சமீப பதிவுகள்

செய்திப் பார்வை 04.10.2017

vegas-shooting

பாலஸ்தீனிய கோமாளி நடவடிக்கை:-

பாலஸ்தீனிய பிரதமர் ராமி ஹம்தல்லாஹ் காசாவில் ஒரு ஒற்றுமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், அவருடைய பாதஹ் கட்சி மற்றும் ஹமாஸ் இடையே தேசிய நல்லிணக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது இந்த சந்திப்பு. “நாங்கள் எங்களுக்கு மத்தியிலுள்ள பிரிவினைகளை களைந்து, தேசத்தை நிறுவும் திட்டங்களை சரியான பாதையில் மேற்கொண்டு, பலஸ்தீனை நிறுவுவோம்” என்று ஹம்தல்லாஹ் கூறினார். இந்த பேச்சுவார்த்தைகளை எகிப்திய பாதுகாப்புப் பிரதிநிதிகள் கண்காணித்து வந்தனர். இதில் ஆச்சிரியம் அடைவதற்கு ஒன்றும் இல்லை, இந்த பேச்சுவார்த்தைகளின் திசை பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் இவ்விரண்டும் தனி நாடுகள் என்ற தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும், இஸ்ரேல் ஒரு தனி அரசு என்ற அங்கிகாரம் பெறவேண்டும். இதுவே இப்பகுதிக்கான அமெரிக்க திட்டம் ஆகும். இதுவே நவம்பர் 2014 பின்னர் காசாவில் நடைபெறும் அமைச்சரவையின் முதல் கூட்டம் ஆகும், இதற்கிடையில் ஹம்தல்லாஹ் தனது அமைச்சர்கள் இல்லாமல் ஒரு வருடம் கழித்து காசா சென்றது வந்துள்ளார். காசா பகுதியில் ஹம்தல்லாஹ் வந்தடைத்ததும், காசாவில் பாலஸ்தீனிய அதிகார ஊழியர்கள் பிரச்சனைகள் மற்றும் எல்லைகளை கடப்பதில் உள்ள பிரச்சனைகளை கையாள்வதற்கு பல குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன என்று அறிவித்தார். அங்கு நிலவும் பிரச்சனைகளில் உண்மையான பிரச்னை “இஸ்ரயேலின் ஆக்கிரமிப்பு”, அனால் இது முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

மேற்கத்திய வழியில், சவுதியின் சீர்திருத்தம்:-

சவூதி அரசியலமைப்பு ஆணையம் 2018 ஜூன் மாதம் முதல் இராஜ்யத்தின் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்கியுள்ளது. இது போன்ற சமூக மாற்றங்கள் இந்நாட்டிற்கு புதியது. இதனுடன் பெண்கள் விளையாட்டு அரங்கங்களில் நுழையவும், வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்திற்கு முதல் பெண் செய்தித் தொடர்பாளரை நியமனம் செய்வது போனற்ற மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இதே நேரத்தில், ரியாத்தில் கடுமையான பொருளாதார சீர்திருத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு ஆதாரமாக அங்கு பெருமளவில் நடக்கும் பத்திர விற்பனைகள் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் பங்கு பரிவர்த்தனையில் வளர்ந்து வரும் சந்தைகள் பட்டியல் சேர்வதற்காக செய்யப்படும் ஏற்பாடுகளே சான்று. பல ஆண்டுகளாக நாட்டை ஆண்டு ஆகல பாதாளத்திற்கு கொண்டு சென்ற பின்னர், இப்போது தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததை முயற்சி செய்கின்றனர்.

அமெரிக்காவில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல்:-

அமெரிக்காவில் சமீபத்திய வரலாற்றில் நடைபெறாத கொடூர துப்பாக்கிசூடு அக்டோபர் 1 ம் தேதி நடந்தது, லாஸ் வேகாஸ் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் (புகழ் பெற்ற மண்டலே பே கேசினோவிற்கு அருகில்) ரூட் 91 ஹார்வெஸ்ட் இசை விழா நடந்து கொண்டிருந்த போது, 64 வயதான ஸ்டீபன் பாட்கோக் என்பவன் அங்கு இருந்த பொது மக்கள் மீது சர மாறியாக துப்பாக்கி சூடு நடத்தினான், அதில் 57 பேர் இறந்தனர், 527 பேர் படு காயமடைந்தனர். அமெரிக்காவில் பொது மக்கள் திரள் மீது துப்பாக்கிச் சூடுகள் பொதுவாக ஒரு தனிநபரால் நடத்தப்படுகின்றன, ஆனால் ஊடகங்கள் பயங்கரவாத தாக்குதல்கள் போன்று இல்லாமல் இதனை மிகவும் வித்தியாசமாக கருதுகின்றன. இது போன்ற தாக்குதல் நடத்துபவர்களை தீவிரவாதி என்று குறிப்பிடாமல், “தனி ஓநாய்” என்றும் “பாட்டனார்” என்றும் “சூதாடி” என்றும் “முன்னாள் கணக்காளர்” என்றே குறிப்பிட்டுள்ளது. பியர்ஸ் மோர்கன் என்பவர் தனது தினசரி நாளிதழ் கட்டுரையில் சுட்டிக்காட்டியதாவது: ஒரு முஸ்லீம் பயங்கரவாதி இந்த வேகாஸ் அட்டூழியத்தை செய்திருந்தால், நாம் இதய துடிப்புகளில் புதிய சட்டங்களைக் கொண்டிருப்போம் ஆனால் தாக்குதல் நடத்தியதோ ஒரு வயதான வெள்ளையன் அதனால் இப்போது ஒன்றும் நடக்காது. முஸ்லீம் அல்லாதவர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுகையில் மேற்கத்திய அரசாங்கங்களின் பாசாங்குத்தனத்தை நம்மால் காண முடிகின்றது.

Comments are closed.