சமீப பதிவுகள்

கிலாஃபத் நீதியை எங்ஙனம் கிடைக்க செய்யும்?

இஸ்லாம் கட்டாயப்படுத்தும் வேறெந்த முறையையும் பயன்படுத்தாமல் இஸ்லாத்தை நடைமுறை படுத்துவதன் மூலம் நீதியை கிடைக்க செய்யும். அரசின் மீதான விசாரணை முறை என்பது நாட்டின் ஆட்சியாளரை நீக்குவது, அரசாங்கத்தின் எந்தவொரு அலுவலகம் அல்லது நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்கான தனியுரிமையை வழங்குவது மற்றும் அவற்றின் மீது விசாரணை செய்யும் உரிமையை வழங்குவது, பல அரசியல் கட்சிகள் செயல்பட அனுமதிப்பது மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள், வரவு செலவு திட்டங்களை ஆய்வுசெய்து அதை மாற்றியமைக்கும் அதிகாரத்தை கொண்டதொரு உம்மா கவுன்சில் அமைப்பது உட்பட விரிவானதொரு அதிகாரத்தை கொண்ட ஒரு சுயாதீன நீதித்துறையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

அரசின் ஆட்சித் தலைவர் உட்பட படித்தரம் அல்லது உயர்நிலைக்கு அப்பாற்பட்டு அரசின் எந்தவொரு அங்கத்தையும் அல்லது தொழிலாளியையும் கேள்வி கேட்கும் உரிமையை தனிநபர்கள் பெற்றிருப்பார்கள்.

புகார்கள் மதாலிம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் அவர் அதை சரிபார்க்கும் நடைமுறைகளை துவக்குவார் மற்றும் அதன் உண்மைநிலையை கண்டறிய தகுந்த நடைமுறைகளை பின்பற்றுவார். அதற்கடுத்து தண்டனைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் இந்த அலுவலகம் கொண்டிருக்கும். அங்கு முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தனிநபர்கள் என தங்களது உரிமையான அமைதியான முறையில் கூட்டத்தை கூட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் அனுமதிக்கப்படுவர். அதேபோல் முஸ்லிம் அல்லாதவர்கள் தங்களின் சார்பாக அரசிடம் பிரதிநிதிகளாக செயல்பட நமது ஆதரவை கோருவதற்கும் அனுமதிக்கப்படுவர்.

தற்போது முஸ்லிம் உலகில் தலைமத்துவத்தின் தொல்லைகளானது இஸ்லாத்தின் விளைவாக ஏற்பட்டதல்ல மாறாக அதன் அழிவை தொடர்ந்து ஏற்பட்டதாகும், சர்வாதிகாரத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையை கொண்டு வரலாற்றில் ஒரு நெடிய ஸ்திரத்தன்மையை கொண்ட ஒரு செயலாக்க அமைப்பை மாற்றியமைத்தனர் என்பதை நாம் உணர்வது அவசியமாகும். கீழ்த்திசை மொழிப்புலமையாளர்கள் முஸ்லிமின் மனம், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் இறையியல் குறித்து விவரிக்கும்போது உலகிலுள்ள முபாரக், சதாம் மற்றும் கதாஃபி போன்றோர் மதசார்பின்மை சிந்தனையிலிருந்து உருவானவர்கள் என்பதையும் ஆட்சியின் நடைமுறையில் இஸ்லாத்தை ஓரங்கட்டுவதற்காக செயல்பட்டவர்கள் என்பதனையும் குறிப்பிட தவறிவிட்டனர். ஒரு சுயாதீன எண்ணத்தில் அவர்கள் குறைபாட்டை கொண்டிருந்தார்கள் மற்றும் இப்பகுதியில் மேற்கத்திய நலன்களை ஆழப்படுத்தினர்.இப்பகுதியில் முழுமையான சர்வாதிகார அரசியல் கட்டமைப்பில் மூழ்கியிருக்கும் மக்களை இஸ்லாம் விடுவிக்கும்.

இஸ்லாத்தின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் போது அது அனைவரும் தங்களுடைய உரிமைகளை பெறுவதை உறுதிபடுத்தும் ஆகவே இஸ்லாத்தின் அரசியலமைப்பை நடைமுறை படுத்துவது மட்டுமே நீதியை பெற்றுத்தரக்கூடியதாகும்.

Comments are closed.