சமீப பதிவுகள்

ஆட்டுக்குட்டியை ஓநாயிடம் ஒப்படைத்தது, “உயரிய” துருக்கி

prisoner

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சர்களால் புதிய சட்டமன்ற தீர்ப்பு (KHK) இறுதி செய்யப்பட்டது. ஆணை எண் 694 – உத்தியோகபூர்வ வர்த்தமானியில்(Official Gazette) பிரசுரத்தை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது – துருக்கியில் கைதுசெய்யப்பட்ட அல்லது சிறைபிடிக்கப்பட்ட வெளிநாட்டவரை அவர்களின் தாயகத்திற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ அனுப்பப்படலாம் அல்லது தேவைப்பட்டால் தமது நாட்டவருக்கு பதிலாக பரிமாற்றி கொள்ளளாம் என அறிவித்தது.

விதி எண் 26, சட்டம் எண் 2937 ஆம் அரசாணையில் குறிபிட்டதாவது: ” கைது செய்யப்பட்ட அல்லது சிறைப்பட்ட துருக்கி குடியுரிமையற்ற நபர்களை, வேறொரு நாட்டிற்கு ஒப்படைக்கப்படலாம் அல்லது வேறொரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பகரமாக பறிமாற்றிக் கொள்ளலாம், அந்த நபரின், அவரது / அவளது இனம், பாரம்பரியம், மதம், குடியுரிமை போன்ற காரணத்திற்காக அந்த நபரை தண்டிப்பது, சித்தரவதை செய்வது அல்லது தவறாக நடத்துவது போன்றவற்றில் ஈடுபடமாட்டார்கள் என உத்தரவாதம் உறுத்செய்யப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு அல்லது நாட்டின் நலன்களைப் பற்றிய வழக்குகளில், வெளியுறவு அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் மற்றும் நீதித்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ஒப்புதல் மூலம் நிறைவேற்றவேண்டும்.”

கருத்துரை:

முதலில்; கைது செய்யப்பட்ட அல்லது சிறைப்பட்ட துருக்கி குடியுரிமையற்ற நபர்கள் யார். யாரை இந்த ஆட்சியாளர்கள் ஒப்படைக்கவோ அல்லது பரிமாற்றிக்கொள்ளவோ போகிறார்கள் என்பதை பற்றிய தகவல்களைத்தான் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பிற குஃப்ர் மற்றும் கொடுங்கோன் ஆட்சிகளின் சித்திரவதையிலிருந்து தப்பித்து துருக்கியிடம் அடைக்கலம் நாடி புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் தான் மேற்குறிப்பிட்ட ஆணையின் இலக்கு. இது தெளிவாக முஸ்லிம்களை அபாயத்தில் ஆட்படுத்திவிடும். இது ஏனேனில் ஒரு சட்டம் அல்லது சட்டத்தை நிகழ்ச்சி நிரலில் அல்லது ஒரு சட்டம் தயாரிக்கப்படுவதால், அதன் உள்ளடக்கம் தொடர்பான ஒரு வழக்கு / நிபந்தனை வெளிப்படும். கைதுசெய்யப்பட்ட அல்லது சிறைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு குடிமக்களில் 99 சதவிகிதம் பேர் மத்திய ஆசியா, மத்தய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளின் முஸ்லீம்கள் என்பது நன்கு அறியப்பட்டதாகும். எனவே, இந்த ஆணை ஒடுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்தோரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டாவதாக; சட்டவிரோதமாக குடியேரியவர்களை ஓப்படைத்தல் அல்லது பரிமாறிக்கொள்ளுதல் சம்மந்தமான விதியின் உண்மை நிலையைப்போறுத்தவரை தேசிய புலனாய்வு சட்டத்தில் சட்டம் எண் 2937யில் சேர்க்கப்பட்ட ஆணை பின்வருமாறு காட்டுகிறது: நாட்டின் எல்லைக்குள் நடந்த குற்றத்தை சோதனையிட்டால், அதை தனிப்பட்ட முறையில் அரசாங்க உளவுத்துறை அமைப்புகளால் நடத்தப்படும். அதுவே நாட்டின் எல்லைக்கு அப்பால் நடந்த குற்றம் என்றால் அதை அதன் உளவுத்துறையுடன் இணைந்து செயல்பட்டு, கைதுசெய்யப்பட்ட நபரை அனுப்பிவைக்கும்.அதனால் நாம் இப்போது கேட்கிறோம்: “…நபரின், அவரது / அவளது இனம், பாரம்பரியம், மதம், குடியுரிமை போன்ற காரணத்திற்காக அந்த நபரை தண்டிப்பது, சித்தரவதை செய்வது அல்லது தவறாக நடத்துவது போன்றவற்றில் இடுபடமாட்டார்கள் என உத்தரவாதம் உறுத்செய்யப்படவேண்டும்…” இவ் ஆணையில் எழுதப்பட்ட இந்த அறிக்கை, யதார்த்தத்தில் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லையா? முஸ்லீம்களை ரஷ்யா, சீனா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஒப்படைத்தால் உங்களுக்கு அந்த உத்தரவாதத்தை யார் அளிப்பார்கள்? முதலில் உங்களாள் அந்த உத்தரவாதத்தை அளிக்க முடியுமா? ரஷ்ய, சீனா அல்லது எந்த ஆசிய சர்வாதிகாரிகளால் அளிக்க முடியுமா? யாரால் முடியும்? ஆட்டுக்குட்டியை ஓநாயிடம் ஒப்படைப்பதைப் போல், புலம்பெயர்ந்து வந்த முஸ்லீம்களை குஃப்ர் மற்றும் கொடுங்கோன் ஆட்சியளர்களிடம் நீங்கள் ஒப்படைப்பீர்கள் என்று நமக்கு தெரியும். மேலும் அவர்களுக்கு அல்லாஹ்வின் அச்சம் சிறிதும் இல்லை என்பதையும் நாம் அறிவோம். மேற்கிற்கும் ரஷ்யாவிற்கும் ஊழியர்களாக மாறிய மூன்றாம் உலக நாடுகளுக்கும், துருக்கிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

