சமீப பதிவுகள்

சட்டமியற்றுதலுக்கு ஆதாரமாக மனித அறிவு விளங்கும்போது, குழப்பங்கள் அதிகரிக்கும்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முன்னணி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரும் பேராசிரியருமான மிரோஸ்லாவ் ஜார்ஜெவிக்கின் பெல்கிரேட் மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வருகைபுரிந்தார், அந்த நோயாளி அதற்கு முன்பு வேறொரு மருத்துவமனையில் தனது ஆண் பிறப்பு உறுப்பை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டு பின்பு மனமாற்றம் ஏற்பட்டதால் இவரிடம் சிகிச்சை பெற வந்திருந்த திருநங்கையாவார். “எதிரிடை” அறுவை சிகிச்சை என்றழைக்கப்படுவதை செய்வதற்காக ஜார்ஜெவிக்குக்கு வந்த முதல் கோரிக்கை இதுவாகும். அதற்கடுத்த ஆறு மாதங்களில் மேலும் ஆறு நபர்கள் இதேபோன்று எதிரிடை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக வேண்டி அவரை அணுகினர். (நேஷனல் போஸ்ட்)

மனிதனுடைய மனதுக்கு வாழ்வு குறித்தான அறிவு என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதாகவே முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். அதேபோல் மனித அறிவில் அதன் சுற்றுச்சூழலின் தாக்கம் ஏற்படுவதையும், அவன் முடிவெடுக்கும் போது அதில் அவன் சிக்கிக்கொள்வதையும் நாம் அறிவோம். இதுபோன்ற காரணங்களினால் தான் எவை சரியானவை அல்லது தவறானவை அல்லது எது நன்மை பயக்கக்கூடியது மற்றும் எது தீமை பயக்கக்கூடியது என்கிற உண்மையை கண்டறியக்கூடிய விஷயத்தில் மனிதனின் அறிவை உபயோகிப்பதற்கு ஒரு முஸ்லிம் ஒருபோதும் கருதக்கூடாது.

இக்கருத்தானது நமக்கு அல்லாஹ் سبحانه وتعالى வின் மீதும் மற்றும் குர்’ஆன் மற்றும் அவனுடைய தூதர் முஹம்மது ﷺ மூலமாக அருளியதில் உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்க கற்றுக்கொடுத்த நமது அகீதாவிலிருந்து (வாழ்வின் கோட்பாடு) உருவானதாகும், ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் மூலமாகவே எது சரியானது அல்லது எது தவறானது என்று கருத்தில் கொள்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இன்பம் என்பது சரியானது எது மற்றும் தவறானது எது எனும் விஷயத்திலான வழிகாட்டுதலை பின்பற்றுவது அல்லாஹ் سبحانه وتعالى வின் திருப்பொறுத்தத்தை நாடுவதற்கு வழிவகுப்பதற்கான நேரடி தொடர்பை கொண்டது என்றும் அது முஸ்லிம்கள் இன்பத்தை அடைவதற்கு வழிவகுக்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.

இந்த புரிந்துணர்வை கொண்டு மேலே கூறப்பட்ட கட்டுரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது பிறப்புறுப்பு புனரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பின் அதை நினைத்து நோயாளிகள் அதிகமாக வருத்தமடைவதாக தெரிகிறது, இது முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடாது. ஏனெனில் இஸ்லாமிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் இத்தகைய அறுவை சிகிச்சைகள் தடுக்கப்பட்டவை / தவறானவை (ஹராம்) எனக் கருதப்படுகின்றன, பின்வருபவற்றின் அடிப்படையில் இவை இவ்வாழ்விலும் அல்லது மறுமை வாழ்விலும் ஒருபோதும் வெற்றிக்கும் அல்லது மகிழ்ச்சிக்கும் இட்டுச் செல்லாது என்பதை கீழ்வரும் சஹீஹ் ஹதீஸ் இதை நிரூபிக்கிறது:

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்

لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء، والمتشبهات من النساء بالرجال‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

பாலியல் மாற்றம் செய்து கொண்ட மக்கள் வருத்தப்படுவதாக வந்த செய்தியானது பேராசிரியரும் பிறப்புறுப்பு மீட்டுருவாக்க அறுவை சிகிச்சை வல்லுனருமான ஜார்ஜெவிக்குக்கு அதிர்ச்சியூட்டவதாக இருந்தது “இது போன்ற கதைகளை கேள்விப்படுவதென்பது பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகும்” என அவர் கூறினார். “எதிரிடை மாற்றம் செய்ய விரும்புபவர்கள், தமது செயல்பாடுகளை முடக்கக்கூடிய அளவிலான மனச்சோர்வுக்கு உள்ளானதாகவும் சிலர் தற்கொலை செய்துகொள்வதற்கு யோசிக்கும் அளவுக்கு சென்றதாகவும் கூறியுள்ளனர்.” அதிக அளவிலான எதிரிடை மாற்று அறுவை சிகிச்சைக்கான கோரிக்கை அதிகரித்து வருவது கண்டும் இவ்விஷயத்தில் ஆராய்ச்சிக் குறைவின் காரணமாகவும் மருத்துவர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள முடிவெடுப்பதில் மேற்கொள்ளும் நடைமுறைகளில் அவருடைய சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

