சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 07.10.2017

தலைப்பு செய்தி

1)ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தந்தை தொடர்வதில் டிரம்ப் பிரச்சனை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

2) மேற்கத்திய சக்திகளின் ஆதாயத்திற்காக மீண்டும் உபயோகிக்கப்படும் நோபெல் பரிசு

3) ரஷ்யாவுடன் உறவு வைத்து கொள்ள சவூதி அரசன் சல்மான் ஆர்வமாக உள்ளார்.

4) வரும் 2070 ல் இஸ்லாம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும்.

5) ஆப்கானிலிருந்து வெளியேறுவது நமக்கு பெரும் பேரழிவை உண்டாக்கும்: மாட்டிஸ்.

6) அமெரிக்கா பாகிஸ்தானுடன் மீண்டும் ஒரு முறை சேர்ந்து வேலை செய்ய போகின்றது.

 

1) ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தந்தை தொடர்வதில் டிரம்ப் பிரச்சனை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த மாதம் ஐ.நா மாநாட்டில் ஈரானுக்கு எதிராக அறிக்கைகளை கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வரக்கூடிய காலங்களில் அந்நாட்டுடனான அணு ஆயூத ஒப்பந்த சான்றளிப்பை மறுக்க போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது

 வாஷின்டன் போஸ்ட் பத்திரிகையில் வந்திருப்பதாவது:

“வரும் வாரத்தில் ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை, அது அமெரிக்க நாட்டின் தேசிய நலனுக்கு உகந்ததாக இல்லை என கூறி, அவ்வொப்பந்தத்தின் அங்கீகாரத்தை நீக்கி, அவ்விஷயத்தை காங்கிரசிடம் ஒப்படைக்க, அதிபர் டிரம்ப்  தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தனர். 

கடந்த 2015 ல் அமெரிக்காவும் மற்ற ஐந்து நாடுகளும் சேர்ந்து ஈரானுடன் போடப்பட்ட இந்த அணு ஒப்பந்தத்தை கைவிடுவதன் மூலம், மீண்டும் அமெரிக்கா ஈரானின் மீது பொருளாதார தடை விதிப்பதின் அறிகுறியாக அறியப்படுகின்றது. அதிபரின் செயல்பாட்டில் பரிட்சயமான நான்கு நபர்களின் கூற்றின் படி, ‘ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை மீண்டும் அமுல் படுத்த காங்கிரஸிடம் பரிந்துரை செய்ய அதிபர் டிரம்ப் தயாராக உள்ளதாக’ தெரிய வந்துள்ளது. அவ்வாறு தடை அமுல் படுத்தப்பட்டால், அது அணு ஒப்பந்தத்தின் முறிவை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.  

டிரம்பை பொறுத்தவரை, அவர் இவ்வொப்பந்தத்திலிருந்து வெளிவர வெகுகாலமாக விருப்பம் தெரிவித்திருந்தார். அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள், மூத்த அரசியல்வாதிகள் , ராணுவ தளபதிகள் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களில் பலர் இவ்வொப்பந்தத்தில் சில மாற்றங்களை தவிர்த்து, அவற்றை தொடரவே விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே இரு விருப்பங்களையும் உள்ளடக்கிய ஒரு நடுநிலையான முடிவையே இவ்விஷயத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.     

சென்ற வாரம் காங்கிரஸில் நடந்த சான்றுரையில் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் மற்றும் கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவரான ஜெனரல் ஜோசப் F. டோன்போர்ட் போன்றவர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளனர். 

மாட்டிஸ் கூறுகையில், “இந்த ஒப்பந்தத்தின் சான்றை திரும்ப பெரும் நடவடிக்கை இவ்வொப்பந்தத்தை முறித்துவிடாது என தான் நம்புவதாக’ கூறினார்.”

டிரம்பின் போக்கு சிறுபிள்ளை தனமாகவும் பிற்போக்கு தனமாகவும் தெரிந்தாலும், உண்மையில் அவர் வெளியுறவு கொள்கைகளில்  அமெரிக்காவின் நிலையான சிந்தனை மற்றும் ரிபப்ளிகன் கட்சியின் சிந்தனைகளையே மேற்கொண்டுள்ளார். ஐரோப்பியர்கள் ஈரானுடன் சுமூகமான உறவு வைத்து கொள்வதற்கு ஏற்றாற்போல் ஒபாமா அரசு சலுகைகள் வழங்கியது. இது அமெரிக்காவிற்கு குறிப்பாக ரிபப்ளிகன் கட்சிக்கு விருப்பமாக இருந்ததில்லை.

