சமீப பதிவுகள்

கலீஃபா எவ்வாறு விசாரிக்கப்படுவார்?

முஸ்லிம் உலகிலுள்ள பெரும்பாலான தலைவர்கள் மீது வழக்கு தொடர்வதிலிருந்து கொண்டிருக்கும் தடை காப்பு நிலையின் வசதியை கலீஃபா கொண்டிருக்கமாட்டார். விசாரணை காலத்தின் போது கலீஃபா தனது அரசியல் சவுகரியத்திற்காக நீதிபதிகளை நீக்கவோ அல்லது நியமிக்கவோ முடியாது. இது சமூகத்தில் கிடைக்கப்பெறும் பலவிதமான முறைகளில் கலீஃபாவை விசாரிக்கக்கூடும் என்பதை காட்டுகிறது. இஸ்லாம் விசாரணைக்கான கடுமையான நடவடிக்கைகளை உருவாக்கி நிறுவியுள்ளது. அரசு நிறுவனங்களின் மூலமாக, அரசியல் கட்சிகள் நிறுவுவதற்கான கடமையை ஏற்படுத்துவதன் மூலமாகவும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்கு அனைத்து குடிமக்களின் மீதும் கடமையை ஏற்படுத்துவதன் மூலமாகவும் ஒரு செயல்திறன் மிக்க ஊடகத்தின் மூலமாகவும் மற்றும் கலீஃபாவின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர் எவ்வித சட்டமீறலிலும் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட நீதித்துறை மூலமாகவும் விசாரணைக்கான உத்திரவாதத்தை இஸ்லாம் அளிக்கின்றது. இதை தவிர்த்து ஆட்சியாளரை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் பல்வேறு வழிமுறைத் தொகுப்புகளும் இஸ்லாத்தில் வேரூன்றியுள்ளது.

Comments are closed.