சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 14.10.2017

தலைப்புச்செய்திகள்:

1.வைகிங்குகளை அடக்கம் செய்யப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் பெயர் பொறித்து நெய்யப்பட்ட ஆடைகள் சுவீடனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

2.ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம்: டிரம்பின் அச்சுறுத்தலையும் மீறி ஒப்பந்தத்தில் நிலையாக நிற்கும் உலக சக்திகள்

3.அமெரிக்கா பாகிஸ்தானுடன் உண்மையான உறவை மேற்கொள்ள துவங்கியுள்ளது என டிரம்ப் கூறினார்

4.ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான சான்றளிப்பை டிரம்ப் ரத்து செய்தார்

5.அமெரிக்க குழுவின் விஜயத்திற்கு முன்பாக பிணைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்

6.பொதுஜன வாக்கெடுப்பு நடத்தியமைக்காக குர்துகளை அமெரிக்கா தண்டித்தது

வைகிங்குகளை அடக்கம் செய்யப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் பெயர் பொறித்து நெய்யப்பட்ட ஆடைகள் சுவீடனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

சுவீடனை சார்ந்த ஒரு பல்கலைக்கழகம் வைகிங்குளை அடக்கம் செய்யப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட ஆடைகளில் “அல்லாஹ்” மற்றும் “அலி” என்ற எழுத்துக்கள் பொறித்து நெய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. உப்ஸலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் பட்டுத்துணிகளில் கூஃபிக் எனப்படும் எழுத்துக்களின் வடிவத்தை கொண்டு வெள்ளி ஜரிகைகளால் நெய்யப்பட்ட இந்த கண்டுபிடிப்பை “பிரம்மிக்கத்தக்கது” என விவரித்துள்ளது. சுவீடனின் பழமைவாய்ந்த இந்த உப்ஸலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சேமிப்பு கிடங்கிலுள்ள துணிகளை சில காலமாக மறு ஆய்வு செய்து வருகின்றனர். சுவீடனிலுள்ள பிர்கா மற்றும் காம்லா போன்ற உப்ஸலாவில் உள்ள வைகிங்குகளின் அடக்கஸ்தலத்தில் அவை முதன்முதலில் கண்டெடுக்கப்பட்டது. துணிகள் சம்மந்தமான தொல்லியல் ஆராய்ச்சியாளரான அன்னிகா லார்சன் “முதலில் இந்த குறியீடுகளை என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை, ஆனால் பிறகு ஸ்பெயினிலுள்ள மூரிஷ் ஜவுளிகளில் இதுபோன்ற வடிவமைப்புகளை பார்த்தது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது” என பிபிசி யிடம் கூறினார். இது இந்த வார்த்தைகளில் “அலி” எனும் பெயரை அடையாளம் காண்பதற்கு எனக்கு உதவியது பிறகு அதை கண்ணாடியில் பார்க்கும்போது “மறுநிலையில் “அல்லாஹ்” எனும் வார்த்தை வெளியானது. “அநேகமாக அது இடப்புறத்திலிருந்து வலப்புறமாக படிப்பதற்கு ஏதுவாக அவர்களுடைய பிரார்த்தனையை எழுதுவதற்கான முயற்சியாக இருந்திருக்கலாம்”, என லார்சன் கூறினார். அரபு எழுத்துக்கள் பொதுவாக வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் வழக்கத்தை கொண்டது. வைகிங்குகளின் கல்லறைகளில் உள்ள இஸ்லாமிய பொருளானது கொள்ளை மற்றும் வியாபாரத்தின் விளைவாக இங்கு வந்துள்ளது எனும் வாதங்களுக்கு இது முரண்படுகிறது, ஏனெனில் ” வழக்கமாக வைகிங்குகளுடைய காலகட்டத்தில் தங்களுடைய சகாக்களான வால்கெய்ரிகளின் பாதுகாக்கப்பட்ட உருவங்களை கொண்ட ஆடைகளில் தான் இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது” என விளக்கினார். நவீன காலத்தில் மக்கள் முறையான ஆடையுடன் அடக்கப்படுவதை போன்று இந்த கல்லறைத் துணிகள் அப்போதைய அன்றாட யதார்த்தத்தை காட்டிலும் வைக்கிங்குகளுடைய நேர்த்தியான வாழ்வை பிரதிபலிக்கின்றன. “வைகிங்குகளின் காலகட்டத்து கல்லறை பழக்கமானது மரணத்திற்கு பின் சுவனத்தில் ஒரு நித்திய வாழ்வு இருக்கின்றது எனும் இஸ்லாமிய தாக்கத்தை கொண்டதாக இருந்தது”

