சமீப பதிவுகள்

துரோக ஆட்சியாளர்கள் பொதுமக்களின் கருத்துகளை காலனியாதிக்க வாதிகளுக்கு சாதகமாக மக்களிடம் பொய் கூறி மக்களையே ஏமாற்றுகிறார்கள்

afghanistan

ஆப்கானிய ஜனாதிபதி முஹம்மது அஷ்ரஃப் கானி, பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்து ஆயுதப்படைகளின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவற்றை தீர்ப்பதற்கு “அடுத்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்கடாலர்கள் ஆப்கானிய விமானப் படைகளுக்கு செலவிடப்படும்” என்றார்.ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தனது பயணத்தின்போது 201 சேலாப் கார்ப்ஸ் எனும் ஆப்கானிஸ்தானின் இராணுவ படையையும் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்தித்தார்.அமெரிக்கா தனது புதிய உத்தியை அறிவித்த பின்னர், Resolute Mission (மீளாய்வு மிஷன்) அதிகரித்துள்ளது, இது மேலும் அதிகரிக்கும். (Resolute Support Mission என்பது ஆப்கானிஸ்தானில் 13,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை மற்றும் உதவியை செயல்படுத்துவதற்காக நேட்டோ தலைமையில் இயங்குவதாகும்) என்றார்.மேலும் அவர்: “கடந்த மூன்று நாட்களில் வெளிநாட்டு விமானப் படைகளின் எண்ணிக்கை இரு மடங்காக இருக்குமென நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். என்று கூறினார். இதன் பிறகு விமானப்படை தனது முழு ஒத்துழைப்பை நல்கும் என்று நான் நம்புகிறேன்.இதற்கிடையில் வியாழக்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கு புதிய துருப்புக்களை அனுப்புவதற்கான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். (Radio Azadi)

கருத்து :

ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியா மீது ட்ரம்பின் புதிய உத்தியை அறிவித்த பின்னர், அமெரிக்க இராணுவ விமானப் படைகள் தீவிரமாக அதிகரித்தன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள், சமீபத்தில் நங்கார்ஹார், குண்டுஸ், ஹெரட் மற்றும் லோகர் மாகாணங்களில் கொல்லப்பட்டனர்.பொதுமக்கள் மீது இத்தகைய விமான தாக்குதல்கள் பெருகி வருவது போரின் ஆழத்தையும் அதன் பயங்கரத்தை வலுவாகக் குறிக்கிறது, இது சமாதானத்திற்கு வழிவகை செய்யாது, இது எப்போதும் அமைதி பேச்சுவார்த்தையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.ஆகையால், அமெரிக்காவுடன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சமாதானம் மேற்கொள்வதென்பது அது கூறும் “பயங்கரவாதத்திற்கும் தீவிரவாததிற்கும்” எதிரான போரில் மட்டுமே அடைய முடியும், அத்துடன் சமாதானத்திற்காக அமெரிக்காவின் அனைத்து கட்டளைகளையும்(நிலைமைகளையும்) ஏற்க வேண்டும்.இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, 2016 முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும் போது, 2017 முதல் ஆறு மாத காலத்திற்குள் பொதுமக்களின் இறப்புகள் (இழப்புகள்) 43 சதவிகிதம் அதிகரிக்கின்றன.அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவிக்கும் இத்தகைய மிருகத்தனமான சூழ்நிலையில், ஆண்மையற்ற கோழைதனமான இந்த ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்தனர், அவர்களின் குரலை உயர்த்தவில்லை.சில மாதங்களுக்கு முன்னர் காஷ்மீரில் முஸ்லிம்கள் இறந்ததன் காரணமாக, ஆப்கானிய ஆட்சியாளர்கள் இந்தியப் படைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.இதனுடன் சேர்ந்து, அரசாங்கத்தின் செய்தி தொடர்பாலர்களும், ஊடகவியலாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் எப்போதும் அமெரிக்கா மற்றும் ஐ.நா. வின் குற்றங்களை வெட்கமின்றி நியாயப்படுத்த முயற்சி செய்கின்றன.

இது உண்மையில் ஜான் கெர்ரியின் (அமெரிக்காவின்) அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் கருத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இது போன்ற அறிக்கைகள் மூலம் தரங்கெட்ட கூலிப்படை ஆட்சியாளர்கள் இறந்தவர்களைப் பற்றி பொதுமக்கள் கருத்தை ஏமாற்றுவதற்காக இவ்வாறு முயற்சிகளை செய்வார்கள். மேலும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் வெறுப்புணர்வு அதிகரிக்கும் போது இராணுவப் படைகள் மீது முதலீடு செய்து அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்பை குறைகின்றனர்.ஆப்கானில் கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்கா செலவழிக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் பார்க்கையில், இது ஆப்கானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்க வேண்டும் ஆனால் உயர்த்தவில்லை, மாறாக பல்வேறு துருப்புகளை கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுடன் பினாமி யுத்தத்தை நடத்தி வரும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை. இறப்பு எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உண்மையில், காயமடைந்த படையினரின் மருந்துகளுக்கும், மருத்துவமனையில் செய்யும் செலவினகளுக்கும், இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள் மாதங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுவதற்கும் ஆகும் செலவு ஒரு லாபகரமான வியாபாரமாக பார்க்கப்படுகிறது.இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல் லஞ்சம் பெற்றபின் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். காயமடைந்த இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்திடம் இருந்து சிகிச்சை பெறும் உரிமையைக் கொண்டுள்ளதால், அவர்களது உறவினர்கள் மருந்துப் பொருட்களில் இருந்து தேவையான மருந்துகளை வாங்க வேண்டும்.இதற்கிடையில், காயமடைந்த படையினருக்கு வழங்க அரசாங்க மருந்துகள் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இத்தகைய ஊழல் நிறைந்த சூழ்நிலைகள் மற்றும் அரசாங்கத்தின் கவனக்குறைவு காரணமாக, தற்காப்பு படைவீரர்களின் குடும்பங்கள் தங்கள் நம்பிக்கையையும், மன தைரியத்தையும் இழந்துள்ளனர்.கூடுதலாக, பாதுகாப்புப் படைகளில் சேரும் நபர்களின் ஆட்குறைப்புக்கு இது வழிவகுத்தது; இதனால், போர்க்களங்களில் சண்டையிடும் வீரர்கள் மற்றும் சரணடைபவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