மூன்றாவதாக; துருக்கிக்கு குடியேறியவர்களை ரஷ்யா, சீனா போன்ற குஃபர் நாடுகளுக்கும், மற்றும் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற அடக்குமுறை கொடுங்கோல் நாடுகளிடமும் ஏற்கனவே ஒப்படைத்தார்கள் என்பது நமக்கு நன்றாக தெரியும். இருப்பினும, இந்த அரசானை துருக்கியில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும், குறிப்பாக கைதுசெய்யப்பட்ட மற்றும் சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது புலம்பெயர்ந்தோரை திரும்ப அனுப்பும் மையங்களில் 300 க்கும் மேற்பட்டோர் கிழக்கு துர்க்கிஸ்தானைச் சார்ந்தவர்களும், மேலும் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கைச் சார்ந்த நுற்றுக்கனக்கான கைதிகள் உள்ளனர். சீனா மற்றும் ரஷ்யாவுடனான இந்த துருக்கி ஒப்பந்தங்கள் புலம்பெயர்ந்த முஸ்லிம்களை நோக்கமாகக் கொண்டுள்ளன. ரஷ்யா மற்றும் சீனாவுக்கு சாதகமான அனைத்து வழிகளிலும் துருக்கி செல்கிறது. அது முஸ்லிம்களைப் பாதுகாக்காமல் அவர்களை கொடூரகாரர்களிடம் ஒப்படைக வழிவகை செய்கிறது. இன்னும்; சிரியா முஸ்லிம்களை கைவிட்டு அவர்களை சிரியா அரசு மற்றும் ஈரான் கைகளில் ஒப்படைத்த துருக்கி, பஷர் அல் ஆசாத் ஆட்சியை ஒப்புக் கொண்டு, அதற்கு முன்னால் இருந்த காலப்பகுதியில் உள்ள உறவுகளை மீண்டும் நிலைநிறுத்த, சிரியா அகதிகளை அவர்களிடம் ஒப்படைக்களாம் என்று நாங்கள் பயப்படுகிறேன்.

இறுதியாக; இந்த விதியை நடைமுறைபடுத்துவதன் மூலம் ஜூலை 15 சம்பவத்தில் தப்பி ஓடிய நபர்களை திரும்ப கொண்டு வர முடியும் என ஜனாதிபதி எர்டோகன் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கூறிகின்றனர், இது; உண்மையை மறைத்து திசை திருப்பும் முயற்சியாகும். உண்மையில் இந்த ஆணை ஒடுக்கப்பட்டவர்ளையும் பாதுகாப்புத் தேடி புலம்பெயர்ந்து வந்தோர்கள் மீதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று நாம் அறிவோம், ஏனெனில் இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து குற்றவாளி எனக் கூறப்பட்ட எந்த ஒரு நபரையும் திரும்பப் பெற முடியவில்லை. இருப்பினும், சில கைதுசெய்யப்பட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க குடிமக்களை நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சட்டவிரோதமான முறையில் விடுவிப்பதற்கு சட்டபூர்வமாக ஒரு வழியை இந்த ஆணையம் ஏற்படுத்தியிருக்கலாம். இது துருக்கியின் வார்த்தை மற்றும் மதிப்பை கெடுக்கிறது.

எவ்வாறாயினும், துருக்கியில் உள்ள புலம்பெயர்ந்த முஸ்லீம் சகோதர, சகோதரிகளை கொடுங்கோளர்களிடம் ஒப்படைக்க அனுமதிக்கக்கூடாது. ஒடுக்கப்பட்டவர்களை சித்தரவதைச்செய்யும் சீன நாஸ்திகர்களிடமோ, கொலைகார ரஷிய கொடுமைக்காரனுடமோ, கொடூரமான ஆசிய கலகக்காரர்களிடமோ நமது ஆட்சியாளர்கள் ஒப்படைக்க நாடினால் அவர்களை மிக கடுமையாக எச்சரிக்வேண்டும்.

“நம்மிடம் அடைக்கலம் நாடி வந்த ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நாங்கள் நிற்க்கிறோம், கொடுங்கோளர்களிடமோ அல்லது குஃப்பர்களிடமோ நாங்கள் கூட்டானி வைப்போர்கள் அல்லர்!” என்று துருக்கித்தலைவர்களின் முகத்திற்க்கு முன் உரக்கக் கூறுங்கள்.

Comments are closed.