வைகிங்குகளுடைய இஸ்லாமிய உலகத்திடம் ஏற்பட்ட தொடர்பின் உண்மை நன்கறிந்த ஒன்றாகும். வைகிங் காலத்து ஸ்கேன்டநேவியாவில் திர்ஹம் என அறியப்படும் 100,000க்கும் அதிகமான வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. வைகிங்குகளுடைய கல்லறைகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனைகளும் அந்த கல்லரைகளில் உள்ள சில மக்கள் பாரசீகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவித்தது. ஹேரோகேட் அருகே 2007ல் கண்டுபிடிக்கப்பட்ட வேல் ஆஃப் யோர்க் குவியலில் இஸ்லாம், கிறித்தவம் மற்றும் தோர் வழிபாட்டு கொள்கைகள் என மூன்று நம்பிக்கைகளை சார்ந்த பொருட்களையும் மற்றும் குறைந்தபட்சம் ஏழு விதமான மொழிகளையும் கொண்டிருந்தது. மற்றும் 2015 மார்ச் மாதத்தில் “அல்லாஹ்வுக்காக” அல்லது “அல்லாஹ்வுக்கு” என பொறிக்கப்பட்டு கண்ணாடியால் செய்யப்பட்ட வைகிங் பெண்மணியின் மோதிரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது”. [ஆதாரம்: தி கார்டியன்]

வாழ்வின் அனைத்து அம்சங்களில் மத்தியகால ஐரோப்பா இஸ்லாமிய நாகரீகத்தை கண்டு மதிமயங்கிய உண்மையை மேற்குலகம் நெடுங்காலமாக மறைத்து வந்துள்ளது. இன்று சீனா மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்ற நாடுவதை போன்று அன்று ஐரோப்பா இஸ்லாமிய நாகரீகத்தில் விருப்பம் கொண்டிருந்தது.

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம்: டிரம்பின் அச்சுறுத்தலையும் மீறி ஒப்பந்தத்தில் நிலையாக நிற்கும் உலக சக்திகள்

