சமீப பதிவுகள்

பால்ஃபோர் உறுதி ஆவணத்தின் நூற்றாண்டும் பாலஸ்தீன பிரச்சனையும்

செய்தி:

நவம்பர் 2, 2017 அன்று பாலஸ்தீனத்தில் ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ குறித்த பால்ஃபோர் உறுதி ஆவணம் நிறைவேற்றப்பட்டதின் நூற்றாண்டை குறிக்கின்றது. ‘யூதர்களுக்கான தாய்நாட்டை’ பாலஸ்தீனத்தில் நிறுவுவதற்கான பிரத்தானிய உறுதிமொழியின் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடும் விதமாகவும் கண்டனம் தெரிவிக்கும் வண்ணமாகவும் அனுசரிக்கப்படுகின்றது. “வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்த கடிதங்களில் இதுவொன்றாகும்”, என பிரித்தானிய பிரதம மந்திரி தெரேசா மே டிசம்பர் மாதம் பழமைவாத கட்சியின் ஆதரவாளர்களிடையே கூறினார். “இது யூத மக்களுக்கான தாய்நாட்டை உருவாக்கியதில் பிரித்தானியர் ஆற்றிய அதிமுக்கிய பங்கை விளக்குகிறது. நாம் இந்த நூற்றாண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறோம்.” (தி கார்டியன், அக்டோபர் 25) பாலஸ்தீன அரசாங்கம் லண்டனில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் 1967ல் வரையப்பட்ட எல்லையின் அடிப்படையில் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்குமாறு கோருவதற்கு திட்டமிட்டுள்ளது. (ஹாரெட்ஸ்) லண்டனை மையமாக கொண்ட பாலஸ்தீன ரிட்டன் சென்டரின் தலைமையில் இயங்கி வரும் பால்ஃபோர் மன்னிப்பு பிரச்சாரம் “மிகுந்த சேதத்தை ஏற்படுத்திய” இந்த உறுதி ஆவணத்தை வழங்கியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரி வருகிறது.

கருத்தாக்கம்:

பாலஸ்தீன மக்கள் மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக குத்ஸை களங்கப்படுத்தியது மற்றும் மஸ்ஜித் அல்- அக்ஸா மற்றும் மஸ்ஜித் அல்-இப்ராஹிமை சிறைபிடித்தது போன்ற அதன் விளைவுகளை வெளிக்காட்டி துக்ககரமான இந்த பால்ஃபோர் உடன்படிக்கை அதன் நூற்றாண்டை அடைந்துள்ளது. பாலஸ்தீன அரசாங்கத்தின் சார்பாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை பொறுத்தவரை, இது சர்வதேச ஆணைகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அவர்களுடைய கோரிக்கையை முன் வைப்பதாகும் அதேவேளை அபகரிப்பு செய்த யூத அரசு பாலஸ்தீன ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்த அதனுடைய இழிவான செயல்கள் மற்றும் புனித இடங்கள் மற்றும் மஸ்ஜிதுகளை களங்கப்படுத்தியதற்காக எந்தவொரு சர்வதேச நீதிமன்றங்களிலும் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தியதில்லை. 1967ல் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லையின் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரத்தை கோருவதென்பது மூர்க்கத்தனமானது, 1948ல் இருந்த மற்ற இடங்கள்… பிரித்தானிய ஆயுதங்களை கொண்டு ஜியோனிச அரசாங்கத்தால் உதிரம் சிந்த வைத்து அழித்தொழித்த அக்கா, யஃப்பா, ஹைஃபா மற்றும் கொடூரமான தேர் யாசின் படுகொலை போன்று பல கிராமங்கள் உட்பட மற்ற இடங்களின் நிலை என்ன? பாலஸ்தீன அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிவிப்பு இவற்றை புனிதமிகு நிலமான பாலஸ்தீனத்தை சார்ந்தது என கருதவில்லையா?