கடந்த ஜூலை மாதம் ஈரானின் பத்திரிக்கையான Financial Tribune ன் படி,

இந்த வருடத்தின் முதல் நான்கு மாத்திற்குள்ளாகவே, ஐரோப்பிய ஐக்கிய நாடுகளுக்கு ஈரான் ஏற்றுமதி செய்த கச்சா எண்ணையின் தொகை 9.31 மில்லியன் டன்னாகும். இது சென்ற வருடத்தின் தொகையைவிட ஆறு மடங்கு அதிகமாகும்.”  இன்னும் சொல்ல போனால் இராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கா அளித்த பணியை ஈரான் செம்மையாக செய்து முடித்துள்ளது. இதற்கிடையில் இந்த இடங்களில்  அமெரிக்காவின் ஆலோசைனைக்கு மீறிய போக்கை  ஈரான் செய்து விடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையே இந்த செயல்பாடாகும்.எதுவரை ஈரானின் தலைமைத்துவம் குறுகிய தேசிய வாத சிந்தனையிலும் இனவாத கொள்கையிலும் உறுதியாக இருப்பார்களோ, அதுவரை அவர்கள் வெற்றியடையவே மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் ஆப்கான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக இறைமறுப்பாலர்களிடம் கூட்டு சேர வைத்தது இந்த கேடுகெட்ட சிந்தனைகள் தான்.இஸ்லாத்தில் தேசியவாதம் இனவாதம் போன்ற கொள்கைகள் எதுவும் இல்லை.இறைமறுப்பாளர்களுடன் சேர்ந்து சூழ்ச்சிசெய்வது மார்கத்திற்கு செய்கின்ற துரோகமாகும். முஸ்லிம் உம்மத் ஒன்று சேர்ந்து இஸ்லாமை மீண்டும் நிலைநிறுத்தி முஸ்லிம் நிலங்களிலிருந்து அந்நிய சக்தியை வெளியேற்றுவதற்கு  இதுவே நேரமாகும். ஈரானில் வாழும் உண்மையான முஸ்லிம்கள் வழிகெட்ட தலைமைத்துவத்திற்கு எதிராக குரல் கொடுப்பது அவசியமாகும்.

 2) மேற்கத்திய சக்திகளின் ஆதாயத்திற்காக மீண்டும் உபயோகிக்கப்படும் நோபெல் பரிசு

அணு ஆயுதத்திற்கு எதிராக போராடக்கூடிய அமைப்பிற்கு நோபெல் பரிசு அளிக்கப்படுவதாக அறிவித்திருக்கும் அறிவிப்பானது, மேற்கின் மேலாதிக்க சக்திகளின்  உலக ஆதாயத்தின்படியே அது அறிவிக்கப்படுகின்றது என்பது தெளிவாகின்றது. BBC யின் அறிவிப்பின்படி :

International Campaign to Abolish Nuclear Weapons (Ican) என்ற அணு ஆயுத எதிர்ப்பு அமைப்பிற்கு  நோபெல் பரிசு வழங்கப்படுகின்றது.

நோபெல் குழுவின் தலைவர் பேரீத் ரீஸ் ஆண்டர்சன் Berit Reiss-Andersen கூறுகையில் ‘அணு ஆயுதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தை சாத்தியத்திற்கு கொண்டு வர இந்த அமைப்பு செய்த உழைப்பே அது நோபெல் பரிசு பெறுவதற்கு முக்கிய காரணமாகும்’ என கூறினார். மேலும் அவர் கூறுகையில் , “நாம் வாழும் காலக்கட்டங்களில், இதற்கு முன்பில்லாத அளவிற்கு, அணு ஆயுதம் உபோயோகிக்கும் அபாயம் பெரிதாக இருப்பதை காணமுடிகின்றது.” என கூறினார். இந்த Ican அமைப்பின் வற்புறுத்தலுக்கு இணங்க 122 நாடுகள் அணு ஆயுதத்தை தடை செய்து அதன் மூலமாக அதனை முற்றிலும் அகற்ற, ஐநாவின் ஒப்பந்தத்தில் கடந்த ஜூலை மாதம் கையெழுத்திட்டனர் . ஆனால் மொத்தம் இருக்க கூடிய ஒன்பது அணு ஆயுதசக்தி நாடுகளும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்திவிட்டனர். இதில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் அடங்கும். இது போன்ற ஆயுதங்களை ஒழிக்க அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என Ms ரீஸ்  அழைப்பு விடுத்திருந்தார்.