அமெரிக்க நேச நாடுகள் உட்பட உலக சக்திகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிழித்து எறியப்போவதாக அச்சுறுத்திய ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளனர். திரு. டிரம்ப. வெள்ளியன்று அந்த ஒப்பந்தத்திலிருந்து விடைபெறப்போவதாக கூறினார். பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த ஒப்பந்தம் “தங்களது பொதுவான தேசிய பாதுகாப்பு நலன்களுக்கானது” எனக்கூறி பதிலளித்தன. ஐரோப்பிய ஐக்கியம் “நடைமுறையில்” இருக்கும் ஒரு ஒப்பந்தத்தை “எந்தவொரு தனி நாடும் நிறுத்த முடியாது” எனக்கூறியது. ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்கா “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தனிமை படுத்தப்பட்டுள்ளது” எனக்கூறினார். “ஒரு சர்வதேச பலதரப்பு ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ஒரு அதிபர் ரத்து செய்ய முடியுமா?” என அவர் கேள்வியையும் எழுப்பினார். “இந்த ஒப்பந்தமானது ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் மட்டுமே ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தம் கிடையாது என்பதை அவர் அறியாமல் இருப்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.” இந்த ஒப்பந்தம் 2015ல் ஈரான் மற்றும் ஆறு சர்வதேச சக்திகளான பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்டது. அது ஈரானின் மீதான சர்வதேச தடையை தளர்ப்பதற்கு பதிலாக ஈரானிய அணுசக்தி திட்டத்தில் கட்டுப்பாடுகள் சிலவற்றை விதித்தது. வெள்ளியன்று ஒரு போர்க்கோல பேச்சில் திரு. டிரம்ப் ஈரானை ஒரு “வெறித்தனமான அரசு” என்று அழைத்தார் மற்றும் அது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் கூறினார். தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது என்று ஈரான் மீது குற்றம் சாட்டி புதிய தடைகளை விதிக்க வேண்டும் என முன்மொழிந்தார். “அதிகப்படியான வன்முறை, அதிகப்படியான பயங்கரவாதம் மற்றும் ஈரானிய அணுசக்தியை திடீரென பயன்படுத்துவது ஆகிய விளைவுகளை எதிர்நோக்கக்கூடிய பாதையில் நாம் தொடர்ந்து செல்லமாட்டோம்”, எனக் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தில் ஈரான் முழுமையான இணக்கத்துடன் இருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூறுகிறார்கள். திரு. டிரம்ப்புடைய பேச்சுக்கு பிறகு அது பற்றி சீனா இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை ஆனால் அதற்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்கும் படி கேட்டுக்கொண்டது. ரஷ்யாவின் அயலுறவு மந்திரிசபை டிரம்புடைய முடிவு குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும் ஆனால் நடைமுறையிலிருக்கும் இந்த ஒப்பந்தத்தை அது நிறுத்தும் என எதிர்பார்க்கவில்லை என கூறியது. இந்த ஒப்பந்தத்தில் ஈரான் தனது நிலையை நிலைத்துகிறது என்று அமெரிக்க அதிபர் 90 நாட்களுக்கு ஒருமுறை அரசவைக்கு சான்றளிக்க வேண்டும். திரு. டிரம்ப் ஏற்கனவே இருமுறை சான்றளித்துள்ளார், ஆனால் அதன் அடுத்த காலக்கெடு வரும் ஞாயிறன்று முடியும் தருவாயில் மூன்றாவது முறையாக அதில் அவர் கையைழுத்திட மறுத்துவிட்டார். மீண்டும் தடைகளை விதித்து இந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான முடிவை எடுக்க அரசவைக்கு 60 நாட்கள் உள்ளன. திரு. டிரம்ப் விரும்புவது என்னவென்றால் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் “சூரிய அஸ்தம விதிமுறைக்கூறுகள்” என்றழைக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நாடுகிறார்”, அவற்றில் ஒன்று 2025க்கு பிறகு ஈரானிய அணுசக்தி செரியூட்டும் திட்டத்தின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அனுமதிக்கிறது. அவர் ஈரானின் உயரிய புரட்சிப்படையின் மீது கருவூலத்துறையின் தடைகளை விதிப்பதாக அறிவித்தார், அதை அவர் “ஈரானுடைய தலைவரின் நேர்மையற்ற தனிப்பட்ட பயங்கரவாத படை” என்றழைத்தார், மற்றும் அவர் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறாத ஈரானுடைய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தின் மீதும் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். [ஆதாரம்: பிபிசி].

மேற்குலகில் பலர் டிரம்புடைய நிர்வாகம் யூத நிறுவனத்தையும் தனது ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக டெஹ்ரானுடைய அயலுறவு சாகசங்களை கட்டுப்படுத்த நாடுகிறது என நம்புகின்றனர். எனினும், இந்த விஷயத்தை அரசவைக்கு விட்டுவிட்டதன் மூலம் டிரம்ப் தனது ஆதரவாளர்களை திருப்தியடையச் செய்த அதே வேளையில் இந்த விஷயத்திலிருந்து விலகிச்செல்ல சூழ்ச்சி செய்கிறார்.

