சமீப பதிவுகள்

வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியதன் மூலம் சவூதி பெண்கள் எவ்வித வெற்றியையும் அடைந்துவிடவில்லை.

saudi-woman-driving

 

“பெண்ணுரிமையில் இதுவொரு மிகப்பெரிய முன்னேற்றமாகும்”, “இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும்”, “இதுவொரு மைல்கல்லை அடைந்த தருணமாகும்”, “தேசம் கண்ணீர் மல்கிய நாளாகும்”. இவையனைத்தும் சவூதி அரசாங்கம் தனது நாட்டில் வாகனம் ஓட்டுவதற்கு பெண்கள் மீதிருந்த தடையை நீக்கியதை குறித்து பல ஊடகங்களும் பெண்ணுரிமை ஆர்வலர்களும் வெளியிட்ட அறிக்கைகளாகும். இராஜாங்கத்தில் பெண்களுடைய உரிமையை மேம்படுத்தும் இந்த வெளிப்படையான “வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைக்காக” மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மற்றும் அவருடைய மகன் முஹம்மது பின் சல்மான் மீது உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டு அளவிலும் பாராட்டு மழை குவிந்து வருகின்றன. இதை பெண்களுக்கு வழங்கப்பட்ட ஒருவிதமான பரிசாக எண்ணி கொண்டாடப்படுகிறது!

உண்மையாகவா???!!! பெண்களாக இதுபோன்ற சர்வாதிகார அரசுகளின் கீழ் இவ்வளவு கீழ்த்தரமாக நமது எதிர்பார்ப்புகள் ஆகியுள்ளதா, ஒரு சில ரொட்டித் துண்டுகளை நம்மை நோக்கி வீசுவதன் மூலம் வெற்றிக் களிப்பில் மூழ்கச் செய்து பல சதாப்தங்களாக கொடூரமான முறையில் நம் மீது அடக்குமுறை செய்த மற்றும் இன்றும் செய்து வரும் இதுபோன்ற சர்வாதிகாரகளிடம் நமது நன்றியுணர்வை வெளிப்படுத்தும் அளவுக்கு மற்றும் அவர்களை புகழ்ந்தும் அல்லது அவர்களுக்கு மரியாதை செலுத்தும் அளவுக்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது???

