சமீப பதிவுகள்

கிலாஃபத்தில் அரசியல் கட்சிகள் இயங்க முடியுமா?

ஆம். தற்காலத்தில் முஸ்லிம் உலகெங்கும் அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரமுகர்களை அதிகாரத்திற்கு கொண்டு சென்று அதன் மூலமாக ஊழல்களில் ஈடுபட்டு மக்களுடைய இழப்பில் தங்களுடைய செல்வங்களை அதிகரித்து கொள்ளும் ஒரே நோக்கத்தில் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தில் உள்ள இதுபோன்ற ஊழலுற்ற அரசியல்வாதிகள் ஆளில்லா விமான தாக்குதல் நடத்த அனுமதிப்பதன் மூலமும் மக்களை புறக்கணிப்பது மற்றும் ஊழல்களில் ஈடுபடுவதின் மூலம் மக்களின் மீது நசுக்கும் வறுமையை ஏற்படுத்துவதன் மூலமும் தங்களுடைய மக்களை கொல்வதற்கு அனுமதிக்கின்றனர்.

இஸ்லாத்தில், அரசியல் என்பது இஸ்லாமிய ஷரீ’ஆவை நடைமுறைப்படுத்தி மக்களின் விவகாரங்களை கவனிப்பதன் அடிப்படையிலானதாகும். இஸ்லாமிய அரசியலை பொறுத்தவரை மக்களின் வாழ்வு, நம்பிக்கை, பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் மற்றும் உடைமை ஆகியவை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, இதற்கு மாற்றமாக செயல்படுவதாக நிரூபணம் ஆகும் பட்சத்தில் எந்தவொரு கட்சியும் அதன் பிறகு இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

Comments are closed.