சமீப பதிவுகள்

முஸ்லீம் பெண்கள் அவர்களது உரிமைகளை இஸ்லாமிய நிழலின் கீழ் தவிர வேறு எது மூலமும் பெற மாட்டார்கள்

THUMB-TUNISIAN-WOMEN1-800x445

துனிசியா அதிகாரிகள், முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய தடை விதித்திருந்த அமைச்சரவை உத்தரவை ரத்து செய்து அந்த தடையை தற்போது நீக்கியுள்ளதாக ஜனாதிபதி செய்தித்தொடர்பாளர் Saida Garrach வியாழக்கிழமை அன்று கூறினார்.

ஒரு வெளிநாட்டவர் துனிசிய பெண்ணை திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து விதிகளும் ரத்து செய்யப்பட்டன அதாவது, 1973 சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.துணிசியாவின் பெண்களுக்கு வாழ்த்துக்கள்,தங்கள் கணவரை தேர்ந்தேடுக்கும் உரிமையை தங்களிடம் வழங்கிய இந்த சுதந்திரமான சட்டத்தை பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று சைதா கராச்(Saida Garrach) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படிவிட்டிருந்தார்(அல் ஜசீரா).

ஆகஸ்ட் 13 ம் தேதி பெண்களின் தினம் என்று அழைக்கப்படும் நாளில் துனிசிய ஜனாதிபதி பெஜீ கெய்ட் எஸப்ஸீ சட்டத்தை திருத்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார், இது நீண்ட காலத்திற்கு தாமதமானது என்று குறிப்பிட்டார். அவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் முழு சமத்துவத்திற்கும் அழைப்பு விடுத்தார், குறிப்பாக சொத்து பிறக்கும் சட்டமத்தை குறிப்பிட்டார். மேலும் அவர் இது மதத்துடன் முரண்படவில்லை என்று உறுதியாகிறது என்றும் கூறினார்!!!

செப்டம்பர் 8 ஆம் தேதி, பிரதமர் தன்னுடைய முந்தைய வெளியீட்டை இரத்து செய்து ஒரு ஆணையை வெளியிட்டார். அதே நாளில், நீதித்துறை அமைச்சர் மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களின் வழக்கறிஞர்கள், முதல் வழக்குகளின் தலைவர்கள் மற்றும் குடியரசு முகவர்கள் ஆகியவற்களிடம் 5 நவம்பர் 1973 தேதியிட்ட 216ம் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

துனிசிய பெண்கள் முஸ்லீம் அல்லாத ஆண்களை திருமணம் செய்வது ஹூ்கும் ஷரியாவிற்கு முரண்படுகின்ற போதிலும், துனிசிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாகவும் நடைமுறை ரீதியாகவும் எஸப்ஸீ ஒரு மாதத்திற்கு முன்னர் கூறியதை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. இன்னும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதாக கூறி மேற்கொள்ளப்படும் இப்படிப்பட்ட நடவடிக்கை இந்த நாட்டில் உள்ள பெண்களுக்கு ஒருபோதும் நல்லதல்ல !!!

துனிசியா கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்திய சட்டத்தை மாற்றி, இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் இந்த விஷயத்தை குறைகூறும் வகையில் எஸப்ஸீ மற்றும் அவரது அரசாங்கத்தின் முயற்சி பொய்யை உண்மையுடன் கலப்தற்கான முயற்சியாகும்.இன்றைய காலத்திற்கு ஏற்ப அந்த சட்டத்தை மாற்றுவது தவறில்லை என்பதுதான் அவர்களின் கூற்று, ஆனால் அல்லாஹ் (சுபு) இதற்கு மாற்றமாக சட்டத்தை கூறியுள்ளான் என்பது தெளிவான உண்மையாகும்.துனிசியாவில் உள்ள தற்போதைய ஆட்சியாளர்கள், மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு தலைப்புகளின் கீழ் வாழ்வில் இருந்து விலக்கப்பட்ட இஸ்லாமிய விதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் முன்னோர்களின் பாதையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் என்ற உண்மையை இது உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;

மேலும் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்
فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِ‌ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّ‌
எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.

ஏனெனில் துனிசியா அரசாங்கம் செயதுள்ள செயல் எப்படிப்பட்டது என்றால், இது ஷரியாவின் தீர்ப்புக்கு முற்றிலும் முரணானதும், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு நல்லதுமான இஸ்லாத்தை விட்டு அவர்களை நீக்கும் செயலாகும்.

துனிசியாவில் சட்டபூர்வமான விதிமுறைகளை அகற்றும் எஸப்ஸீ ஆற்றிய துரோகப் செயல் அறியாமையிலிருந்து வெளியேறியதில்லை.அவர் மகளிர் தினத்தன்று தன் பிரச்சாரத்தை தன்னிச்சையாகத் தொடங்கவில்லை, ஆனால் துனிசியாவின் பெண்கள் தங்கள் உரிமையை உண்மையாகக் காப்பாற்ற வேண்டுமென்ற கோரிக்கையிலிருந்து திசைத்திருப்பி, அவர்களை சர்வதேச ஆணைகளுக்கும் மாநாடுகளுக்கும், குறிப்பாக எஸப்ஸீ மரியாதையோடும் கீழ்ப்படிந்து பாதுகாக்கின்ற CEDAW மாநாட்டிற்கு முற்றிலும் கீழ்படியவைக்கும் செயல்பாடாகாதான் இதை செய்துள்ளார்.இதனுடைய விளைவு என்னவென்றால் முஸ்லீம் பெண்களை தவராக சித்தரித்தல் மற்றும் அல்லாஹ்(சுபு) அவர்களுக்கு கொடுத்த உரிமைகள் மற்றும் சலுகைகளின் திருட்டாகும்.