Ican என்பது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பாகும் (NGOs). இது பத்து வருட பழமையான அமைப்பாகும்.இது சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா நகரத்தை தலைமையிடமாக கொண்டதாகும். வருகின்ற டிசம்பர் மாதம் நடக்க விருக்கும் விழாவில் இந்த அமைப்பிற்கு, பதக்கம் உட்பட ஒன்பது மில்லியன் சுவிட்சர்லாந்தின் நாணயமான kronor பரிசாக வழங்கப்படவுள்ளது. இது டாலரின் மதிப்பில் சுமார் 1.1 மில்லியன் டாலராகும்.   

மற்ற நாடுகளால் அணு ஆயுதங்களை செறிவூட்டப்படுவதை தடுப்பதனால், மேற்கத்திய நாடுகள் தங்களின் அணு ஆயுத ஆதிக்கத்தை தக்க வைத்துகொள்ள முழு சாதகமாக இருக்கும். அது போல, முற்றிலும் மேற்கின் ஆதிக்கத்தில் இருக்கும் இன்றைய உலகத்தில் அவர்களின் எதிர்ப்பையும் மீறி 122 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தது என்பது நம்பமுடியாத விஷயமாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லபோனால், மேற்கத்திய நாடுகள் தங்களுக்குள்ளாகவே அணு ஆயுதங்களை தயாரித்து கொண்டிருக்கும் நிலையில், மற்ற அனைத்து நாடுகளையும் அணு ஆயுதத்திற்கு எதிரான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாகும்.

அறிவியல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதனால் வந்த மோசமான ஆயுதம் தான் அணு ஆயுதம். முந்தைய உலமாக்கள், பொதுமக்கள் அதிகம் இறப்பார்கள் என கூறி பீரங்கியை  சுவரை உடைப்பதற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என கூறிவந்தனர். ஆனால் இன்று மேற்கத்தியர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆயுதங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர், அதனால் இன்று முஸ்லிம்கள் மேற்கத்தியர்களின் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு  அதனை பெற்று கைதேர்ந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது.

இன்ஷா அல்லா, மீண்டும் வரும் நேர்வழிபெற்ற கிலாபா அரசின் மூலம் இந்த அணு ஆயுதங்கள் பூமியிலிருந்து துடைத்து எறியப்படும். இந்த அரசு மட்டுமே மனிதகுலத்தின் உண்மையான பாதுகாவலானாக இருக்க முடியும்.

 3) ரஷ்யாவுடன் உறவு வைத்து கொள்ள சவூதி அரசன் சல்மான் ஆர்வமாக உள்ளார்.

இதற்கு முன்னர் இருந்த சவூதி மன்னர்கள் ஈரானுடனான ரஷ்யாவின் ஒத்துழைப்பில்  பெரும் அதிருப்தி அடைந்திருந்தனர். ஆனால் இதற்கு  மாற்றமாக, இந்த வாரம் முதல் முறையாக சல்மான் மாஸ்கோவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராய்டர்சின் அறிவிப்பின்படி,

உலக எண்ணையின் விலையை நிர்ணயம் செய்வதிலும், சிரியாவின் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகிக்கும்  சவூதி அரசு, ரஷியாவுடன் சுமூக உறவுமுறையை மேற்கொள்ள, மன்னர் சல்மான், அதிகாரிகள், பிரமுகர்கள் போன்றவர்கள் இந்த வாரம் ரஷியா சென்றனர்.

சவூதி மன்னர்களில் ரஷியாவிற்கு பயணம் செய்வதில் சல்மானே முதல் நபராகும். இப்பயணத்தில் பல கோடிகள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. 