மறுபுறம், இது ஆப்கானிஸ்தானுக்கு அதிக துருப்புக்களை அனுப்புவது அங்கு தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கும் மற்றும் ஏனைய குழுக்களுக்கும் எதிராக 16 ஆண்டுகால யுத்தத்தை வெள்ள அமெரிக்க உக்தியின் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்கப் படைகள் தங்கள் எதிரியை எதிர்த்து போராடுவதற்கு கூடுதலாக ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி கொடுக்கிறது என்று மாட்டிஸ் கூறியுள்ளார். உண்மையில், இது காபூல்- வாஷிங்டன்ஆகிய இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் (BSA) இன் விதிகளுக்கு எதிரானது. இது உள்ளபடியே அருவருக்கத்தக்க வெட்கக்கேடான செயல். அமெரிக்க படைகள் மீண்டும் அசம்பாவித மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளன. இதனமூலம் அது(அமெரிக்கா) ஆயிரம் முறை எந்த உடன்படிக்கையையும், ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாது, கடைபிடிக்காது என மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. மேலும் அதன் மூத்த அதிகாரிகள் இராணுவ படைகளின் அட்டுலுளியங்கள் தொடரவேண்டும் அதன்மூலம் அவர்களின் ஆக்கிரமிப்பு இஸ்லாமிய நிலபரப்பில் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எவ்வாறாயினும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அதன் தற்போதைய துருப்புக்களின் எண்ணிக்கையை 8400 என்று அறிவித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 30 ம் தேதி, ஆப்கானிஸ்தானில் தற்போது 11,000 அமெரிக்க வீரர்கள் இருப்பதாக பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது புதிய பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது. இதனுடன், இந்த படைகள் போதாதென்று ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் வடிவத்தில் உள்ளனர். ஆனால் இந்த காலனித்துவவாதிகளின், பொய்யையும் போலி சிப்பாய்களின் எண்ணிக்கையும் பற்றி கேட்க இன்னும் யாருக்கும் தைரியம் வரவில்லை, அல்லது முஸ்லிம்களின் இரத்தத்தை ருசி பார்க்கும் இந்த வெட்கக்கேடான மோசடியைக் குறித்து அவர்களுடைய கூலிப்படை ஆட்சியாளர்களிடமிருந்து விளக்கம் கேட்கவும் யாரும் முன் வரவில்லை.

இதன் விளைவாக, மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் தொடர்ச்சியான துரோகி ஆட்சியாளர்களின் ஊழல்களிலிருந்து வந்தவை. இந்த ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான துரோகத்தால் அவர்கள் எதிரிகளின் குற்றங்களை மறைத்து, அவர்களின் காலனித்துவ திட்டங்களை செயல்படுத்துவற்கு மட்டுமே உறுதுணையாக இருப்பார்.மற்றும் தங்கள் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ திட்டங்களை முன்னேற செய்வதற்கு அவர்களின் ஒவ்வொரு செயல்களும் ஏமாற்றும் முட்டாள்தனமான அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன, மேலும் பொதுமக்கள் கருத்தை தங்கள் எஜமானரான அமெரிக்காவிற்கு சாதகமாக தங்களின் நாவன்மையால் பொய்யை மெய்யாக்கி அதன் மூலம் மக்களை ஏமாற்றி வருகின்றன.

ஆகையால், முஸ்லிம்கள் இந்த நேரத்தில் தங்களது நிலத்தில் அவர்களது ஆட்சியாளர்களின் வஞ்சகத்தையும், துரோகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும், இந்த துரோகிகளின் அதிகாரத்தை அகற்றுவதற்காக அவர்கள் எப்போதும் மாற்றத்திற்காக போராட வேண்டும், அதற்க்கு எப்போதும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் வழிமுறையை அடிப்படையாகக் கொண்ட கிலாஃபத்தின் மறுமலர்ச்சியின் மூலம் மட்டுமே இந்த உலகத்தில் நீதமான மற்றும் அமைதியான ஆட்சியை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கொடுக்க இயலும். அதன்மூலம் தங்கள் அவதூறான செயல்களுக்காக இந்த கேடுகெட்ட ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் இந்த காலனித்துவவாதிகள் அவர்களின் அரசியல் மற்றும் மத தலை நகரங்களுக்கு விரட்டி அடித்து செல்லப் பட வேண்டும்.

Comments are closed.