சமீப பதிவுகள்

செய்திப் பார்வை 09.09.2017

buddhists

தலைப்புச் செய்திகள்:

அமெரிக்காவின் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில்லை

மியன்மாரில் ஆங் சாங் சூகி-ன் புகழ் அதிகரிப்பதால் மேற்குலகம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடக்கும் பேரழிவுகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறது

பாகிஸ்தானுக்கு எதிரான BRICS (பிரிக்ஸ்) பிரகடனத்திற்குப் பின்னர் அதனை (பாகிஸ்தானை) மீண்டும் (தன் நட்பு நாடக) உறுதிப்படுத்த சீனா முனைப்பாக (விரைவாக) செயல்படுகிறது.

அமெரிக்கா பல சூறாவளிகளால் பதிக்கப்பட்ட போதிலும் அது (அமெரிக்கா தனது காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதில்லை

காலநிலை மாற்றத்தால் அமெரிக்கா சாதாரண அளவைவிட அதிகமான பல புயல் சூறாவளிகளை எதிர்கொண்டுள்ளது. தேசிய பொது வானொலி(National Public Radio)வின் கூற்றுப்படி: அட்லாண்டிக் கடலில் உருவான ‘ஹார்வி’ புயல் கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் தெற்கு பகுதியை தாக்கியது. அதில் ஹுஸ்டன் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பு அடங்காத நிலையில், அட்லாண்டிக் கடலில் மேலும் ஒரு புயல் உருவானது. அதற்கு இர்மா என பெயர் சூட்டியுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இரண்டாவது மிகப்பெரும் சக்திவாய்ந்த புயலாக இர்மா புயல் கருதப்படுகிறது. இதை தொடர்ந்து உருவாகியுள்ள ஜோஸ் புயல் தொடர்ந்து வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறத. ‘ஹார்வி’ மற்றும் இர்மா புயல்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல்நீர் வெப்பமயமாதலால் ஆவியாக தொடங்கியது. இதனால் பெரும் புயல்கள் உருவாகின. ஏனெனில் சராசரி கடல் வெப்பச்சலனத்தைவிட தற்போது கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் என்பது வெறும் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியின் காரணமாக மட்டுமல்லாது, மாறாக உலகின் இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துவதாலும் சுரண்டுவதாலுமே ஆகும். பிரிட்டன் கனிம வளத்தின் மீது தனது ஆதிக்கத்தை கொண்டுள்ளது, அமெரிக்கா முதன்மையாக உலக எண்ணெய் வளங்களை குறிவைத்துள்ளது, இதனை தனது பொருளாதாரத்தின் மையமாகக் கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் கலந்துரையாடல் எண்ணெய் மீதான நேரடி தாக்குதலாக இது கருதப்படுகிறது, இதனால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறது.

முதலாளித்துவ அரசியல் பொருளாதார நன்மையை மையமாக வைத்தே சுழல்கிறது. இதையே முதன்மையாகவும் சிறந்ததாகவும் பார்க்கிறது. பல ஆண்டுகள் கழித்து காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒபாமா அரசு பலவீனமான காலநிலை மற்றும் பிற நாடுகளில் காலநிலை மாற்றம் குறித்து சுமைகளை வைத்தது, ஒரு புதிய அணுகுமுறையை கடைபிடித்தது. கைப்பற்ற முடிந்தது, இது உடன்படிக்கைகளில் வெற்றிபெற்றது, இதற்கு எடுத்துகாட்டாக பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் காணலாம். ஆனால் டிரம்ப் இந்த ஒப்பந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினார்.

மனித நல்வாழ்வைப் பற்றியும் இயல்பான இயற்கையான சூழலைப் பற்றிய அக்கறை இல்லாமல் கனிம வளங்களையும் ஆற்றல் வளங்களையும் தனியார்மயமாக்கப்படுவது, முதலாளித்துவத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இந்த நன்மைகளை ஒரு சிலர் மட்டுமே அடைகின்றனர்(அடையமுடியும்). அதே நேரத்தில் வெகுஜன மக்கள் நீண்ட காலமாக உழைக்கிறார்கள், கடன்களுடனே தங்கள் காலத்தை கழிக்கின்றனர். ஏழ்மையும் வறுமையும் மட்டுமே அவர்களுக்கு மிச்சமாக எஞ்சி நிற்கின்றன.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ், மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்த போதிலும், மனித வாழ்க்கை எளிமையான மற்றும் இயற்கை சூழலுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் இருந்து வந்தது, செழிப்பு, வனப்பும் மற்றும் நல்வாழ்வும் பரவலாக எல்லோர் வாழ்விலும் இருந்து வந்தன.

