சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 01.11.17

தலைப்புச் செய்திகள்:

1. ஸ்பெயின் நாட்டிற்க்கான தேசிய சவால்கள்.
2. சிரியா நாட்டிற்க்கான சதி தொடர்கிறது.
3. உலுக்கி போன ஹாலிவுட் தொழில்துறை.

1. ஸ்பெயின் நாட்டிற்க்கான தேசிய சவால்கள்

கடந்த அக்டோபர் மாதம் நடைப்பெற்ற கேட்டலோனியா சுதந்திர அறிவிப்பை ஸ்பெயினின் “அரசியலமைப்பு நீதிமன்றம்” கவிழ்த்தது என்ற தகவல் நீதிமன்ற செய்தி தொடர்பாளரிடம் கிடைத்தது. இந்த செய்தி பதவியிறக்கப்பட்ட கேட்டலன் ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன் (Carles Puigdemont) பிரஸ்ஸல்சில் (Brussels) மக்களிடம் உரையாற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்தது. மேட்ரிட்(Madrid) அரசு இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளின் காரணமாக பெல்ஜியம் தப்பிச் சென்றார், அதற்குப் பின் இது தான் இவரின் முதல் உரையாகும். சுதந்திரத்தைக் கோரி அரசுக்கு அழுத்தத்தை தந்த பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக ஸ்பெயினிய பொது வழக்கறிஞர் முன்னதாக ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அக்டோபர் 1-ஆம் தேதியில் நடைபெற்ற கேட்டலோனியா வாக்கெடுப்பில் ஸ்பெயினிடமிருந்து பிரிந்து செல்ல மக்கள் பெருமளவில் (90% கும் மேலாக) வாக்களித்ததை அப்பகுதி கண்டது. வாக்களிக்க தகுதி உள்ளவர்களில் கிட்டதட்ட 50% மக்கள் மேட்ரிடை குற்றம்சாட்டி வாக்குப்பதிவு நிலையங்களை தடுத்ததுக்கும், வாக்குகளை பறிமுதல் செய்ததுக்கும் அரசுக்கு எதிராக போரட்டங்களில் ஈடுபட்டனர். வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று மேட்ரிட் அறிவித்து, தேசிய மற்றும் சிவில் காவலாளரிடமிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான அதிகாரிகளை வாக்கெடுப்பின் நாளுக்கு முன்னதாக நிறுவினர். மக்கள் மற்றும் காவலாளர்களுக்கிடையில் நடந்த மோதல்களுக்கு பின் பார்சிலோனா (Barcelona) மற்றும் வேறு இடங்களில் 900 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்களில் சிலர் அபாயமான நிலையில் உள்ளன என்றும் கேட்டலான் சுகாதார சேவை (Catalan health service) கூறியது.

பல்வேறு விதமான மக்களுக்காக ஒரு ஐக்கியப்பட்ட நிலையான மாநிலத்தை உருவாக்க ஸ்பெயின் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறது, இந்த தனி நாடு பிரிவினை பிரச்சனை தேசியவாத தோல்விகளில் சமீப தோல்வியாகும்.

2. சிரியா நாட்டிற்க்கான சதி தொடர்கிறது

கசகஸ்தானில் நடைபெற்ற அஸ்தானா மாநாட்டில் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் “ரஷ்யாவின் முன்முயற்சி” என்ற பெயரில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. சிரியாவில் சமாதான முயற்சிகளை கொண்டு வரும் விதத்தில் ஒரு அரசியல் தீர்வை காண அதன் ஆட்சியாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக அழைத்து “மகாசபையில்” பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவுவது தான் இந்த அறிக்கையின் நோக்கம் என அறிவித்துள்ளன. இருப்பினும், அஸ்தானாவில் இருந்த எதிர்ப்பு பிரதிநிதிகள் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் மற்றொன்ரை மேற்கொள்ள எடுக்கப்படுகின்றது என்று எண்ணி உடனடியாக சந்தேகத்தை தெரிவித்தனர். ஜனவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா., சபையின் ஆதரவோடு ஒரே மாதிரி இருந்தன.

இதுவரை நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளில் மூடிமறைத்து வெளிப்படுத்தப்படாத உண்மையான விஷயம் “மோதல் அல்லாத மண்டலங்களாகும்” (de-escalation zones). பஷருல் அசாத்தை பதவியில் வைக்கும் திட்டத்திற்கு மறுப்பவர்களை ரஷ்யா மற்றும் ஈரான் தொடர்ந்து கொல்லுவது தான் இந்த மண்டலங்களின் உண்மாயான நோக்கமாகும்.

3. உலுக்கி போன ஹாலிவுட் தொழில்துறை

தொடர்ந்து வெளிவரும் சர்ச்சைகள் ஹாலிவுட்டையும் பொழுதுப்போக்கு துரையையும் (Entertainment Industry) உலுக்கியுள்ளது. அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஸ்டூடியோ நிர்வாகியான ஹார்வி வெய்ன்ஸ்டைன் (Harvey Weinstein), அகாடமி விருது வென்றவர் (academy award winner) இவர் சமீபத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல், கற்பழிப்புப் போன்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்த தயாரிப்பாளர் தனது அந்தஸ்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை தன் இச்சைக்கு பயன்படுத்தியதும் அதில் சில பிரபலங்களும் இருந்ததும், பல்லாண்டுகளாக இந்த துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருப்பதும் என்ற செய்திகள் பல மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை விட அதிக அதிர்ச்சி தந்த விஷயம், பல ஹாலிவுட் நிர்வாகிகள் இவரின் செயல்களை பற்றி நன்கு அறிந்தும் அதை சாதாரண நடைமுறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் என்பது தன் நிர்வாகிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை உருவாக்குவதற்காக பெண்களை சுரண்டி பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்துறை ஆகும். எனவே அத்தகைய நிர்வாகி தனது பதவியை தவறாக பயன்படுத்துவதைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடாது.

நியூ யார்க்கர் (New Yorker) இதழ் இச்செய்தியை ஒரு கதையாக அச்சிட முடிவு செய்தும், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகைகள் பிரபலம் அடைந்தும் இச்செயலை வெளியுலகதிற்க்கு தெரிவிக்கவில்லை என்பதை பார்க்கும்போது, இதுப்போன்ற கேவலமான செயல்கள் நடைமுறையில் எவ்வளவு சாதாரணமாக இருப்பது ஆச்சரியமானதாகும்.

Comments are closed.