சமீப பதிவுகள்

அமெரிக்கா தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவை குழப்பத்திற்கும், பிரச்சனைக்கும் இழுத்து வருகிறது, ஆனால் BRICKS தலைவர்களோ இஸ்லாத்தை கண்டனம் செய்கிறார்கள்!

brics

இந்த பிராந்தியங்களில் மற்றும் உலகில் உள்ள பிரச்சினைக்குரிய காரணங்களாக இஸ்லாம் இல்லை, மாறாக உலகில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து அமைதியை நிலைநாட்டும் சித்தாந்தமாக இஸ்லாம் உள்ளது. 4, செப்டம்பர் 2017, திங்களன்று BRICS உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட Xiamen பிரகடனத்தில் வெளியானது: “கொரிய தீபகற்பத்தில் நீடித்திருக்கும் அணுசக்தி பிரச்சினை மிகுந்த கவலையை அளிக்கிறது, அது சமாதான வழிமுறையிலும், சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளின் நேரடி உரையாடல்களிலும் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின.

இந்த விஷயத்தில் நம்முடைய பார்வை பொறுத்தவரை, அமெரிக்கா தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்தியத்தை பெரும் குழப்பத்திற்குள் இழுக்க முயல்கிறது, இதனால் பிராந்தியத்தில் அச்சுறுத்தப்பட்ட மாநிலங்களின் ஆதரவாளர்களாகவும், முரட்டுத்தனமான நாடுகளுக்கு எதிராக ஒரு தடையாகவும், வட கொரியாவின் செயலை ஒரு போலிக்காரணமாக அமெரிக்கா பயன்படுத்துகிரது. வட கொரியாவின் இந்த இராணுவ சோதனைகள் அரசியல் மற்றும் ஊடக இலக்குகளை அடைவதற்காக செய்யப்படும் வானவேடிக்கையே தவிர வேறில்லை என்பது தெரிந்தும் அமெரிக்கா இதை பயன்படுத்தி ஆசிய பிராந்தியத்தில் தன்னுடைய கட்டுப்பாட்டை நிலைநாட்ட நாடுகிறது. மேலும் பிரிக்ஸ்(BRICS) தலைவர்கள் அமெரிக்காவின் பொறிக்குள் விழுந்துவிட்டனர்.

எது எவ்வாறு இருந்த போதிலும், நமக்கு இந்த பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் முக்கிய கவலை எதை குறித்து என்றால், இந்த நாடுகளுக்கு பல இஸ்லாமிய இயக்கங்களை, உண்மையான மற்றும் கற்பனையான ஒரு பிரச்னையாக கருதுகின்றனர். அந்த இயக்கங்களின் மத்தியில், ஹிஸ்புல் உத் தஹ்ரிர்ரையும் சேர்த்துள்ளனர். ஹிஸ்பு உத் தஹ்ரிரான நாங்கள் இஸ்லாத்திற்கும், இஸ்லாத்தை வைத்து மக்களின் விவகாரங்கள் நிர்வகிக்கப்படும் சிந்தனைக்கும் எதிராக இருக்கும் நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற எந்த ஒரு நாடுகளிடமிருந்து வந்த இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறாக இஸ்லாமிய உம்மாவிற்கு இந்த விளக்கத்தை நாம் தெளிவுபடுத்துகிறோம். இதன் மூலம், முஸ்லீம் உம்மத்திற்கும், அதன் மேலான தீனுக்கும் எதிராக பல திட்டங்கள் திட்டமிடப்பட்டிருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதேபோல் தவறான வழியில் வழிநடத்தப்படும் BRICS மக்களுக்கு அது ஒரு பேராசை கொண்ட முதலாளித்துவவாதிகளால் ஆளப்படுகிறது. தங்கள் செல்வத்தை அதிகரிக்கவும், தங்கள் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் வைத்து தங்கள் மக்களை அடிமைப்படுத்தவும், ஒடுக்குமுறையிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் அவர்கள் விடுதலை பெறுவதை விட்டு தடுக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

இஸ்லாமிய உம்மத்திற்கும் மற்ற மக்களுக்கும் நாங்கள் கூறுபவை::

முதலில்,
ஹிஸ்புத் தஹ்ரீர் என்பது இஸ்லாத்தை சித்தாந்தமாக கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். அது இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதை தன்னுடைய நோக்கமாக கொண்டுள்ளது. மனித சமூகத்திற்கு பிரச்சனைகளையும், குழப்பங்களையும் கொடுதுள்ள மனித அறிவில் இருந்து பிறந்த ஜனநாயக, மதசார்பற்ற அமைப்புற்கு மாற்றாக இஸ்லாமிய அமைப்பை நடைமுறை படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.நம்முடைய கட்சி இஸ்லாமிய உம்மாவின் ஒரு குழு, செல்வத்திற்காக பேராசை பிடித்திருக்கும் மேற்கு நாடுகளின் மேலாதிக்கத்திலிருந்து அதை விடுவிக்கும் பணியில் முஸ்லீம் உம்மாவோடு இணைந்து செயல்படுகிறது. முதலாளித்துவத்தின் அநீதிகளால் நிர்வகிக்கப்படும் மக்களுக்கு நாகரீகமான மாற்றாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி அதை உலகம் முழுக்க எடுத்து செல்லும் விஷயத்தில் உம்மாவோடு இணைந்து ஹஸ்புத் தஹ்ரீர் செயல்படுகிறது. இவற்றை அல்லாஹ்(சுபு) கட்டலைக்கினங்க செய்து வருகிறது. எனவே உம்மத்திற்கும், மற்ற மக்களுக்கும் குறிப்பாக அடக்குமுறைபடுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு இருக்கும் BRICS போன்ற நாடுகளுக்கு இஸ்லாமிய அமைப்பே சிறந்ததாகும்.