 சவூதி-ரஷியாவிற்கு இடையிலான உறவு சுமூகமடைவது பல நல்ல விஷயங்களுக்கான அறிகுறி என பாலிஹ் ( சவூதி அமைச்சர் ) கூறியுள்ளார்.

“சவூதி-ரஷியாவிற்கு இடையிலான உறவு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றது, மன்னரின் பயணத்திற்கு பிறகு அது புதிய நிலையை அடைந்துள்ளது” என அவர் கூறினார்.

மற்ற நாடுகளை போலவே சவூதியும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக ரஷியா சீனா போன்ற நாடுகளுடன் உறவு வைத்து கொள்ள பார்க்கின்றது. ஆனால் இதுபோன்ற திட்டங்கள் முற்றிலும் வழிகெட்டதாகும். அந்நிய இறைமறுப்பாளர்களிடம்  உதவி கோருவது, முஸ்லிம் உம்மத்தின் கண்ணியத்தையும் இறையாண்மையையும் குழைக்க கூடியதாக இருக்கின்றது. ரஷியாவும் சீனாவும் முஸ்லிம் அரசாங்கத்துடன் தொடர்பு வைத்து கொள்வது அமெரிக்காவிற்கு எந்த பயத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்ல போனால், இது போன்ற உறவுகள் மூலம் அமெரிக்கா ரஷியா- சீனா விற்கு இடையேயான பிளவையையும் போட்டியையும் அதிகப்படுத்துவதே நோக்கமாகும். எண்ணை சம்பந்தமான சவூதி-ரஷிய ஒப்பந்தம் அமெரிக்காவின் shale தொழிர் துறையையே வளர்க்ககூடியதாகவே இருக்கின்றது.

 ரஷ்யாவும் சீனாவும் ஒவ்வொரு காலங்களிலும் மேற்கின் சொல்பேச்சுக்கு கட்டுபடகூடியவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் என்றைக்கு வேண்டுமானாலும் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கலாம்.

முஸ்லிம் உம்மத்தையும் மார்க்கத்தையும் தன்னிச்சையான தலைமைத்துவத்தின் கீழ் கொண்டு வராமல், மற்ற தலைமைத்துவத்தின் கீழ் அடிபணிய நினைக்கும் பிற்போக்கு சிந்தனையுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் குரல் கொடுப்பது அவசியமாக இருக்கின்றது.இன்ஷா அல்லாஹ், முஸ்லிம்களின் விவகாரங்களை சரியாக வழிநடத்த கூடிய நேர்வழி பெற்ற சிந்தாந்த தலைமைத்துவம் திரும்ப வருவதை முஸ்லிம்கள் சாட்சி பகர்வது வெகு தூரத்தில் இல்லை.

 4) வரும் 2070 ல் இஸ்லாம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும்.

உலகத்திலுள்ள பல நாடுகளின் அரசு சார்ந்த மதம் இஸ்லாமாகும். ஒரு ஆராய்ச்சியின் படி, இது வரும் 2070 ல் கிருஸ்தவ மதத்தைவிட மிஞ்ச கூடியதாக இருக்கின்றது. அந்த ஆராய்ச்சியின் படி, இஸ்லாம் மட்டுமே பரவலாக அரசு அங்கீகரித்த மதமாகும், ஆனால் கிருஸ்தவ மதத்தை அரசுகள் அதிகாரப்பூர்வமற்ற மதமாக மட்டுமே அங்கீகரித்துள்ளனர்.

மொத்தம் 27 அரசுகள் இஸ்லாமை அரசின் அங்கீகரித்த மதமாக கொண்டுள்ளனர். அதே சமயத்தில் கிருஸ்தவ மதம் இங்கிலாந்த் உட்பட வெறும் 13  நாடுகளில் மட்டுமே அரசு மதமாக இருக்கின்றன. அதிகாரப்பூர்வமற்ற மதமாக கிருஸ்தவ மதத்தை ஏற்றுள்ள 40 அரசுகளில் 28  நாடுகள் சட்டரீதியாகவோ அல்லது பொருளாதார மூலமாகவோ கிருஸ்தவ மதத்தை ஆதரிக்கின்றனர்.

