சமீப பதிவுகள்

கலீஃபா ஒரு நிலையான பதவிகாலத்தை கொண்டிருப்பாரா?

கலீஃபாவிற்கு நிலையான பதவிகால அளவு என்பது கிடையாது. அவர் ஆட்சியமைப்பு ஒப்பந்தத்தை மீறும்போது அல்லது ஆட்சியமைக்கும் தகுதியை பெறுவதற்கு தேவையான அடிப்படைகளில் ஏதாவதொன்றை மீறும்போது அநீத செயல்களுக்கான நீதிமன்றம் எந்நேரத்திலும் அவரை பணிநீக்கம் செய்யலாம். பைஅத்தின் ஒப்பந்தமானது கால அளவினை கொண்டு வறையறுக்கப்படுவதில்லை மற்றும் நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்குப்பதிவின் மூலம் அவருடைய பொறுப்பிற்கான தீர்ப்பையும் வழங்கப்படுவதில்லை.

அரசில் அவருடைய பணிக்காலத்திற்கு எவ்விதமான கட்டுப்பாடும் இன்றி ஜனதாயகத்தில் நாம் காண்பது போன்று ஒரு தேர்தலுக்கும் அடுத்துவரும் தேர்தலுக்கும் இடையேயான குறுகியகால திட்டங்களுக்கு மாறாக நெடுங்கால மூலோபாய திட்டங்கள் மீது கலீஃபா தனது கவனத்தை செலுத்தலாம். அதேபோல மேற்குலகில் எந்தவொரு அதிபர் வேட்பாளர் அல்லது கட்சி தமது பதவியை அடைவதற்கு தேர்தல் பிரச்சார நன்கொடைகள் பெற வேண்டிய கட்டாயத்தில் அரசு திட்டங்களை பெருநிறுவனங்கள் நலன்களுக்காக நடத்துவதை தடுக்கும்.

Comments are closed.