இரண்டாவதாக,
“பயங்கரவாதம்” என்பது அமெரிக்காவின் உருவாக்கம் ஆகும். ஆனால் தற்போது அது மற்ற நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக BRICS போன்ற நாடுகளால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
மேலும் பயங்கரவாதத்தை சாக்காக வைத்து இஸ்லாத்தின் மீதும் அதை நடைமுறைப்படுத்த உழைக்கும் அழைப்பாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மேலும் இஸ்லாம் அதிகாரத்தில் வராமல் இருப்பதற்கும் இவர்கள் இந்த பயங்கரவாதம் என்ற கருவியை பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால், இஸ்லாம் அதிகாரத்தில் வந்தால் அது முதலாளித்துவ சித்தாந்தத்தின் உண்மை விஷயத்தை தோலுரித்து காட்டி, மனிதர்களுக்கு நிம்மதியை வழங்கும் சட்டம் இஸ்லாம் தான் என்பது மக்களுக்கு தெளிவாகிவிடும் என்பதற்காக இவர்கள் அதை தடுக்கிறார்கள். மேலும் இஸ்லாம் நடைமுறைபடுத்தப்பட்டால் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு மக்களை அடக்குமுறைப்படுத்தி அவர்களுடைய செல்வங்களை சூறையாட முடியாத நிலைமை ஏற்படும் எனவே தான் இவர்கள் இஸ்லாத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

மூன்றாவதாக,
உலகம், குறிப்பாக தெற்கு மற்றும் தென் ஆசிய நிலப்பரப்பு ஒரு பாதுகாப்பான சூழலை கண்டதில்லை. ஆனால் இதே நிலபறப்பு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த போது அமைதியையும் பாதுகாப்பையும் கண்டது.பல நூற்றாண்டுகளாக சீனா அதன் இராணுவத்தை கலைக்க தள்ளப்பட்டது, ஏனென்றால் வெளிப்புற அச்சுறுத்தலை அது உணரவில்லை. இஸ்லாத்தின் கீழ் இருக்கும் போது இந்த நிலபரப்புகள் கண்ட வளமான மற்றும் செழிப்பான ஒரு நிலைமையை அதற்கு பிறகு ஏப்போழுதும் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றாள் உலகின் உணவுக் கூடையாக இந்தியா இருந்தது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அதன் பொருளாதார நிருபங்களை ஊழலில் இருந்து காப்பாற்றுவதற்கு கடன்களை அளித்தது.முதலாளித்துவமும் சீன கம்யூனிசம் உட்பட மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் கீழ் இப்பகுதி ஒரு ஆயுதப் போட்டி அரங்காக மாறியது, உலகின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமான மக்களுக்கு இடையூறு மற்றும் தீங்கை விளைவித்தது.

நான்காவதாக,
அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் அதாவது ஹிஸ்புத் தஹ்ரீர் இஸ்லாத்தை மிக துல்லியமான மற்றும் தெளிவான புரிதலோடு எடுத்து சென்று அதை நடைமுறைப்படுத்துவது தான் மனித குலத்திற்கு ஒரு நாகரிக மாற்றாக இருக்கும். இந்த பிராந்தியத்தின் மக்களை பசி மற்றும் வறுமையில் இருந்து காப்பாற்ற ஒரே வழியாகும். மக்கள் விவகாரங்களை கவனிப்பதில் இஸ்லாம், அதன் விதிகள் மற்றும் அமைப்புகள் தனித்துவம் வாய்ந்தவை, மேலும் மக்களுக்கு மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்தும். வரலாற்று இதற்கு சான்றளிக்கிறது, மேலும் அதன் கலாச்சாரம், அதன் புத்தகங்கள் மற்றும் அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட விவகாரத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது

ஐந்தாவதாக,
இஸ்லாமிய மார்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வர இஸ்லாமிய உம்மாவை நாம் அழைக்கிறோம்.
மேலும் இஸ்லாத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வழிமுறையை அறிந்து அதன்படி செயல்படும் ஹிஸ்புத் தஹ்ரீருக்கு இராணுவ உதவி(நுஸ்ரா) அளிப்பதின் மூலமாகவே இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முடியும். மேலும் இந்த நிலப்பரப்பில் வாழும் மக்களையும், சிந்தனையாளர்களையும், அதன் ஆட்சியாளர்களையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைக்கின்றோம். மேலும் இஸ்லாத்தை தங்கள் நம்பிக்கையாகவும், வாழ்க்கை நேர்த்தியாகவும், அரசியல் அமைப்பாகவும் ஏற்றுக்கொள்ள அழைப்புவிடுகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் தற்போது இவர்கள் வாழும் துன்பகரமான சூழ்நிலையிலிருந்து வெளியேறவும், நரகத்தின் வேதனையிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.

قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ۚ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَِ

(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். [ஆல இம்ரான் (3:64)]

Comments are closed.