இசிப்சி மற்றும் அவரது சீடர்கள் தங்கள் செயல்களின் விளைவுகள் மற்றும் சத்திய தீனை எதிர்த்து தாக்குதல்கள் நடத்தியதின் விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் நல்லது எதுவென்றால், கிராமப்புற, ஏழை மற்றும் இடம்பெயர்ந்த பெண்கள் மற்றும் அல் கத்ராவின் (துனிசியா) மற்ற பெண்களின் மீது இந்த அநியாயத்தை நீக்குவதாகும். ஏனெனில் இது மறுவுலகின் வேதனையிலிருந்து அவர்களை காப்பாற்றும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான சமத்துவத்திற்கான முயற்சியை அவர்களது சட்டபூர்வமான (ஷரியா) சட்டங்களை கொண்டு சிறப்பாகச் செய்திருக்க வேண்டும்.அதில் அவர்கள் மக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும், பாதுகாப்புக்கான உரிமைகள் மற்றும் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்வதும், பொது சொத்துக்களை மக்களுக்கு செலவு செய்வதுமான விஷயங்களை செய்திருக்க வேண்டும் மாறாக இந்த அணைத்துவிஷயத்தையும் அவர்கள்(துணிசிய அரசாங்க ஆட்சியாளர்கள்) குறைந்த திர்ஹம்களுக்கு மேற்கத்தியவாதிகளுக்கு வழங்கியுள்ளனர்.

ஆனால் உண்மையில், இவர்கள் மேற்கிற்கு சேவை செய்யக்கூடிய முகவர்களாக இருப்பதால் எப்படி மக்களுக்காக இதை செய்வார்கள்? முஸ்லிம்களின் நமிக்கையை வீண் செய்யும் இவர்களிடம் எப்படி இதை எதிர்பார்க்கமுடியும்?இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான சதித்திட்டத்திற்கு உறுதுணையாக மேற்கு உலகின் சிப்பாய்களாக விளங்கும் இவர்களிடமிருந்து எப்படி இந்த விஷயங்களை எதிர்பார்க்கமுடியும்?

கடந்த காலத்தில், போர்ச்சுகீபா பரம்பரை விதிகளை மாற்ற முயன்றார், ஆனால் அவர் வெற்றியடையவில்லை, பொதுமக்களின் கருத்தை நடைமுறைப்படுத்தவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார்.அதே காரணத்திற்காக பென் அலி கூட தோல்வியடைந்தார்,ஏஸப்ஸீ அவரது முன்னோடிகல் தோல்வி அடைந்து போனதில் வெற்றிபெற முயல்கிறார். மேலும் பொது வாழ்வில் இருந்து இஸ்லாத்தை அகற்ற விரும்புகிறார்.அவர் மேற்கு திருப்தி அடைவதில் ஆர்வமாக உள்ளார், மேலும் மக்கள் இதன் பிரதிபலிப்பாக என்ன செய்யப்போகிறார்கள் என்பதைI எதிர்நோக்குகின்றனர்.

துனிசியாவின் முஸ்லிம்களே!! உங்கள் தீனின் வெற்றிக்காக நிற்கவும்,உங்கள் உண்மையுள்ள தீனின் சட்டங்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை அறிவிக்கவும், தவறான கூற்றுக்களுக்கு எதிராக நின்று குரல்கொடுங்கள்.
அவர்களுடைய பாவம் நிறைந்த கைகள் செயகிறவற்றை கண்டித்து உங்கள் ஆட்சியாளர்களை கண்டித்து அவர்களை எதிர்த்து குரல்கொடுங்கள்.

இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்வதைப் பற்றி நீங்கள் அமைதியாக இருந்தால், ஒரு முஸ்லீம் பெண்ணை ஒரு காஃபிர் திருமணம் செய்வதை அனுமதிக்கின்ற இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் நாளை மற்ற மற்ற ஷரியாவின் சட்டங்களும் நீக்கப்படுவதை நீங்கள் ஏதிற்கொள்ள நேரிடும்.நீங்கள் இந்த விஷயத்தில் உங்கள் மௌனத்தை பற்றி அல்லாஹ்விடம் கேட்கப்படுவீர்கள்.

துனிசியாவின் பெண்களுக்கு நீதி மற்றும் உரிமைகள் இஸ்லாத்தை தவிர வேறு எந்த சித்தாந்தின் மூலமும் வழங்கப்படமாட்டாது ஏனெனில் இஸ்லாதால் மட்டும் தான் உலகிற்கு சத்தியம், நற்குணம் மற்றும் இரக்கம்,போன்றவற்றை வழங்கமுடியும்.

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏.قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا‏ .
قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا‌ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.
(சூரா தாஹா: 20:126)

Comments are closed.