வாஷிங்டனில் உள்ள Pew ஆராய்ச்சி மையம் 199 நாடுகளில் செய்த ஆராய்ச்சியின்படி, 43 நாடுகள் மதத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளனர், மேலும் 40 நாடுகள் மதத்தை முக்கியத்துவம் கொடுத்துவருகின்றனர், அமெரிக்கா உட்பட 106 நாடுகள் மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மேலும் அதிலும் குறிப்பாக பத்து நாடுகள் மதத்திற்கு எதிராக வன்போக்கு நிலையில் இருக்ககூடிய நாடுகளாகும்.

சீனா, கியூபா,வடகொரியா, வியட்நாம், சில முன்னால் சோவியத் குடியரசுகள் இதிலடங்கும்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சில நேரங்களில்,அரசுகளின் மதங்கள் பெரும்பாலும் சடங்கு சம்பிரதாயம் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஆனால் சட்டம் அல்லது வரி அந்தஸ்து சாதகம் பெற, நிலங்களை மற்றும் சொத்துகளை உரிமம் கொள்வதில், அரசிடமிருந்து உதவி தொகை வாங்குவதிலும்   மதங்களின் வேறுபாடு கணிசமான பங்கு அளிக்கின்றன.

‘மேலும்,மதங்களை அரசின் நம்பிக்கையாக அங்கீகரித்த நாடுகள் கடுமையாக மத வழிபாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்- மற்ற மதங்களின் குழுக்களை தடை செய்வது, அவர்களுக்கு கட்டுப்பாடுகள் வித்திப்பது போன்றவைகள் இதிலடங்கும்.’

‘மேலும் உலகில் உள்ள பல அரசுகள் மதத்தை பொறுத்தவரை நடுநிலையாகவே இருக்கின்றனர்’ என அந்த அறிக்கை கூறி முடிக்கின்றது.

பிறகு Pew ஆராய்ச்சி மையம் ‘முஸ்லிம்கள் 2070 ல் கிருஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள்’ என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டது.

வரும் 2070 ல் சுமார் 32 சதவீதம் என்ற  அடிப்படையில், இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் தொகை கிருஸ்தவ தொகையை சமம் செய்யும். மேலும் 2100 வாக்கில், முஸ்லிம் மக்கள் தொகையின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட ஒரு சதவீதம் அதிகரித்திருக்கும்’ என இதற்கு முன்னர் 2014 ல் வெளிவந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் எண்ணிக்கை வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகரிக்க, நடக்கின்ற புலம்பெயர்தல் பெரும் பங்கு வகிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். Pew அறிக்கையின்படி உலகில் அதிகமாக வளரக்கூடிய மதம் இஸ்லாமாகும். 2010 ல் மொத்தம் 1.6 பில்லியன் முஸ்லிம்கள் இருந்துள்ளார்கள். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். அதே சமயத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.2 பில்லியனாகும் . இது மக்கள் தொகையில் 31 சதவீதமாகும்.

மேலும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மற்ற மதத்தவர்களிடம் இருக்கும் குழந்தைகளை விட முஸ்லிகளிடம் அதிகமாக இருக்கின்றனர். இதில் முஸ்லிம் பெண்களின் குழந்தைகளில், ஒரு பெண்ணிற்கு 3.1 குழந்தைகள் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மற்ற மதங்களின் கணக்கீடை  ஒன்றாக சேர்த்தாலே வெறும் 2.3 என கூறியுள்ளது.

2010 ன் படி முஸ்லிம்களின் சராசரி வயது 23 வயதாகும், இது மற்ற மதத்தவரின் சராசரி வயதைவிட ஏழு வயது இளையதாகும்.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : ‘உலக மக்கள் தொகையில் எந்த மாற்றமும் வரவில்லை என்றாலும் , நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர்தல் மற்ற இடங்களில் குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களின் ஜனதொகை அதிகரிக்க உதவியாக இருக்கும் என ’ கூறப்பட்டுள்ளது. இந்தோனிசியா, இந்தியா, பாகிஸ்தான்,ஈரான்,துர்கி போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.அதிலும் ஆசியா-பசிபிக் பகுதிகளில் மட்டும் 62 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என Pew ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஆராய்ச்சியின்படி, வரும்  2050 ல் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்தோனிசியாவைவிட அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை பொருத்தவரை அங்கு 3.3 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் மொத்தம் ஒரு சதவீதமாகும். 2050 ல் இது  2.1 சதவீதமாக அதிகாரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

 [Source: Daily Mail].