இந்த அரசு ஒரு முழுமையான ஏகாதிபத்திய அரசு என்பதை மறந்து விட்டோமா, இங்கு அந்தந்த காலகட்டத்தில் அதிகாரத்தில் இருக்கும் மன்னர் அல்லது இளவரசரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்களை போன்று பெண்களின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன என்பதனை மறந்து விட்டோமா? இந்த சர்வாதிகார ஆட்சியில் பெண்களுக்கு எந்தவொரு அரசியல் செல்வாக்கும் இல்லை என்பதையும் முறைகேடான மேற்கத்தியர்களால் நிறுவப்பட்ட ஆட்சியாளர்களின் சர்வாதிகார கொள்கைகளை விமர்சித்தமைக்காக மட்டுமே கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதை மறந்து விட்டோமா? மக்களிடையே ஏழ்மை அதிகரித்து வரும் வேளையில் சுகபோக வாழ்வை அனுபவிப்பதற்காக இந்த தேசத்தின் வளங்களை கொள்ளையடித்த அரசு இது என்பதை மறந்து விட்டோமா? மிக முக்கியமாக, ஈராக் மற்றும் சிரியாவின் முஸ்லிம்களுடைய இரத்தங்கள் படிந்த கரங்களுடையது என்பதையும் யமனுடைய பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டுப் படுகொலைக்கும் பட்டினிக்கும் காரணமான சர்வாதிகார அரசு என்பதையும் நாம் மறந்து விட்டோமா? இவை அனைத்துடன் சேர்த்து சவூதி குடிமகனாக இல்லாத முஸ்லிம் ஆண்களை சவூதியை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மணமுடிக்க அபத்தமான 33-55 வயதை வரம்பை விதிப்பது மற்றும் இந்த திருமணத்தை நடத்துவதற்கு அரசுத்துறை அமைச்சகத்திடமிருந்து சிறப்பு அனுமதியை கோருவதற்கு நிர்பந்தப்படுத்துவது போன்ற இந்த தேசத்தில் பெண்கள் கொடுமையான இஸ்லாமல்லாத சட்டங்களுக்கு உள்ளாக்கப் படுத்தப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தமது சவூதி குடியுரிமையை தங்களுடைய சொந்த பிள்ளைகளுக்கு வழங்க மறுக்கப்படுகிறது, மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர் மற்றும் சாட் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறிய முஸ்லிம் பெண்கள் சவூதி குடிமகன்களை திருமணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு எனும் முகமூடியை அணிந்துள்ள இந்த முழுமையான சர்வாதிகார ஏகாதிபத்தியம் பெண்களின் நலன் குறித்து உண்மையில் எவ்வித கவலையும் கொண்டிருக்கவில்லை அல்லது அவர்களுக்கு அவர்களுடைய உரிமையை வழங்கும் போது எந்தவொரு பொதுநலனையும் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்வதற்கு நாம் கடமைப்படுள்ளோம். இது போன்ற செயல்கள் எப்போதும் சுய சேவை புரிவதாகவும் உள்நோக்கமுடையதாகவும் இருக்கும், குறிப்பாக தனது ஆட்சியை உயர்த்திப்பிடிக்கவும் அதிகாரத்தில் சரிந்துவரும் தனது பிடிப்பை நீட்டிக்கக்கூடியதாகவும் இருக்கும். நிச்சயமாக, வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியதென்பது உலக அரங்கில் தனது தோற்றத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கிலுள்ள அதன் தாராளவாத விமர்சகர்களை சாந்தப்படுத்துவதற்கும் நம்பிக்கை இழந்த ஒரு பலவீனமான அரசால் செயல்படுத்தப்பட்ட ஒரு மலிவான மக்கள் தொடர்பு வித்தையாகும். இந்த நாட்டில் பெண்கள் தொடர்ந்து சந்தித்துவரும் இன்னல்கள் மற்றும் அந்த அரசு அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இதர துறையில் அடைந்த தோல்விகள் மற்றும் அண்டை நாடுகளில் தான் நடத்திவரும் கொடுமைகளிலிருந்து கவனத்தை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட அற்பமானதொரு மலிவான முக-மாற்று முயற்சியாகும். இது அதிகாரமற்ற முனிசிபல் கவுன்சிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியது அல்லது தேர்ந்தெடுக்கப்படாத பயனற்ற ஷூரா கவுன்சிலில் பங்கு கொள்ள அனுமதிப்பது போன்ற வெற்று சைகைமொழியை போன்றதாகும் – இவையிரண்டும் பெண்களுடைய வாழ்வில் ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த துவக்குவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை அல்லது ‘முன்னுரிமைகள்’ என அழைக்கப்படுகின்ற இவைகள் யதார்த்தத்தில் இத்தேசத்தில் பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மேம்படுத்துவதற்கு எதையும் செய்துவிடவில்லை. இந்த குறைபாடுள்ள சீர்திருத்தமானது வெறுமனே ‘நவீனத்தின்’ காற்றை உருவாக்குவதற்கு அல்லது பெண்களை நடத்தும் விதத்தில்’முன்னேற்றத்தை’ அடைய செய்வதற்கான ஒரு ஒப்பனை சாளர அலங்காரமாகும், ஆனால் யதார்த்தத்தில் இது உண்மையிலிருந்து பார தூரமுள்ளது!

இந்த புதிய ஆணையானது இந்த தேசத்தில் பெண்களின் உரிமைக்கு கிடைத்த ஒரு விதமான வெற்றியாக கொண்டாடுவதற்கு பதிலாகவும் தேவையற்ற புகழ்மாலைகளை கொண்டு சவூதி ஆட்சியாளர்கள் மீது தூவுவதற்கு பதிலாக… பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமையை இஸ்லாம் தெளிவாக அனுமதித்திருக்க இந்த உரிமையை முதலில் அவர்களிடமிருந்து பறித்திரிக்கக்கூடாது எனும் உண்மையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! நாம் இந்த கேள்வியை நிச்சயமாக கேட்டே ஆக வேண்டும்… பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ ஏற்கனவே இஸ்லாம் உறுதயளிதித்த உரிமைகளை வழங்குவதற்கும் தடுப்பதற்குமான முடிவுகளை எடுக்கும் உரிமையை முறைகேடான, மேற்குலகால்-நிறுவப்பட்ட இந்த அரசுக்கு யார் கொடுத்தது? உண்மையில், இந்த உம்மத்துடைய எந்தவொரு விவகாரத்திலும் முடிவெடுக்க அந்நியர்களால் நிறுவப்பட்ட இது போன்ற ஆட்சியாளர்கள் எவ்விதமான அதிகாரத்தை கொண்டுள்ளார்கள்???

மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் இதற்கு முன்பு நாம் இருந்ததில்லையா??!!… சர்வாதிகாரிகள், தங்களுடைய அரசியல் ஆதாயங்களை அடைந்து கொள்வதற்காக பெண்ணுரிமையை இழிவான முறையில் உபயோகித்து வருவதை… குறிப்பாக வெகுஜனத்தில் உள்ள மதசார்பற்ற/தாராளவாத பிரிவிடமிருந்து ஆதரவை பெறுவதற்கும் அதிகாரத்தில் தங்களுடைய பிடியை உறுதிபடுத்திக் கொள்வதற்கும் தங்களுடைய அரசாங்கத்தை நீட்டித்துக்கொள்வதற்கு மேற்கத்திய அரசுகளிடம் ஆதரவை பெறுவதற்கும் அத்துடன் தங்களுடைய அடக்குமுறையான மதசார்மின்மை ஆட்சியன் உண்மைத்தன்மையை மறைப்பதற்கும் இந்த பெண்ணுரிமையை பயன்படுத்திக் கொள்கின்றன! லண்டன் பொருளாதார கல்லூரியில் வருகை பேராசிரியராக பணிபுரியும் மதாவி அல்- ரஷீத் தி கார்டியன் பத்திரிக்கையில் செப்டம்பர் 27 அன்று எழுதிய ஒரு கட்டுரையில், “இன்றைய சர்வாதிகார அரசுகள் முஸ்லிம் பெண்களை இஸ்லாத்தின் அடக்குமுறையிலருந்து விடுவிப்பது போன்று தோற்றமளிக்குமேயானால் அதிகமான பாராட்டுகளை பெறும். சவூதி அரேபியா அதற்கு விதவிலக்கல்ல… சமூகத்தை பெண்களை அடக்குமுறை செய்யக்கூடியது என சித்தரித்து சர்வாதிகாரிகள் தங்களை இந்த ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலையாளர்களாக சித்தரித்து கொள்கின்றனர். குறிப்பாக, சமீபகாலமாக, இஸ்லாமும் ஷரீ’ஆ சட்டங்களும் பெண்கள் படும் இன்னல்களுக்கான காரணம் என சித்தரிக்கப்படுகிறது.” என்று எழுதியிருந்தார்.

உதாரணமாக துனீசிய சர்வாதிகாரிகளான ஹபீப் போர்கீபா மற்றும் ஜைன் அல் ஆபிதீன் பின் அலி போன்றோர் ஆண் பெண் சமத்துவம் எனும் மேற்கத்திய கருத்துக்கு ஆதரவளித்தும் பலதார மணத்தை நீக்குவது, கருச்சிதைவு செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக்குவது ஆணிற்கு கட்டுப்பட்டு வாழ்தல் எனும் கருத்தை தாக்குவது போன்று பெண்கள் மற்றும் குடும்ப வாழ்வு சம்மந்தமான இஸ்லாமிய சமூக அமைப்பின் சட்டங்களை மதச்சார்பின்மையாக்கியும் தாராளமயமாக்கியும் தங்களை பெண்களுக்கான கதாநாயகர்களாக காட்டிக் கொண்டனர். அதேவேளை இந்த அரசாங்கத்தின் அடக்குமறையான திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்த ஆயிரக்கணக்கான பெண் ஆர்வலர்கள் துனீசிய அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டு, அவர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுடைய சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு, வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு, விதிக்கு புறம்பாக சிறைபிடிப்பது, சிறையில் அடைக்கப்பட்டு மற்றும் சித்தரவதை செய்வது உட்பட உடல் ரீதியாக அத்துமீறப்பட்டு வருகின்றனர். இதனோடு பள்ளிகளிலும் அரசு கட்டிடங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்வது மற்றும் தெருக்கள் மற்றும் சந்தைகளில் இஸ்லாமிய உடையை அணிந்துவரும் பெண்கள் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதே போன்று தான் எகிப்திய சர்வாதிகாரியான ஹொஸ்னி முபாரக்கின் விஷயத்திலும் நடந்துள்ளது அவர் பெண்களின் உரிமைகளுக்கான கதாநாயகன் என தன்னை வெளிப்படுத்தி கொண்ட அதேவேளையில் தனது தோல்வியடைந்த மேற்கத்திய செயலாக்க அமைப்பு மற்றும் கொள்கைகள் மூலம் பல லட்சக்கணக்கான பெண்களை வறுமை நிலையில் வாழும் நிலைக்கு தள்ளி மற்றும் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, அத்துடன் துன்புறுத்தல், சிறைபிடித்தல் மற்றும் சிறையிலடைத்தல் போன்றவற்றின் மூலம் அவருடைய அடக்குமுறை ஆட்சியை எதிர்ப்பவர்களின் அரசியல் குரல்களை நசுக்கி வந்தார்.

