சமீப பதிவுகள்

கிலாஃபத் ஊழலை எங்ஙனம் எதிர்கொள்ளும்?

ஊழலில் பிரச்சனை என்னவென்றால் அது அரசியல் செயலாக்க அமைப்பு மற்றும் அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள் இவை இரண்டினாலும் வளர்க்கப்படுகிறது. அதிபர்கள் தண்டனை பெறுவதிலிருந்து பாதுகாக்க முடியாத வகையில் விசாரிக்கக்கூடிய ஒரு அரசியல் சட்டத்தை கொண்ட அரசியல் செயலாக்க அமைப்பை நிறுவுவதன் மூலமும் இஸ்லாமிய அரசானது நேர்மை மற்றும் நாணயம் ஆகியவை தேசத்தில் எப்போதும் மிக உயரிய நிலையில் வைத்திருப்பதற்கு உறுதி செய்யும். நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிமுறையை பின்பற்றி பணக்காரர் மற்றும் ஏழை ஆகிய இருவரின் மீதும் தண்டனையை நிறைவேற்றி சமூகத்தின் அனைத்து நிலையிலும் ஊழல்கள் ஒழிக்கப்படும், மற்றும் கலீஃபா முதற்கொண்டு அடிமட்ட நிர்வாக அதிகாரிகள் வரையிலும் நேர்மைக்கு வெகுமதியளிக்கப்பட்டு அது அரசியல் செயலாக்க அமைப்பில் நிலைநாட்டப்படும்.

ஊழலை தடுப்பதற்கான கருவியாக இஸ்லாம் பணத்தையும் அரசியலையும் பிரிக்கின்றது. இஸ்லாத்தில் ஆட்சியாளர் உம்மத்தினால் பணியமர்த்தப்படாத காரணத்தால் அவர் ஊதியம் பெறக்கூடிய ஒரு தொழிலாளி ஆகமாட்டார். அவருக்கு ஊதியம் வழங்கப்படாவிட்டாலும் அவருடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக கருவூலத்திலிருந்து படித்தொகையாக ஒரு பகுதியை அவருக்கு ஒதுக்கப்படும். இந்த படித்தொகையானது அவர் கிலாஃபத்தின் கடமையை நிறைவேற்றுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதால் அவரால் உழைத்து அவருடைய சொந்த வியாபார நலன்களை அடைய முடியாத காரணத்தால் அவருக்கு வழங்கப்படுகிறது. கலீஃபாவுக்கான படித்தொகை எவ்வளவு என்று மஜ்லிஸ் அல் உம்மா ஷூரா (ஆலோசனை கோருதல்) மூலம் நிர்ணயிக்கும். அவர்கள் தேர்ந்தெடுக்கபட்ட உம்மத்தின் பிரதிநிதிகளாவர் மற்றும் இறுதியாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் பொது நிதியை தவறாக பயன்படுத்துவதிலிருந்து கலீஃபாவை தடுக்கின்றது.

Comments are closed.