உண்மையில் பாலஸ்தீன அரசாங்கம் எதற்காக லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்?? ஆரம்பகால யூத அரசின் ஆதரவாளரும் அதன் முக்கியமான நிறுவனரிடமிருந்து எதற்காக அங்கீகாரத்தை கோர வேண்டும்? சைக்ஸ்-பைகாட் ஒப்பந்தத்துக்கு உகந்த வகையில் இஸ்லாமிய அரசை குட்டி அரசுகளாக செதுக்கி போர் நாட்டமுடைய எதிரி அரசை அதன் மத்தியில் நிறுவுவதற்கு உதவிய இது மாதிரியான மாபெரும் ஒப்பந்தத்திலிருந்து பிரித்தானிய சாம்ராஜ்யம் எதற்காக திரும்பப் பெறும்? பாலஸ்தீன நிலப்பரப்பில் எதிரியுடைய எல்லையை பாதுகாத்து அங்கீகரிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும் பாலஸ்தீன அரசாங்கத்தின் புறத்தில் இருக்கும் வாதப்பொருத்தம் எங்கே? தான் ஆக்கிரமித்த மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று, பாலியல் வல்லுறவு செய்வது உட்பட அதன் சிறார்களை கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தி மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் கொள்கைகள் செய்யும் யுத்திகளான பாலஸ்தீன மக்களிடத்தில் இருந்து நிலங்களை அபகரித்து அதை தங்களுடையது என அறிவித்து, பாலஸ்தீன விவசாயிகளின் ஆலிவ் தோப்புகள் மற்றும் பழம் தரும் மரங்களை எரித்து சாம்பலாக்கும் அதன் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக கோபத்தை வெளிக்காட்டும் இந்த பேராபத்தான தீங்கு ஓலமிடும் வேளையில் பாலஸ்தீன அரசாங்கம் எதற்காக ஆக்கிரமிப்பாளருடன் அமர்ந்து பேரம் பேசுகிறார்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளில் உள்ள தளபதிகள் இந்த பால்ஃபோர் உடன்படிக்கையையும் அபகரிப்போனான யூத அரசாங்கத்துடன் தண்ணீருக்கான ஒப்பந்தம், எண்ணை மற்றும் எரிவாயு ஒப்பந்தங்கள் அல்லது மற்ற கனிமங்களுக்கான ஒப்பந்தத்தை அங்கீகரித்து அதனுடனான வர்த்தகத்தை நிர்மூலமாக்குவது…போன்று எதற்காக அவர்கள் செய்ய வேண்டிய கடமையை முழுமையாக செய்யாதிருக்கிறார்கள்… சுருங்கக்கூறின் இஸ்லாமிய நிலப்பரப்பின் இதயத்திலிருந்து இந்த யூத நிறுவனத்தை அகற்றி இதன்மூலமாக நபித்துவ வழிமுறையிலான (நேர்வழி பெற்ற) இஸ்லாமிய கிலாஃபத்தின் தலைமையிலான புதிய உலக ஒழுங்கிற்கு கீழ் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதை எளிதாக்கும்.

பிரித்தானிய சாம்ராஜ்யம் உதுமானிய கிலாஃபத்துக்கு எதிராக கலகம் செய்ததற்கு பரிசாக பாலஸ்தீனத்தை அரபுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்தது… ஆனால் அதைவிட மேலாக கிலாஃபத் அமைப்பில் தங்களது நம்பிக்கையை மறுபடியும் உயிர்பித்து மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடைய கட்டளைகளுக்கு கீழ்படியச்செய்யும் திட்டத்தை நிராகரிக்கும் சமயத்தில் இன்று மெய்பித்துக் கொண்டிருப்பதை போன்று மாபெரும் அச்சுறுத்தும் விளைவுகளை முஸ்லிம் வரைபடத்தை ஆழமாக பிரித்து யுத்தத்தால் சூழ்ந்து பிளவுபட்டிருக்கும் முஸ்லிம்கள் ஒன்று சேருவதற்கு சாத்தியமற்ற நிலையை உருவாக்கும் அளவுக்கான மிகுந்த தீங்கிழைக்கக்கூடிய தந்திரமான திட்டத்தை பிரித்தானிய அரசு கொண்டிருந்தது.

உள்நாட்டு மக்கள் முழுமையான அளவில் வசிக்கும் நிலப்பரப்பை வெவ்வேறு பகுதிகளிலிருந்து அந்நிய மக்களை ஒன்று கூட்டி தான் புதிதாக உருவாக்கியுள்ள தேசத்தை அவர்களுக்கு பரிசாக அளித்து அங்கு செயற்கையான முறையில் ஜனத்தொகையை பெருக்கி அதன் மூலம் குரூரமான படுகொலைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மக்களை கூட்டாக வெளியேற்றுவதற்கும் இட்டு செல்வது தான் ஆங்கிலேயர் அல்லாதவர்களிடத்திலான பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் வழக்கமான ஆதிக்க மனநிலையாகும். பல்வேறு அடிப்படை அமைப்புகள் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காகவும் பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காகவும் போராடி வருகின்றன, யூத அரசாங்கத்துடன் இயல்புநிலையை உருவாக்க பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தவொரு பிரச்சனை மட்டும் குறைய மறுக்கின்றது. முஸ்லிம்களுக்கு முஸ்லிம் உம்மத்தை மேற்கத்திய ஏகத்துவ சங்கிலியால் கட்டி வைப்பதற்காக வேண்டி அபத்தமான பேரம்பேசும் கூட்டங்களிடம் தாழ்ந்து போகும் விதத்திலும் மற்றும் அந்நிய தடைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதற்கு அப்பாற்பட்டு எழுந்தருளவிருக்கும் நேர்வழி பெற்ற கிலாஃபத்தின் ஒரே ஆட்சிக்குழு என அறியப்படுவதில் பாலஸ்தீனத்தையும் லெவாண்ட் தேசங்களையும் துண்டாடப்பட்ட மற்ற டஜன் கணக்கான முஸ்லிம் நாடுகளுடன் ஒன்று சேர்த்து மீண்டும் ஒன்றிணைப்பது தான் இதற்கான இஸ்லாமிய தீர்வு என்று தெளிவாக தெரிந்திருந்த போதிலும் இதுபற்றிய குழப்பமான நிலையானது கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், சிறப்பு நிபுணர் குழுக்களின் அச்சுறுத்தும் முட்டுக்கட்டைகளினால் ஏற்பட்டுள்ளது என்பது தெரிகறது.

ஹிஸ்புத்தஹ்ரீன் மத்திய ஊடக அலுவலகத்திற்காக – மனால் பதர்

Comments are closed.