சமீப பதிவுகள்

சர்வதேச சமூகம் இறந்துவிட்டது

UN

சிரியாவின் ஆறு வருட போராட்டத்தில், பஷார் அல் அசாத் அரசின் நேச படைகள் மருத்துவமனைகள் மீதான குண்டு மழையை மீண்டும் தொடங்கியிருப்பது, மனித உரிமை நிறுவனங்களின் கடும் கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளது. மேலும் மருத்துவ வளாகங்கள் மீதான இந்த தாக்குதலை சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை என அங்கிருக்கும் மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (Guardian News, 29/09/2017)

விளக்கம்:

இத்லிப் நகரத்தை போர் விமானங்கள் குண்டு மழை பொழிவது, அந்நாடு இன்னும் பேரழிவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. அலெப்போ முற்றுகையின் போதிருந்த ஊடக கவனமும் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பும், இந்த முற்றுகையில் இல்லை. தன்னிச்சையாக செயல்படக்கூடிய சில பத்திரிக்கையாளர்களும் மற்றும் சில உதவியாட்கள் மட்டுமே இங்கு நடக்கும் போரை வெளிப்படுத்தி, சமூக உதவியும் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அடிக்கடி மருத்துவமனைகளில் குண்டு மழை பொழிந்து தகர்ப்பது எல்லை மீறிய செயலாகும். அங்குள்ள நிலைமையை திரும்ப திரும்ப பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கி கூற, அங்கிருக்கும் மருத்துவர்கள் தயாராக இல்லை. பல வருடங்களுக்கு முன்பே சிரியா விலைபோகி விட்டது. இன்று அது சந்திப்பதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக துன்புருத்தகூடிய மரணத்தை தவிர வேறில்லை.

‘The Guardian’ பத்திரிகை அறிப்பதாவது, தற்பொழுது அங்கு அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்பு பற்றிய விவரங்களை விவரிக்க, அங்குள்ள மருத்துவர்கள் மறுத்து வருகின்றனர். மேலும் இவ்வாறான உதவி அழைப்பு விடுப்பது செவிடன் காதுகளில் விழும் அழைப்பு என கூறுயுள்ளனர். உள்ளூரில் ஒரு மருத்துவமனையில் உதவி செய்துவரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்வதேச சமூகத்திற்கு என்னுடைய செய்தி என்னவெனில், அவர்கள் செய்வதை தாராளமாக செய்துகொள்ளட்டும், இன்னும் ஏன் இவ்வளவு காலம் எங்களை அழிக்காமல் இழுத்து கொண்டிருக்கிறார்கள்?”. மேலும் அவர் கூறுகையில் ‘சர்வதேச சமூகம் இவ்விஷயத்தில் செயலிழந்து விட்டதாகவும் இதற்கு பிறகும் மருத்துவமனைகளில் குண்டு மழை பொழிவதை தான் விரும்பவில்லை’ எனவும் அவர் கூறினார்.

சர்வதேச சமூகத்தை பற்றிய உண்மை நிலை பல நேரங்களில் வெளிப்படிருக்கின்றன. சிரியா பிரச்சனை இதில் இறுதியான ஒன்றாகும்.

மனித உரிமை நிறுவனங்களான இவர்கள் எங்கு கவனம் செலுத்துகிறார்கள், இவர்களின் உதவி தொகை எங்கு செல்கின்றது, இவர்களின் ராணுவ உதவி யாருக்கு செல்கின்றது என்பதெல்லாம் இவர்களின் அரசியல் ஆதாயத்தை பொறுத்தது என்பது தெளிவான விஷயமாகும். அப்பாவி பொதுமக்களின் மீதான அக்கறை என்றைக்குமே இவர்களுக்கு இருந்ததில்லை. சர்வதேச சமூகம் என்றைக்கோ இறந்து விட்டது.