இருப்பினும், ஈரான் முன்பு ஈராக்கில் நடந்ததை போன்று எந்தவொரு ஒப்பந்தத்திலும் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதை உணர்ந்திருக்க வேண்டும், மற்றும் அணு ஆயுதங்களை தனதாக்கிக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஈரான் மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் உண்மையான உறவை மேற்கொள்ள துவங்கியுள்ளது என டிரம்ப் கூறினார்

அமெரிக்கா பாகிஸ்தானுடனான உண்மையானதொரு உறவை மேற்கொள்ள தொடங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளியன்று கூறினார். நேற்று பாகிஸ்தானுடன் சில விஷயங்கள் நடைபெற்றன எனக் கூறினார். ஆனால் நாம் பாகிஸ்தானுடன் ஒரு உண்மையான உறவை மேற்கொள்ள தொடங்கியிருக்கிறோம். பாகிஸ்தானும் இதர நாடுகளும் மீண்டும் அமெரிக்காவின் மீது மரியாதை செய்ய தொடங்கியுள்ளனர், என அதிபர் மேலும் கூறினார். “நமது தேசத்திடமிருந்து பாகிஸ்தான் பல ஆண்டுகளாக மிகுந்த நன்மையை அடைந்துள்ளது, ஆனால் நாம் பாகிஸ்தானுடன் ஒரு உண்மையான உறவை மேற்கொள்ள தொடங்கியுள்ளோம், மற்றும் அவர்கள் மீண்டும் நம்மை ஒரு தேசமாக மரியாதை செய்ய வேண்டும், அதேபோல் இதர நாடுகளும் என்று வெளிப்படையாக கூறினேன்,” என டிரம்ப் கூறினார். அதிபர் டிரம்ப் இதை வெள்ளியன்று வாஷிங்டனில் நடந்த வாக்காளர் மதிப்பு உச்சிமாநாட்டின் (Values voter Summit) போது கூறினார். அவருடைய இந்த கருத்தானது பாகிஸ்தான் தாலீபான் போராளிகளின் பிடியிலிருந்த அமெரிக்க-கனடிய குடும்பத்தினரை அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் விடுவித்ததற்கு மறு நாள் வெளிவந்தது. “அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு மரியாதை செலுத்த தொடங்கியுள்ளனர்,” எனக்கூறி அவர் பாகிஸ்தானின் தலைவர்களை “அவர்கள் செய்துவரும் காரியத்திற்காக” நன்றி கூறினார். வியாழனன்று அதிபர் டிரம்ப் தாலீபானின் பிடியிலிருந்த பிணைக்கைதிகளை விடுவித்தது குறித்து பாராட்டு தெரிவித்தார். அவர்களுடைய விடுதலையானது பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவில் ஒரு “ஆக்கப்பூர்வமான தருணம்” ஆகும் எனக் கூறினார். பாகிஸ்தான் “இப்பகுதியில் பாதுகாப்பை வழங்குவதற்கு அதிகளவு செயல்படுவதற்கான” விருப்பத்தை கொண்டிருப்பதற்காக பாராட்டும் தெரிவித்தார் மற்றும் இந்த விடுதலையானது “மற்ற தேசங்களும் அமெரிக்காவிற்கு மீண்டும் மரியாதை செலுத்த தொடங்கியுள்ளதை” குறிக்கிறது எனக் கூறினார். [ஆதாரம்: தி நேஷன்]

அமெரிக்காவுடனான உறவை துண்டிக்கும் வகையிலான பாகிஸ்தானிய அதிகாரிகளின் இந்த மூர்க்கத்தனமான நடத்தையை மீறியும் அவர்களுக்கு இடையேயான உறவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் பிரபல்யமான பாங்கான, அழுத்தம் கொடுப்பது மற்றும் பாகிஸ்தானிய தலைமைக்கு நிதி வழங்குவது மீண்டும் தொடங்கியுள்ளது.

