சமீப பதிவுகள்

கலீஃபா பதவியிலருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா?

ஆமாம். மேற்கத்திய ஜனநாயகத்தில் நாம் காண்பதை விட பல மடங்கு இஸ்லாம் அமைப்புசார் மற்றும் முடிவுசார் சுயாதிகாரத்தை நீதித்துறைக்கு வழங்கியுள்ளது. இஸ்லாம் அநீதத்திற்கான நீதிமன்றம் (மஹ்கமத் மஜா(Z)லிம்) என்றழைக்கப்படும் ஒரு சுயாதீன உயர் நீதிமன்றத்தை நிறுவியுள்ளது. அது மிகவும் சிறப்பு மற்றும் தகுதிமிக்க நீதிபதிகளின் தலைமையின் கீழ் செயல்படும் மற்றும் அது விரவான ஷரீ’ஆவின் அதிகாரங்களை வழங்கப்பெற்றிருக்கும். எந்தவொரு அதிகாரியையும் மிக முக்கியமாக கலீஃபா உட்பட அரசில் அவர்கள் கொண்டிருக்கும் பங்கு மற்றும் உயர் நிலைக்கு அப்பாற்பட்டு பை’ஆவின் (ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம்) நிபந்தனைக்கு புறம்பான வழியில் பிடிவாதமாக செயல்படும் போது அவர்களை நீக்கும் அதிகாரத்தை அது கொண்டிருக்கும்.

சாதாரண குடிமக்கள் அரசுக்கு எதிராக ஏதேனும் புகாரை கொண்டிருந்தால் அவர்கள் இந்த நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கலாம். ஏனைய நீதிமன்றத்தை காட்டிலும் அநீதத்திற்கான நீதிமன்றத்தின் தனித்துவம் என்னவெனில், அரசு விசாரணை நீதிபதியானவர் (காதி முஜா(Z)லிம்) ஒரு விசாரணையை துவங்குவதற்கு முன்பாக வாதியின் எந்தவொரு புகாரும் அளிக்க தேவையில்லாமல் விசாரிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார். ஆக இந்த நீதிமன்றம் அரசின் அனைத்து அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் சட்டமியற்றுதல் ஷரீ’ஆவுக்கு இணக்கமான முறையில் இருக்கின்றதா என்பதையும் மக்கள் மீது எவ்விதமான அடக்குமுறையும் கட்டவிழாத வண்ணம் தொடர்ந்து கண்காணித்து வரும்.

Comments are closed.