மியன்மாரில் ஆங் சாங் சூகி-ன் புகழ் அதிகரிப்பதால் மேற்குலகம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடக்கும் பேரழிவுகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறது

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடக்கும் பேரழிவுகள் புதிய விகிதாச்சாரத்தை எட்டியுள்ளது. வாஷின்டன் போஸ்ட் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை, ஐ.நா. குறிப்பிடத்தக்க வகையில் கடந்த இரண்டு வாரங்களில் மியன்மாரில் பல ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வங்காளத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர் அதன் மதிப்பீடு 1,25,000திலிருந்து 2,70,000 மாக கணிசமாக உயர்ந்துள்ளது. .

திட்டமிடப்பட்ட வன்முறை மியன்மாரின் ராஹைன் மாநிலத்தை சூழ்ந்தது, அங்கு பெரும்பாலும் ரோஹிங்கிய முஸ்லீம் இன சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் பௌத்த பெரும்பான்மை மக்களாலும் இராணுவத்தாலும் தாக்கப்பட்டனர். இந்நிலையில் பலமான பௌத்த மக்களுக்கும் பலவீனமான ரோஹிங்கிய முஸ்லீம் மற்றும் பலதரப்பட்ட இடங்களுக்கு இடையே பதற்றம் நிலவியது.இந்த வருடம் கோடை காலத்தில் சுமார் 3,00,000 முதல் 5,00,000 வரையிலான ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஏற்கனவே வங்காளதேசத்தில் அகதி முகாம்களில் வாழ்ந்துவந்தனர். மீதமுள்ள 1.1 மில்லியன் ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் மியன்மாரில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25 முதல், அவர்களில் கால் பகுதியினர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நாட்டில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்ல அல்லது நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு வெளியேற்றுவதற்காக மியன்மார் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட ஒரு அதிபயங்கரமான திட்டமிட்ட தாக்குதல் என புகார் செய்துள்ளனர்.

ராக்கிங் மாகாணத்தைச் சுற்றி ஒரு அரசாங்கப் பயணத்தை மேற்கொண்ட ஒரு பிபிசி நிருபர், அவர் உள்ளூர் போலிசின் உதவியுடன் ரோஹிங்கியா கிராமத்தை எரிக்க அனுமதிக்கப்பட்ட பர்மிய மக்களுடன் பேசினார்.வெள்ளியன்று ஐ.நா. வின் சிறப்பு குறிப்பாய்வாளர் – மியன்மார் என்றும் அழைக்கப்படும் பர்மாவில் – கடந்த இரண்டு வாரங்களில் 1,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று கூறியுள்ளனர்.

