சமீப பதிவுகள்

சிரியாவின் நகரமான இத்லிப் நாசமடையும் நிலையில் இருக்க, அமெரிக்காவின் ஒப்பந்தக் கொலையாளியான புட்டினை அன்காரா (துருக்கி) அழைத்துள்ளது

குழந்தைக் கொலைகாரனான பஷாரின் ஆதரவாளரும் அமெரிக்காவின் கூட்டுக் களவானியான புட்டின், துருக்கியின் ஜனாதிபதி ஏர்தோகனின் அழைப்பின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதியில் அன்காரா சென்றிருந்தார். அழைப்பும் வழக்கம்போல் இருந்தது. சந்திப்புக்குப் பிறகு கூட்டு பத்திரிகை அறிக்கையில் இந்த ஆண்டு ஐந்தாம் முறையாக தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்டினை சந்திப்பதாக ஏர்தோகன் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கிடையில் உறவுகள் வலுவாக வளர, தன்னுடைய அமைச்சர்கள் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புகள் பராமரிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தினார். தற்போதைய சிரியா பிரச்சனையில் தன் திட்டத்தைப் பற்றி ஏர்தோகன் கூறும்போது, “சிரியாவில் ஒரு அரசியல் தீர்வு காண, துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாம் இருவரும் சேர்ந்து கூட்டு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்போடு செயல்படவேண்டும் என்று உறுதிசெய்துள்ளோம்” என்று குறிப்பிட்டார். கொலையாளி புட்டின் இதைப் பற்றி கூறும்போது, சிரியா போரில் தன் வெற்றிக்கான காரணம் ஏர்தோகனின் பங்களிப்புகளை கூறி, “நம் இரு நாடுகளுக்கிடையில் இருந்த பிரச்சனைகளை நேர்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் சரி செய்துள்ளோம், அத்துடன் சிரியா பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு எடுத்துள்ளோம்” என்று கூறினார்.

அமெரிக்க சார்பாக போரில் சண்டைபோடும் ஒரு கொலைகார நாடு தான் ரஷ்யா. சிரியா புரட்சியின் ஆரம்ப நாளிலிருந்தே பஷாரின் கொடுங்கோலான ஆட்சியை தான் ரஷ்யா ஆதரவளித்துள்ளது. அதுவும்,தன் கைக்கூலியான பஷாரின் ஆட்சியை காப்பாற்ற ரஷ்யாவை சிரியாவில் நுழைய அமெரிக்க தான் அனுமதியும் கொடுத்தது. அமெரிக்காவின் உத்தரவுப் படி சிரியாவில் ரஷ்யா எல்லா மனித மதிப்புகளை புறக்கணித்து, முஸ்லிமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் பாரபட்சம் பார்க்காமல் கொன்றுக்குவித்தது. பஷாரின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காகவே இவை அனைத்தையும் ரஷ்யா நடத்தியது, ஏனெனில் “மத்திய கிழக்கில் மதச்சார்பின்மையின் கடைசி கோட்டையாக சிரியா இருக்கின்றது”. என்று பஷாரின் ஆட்சி உரிமைக் கொண்டாடுகின்றது.

ஆகையால், துருக்கியின் தலைவர்களுக்கு ரஷ்யாவின் இந்த திட்டங்கள் மற்றும் படுகொலைகள் பற்றி தெரியாதா?

ரஷ்யாவுடன் ஒத்துழைப்பது, பஷாரின் ஆட்சியை ஒத்துழைப்பதுப்போல் ஆகாதா?