ஈரானிய அணுசக்தி ஒப்பந்திற்கான சான்றளிப்பை டிரம்ப் ரத்து செய்தார்  

எதிர்பார்த்தபடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இம்முறை ஈரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தில் அதன் உடன்பாட்டிற்கு சான்றளிப்பதற்கான மறுப்பை நேற்று அறிவித்தார். எனினும், அமெரிக்கா தான் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதில்லை. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி:

அதிபர் டிரம்ப் வெள்ளியன்று டைஹ்ரானை அணுஆயதங்கள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளை தயாரிப்பதிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்கான திருத்தம் செய்யப்படவில்லை எனில் ஒரேயடியாக விலகப்போவதாக அச்சுறுத்தி ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லை என அறிவித்தார்,

மத்திய கிழக்கை சுற்றி ஈரானிய அரசின் நடவடிக்கைகள் மீது ஒரு அணல் கக்கும் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிபர் பாரக் ஒபாமாவால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை கட்டவிழ்ப்பதற்கு சற்று முன்னதாக நிறுத்திக்கொண்டார்.

“அதிகப்படியான வன்முறை, அதிகப்படியான பயங்கரவாதம் மற்றும் ஈரானிய அணுசக்தியை திடீரென பயன்படுத்துவது ஆகிய விளைவுகளை எதிர்நோக்கக்கூடிய பாதையில் நாம் தொடர்ந்து செல்லமாட்டோம்” என திரு. டிரம்ப் ஈரானை எதிர்கொள்வதற்கான ஒரு விரவான திட்டத்தை விளக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் நிகழ்த்திய ஒரு உரையில் அறிவித்தார்.

ஈரானை அதன் பிராந்தியத்திற்குள் திறம்பட பயன்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக இதர ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வேண்டி இந்த முயற்சியை ஒபாவின் கீழ் அமெரிக்கா தான் எடுத்தது. யதார்த்தத்தில் அமெரிக்காவுக்கு கீழ்படிந்து செயல்படும் பாக்தாத் மற்றும் டமாஸ்கஸ் அரசாங்கங்களுக்கு ஆதரவளிப்பதில் ஈரான் அதிகளவில் வெளிப்படையாகவும் கருவியாகவும் செயல்பட்டது. உண்மையில், அமெரிக்காவின் செயல்திட்டத்திற்கு ஈரான் முழுமையான ஒத்துழைப்பை நல்கியது அதன் காரணமாகத்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை அதற்கு வெகுமதியாக வழங்கப்பட்டது. மற்றும் இந்த ஒப்பந்தத்தில் ஈரானுடைய உடனடி உடன்பாட்டிற்கு சான்றளிக்க மறுத்திருந்தாலும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் நீடித்திருக்கும் என்பதை டிரம்ப் தெளிவாக்கியுள்ளார், ஆக இந்த விஷயத்தில் அமெரிக்க கொள்கையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. பின்பு ஏன் டிரம்ப் இப்போது இந்த கலவரத்தை ஏற்படுத்தியுள்ளார்? முதலாவதாக இது அவருடைய உள்ளூர் அரசியல் பார்வையாளர்களுக்கு நன்மையானது. இரண்டாவதாக இப்போது சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவுக்கான தனது சேவையை ஈரான் செய்து முடித்திருப்பதால் இதற்கு பிறகு அமெரிக்காவின் அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடாதிருக்கும் வகையில் அமெரிக்கா ஈரானை கட்டுப்படுத்த நாடுகிறது.

அந்நிய சக்திகளுக்கு முகவராக வாழ்வதென்பது ஒரு கீழ்படியும் மற்றும் அவமானகரமான வாழ்வாகும். அல்லாஹ்வின் இசைவோடு வெகு சீக்கிரத்தில் நமது கைப்பாவை ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் உலகெங்கிலும் இஸ்லாத்தை எடுத்துச்செல்லும் ஒரு உண்மையான, நமது நிலப்பரப்பிலிருந்து வெளிவரக்கூடிய, இஸ்லாமிய சித்தாந்தத்தின் தலைமைத்துவம் உருவாவதை நாம் காண்போம்.