“அவன் தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்- மற்ற எல்லா மார்க்கத்தையும் மிஞ்சுவதர்க்காக இணைவைப்பாளர்கள் வெறுத்த போதும்” (அல் குர்ஆன் 9:33)

 5) ஆப்கானிலிருந்து வெளியேறுவது நமக்கு பெரும் பேரழிவை உண்டாக்கும்: மாட்டிஸ்.

கடந்த செவ்வாய் கிழமை காங்கிரசிடம் ஆப்கானில் துருப்புகளை அதிகப்படுத்துவது தொடர்பான திட்டங்களை விளக்கும் பொழுது, ‘ஆப்கானிலிருந்து படைகளை வெளியேற்றுவது பெரும் பேரழிவை உண்டாக்கும்’ என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் எச்சரித்துள்ளார். செனட்டின் ஆயுத சேவை குழுவின் (Senate Armed Services Committee) முன் சான்று அளிக்கும் பொழுது, அவர் கூறுகையில், “உளவுத்துறை குழுவின் ஆராய்ச்சியின் படியும், என்னுடைய சொந்த கணக்கின்படியும், நாம் அந்த பகுதியில் – நம்முடைய இருத்தல் இல்லையென்றால் நமக்கு அழிவு என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.”

ஏற்கனவே அங்கு 11,000 துருப்புகள் இருக்கும் நிலையில், அண்மையில் ஆப்கான் நாட்டின் பாதுகாப்பு படையை பயிற்றுவிக்க கூடுதல் 3,000 துருப்புகளை அனுப்பும் திட்டத்தை அதிபர் டிரம்பின் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ல் அமெரிக்க தலைமையில் போராடிய படைகள் வெளியேறியதற்கு பிறகு, தாலிபான்கள் எதிர்த்தாக்குதலை அதிகப்படுத்தினர். இதனால் அங்குள்ள அரசு படைகள் இவர்களை தடுக்க  கடுமையாக போராடினர். இப்போருக்கு அன்றிலிருந்தே அமெரிக்கா உதவி செய்து வந்திருக்கின்றது. இவர்களின் இந்த பொறுப்பை உறுதி செய்ய நாடோவின் செயலாளர் General Jens Stoltenberg உடன் மாட்டிஸ் சென்ற வாரம் ஆப்கான் பயணம் மேற்கொண்டார்.

ஆப்கானில் உள்ள மூத்த தளபதியான ஜெனெரல் ஜான் நிகல்சன் அங்குள்ள நிலமையை கட்டு கோப்பாக வைத்துள்ளார் என்று மாடிஸ் செனட்டிடம் உறுதி செய்தார். மேலும் அவர் கூறுகையில், ”நாம் ஆப்கானில் இருப்பது நம்முடைய நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகதான், நம்மீதும் நம்முடைய நேச நாடுகளின் மீதும் தெற்காசிய பகுதிகளிருந்து எந்த ஒரு தாக்குதலும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.” என அவர் கூறினார்.”

[Source: Dawn].

அமெரிக்காவின் படைகளுக்கான திட்டத்தில் நீண்ட கால திட்டம் இல்லை என்பதை மாட்டிஸ் அவரின் கூற்றிலிருந்து தெளிபடுத்தியுள்ளார்.

ஆப்கானில் புஷ்துன் எதிர்ப்பாளர்களை அடக்க உலகின் வல்லரசு தற்பொழுது பிரிட்டனை தன்னுடைய படைகளை அனுப்ப நிர்பந்திக்கின்றன. அமெரிக்காவின் முதன்மைத்துவம் அழிவில் இருக்கின்றது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். ஆப்கானில் அவர்கள் எந்த ஒரு நிலையான தீர்வையும் கொண்டு வர முடியவில்லை

 6) அமெரிக்கா பாகிஸ்தானுடன் மீண்டும் ஒரு முறை சேர்ந்து வேலை செய்ய போகின்றது.