முஸ்லிம்களே!துருக்கிஜனாதிபதி தன் வீர வார்த்தைகளாலும் முரட்டுத்தனங்களாலும் உங்களை முட்டாளாக்க வேண்டாம்! அவருடைய செயல்கள் மற்றும் அரசியல் துரோகத்தைப் பாருங்கள்!. ஏனெனில், இந்த ஏர்தோகன் தம் மக்களிடம் ஒரு விதமாகவும், ரஷ்யா மற்றும் அமெரிக்க தலைவர்களிடம் வேற விதமாகவும் பேசுகிறார்! இதை நாம் சிரியா விஷயத்தில் பார்க்கலாம், சிரியாவில் துருக்கி நடத்திய Euphrates Shield operation-யை பற்றிக் கூறும்போது: “நாட்டில் தீவிரவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கும் பஷாரின் கொடுமையான ஆட்சியை முடிவடைய செய்யதான் நாம் இந்த Euphrates Shield operation நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்று கூறினார். ஆனால், இவரது நண்பர் என அழைக்கப்படுகின்ற ரஷ்யா, இந்த அறிக்கையில் அவரது துரோகத்தை அம்பலப்படுத்தியது: “சிரியா பிரச்சனையை தீர்ப்பதற்க்கு யார் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்ப்பதில்லை மாறாக உயர் மட்ட கூட்டங்களில் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை தான் பார்ப்போம்.” பிற்காலத்தில், Euphrates Shield operation உடைய உண்மையான நோக்கம் தெரியவந்தது.அது பஷாரின் ஆட்சியை கவிழ்க்க நடத்தபடவில்லை மாறாக சிரியா பிரச்சனையைத் தீர்க்க மற்றும் அமெரிக்காவின் அரசியல் திட்டத்தை செயல்படுத்த நடத்தப்பட்டது. சிரியா புரட்சியை முடிவடைய செய்யவும், அலெப்போ நகரத்தை மீட்டெடுத்து பஷாருல் அஸாதின் கஷ்டத்தை எளிதாக்கி தருவதே இதனுடைய முக்கிய நோக்கமாக இருந்தது.

முஸ்லிம்களே! சமீபத்திய ரஷ்யா கொலைகாரர்களின் தாக்குதலால் கொல்லப்பட்ட150அப்பாவி சிரியா மக்களின் இரத்தம் கூட இன்னும் காயவில்லை, அதுக்குள் ஏர்தோகன் தன் அரண்மனையில் கொலைகார புட்டினை அழைத்துள்ளார். புட்டின் நடத்திய தாக்குதல்கள் குறிப்பாக பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் தாக்குதல்கள் பற்றி ஏர்தோகன் ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. அதற்கு மாறாக “ரஷ்யாவுடன் ஒத்துழைப்பு வலுப்படுத்தி தொடர்வோம்” என்று கூறியுள்ளார்.

முஸ்லிம்களே! ஆஃப்கானியர்கள் மற்றும் செசெனியர்களை கொன்றுகுவித்து இப்பொழுது சிரியா மக்களை கொலைச் செய்யும் புட்டினை எப்படி ஏர்தோகன் வரவேற்கலாம்?

இன்னும் அதிகளவில் நம் சகோதர சகோதரிகளை கொல்லப்போகும் இந்த கொலையாளிவுடன் எப்படி நிறைய ஒப்பந்தங்களை செய்யலாம்?

செயலற்ற இந்த துருக்கி அரசு தன் இராணுவ தளங்களை அமெரிக்காவிற்க்கு கொடுத்து, அவர்களின் சிலுவைப்போரில் இவர்களும் ஈடுபட்டு, மேலும் ரஷ்யா மற்றும் ஈரானுடன் ஒத்துழைத்து, சிரியாவிலுள்ள நம் சகோதர சகோதரிகளை எப்படி காப்பாற்ற நினைக்கின்றார்கள்?

முடியாது! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! கொடுங்கோலன் மூலம் ஒடுக்கப்பட்டோரையும், கொலைக்காரன் மூலம் கொலைச் செய்யப்படுவோரையும் கண்டிப்பாக காப்பாற்ற முடியாது!

இந்த திறனற்ற கொள்கைகளின் மூலம் உங்கள் ஆட்சிகளை மட்டுமே நீங்கள் காப்பாற்ற முடியும்!

புட்டினுடைய வரவேற்ப்புக்கு சிவப்பு கம்பளங்களை விரித்து இரத்தம் நிறம்பிய அவனுடைய கைகளை குலுக்கிய இவர்கள் இஸ்லாத்திற்க்கு உதவிய மதினாவின் அன்சாரிகள் போல் ஆக முடியுமா?

தீனுல் இஸ்லாமை நிலைநாட்ட நமக்கு உதவியளிக்க முடியுமா?

நம்முடைய உண்மையான நண்பர்கள் மாஸ்கோவின் புட்டினோ அல்லது வாஷிங்க்டனின் டிரம்போ கிடையாது, இத்லிப், அலெப்போ, ஹமா மற்றும் ஹோம்ஸின் முஸ்லிம்களே ஆவார்கள்!!!

Comments are closed.