அமெரிக்க குழு விஜயம் செய்யும் நாளன்று பிணைக்கைதிகளை விடுவித்தது பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என டிரம்ப் கண்டனம் தெரிவித்ததையடுத்து அமெரிக்காவுடனான உறவை சீர்செய்ய பாகிஸ்தானின் தலைமைத்துவம் விரைகிறது. டான் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டதாவது:

“அனைத்து நிலையிலும் இருநாடுகளுக்கு இடையேயான
ஈடுபாட்டை தொடர்வதற்கும் தீவிரவாதத்தை அழிப்பது என்ற இருவருக்குமான பொது நலனை அடைவதற்காகவும் வேண்டி இரு நாட்டுக்கு இடையேயான உறவுக்கு புத்துணர்வை ஊட்டுவதற்கும் வியாழன்று ஒப்புக்கொண்டதன் காரணமாக பாக்-அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் ஏற்பட்ட கறை வெகுவேகமாக மறைந்து வருகிறது.

‘தற்செயலாக’ நடைபெற்ற ஒரு ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவெனில் ஒரு கனடா நாட்டு பிரஜை, அவருடைய அமெரிக்க நாட்டை சார்ந்த மனைவி மற்றும் அவர்களுடைய மூன்று குழந்தைகள் ஆப்கானிஸ்தானில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டதற்கு பிறகு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வியாழனன்று பாகிஸ்தானிய இராணுவத்தினரால் மீட்கப்பட்டனர். இந்த மீட்பை குறித்து வெள்ளை மாளிகை உடனடியாக தனது பாராட்டை தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஒரு புதிய செயல்திட்டத்தை வெளியிட்ட பிறகு நடைபெற்ற உயர்மட்ட குழுவின் முதல் பாகிஸ்தானிய விஜயமாகும்.”

பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் இராணுவம் மற்றும் இராணுவம் சாராத இரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோபத்தினால் தொடர்ந்து அச்சமுற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றன. கடந்த மாதம் டிரம்ப் உபயோகித்த பண்பாடற்ற சொற்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக பாகிஸ்தானிய தலைமையை கடுமையான வார்த்தைகளை வெளிப்படையாக உபயோகிக்க வைத்தது. ஆனால் திரை மறைவுக்கு பின்னால் அவர்கள் வெறுமனே அமெரிக்காவுடனான உறவை மீண்டும் நிறுவுவதற்கான வழிகளை தேடி வருகிறார்கள், அது அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்கும் அமெரிக்காவிற்குள் அவருடைய நிலையை உயர்த்துவதற்காகவும் பிணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது வரைக்கும் அவர்கள் சென்றுள்ளனர்.

முஸ்லிம் உலகில் உள்ள தற்போதய தலைமைகளானது உலகின் ஒரே ஏகாதிபத்தியமாக இருக்கும் நிலையிலும் பொதுவாக இறைமறுப்பை கொண்ட ஒரு அந்நியரின் இருப்பை முஸ்லிம் உம்மத் நிராகரித்த காரணத்தால் அமெரிக்கா தனது அதிகாரத்தை முஸ்லிம் உலகில் ஆழமாக நிறுவ முடியவில்லை என்பதை பார்ப்பதில் முழுமையான குறைபாட்டை கொண்டுள்ளன. இதன் காரணமாகவே கடந்த நூற்றாண்டில் பிரிட்டனும் இதர காலனியாதிக்க நாடுகளும் முஸ்லிம் நிலபரப்புகளிலிருந்து வெளியேற நேர்ந்தது. அல்லாஹ்வின் ஆணையின் படி அவர்கள் விட்டுச்சென்ற இந்த கைப்பாவை ஆட்சியாளர்களும் திரும்பி செல்வர் மற்றும் அவர்களுக்கு பதிலாக உம்மத்திற்கும் அதனுடைய தீனுக்கும் உண்மையாக இருப்பவர்களை கொண்டு அவர்களுடைய இடத்தில் நிரப்பப்படுவர்.

