சமீப பதிவுகள்

ஸ்பெயின் நாட்டின் கத்தலோனியா பகுதிக்கும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதிக்கும் என்ன வித்யாசம்?

iraq

01/10/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, “ஸ்பெயின் மாகாணத்தின் கத்தலோனியாவில் நடைபெற்ற தனி நாட்டிற்க்கான வாக்கெடுப்பை ஸ்பெயினிய அதிகாரிகள் தடுத்தனர்” என்ற தலைப்பின் கீழ் TRT அரபு இணையதளம் ஒரு அறிக்கைவிட்டது. அதில், தனிநாட்டு சுதந்திரத்திற்க்கான வாக்கெடுப்பை ஸ்பெயின் காவல்துறையினர், மக்களை வாக்களிக்காது தடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது 7.5 மில்லியன் மக்கள் தொகைக்கொண்ட சுயநிர்ணயத்தின் கீழ் ஆட்சிசெய்யும் பிராந்தியமாகும். வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றை முற்றுகை இட்டுள்ள காவல்துறையினர்,  வாக்குச் சாவடிகள் முன் இருந்த பொதுமக்களை அவ்விடத்திலிருந்து கலைத்தனர். மேலும், வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்களிப்பு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். சட்டவிரோத வாக்கெடுப்பு நடத்தப்படுவதை அனுமதிக்காது என்று ஸ்பெயினிய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

இந்த சம்பவத்திலிருந்து, ஈராக்கின் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டின் விவகாரங்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதையும் அவர்களால் பாதிக்கப்பட்ட தம் மக்களை எப்படி காப்பாற்றுவது என்பதையும் அறியட்டும். ஸ்பெயின் பல்வேறுக் கருத்துக்களை கவனித்து ஏற்றுக்கொள்கின்ற ஒரு ஜனநாயக நாடு இல்லையா?, அப்படி இருந்தும், இந்த ஜனநாயக ஆட்சியாளர்கள் ஆபத்தை உணர்ந்தபோது தடையற்ற சுதந்திரத்தின் கோட்பாடுகளை தாக்கி, சுதந்திரம் கேட்பவர்களை தடுத்துள்ளனர்,இந்த விஷயத்தில் அவர்கள் உங்களை விட உறுதியாக உள்ளனர்.

ஓரு பழமொழி கூறுகிறது:

“புத்தகங்களின் வார்த்தைகளை விட வாளின் செயல்பாடுகள் உண்மையானவை…. அதனுடைய முனை தீவிரத்தன்மை மற்றும் கவனக்குறைவிற்கு இடையில் உள்ள எல்லையாகும்”

ஆனால், எதிரிகளுக்கு முன்னால் தங்களை இழந்த ஈராக்கின் அரசியல்வாதிகள் இப்படி செய்யாமல், பிரிட்டனிய கைகூலியான பர்சானியிடம் முறையிட்டு, பிரிவினையைத் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கத்திலிருந்தே தன்னை திருப்பி கொள்ளுமாறு அவரிடம் கெஞ்சி கேட்டனர். முஸில்மகளிடையில் பிரிவினை உண்டாக்குவது எல்லா வல்லமையுடைய அல்லாஹ்வின் ஷரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இச்செயலை செய்ய நினைத்த இந்த குர்துகளின் தலைவரை சங்கிலிகளாலும் இரும்புத்தாலும் பிணைக்கப்பட்டு இழுத்து வரவேண்டும், அதை காணும் மற்றவர்களுக்கு ஒரு  எச்சரிக்கையாகவும் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகவும் இருக்கும். ஆகவே, ஈராக்கின் ஆட்சியாளர்களே, இந்த குர்திஸ்தானின் பிரிவினையை தடுக்க உங்கள் இறைவனின் சட்டத்தின்பால் நீங்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இல்லை, குஃபாரின் சட்டத்தையும் நீங்கள் சரியாக கடைப்பிடிக்கவும் இல்லை.

كَيْفَ تَحْكُمُوْنَ‌‏ مَا لَـكُمْ

உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்?  (ஸூரத்துல் கலம்:36)

இந்த பழமொழி உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்,

“போர் இல்லாமல் ஒரு நாட்டை எடுக்கும் ஒருத்தருக்கு…. அதை மற்றவர்களிடம் ஒப்படைக்கவும் எளிதாக இருக்கும் .”

Comments are closed.