பாகிஸ்தான் தீவிரவாத கும்பலை ஆதரிப்பதை தடுக்க, அதிபர் டிரம்ப் மற்ற சாத்தியக் கூருகளை எடுப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து இப்பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் கூறியுள்ளார். கடந்த பத்து வருடங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தேய்ந்திருப்பதை பார்க்கமுடியும். ஆப்கானில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்று அதிகாரிகள் வெகு காலமாக கேள்வி எழுப்பி கொண்டிருக்கும் நிலையில், மாடிசின் இந்த கருத்து பாகிஸ்தானின் அரசியல் வாதிகளிடமும் இராணுவத்திடமும் கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. ஆயுத சேவை குழுவின் House Armed Services Committee யிடம் அவர் கூறுகையில் “இந்த திட்டத்தை வேலை செய்ய வைக்க பாகிஸ்தானுடன் மறுபடியும் ஒரு முறை சேர்ந்து வேலை செய்வது அவசியமாக இருக்கின்றது. இந்த திட்டமும் வெற்றியடையவில்லை என்றால், அதிபர் வேறு சில வழிமுறைகளை எடுக்க தயாராக உள்ளார்” என கூறினார். மேலும் தாம் விரைவில் இஸ்லாமாபாத்திற்கு செல்ல போவதாகவும் அவர் கூறினார். மேற்கொண்டு எந்த தகவலும் அவர் கொடுக்க வில்லை.

(பாகிஸ்தான் ஒத்து வரவில்லை என்றால்) டிரம்பின் செயல்பாடு என்னவாக இருக்கும் என்று ராய்டர்ஸ் அறிவிக்கையில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தானை ‘நாடோ அல்லாத நேச உறுப்பினர்’ என்ற அந்தஸ்திலிருந்து  எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.  பாகிஸ்தானின் ‘நாடோ அல்லாத நேச உறுப்பினர் அந்தஸ்தை’ நீக்கி விடுவீர்களா என்று அரசியல்வாதிகள் கேட்ட கேள்விக்கு மாட்டிஸ் “ஆம் நிச்சயமாக” என கூறினார்.

செனட்டில் செவ்வாய் கிழமை நடந்த வேறொரு கூட்டத்தில் மூத்த ஆப்கான் தளபதி கூறுகையில், ‘பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI க்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதகாக’ அவர் கூறினார்.

“ISI க்கும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கின்றது என்பது எனக்கு தெளிவாக தெரியும்.” ராணுவ தளபதி ஜோசேப் டுன்போர்ட் Joseph Dunford செனட்டின் ஆயுத சேவை குழுவிற்கு விளக்கம் அளித்தார். வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தானிய தூதரகம் கூறுகையில்,‘தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதாக’ கூறியுள்ளது.

“இருப்பினும் இதே போன்ற நடவடிக்கைகள் ஆப்கானில் எடுக்க படவில்லை என்றால், அங்கு அமைதியை நிலைநாட்டுவது என்பது முடியாத காரியமாக போய்விடும்” என அத்தூதரகம் கூறியுள்ளது.

கடந்த 2012 ல் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஹக்கானி கும்பலை அமெரிக்கா தீவிரவாத கும்பல் என அறிவித்தது.

சென்ற வருடம் அமெரிக்க கப்பல் படை தளபதி மைக் முளேன் Mike

Mullen, “ஹக்காணி குழு ISI யின் ‘உண்மையான கூலிப்படை veritable arm’” என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராய்டர்சுக்கு அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில் ’அமெரிக்கா ஆப்கானுக்கு கூடுதலாக 3,500 துருப்புகளை அனுப்பும்’ என கூறினர். டன்போர்ட் கூறுகையில் ‘ஆப்கானில் அமெரிக்கா செய்யும் தற்போதைய செலவு வருடத்திற்கு 12.5 பில்லியன் டாலராகும், ஆப்கானின் புது திட்டத்திற்கு கூடுதலாக 1.1 பில்லியன் டாலர் செலவாகும்’ என கூறினார். [Source: Gulf Times]

அமெரிக்காவுடன் இழிவான முறையில் கூட்டுறவு வைத்து கொள்வதற்கு பதிலாக, அதனுடன் உள்ள உறவை துண்டித்து கொள்ள தக்க தருணம் இது. சில அணு ஆயுதங்களையே கொண்ட வட கொரியா அமெரிக்காவிற்கு இவ்வளவு தலைவலியை கொடுக்கின்றது என்றால், 200  அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் எவ்வளவு செய்ய முடியும்!     

Comments are closed.