இத்லிபில் இருக்கும் ஒரு மருத்துவரின் கூற்று இதை உறுதி படுத்திகின்றது, “நாங்கள் கொள்ளப்படுவதை பார்த்துகொண்டு நீங்கள் அமைதியாக இருப்பது, நீங்களும் அவர்களின் கூட்டாளிகள் என்பதை உறுதிபடுத்துகின்றன , நீங்கள் அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற தவறிவிட்டீர்கள்.”

இன்றிருக்கும் முதலாளித்துவ அமைப்பு அநியாயக்காரர்களையே ஆதரிக்கின்றன. மேலும் அவர்களின் ஆட்சியை தக்க வைக்க ராணுவ நடவடிக்கைகளும் எடுக்கின்றன. அசாத் அவர்களுக்கு தேவையுடையனாக இருக்கின்ற காரணத்தால், அவனை கவிழ்க்க போராடும் சிரியா முஸ்லிம்களுக்கு அவர்கள் ஒருபோதும் உதவி செய்ய மாட்டார்கள். இதிலிபை பொருத்தவரை, அங்கு உள்ளூர் அகதிகள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒழிவதற்கு ஏதுவான பாதுகாப்பான இடம் என்று அங்கு எதுவும் இல்லை. அசாதை எதிர்த்ததற்கான தண்டனையாக, மக்களை ஒரே இடத்தில் (இத்லிபில்) கூடவைத்து, அவர்களை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்வது இவர்களுக்கு சுலபமான விஷயமே.

முஸ்லிம் ஆட்சியாளர்களும், சர்வதேச சமூகமும் சிரியா மக்களை முழுமையாக கைவிட்டுவிட்டார்கள். இதுவரை சிரியாவிற்காக ( குறிப்பாக இத்லிபிற்காக ) பொருளாதார உதவி செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இச்சூழ்நிலையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் தெளிவானதாக இருக்கின்றன. கூண்டோடு அழிக்கப்பட்ட இவர்களின் பாதுகாப்பை உருதிபடுத்த இஸ்லாமின் அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு அரசின் ராணுவ நடவடிக்கையே தீர்வாக இருக்கும். தனிமனிதர்களோ, உதவியாளர்களோ, பத்திரிக்கையாளர்களோ அல்லது மருத்துவர்களோ இவர்களின் பாதுகாப்பிற்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. எது எப்படியோ, இவர்களின் உண்மையான உதவிக்கு அல்லாஹ் (சுபு) கூலி வழங்குவானாக. சிரியா மக்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய அரசான கேடையம் தேவை.

நபி (ஸல்) கூறுகிறார்கள்

“நிச்சயமாக இமாம் என்பவர் (கலிஃபா) ஒரு கேடையம் போன்றவராவார், அவரின் பின்பிருந்தே மக்கள் சண்டை போடுவார்கள், அவரின் பின்பிருந்தே மக்கள் பாதுகாப்பு பெறுவார்கள்” (முஸ்லிம்)

சிரியாவின் அவல நிலை மிக மோசமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய, மீண்டும் நிலைபெறப்படும் நேர்வழி பெற்ற கிலாபாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அதை கொண்டு வருவதற்கான முழு உழைப்பை எடுப்பதும், நமக்கு அவசியமாக இருக்கின்றது. அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க கிலாபா மட்டுமே உண்மையான ராணுவத்தை அனுப்ப கூடியதாக இருகின்றது. மேலும் மற்ற எல்லா நிலங்களில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களையும் இது விடுவிக்க கூடியதாக இருக்கின்றது. அங்கிருக்கும் மருத்துவர்களோ, உதவியாளர்களோ அல்லது பொதுமக்களோ இப்பிரச்சனைகளை தீர்த்து கொள்வார்கள் என நாம் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்ககூடாது.

وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌ ۚ وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙۚ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ؕ‏

“பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.” [ அந்-நிசா : 75]

–Nazia Rehman

Comments are closed.