சமீப பதிவுகள்

கலீஃபா இரகசிய பாதுகாப்பு படைகளை கொண்டிருப்பாரா?

அரபுலகிலுள்ள இரகசிய பாதுகாப்பு படைகள் சித்தரவதை செய்வதில் கொடூரமான முறைகளை பயன்படுத்துவதில் பேர்போனது, இப்பகுதியிலுள்ள ஆட்சியாளர்களை பாதுகாக்கும் ஒரே கருவியாகும். மேற்குலகு தனது சுதந்திரத்தின் மதிப்புகள் மற்றும் தனியுரிமைக் கோட்பாடுகளை இந்த சமூகத்தை ஒன்றாக இணைக்க பயன்படுத்தி வரும் சமயத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களோ தங்களுடைய அதிகார நிலைகளை தக்கவைத்துக்கொள்ள அவர்களுடைய ரகசிய பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா தனது அசாதாரணமாக கடத்தும் திட்டத்தின் மூலம் சித்திரவதை செய்யும் பணியை வெளியே கொடுக்க ஆரம்பித்த போது அதனுடைய வெற்றி அங்கீகரிக்கப்பட்டது.

கிலாஃபத் ஒரு உள்நாட்டு பாதுகாப்பு படையை கொண்டிருக்கும் ஆனால் அது செயல்படுவதற்கான ஒரு வேறுபட்ட பங்கினை கொண்டிருக்கும். தனது குடிமக்களின் மீது உளவு பார்ப்பதை இஸ்லாம் முழுமையாக தடுக்கிறது, இது ஒரு பாராளுமன்ற சட்டத்தின் மூலமாகவோ அல்லது எந்தவொரு தேசிய பாதுகாப்பு சூழ்நிலையின் காரணமாகவோ மாற்றக்கூடிய ஒரு விஷயமன்று. அமலாக்க நிறுவனத்தின் வரையெல்லை, மாற்றுதல் மற்றும் சட்ட அதிகார வரம்பு ஆகியவை இஸ்லாத்தில் பல ஹதீதுகளின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்கள் மக்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை அறிந்து கொள்வதற்கும் அல்லது உளவு பார்ப்பதற்கான உரிமையையோ அல்லது அதிகாரத்தையோ கொண்டிருக்காது. இது இரகசிய யுத்திகள், கண்காணித்தல் மற்றும் குடிமக்களின் அந்தரங்கத்தை மீறி ஆதாரத்தை சேகரிப்பவற்றில் தனது தாக்கத்தை கொண்டிருக்கும். வீடு மற்றும் குடிமகனுடைய அந்தரங்கம் புனிதத்தன்மையுடையதாக கருதப்படுகிறது. அவர்களுடைய அதிகார எல்லையானது பொது விவகாரங்களில் மட்டும் அரசின் அதிகாரத்தை செயல்படுத்தவதோடு கட்டுப்படுத்தப்படுகிறது.

Comments are closed.