சமீப பதிவுகள்

அனைத்து விதமான அதிகாரத்தை கலீஃபா கொண்டிருக்க எவ்வாறு அவரை விசாரணைக்கு உட்படுத்துவது?

கலீஃபாவுக்கு இஸ்லாம் அனைத்து வித அதிகாரத்தையும் வழங்குவதில்லை. உண்மையில் தவறுகள் ஏதும் ஏற்படாத வண்ணம் கலீஃபாவை கட்டுப்படுத்தி மற்றும் அவருக்கு ஒரு வேலியை ஏற்படுத்தக்கூடிய வகையிலான வரையறைகள் பலவற்றை அது கொண்டுள்ளது. இஸ்லாம் பல்வேறு அதிகாரங்களை கொண்டு கலீஃபாவை வலுவடையச்செய்கிறது அதேசமயம் அவற்றை பல்வேறு நெறிமுறைகளை கொண்டு கட்டுப்படுத்துகிறது.

ஆட்சிபுரியும் அதிகாரத்தை கலீஃபாவுக்கு பை’ஆ எனப்படும் இஸ்லாமிய ஆளுகை ஒப்பந்தத்தின் மூலமாக முஸ்லிம்கள் மனமுவந்து அளிப்பது கட்டாயமாகும். இந்த பை’ஆ இல்லாமல் கலீஃபாவால் ஆட்சிபுரிய முடியாது. இதன் பிறகு அவருடைய அதிகாரம் ஹுகும் ஷரீ’ஆவிற்குள் கட்டுப்படுத்தப்படுகிறது அதாவது இஸ்லாமிய ஆதாரங்கள் சரி மற்றும் தவறு என்று வரையறுத்ததை அவரால் மாற்ற முடியாது.

பை’ஆவின் முதன்மை நிபந்தனைகளானது கலீஃபா தனது பதவிக்கான ஏழு கட்டாய நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் மற்றும் கிலாஃபத்திலுள்ள குடிமக்களின் மீது ஷரீ’ஆவை அமல்படுத்த வேண்டும். கலீஃபாவின் இந்த ஏழு கட்டாய நிபந்தனைகள் மீறப்படும் போது, அவரை நீக்குவது அவசியமாகிறது.

பை’ஆ என்பதொரு ஒப்பந்தமாகும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படைகளை மீறாமல் இருக்கும் பட்சத்தில் கலீஃபா கட்டாயம் பின்பற்றுவதற்கு இந்த ஒப்பந்தத்துடன் கூடுதல் நிபந்தனைகளை சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மஜ்லிஸ் உல்-உம்மா (மக்கள் ஆலோசனை மன்றம்) மற்றும் நீதித்துறைக்கு அதிகாரமளிப்பது போன்ற குறிப்பிட்ட அரசியலமைப்பு நடைமுறைகள் மூலம் கலீஃபாவின் செயல் அதிகாரத்தை முறைபடுத்த அனுமதியளிக்கப்படுகிறது.

ஆளுநர்கள் மற்றும் மேயர்களை நியமிப்பது, தேசத்தின் அயலுறவு கொள்கையை வடிவமைப்பது மற்றும் அயல்நாட்டு தூதுவர்களை ஏற்பது போன்ற செயல் அதிகாரங்கள் பலவற்றை ஆட்சியாளர் பெற்றிருப்பார். எனினும் இவற்றோடு மட்டும் அவருடைய அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இதை தாண்டி அவரால் செயல்பட முடியாது. ஆட்சியாளரின் பங்கு பொதுவான விஷயங்களோடு கட்டுப்படுத்தப்படுகிறது ஆகையால் அவருடைய குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதிலிருந்து அவர் தடுக்கப்படுகிறார். எனவே கிலாஃபத்திற்கு உள்ளாக செயல் அதிகாரங்கள் அனைத்தையும் கலீஃபா பெற்றிருந்த போதிலும் அவருடைய அதிகாரங்கள் ஷரீ’ஆவினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Comments are closed.