அதுபோலவே, சவூதி அரசாங்கத்தின் பெண்கள் மீதான வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கியதென்பது பெண்ணுரிமை குறித்து ஆல்- சவூது குடும்பம் திடீரென பெற்ற சுயநினைவினால் உந்தப்பட்டது கிடையாது. கிடையாது, அதற்கு அப்பாற்பட்டது! மாறாக அந்த விஷயத்தில் அரசியல் மற்றும் பொருளாதார செயற்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 2016 ஏப்ரல் மாதம், இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவூதி அரசாங்கத்தின் “விஷன் 2030 திட்டத்தை” அறிவித்தார் – அது எண்ணெயின் வருவாயில் அரசின் சார்பு நிலையை குறைப்பது, எண்ணெய் சாராத தனியார் துறையில் மிகப்பெரிய அளவில் வரிவாக்கம் செய்வது மற்றும் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்துவது உட்பட இதுவொரு பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளடக்கிய முயற்சியாகும். இது உலகளாவிய எண்ணெய் விலை குறைவின் காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டு நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை காப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும். நாட்டில் வறுமை அதிகரித்து வருகின்றது, இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை தற்போது 30 சதவீதமாகவுள்ளது, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது (5 வருட காலத்திற்குள் சவூதியிடம் அந்நிய செலாவணி கையிருப்பு எதுவும் இருக்காது என சர்வதேச நிதி நிறுவனம் எச்சரித்துள்ளது) மற்றும் நிதிநிலை திவாலகக்கூடிய அபாயம் இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். உண்மையில், தி வீக் எனும் செய்தி இதழ், 2016 ஏப்ரல் மாதம் மோசமடைந்து வரும் நிதிநிலையின் காரணமாக சவூதி அரேபியா வெகுவிரைவில் சீர்குலைவு மற்றும் சமூக குழப்பத்தை சந்திக்கும் என்றும் “சவூதி அரசு அதனை ஒன்றிணைத்து வைக்க எண்ணெயை தவிர வெகு சிலவற்றையே கொண்டுள்ளது” என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது. ஆக நம்பிக்கையற்ற சூழலே அங்கு நிலவுகிறது!

நன்முறையில் சாத்தியமற்றது என்றும் மோசமான முறையில் இதவொரு கற்பனை என்றும் பல விமர்சகர்கள் விமர்சிக்கும் இந்த ‘நோக்கம் 2030’ ஐ அடைவதற்கு, தொழிளாலர் சந்தையில் அதிகமான அளவில் பெண்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. இத்திட்டம் 2030ம் ஆண்டுக்குள் பெண்களின் வேலைவாய்ப்பை 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்தை கொண்டுள்ளதாக அறிவிக்கின்றது, இதை அணைவதற்கு சமூகத்திற்குள் அவர்கள் சாதாரணமாக இயங்குவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் தேவையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆக வாகனம் ஓட்டுவதன் மீதான தடையை நீக்கியதில் பெண்களுக்கான உரிமை குறித்தான கவலை சிறிய அளவிலானதே மற்றும் அது பெருமளவில் பெண் தொழிளாலர்கள் கொண்டு விளிம்பில் இருக்கும் பொருளாதாரத்திற்கு ஊட்டமளிப்பதற்கான துணிவான முயற்சியாகும்!