மியன்மாரின் அதிபரும், நோபல் சமாதான பரிசும் வென்ற ஆங் சான் சூ கியும் தன்நாட்டில் முஸ்லீம்களின் துன்பங்களை முற்றிலும் நிராகரித்ததன் மூலம் பயனடைந்தனர். இது அவரது நாட்டில் அரசியல் ரீதியாக பலவீனமான நிலையை பலப்படுத்தியுள்ளது.மேற்குலகம் ஆங் சான் சூ கியின் வெற்றியை உன்னிப்பாக கவனிக்கிறது. இதற்கு முன்னர் மியன்மார், அதன் இராணுவத்தால் ஆட்சி செய்யப்பட்டது, அது சீனாவின் ஒரு அங்கமாக கருதப்பட்டது. ஆகையால், மேற்கு உலகம், வங்காளம் அதன் கொள்கையை மாற்றவும், அதன் எல்லைகளை முஸ்லிம்களுக்கு தப்பித்துக்கொள்ளவதற்காக திறந்து விடவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, வங்காளத்தில் ஷேக் ஹசினா ஆட்சி ரோஹிங்கியா முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக மியன்மார் அரசாங்கத்துடன் முழுமையாக பங்குபெற்றது. ஆனால் மேற்குலகம் ஆங் சான் சூகி யை காப்பாற்ற முனைப்பாக இருக்கின்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான BRICS (பிரிக்ஸ்) பிரகடனத்திற்குப் பின்னர் அதனை (பாகிஸ்தானை) மீண்டும் (தன் நட்பு நாடக) உறுதிப்படுத்த சீனா முனைப்பாக (விரைவாக) செயல்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான BRICS (பிரிக்ஸ்) பிரகடனத்திற்குப் பின்னர் சீனா பாகிஸ்தானிய குழுக்களை முக்கிய இலக்காகக் கொண்டு அதனை (பாகிஸ்தானை) மீண்டும் (தன் நட்பு நாடக) உறுதிப்படுத்த(முன்னெடுத்தது) இந்த வாரத்தில் சீனா முனைப்பாக (விரைவாக) செயல்படுகிறது. தவான் வெளியிட்டுள்ள செய்தியின்படி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானிய மண்ணிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் மேலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது என்று குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து வெள்ளியன்று சீனா பாகிஸ்தானை தீவிரவதத்திற்கு எதிராக போராடியதற்காக பாராட்டுவதாக கூறுகிறது. பாகிஸ்தானை போல பயங்கரவாதத்தை எதிர்த்து யாரும் போரிடவில்லை என்றும் மற்ற நாடுகளும் அதற்கான பாராட்டுகளை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு மக்களும் தியாகம் செய்துள்ளனர். மனசாட்சியுடன் கூறுகிறோம், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடியது பாராட்டுக்குரியது’ என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி கூறியுள்ளார்.

சீனா சென்றிருந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஆசிப் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி இவர்களுகிடயேயான சந்திப்பிற்கு பின் செய்தியாலர்களிடம் இதை அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரிக்ஸ் பாகிஸ்தானிய தலைமையை ஏற்காது என அறிவித்திருந்தது நிலையில், மத்திய அமைச்சரவை, பிரதம மந்திரி ஷாஹித் காக்கா அபலாசியை வியாழக்கிழமை இஸ்லாமாபாத்தில் சந்தித்தது.பிரிக்ஸ் பிரகடனத்தின் மீதான அதன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டது, பிரிக்ஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் ஏற்கனவே பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன என செய்திகள் அறிவிக்கப்பட்டன.அமெரிக்க அழுத்தத்திற்கு ஒரு எதிர்வினையாக பாகிஸ்தான் சீனாவுடன் தங்கள் உறவை மேம்படுத்தி கொள்ள முனைகிறது. இருப்பினும் பாகிஸ்தான், சீனா தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே தங்களிடம்(பாகிஸ்தானுடன்) உறவு கொண்டாடுவதை புரிந்துகொள்வதில் தோல்வியடைந்துள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் சீனா-அமெரிக்கா இடையேயான உறவு சிக்கலான நிலையை எட்டியுள்ளது. மேலும் சீனா தன் (தேச)நலன்களை பாதுகாக்க(காப்பாற்ற) பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனாவுடன் டோக்லலாம் எல்லைப் பிரச்சினையில் இருந்து இந்தியா திரும்பப் பெற அமெரிக்கா உதவியது, அதற்கு பகரமாக சீனா பாகிஸ்தானின் அமெரிக்க கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

முஸ்லீம் நாடுகள் மற்றவர்களை(மற்ற குஃபார் நாடுகளை) சார்ந்து அதனிடம் உதவி கோரி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது. அல்லாஹ்வின் அனுமதிப்படி, உண்மையான இஸ்லாமிய சிந்தனை கொண்ட தலைமை, இஸ்லாமிய கிலாஃபா அரசு அமைய நேரம் நெருங்கிவிட்டது, நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி அமையவிருக்கும் இஸ்லாமிய கிலாஃபா அரசு அல்லாஹ்வை தவிர எந்த ஒரு சக்தியையும் சார்ந்திராமல் தனித்தன்மையுடன் விளங்கும்.

Comments are closed.