கி, ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக கலந்து, தங்கள் கருத்துகளை எழுதி விஷன் 2030 ஐ வெளிக்கொணர பாடுபடுகின்றனர்.

இயற்கையான வளர்ச்சியும் அமைதியையும் ஏற்படுத்தும் கிலாஃபா ஆட்சியின் கீழ் ஆழமான சீர்திருத்தங்களும் உறுதியான மாற்றங்களும் இல்லாமல், இவர்கள் செய்யும் இந்த மாற்றமானது எந்த சீர்த்திருத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் சவுதி உற்சாகத்துடன் NTP யின் மூலம் தங்கள் மேற்கத்திய எஜமானர்களுக்கு ஊழியர்களாக தொடர்கின்றனர். இவர்களின் விஷன் 2030 மேற்கத்திய சக்திகளுக்கு மேலும் தங்கள் அடிமைத்தனத்தையும் காண்பிப்பதாக உள்ளது

சீனா மற்றும் பாகிஸ்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆப்கானிய கொள்கையை மாற்றியமைக்க முற்படுகின்றனர்

சீனா மற்றும் பாகிஸ்தானின் உயர் இராஜதந்திர அதிகாரிகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆப்கானிய கொள்கையை மாற்றியமைக்க முற்படுகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகால மோதலைத் தீர்க்க தாலிபனுடன் புதிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். சீன வெளியுறவு அமைச்சர் வாங்வி வெள்ளியன்று பெய்ஜிங்கில் உறுதியான திடமான நண்பனாக இருக்கும் பாகிஸ்தானுக்கு உறுதியாக பின்னால் நின்று எப்போதும் தாம்(சீனா) அதரவாக இருப்பதாக கூறினார். ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுக்களை எப்படி முன்னெடுப்பது என்பது தொடர்பிலான கூட்டம் இஸ்லாமாபாத்தில் தொடங்கியுள்ளது. எனினும் “சில நாடுகள்” பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராடும் பாகிஸ்தானை நம்பாமல் மறுத்து வருகின்றன என்று அமெரிக்காவை குறிப்பிடுகின்றார். பாகிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சர் மந்திரி கவாஜா ஆசிப் தனது முதல் வெளிநாட்டு பயணத்தின்போது, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இந்த ஆண்டு புதிய உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன, மேலும் அமெரிக்கா தனது ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிறுத்தி வைக்கும் போதும் கூட பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தனது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல முற்படுகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயங்கரவாதிகள் பாதுகாப்பான புகலிடமாக இஸ்லாமாபாத் விளங்குவதாக குற்றம் சாட்டி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவியை நிறுத்துவதாக அச்சுறுத்தினார் (ஆதாரம் : வாஷிங்டன் போஸ்ட்)

பாக்கிஸ்தானிய தலைமை தனக்கு சாதகமாகவும் தனக்கு ஏற்றவாரும் தனது ஆதரவை மாற்றுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை கடந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிரான முன்முயற்சியை துவங்குவதன் மூலம், சீனாவின் மேலாதிக்கம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் காலுன்றுவதக்கு பாகிஸ்தான் சீனாவிற்கு உதவ முடியும். அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு போர்களை முன்னெடுக்க முடியாது, எதனுடன்(எந்த நாட்டுடன்) போர் புரியவேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டும். தனது சர்வதேச நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்போது அது(அமெரிக்கா) தனது கூட்டாளிகளை அதாவது தனது நட்பு நாடுகளை இழக்க நேரிடும்.

Comments are closed.