முஸ்லிம் பெண்களாக நாம் நமது நிலப்பரப்புகளில் உண்மையான மாற்றத்தை விரும்பும் நமது விரும்பத்தை தணிப்பதற்காக இந்த சிறிய அளவிலான அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தத்தினால் அல்லது அரசியல் மாற்றம் எனும் பொய் தோற்றத்தினால் அல்லது சர்வாதிகார ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் நம் மீது வீசும் உறிமைகளின் சிறு துண்டுகளை கண்டு திருப்தியடைந்து விடக்கூடாது. நாம் இதை விட அதிகமானதை அடைந்து கொள்வதற்கு தகுதியுடையவர்கள் என அல்லாஹ் (சுபு) கட்டளையிட்டுள்ளான்!

நமது உண்மையான வெற்றி என்னவெனில் ஒரேயடியாக இதபோன்ற அனைத்து சுய சேவை செய்யக்கூடிய சர்வாதிகார அரசுகளிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதும் மற்றும் பெண்களாக நமது நிலையையும் மற்றும் அல்லாஹ் (சுபு) நியமித்த நமது உரிமைகளுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் அளிக்கும் மற்றும் குர்’ஆன் சுன்னாஹ்வை போற்றிப்பேணக்கூடிய அரசு ஒன்றை நிறுவுவதாகும். அந்த அரசு முழுமையான பொறுப்புணர்வை உடையதாகவும் எந்தவொரு ஆட்சியாளரும் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமையை தனது சுய விருப்பத்தால் வழங்குவதற்கோ அல்லது நிராகரிக்கவோ முடியாத அளவுக்கு அரசமைப்பிற்கு அடிப்படையாக சட்டத்தின் விதமுறைகளை போற்றப்பேணக்கூடியதாக இருக்கும். அந்த அரசு பெண்களுக்கு தன்னை ஆள்பவர்களின் குறைகளை தட்டிக்கேட்க, தங்களுடைய தலைவரை தேர்ந்தெடுக்க மற்றும் தங்களுடைய உரிமைகளில் எவ்விதமான அத்துமீறல்களுக்கு எதிராக அச்சமின்றி வெளிப்படையாக குரலெழுப்புவதற்கும் என பெண்கள் அரசியலில் குரல் எழுப்புவதற்கு வசதி ஏற்படுத்தி அவர்களுக்கு ஊக்கமளிக்கும் அரசாகும். அந்த அரசு அனைவருக்கும் நமது மார்க்கம் வரையறுத்த மற்றும் 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டின் தலைவராக ரசூலுல்லாஹ் (ஸல்) நடைமுறைப்படுத்திய அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சமூக உரிமைகளுக்கு உத்திரவாதமளிக்கும், அது இதர மார்க்கங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ளவற்றை விட விஞ்சியதாக இருந்தது. மற்றும் அந்த அரசானது முஸ்லிம் பெண்மணியின் அவளுடைய இரத்தம், அவளுடைய கண்ணியம், அவளுடைய உடமை மற்றும் அவளுடைய உரிமைகள் அனைத்தின் மீது எப்போதெல்லாம் அத்துமீறப்படுகிறதோ அப்போதெல்லாம் அவளுடைய பொறுப்பாளராகவும் பாதுகாவலராகவும் இருக்கும். இந்த அரசானது அல்லாஹ் (சுபு) வரையறுத்த உண்மையான இஸ்லாமிய தலைமையான நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை தவிர வேறில்லை.

ஆக முஸ்லிம் பெண்மணிகளாக, உண்மையில் நாம் எதையாவது கொண்டாட விரும்பினால் அடையாள சைகைகளை கண்டு மயங்கி விடாமல் நாம் அனைவரும் உடனடியாக இந்த மகத்தான அரசை நிறுவுவதற்கான முயற்சிகளை முழுமையான அளவில் மேற்கொள்வோம்! அல்லாஹ் (சுபு) கூறுகிறான்,

وَأَنِ ٱحۡكُم بَيۡنَہُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَنيَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكَ‌

நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.”
(அல்குர்ஆன் : 5:49)

டாக்டர். நஸ்ரின் நவாஸ்

இயக்குநர், மத்திய ஊடக அலுவலக மகளிர் பிரிவு, ஹிஸ்புத்தஹ்ரீர்

Comments are closed.