வாழ்வு குறித்து இஸ்லாம் அல்லாத வேறுபட்டதொரு கொள்கையின் அடிப்படையில் இவ்விஷயத்தை ஒருவர் காணும்போது இதை தான் நாம் எதிர்பார்க்க முடியும். அது தாராளவாத மதச்சார்பற்ற வாழ்வு முறை எனும் வாழ்விலிருந்து மதத்தை பிரிப்பது மற்றும் சமரசம் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொள்கையாகும். அது ஆதாயத்தின் அடிப்படையில் ஒருவருடைய செயலில் சரியானது எது மற்றும் தவறானது எதுவென்று தீர்மானிக்கின்ற மற்றும் ஒருவர் பெருகின்ற இன்பத்தை அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக கொண்டுள்ள கொள்கையாகும். இத்தகையதொரு அறுவை சிகிச்சையின் மூலம் அடையும் ஆதாயமும் மகிழ்ச்சியும் இப்போது மீளாய்வுக்கு உட்பட்டுள்ளதால் இந்த அறுவை சிகிச்சை குறித்தான கருத்தை மறு மதிப்பீடு செய்வது அவசியமாகும். சக்திவாய்ந்த திருநங்கைகளின் லாபியானது இதை நிச்சயமாக செவியேற்க விரும்பாது மேலும் பல்கலைக்கழகங்களை இவ்விஷயம் குறித்து ஆராய்ச்சி செய்வதிலிருந்து இந்த லாபிகள் தான் தடுத்து வருவதை இக்கட்டுரையில் நாம் மேற்கொண்டு பார்ப்போம். இது எதனால் என்றால் இதுபோன்ற நபர்களுக்கு மகிழ்ச்சியை அடைவதற்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் கட்டாயமானது எனும் அவர்களுடைய வாய்ஜாலங்களை அடித்து நொறுக்குகிறது.

இன்றைய முஸ்லிம்களுக்கு குறிப்பாக மேற்கில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த விஷயம் குறித்து முழமையான புரிதலை கொண்டிருத்தல் அவசியமாக இருக்கிறது ஏனெனில் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள் போன்று இவ்விதமான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்காக வேண்டி அதிக அளவிலான அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நடைமுறையில் இது எதை குறிக்கிறது என்றால் தனிநபர் உரிமை என்கிற பெயரில் தங்களுடைய இன்பங்களையும் மிகிழ்ச்சியையும் பூர்த்தி செய்து கொள்ள சமூகத்திற்குள் இதுபோன்ற கருத்துக்களானது நடைமுறைபடுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. இதுபோன்ற உரிமைகளுக்கு அனுமதி வழங்குவதென்பது நவீனத்துவத்தின், முன்னேற்றத்தின், நாகரீகத்தின் மற்றும் நீதமான ஒரு சமூகத்தின் அல்லது நபரின் அடையாளமாக அவர்கள் அறிமுகப்படுத்துவார்கள் அவ்வாறு செயல்படாத பட்சத்தில் ஒரு அநீதமான மற்றும் பிற்போக்கான சமூகம் அல்லது நபராக அடையாளப்படுத்துவார்கள்.

முஸ்லிம்களாக நாம் மனித அறிவு ஒரு எல்லைக்குட்பட்டது என்கிற தன்மையையும் மற்றும் நன்மை எது தீமை எது என முடிவெடுக்கும் அனுமதியை அதற்கு வழங்குவதால் ஏற்படும் அபாயத்தையும் மற்றும் தனிநபர் மற்றும் சமூகத்திற்கு சிறந்தது எதுவென்ற அறிவை அல்லாஹ் سبحانه وتعالى மட்டுமே முழுமையாக கொண்டுள்ளான் என்பவற்றை அறிந்துகொள்ளும் போது தெளிவான முறையில் இஸ்லாத்திற்கு முரண்பாடான இதுபோன்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்மீதுள்ள அழுத்தங்களை நம்மால் நிராகரிக்க முடியும்.

وَأَنِ احْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ

 “(நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (உங்களுடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகின்றான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.”

(அல்குர்ஆன் : 5:49)

Comments are closed.