சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 10.11.17

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர்

ஊழலுக்கு எதிரான சவூதியின் நடவடிக்கையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் அறிக்கை.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர்

புதியதோர் அறிக்கையின்படி வீதிகளில் செல்லும் பொழுது இனவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்க படுகின்ற முஸ்லிம்களில் அதிகமானவர்கள் பெண்கள்தான் என தெரியவந்துள்ளது. ‘பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்தாக்குதல்கள் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது’ என முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடப்பதை கணக்கீடு செய்யும் அமைப்பான ‘Tell MAMA (Measuring Anti-Muslim Attacks)’ தன்னுடைய வருடாந்திர அறிக்கையில் கூறியுள்ளது. முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப்/நிகாப் அணிந்திருப்பவர்களே இதில் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் என Tell MAMA கூறியுள்ளது.

அந்த அமைப்பு கூறியிருப்பவதாவது: “சமூகத்தில் சொந்த வாழ்கை உரிமையில் சுதந்திரம் கொடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் மீதான இந்த வெறுப்புணர்வு அவர்களின் குடும்பங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஒருங்கிணைப்பிலும் கூட்டமைப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.”

இந்த ஆராய்ச்சியின்படி முஸ்லிம்களில் வன் கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களில் 56% பெண்கள் என தெரிய வந்துள்ளது. இரண்டு வருடாமாக தொடர்ந்து வரக்கூடிய இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் மீதான வன்கொடுமையில் ஆண்களை விட பெண்களே குறிவைக்கபடுகின்றனர் என உறுதியாகியுள்ளது. அதிலும் அறியப்பட்ட தாக்குதலில் 69% சதவீதம் தாக்குதல் நடத்துபவர்கள் வெள்ளை இனத்தவர்களே என அறிக்கை கூறியுள்ளது.

இஸ்லாமிய எதிர்ப்பால் (Islamophobia) பாதிக்கப்பட்ட பெண்களின் படி தாக்குதல் நடத்துபவர்களின் பெரும்பான்மையானவர்கள் தரக்குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளனர். அவர்கள் தாக்கப்படுவது தன்னுடைய பாலினத்தினாலும் தான் பின்பற்றும் மதத்தினாலுமேயாகும் (என கூறியுள்ளனர்). பிரிட்டன் தெருவில் நடக்கும் ‘இதுபோன்ற சம்பவங்கள்’ கடந்த 2015 ல் 437 சம்பவங்களிலிருந்து 2016 ல் 642 வரை உயர்ந்த்துள்ளது. [Source: Metro]

பிரட்டனில் வாழும் ஆண் சமூகத்தின் இதுபோன்ற தவறான எண்ணங்களும் தாக்குதல்களும் தனித்துவமானதல்ல. மாறாக மற்ற மேற்கு நாடுகளிலும் இது போன்ற தாக்குதல்கள் முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆண்களால் நடத்தப்படுகின்றன. மேற்கத்தியர்கள் உள்ளூரிலும் சரி அல்லது வெளி முஸ்லிம் நாடுகளில் போர்தொடுக்கும் போதும் சரி அவர்கள் ‘சுதந்திரம்’,‘சகிப்புத்தன்மை’ என வெறும் வாய் வார்த்தைகைளையே கூறுன்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

ஊழலுக்கு எதிரான சவூதியின் நடவடிக்கையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் அறிக்கை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த திங்கள் கிழமை சவூதியில் நடந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை பற்றி தன்னுடைய டிவிட்டர் தளத்தில் கூறியதாவது “அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.”

டோக்யோவிலிருந்து இரு பகுதியாக அனுப்பிய டிவிட்டர் பதிப்பில் தனக்கு சவூதி மன்னர் சல்மானின் மீதும் இளவரசரின் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் வெகு காலமாக சவூதியை நாசமடைய செய்துள்ளார்கள் என்றும் டிரம்ப் எழுதியுள்ளார். கைது செய்யப்பட சவூதி அரச குடும்பத்தவர்களையும் வணிக தலைவர்களையும் இங்கு அதிபர் டிரம்ப் குறிப்பிடுகிறார். இவ்வாறான நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என சவூதி அரசாங்கம் கூறியுள்ளது.

எண்ணை பொருளாதாரத்திலிருந்து சவூதி ராஜ்யத்தை மீட்க இளவரசர் முஹமது இப்னு சல்மான் ராஜ்யத்தின் கட்டமைப்பை சீர்செய்யும் எதிர்பாராத செயலாகவே இது கருதப்படுகின்றன. முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் சவூதிக்கும் மத்தியில் மிக நெருக்கமான உறவுகள் இருந்து வந்துள்ளன அதிலும் குறிப்பாக டிரம்ப் கடந்த மே மாதம் பதவிக்கு வந்த பிறகு அவரின் முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக சவூதி சென்றது இதை உறுதி படுத்த கூடியதாக இருக்கின்றது.

அதில் அமெரிக்காவும் சவூதியும் சுமார் 380 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் 110 பில்லியன் டாலர் ஈரான் மற்றும் இதர போராளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான ஆயுத ஒப்பந்தங்களை உள்ளடக்கியதாகும்.

டிரம்ப் அவருடைய அலுவலகம் அறிவித்த தகவலின் படி மன்னர் சல்மானுடன் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் ‘மிதவாத’ ‘அமைதியான’ ’சகிப்புதன்மையுடைய’ அரசை உருவாக்க சவூதி அரசும் அதன் இளவரசரும் முயற்சி செய்வதை அவர் வரவேற்றுள்ளார். மேலும் (சவூதி அரசின் ராட்சத எண்ணை நிறுவனமான அரம்கோ (Aramco) வின் பங்குசந்தையில் நுழையும் முதல் நடவடிக்கையான IPO வை அறிமுகம் செய்வதை பற்றி அவர் கூறுகையில்) அரம்கோவின் IPO அறிமுக தளமாக அமெரிக்காவின் பங்கு சந்தையான Wall Street இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார்.[Source: ArabNews]

மன்னர் சல்மானை பற்றியும் இளவரசரைப்பற்றியும் அதிபர் டிரம்ப் புகழ்ந்துள்ளது அவருக்கு ஏற்கனவே சவூதியின் கைது நடவடிக்கை தெரிந்துள்ளது என்பதையே உறுதி படுத்துகின்றன. இதற்கு முன்னர் கத்தாருக்கு எதிராக சவூதி எடுத்த நடவடிக்கையிலும் டிரம்பின் பங்கை காண முடியும். ‘vision 2030‘ என்ற திட்டத்தை நிறைவேற்ற சவூதி அரசு எடுக்கும் எல்லா மாற்றங்களிலும் டிரம்ப் அரசின் பின்னணியை தெளிவாக காண முடியும். சவூதி சமூகத்தை மதசார்பற்ற சமூகாக மாற்றுதல் பொருளாதார வளங்களை சுரண்டுதல் அதிகப்படியான அதிகாரத்தை இளவரசர் முஹமது இப்னு சல்மானிடம் ஒப்படைப்பது போன்றவைகள் இதிலடங்கும்.

Comments are closed.