பொதுஜன வாக்கெடுப்பு நடத்தியமைக்காக குர்துகளை அமெரிக்கா தண்டித்தது

வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியின் படி:

“போராட்ட களமாக இருக்கும் கிர்குக் நகரிலிருந்து எண்ணைக்கிணறுகள் மற்றும் இராணுவ தளங்களில் இருந்து குர்திய படைகள் வெளியேற வேண்டும் என்று ஈராக்கிய படை கோரியுள்ளது என வெள்ளியன்று குர்திய அதிகாரிகளும் போராட்டக் குழுவின் ஒரு மூத்த தலைவரும் கூறியது மோதலை ஏற்படுத்தக்கூடியதொரு பதற்ற நிலையை இந்த நகரை சுற்றி ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கிய படைகளால் பல நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் பின்வாங்குமாறு தங்களுக்கு கட்டளைகள் வந்துள்ளதாக குர்திய அதிகாரிகள் கூறினர்.

ஈராக்கிய எண்ணை இருப்புகளில் 10 சதவீதத்தை கொண்ட கிர்குக் பகுதியை கைப்பற்றுவதற்கு பாக்தாதின் மத்திய அரசுக்கும் இர்பிலுள்ள குர்திய அதிகாரிகளுக்கும் இடையே நெடுநாளாக போட்டி நிலவி வருகின்றன, ஆனால் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பின் போது சுதந்திரம் அடைவதற்கு ஆதரவாக குர்திஸ்திஸ்தானிய பகுதி வாக்களித்ததன் காரணமாக இந்த பிராந்தியம் மேலும் சூடு பிடித்துள்ளது.”

பாக்தாத் அரசாங்கம் முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதை மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த மாதம் பாக்தாதிலிருந்து குர்தானிஸ்தானின் சுதந்திரத்திற்காக ஒரு வெகுஜன வாக்கெடுப்பை நடத்துவதென ஈராக்கின் வட பகுதியிலுள்ள இர்பிலில் குர்திய ஜனநாயக கட்சி தலைவர் மசூத் பர்ஜா(Z)னி எடுத்த முடிவினால் அமெரிக்கா கடும் சினமுற்றுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வண்ணமாக குர்திய பேஷ்மெர்கா படைகளால் விடுவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக குர்திஸ்தானை சாராத மற்றும் ஈராக்கின் 10 சதவீத எண்ணையை உற்பத்தி செய்யும் கிர்குக்கை மீண்டும் கைப்பற்றுவதற்கு ஈராக்கிய பிரதமர் ஹைதர் அல்- அபாதியிடம் அமெரிக்கா அறிவுறுத்தியது.

குர்திஸ்தானிய பிரச்சனைக்கான தீர்வானது ஈராக்கிலிருந்து சுதந்திரம் அடைந்து பிரிந்து போவது கிடையாது மாறாக நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையில் நேர்வழி பெற்ற இஸ்லாமிய அரசை மறு நிர்மாணம் செய்து அனைத்து முஸ்லிம் நிலப்பரப்புகளில் இருந்தும் அந்நிய இறைமறுப்பை கொண்ட ஏகாதிபத்தியத்தை வெளியேற்றி மற்றும் இஸ்லாத்தை அதன் தேசத்தில் முழுமையாக நடைமுறை படுத்தி மற்றும் அனைத்துலகிற்கும் இந்த இஸ்லாமிய அழைப்பை உலகெங்கும் ஏந்தி செல்லக்கூடிய நேர்வழி பெற்ற கலீஃபாவின் கீழ் அனைத்து முஸ்லிம் நிலப்பரப்புகளையும் ஒன்றினைப்பது தான்.

Comments are closed.