சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 05.11.17

1.தங்கள் குழந்தைகள் மீது இஸ்லாத்தை திணிக்ககூடாதென முஸ்லீம் தந்தை நீதிபதியால் கட்டளையிடப்பட்டார்

ஒரு முஸ்லீம் தந்தையின் மூன்று குழந்தைகள் கிருஸ்துவ குடும்பத்தால் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் மீது இஸ்லாத்தின் அழுத்தத்தை கொடுக்ககூடாதென நீதிபதியால் கட்டளையிடப்பட்டார். ஒரு 53 வயதுமிக்க முஸ்லீம் தந்தைக்கு 16 வயதுக்கு உட்பட்ட இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இந்த கிருஸ்துவ குடும்பத்தால் 2011 ஆண்டு முதல் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்த காலங்களில் இவர்களை இவர் இரண்டு முறை மட்டுமே பார்த்துள்ளார். 2015 ஆண்டு, தன் குழந்தைகளிடம் இஸ்லாம் பற்றி பேச மாட்டேன் எனும் நீதிமன்ற ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார். இப்போது இந்த விதிமுறை இலகுவாக்கப்பட்டு, தன் மார்க்கத்தை பற்றி அழுத்தம் கொடுக்காமல் பேசவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார். இவர் தான் இவ்வாறு கையெழுத்திட நிர்பந்ததிக்கப்பட்டதாக கூறினார், ஆனால் சமூக நல சேவையர்கள் இது குழந்தைகளின் நலனுக்காக தான் என கூறியுள்ளனர். சல்பிரோட குழந்தைகள் சேவைகள் இவர் இஸ்லாத்தை பற்றி பேசமாட்டேன் என ஒத்துக்கொண்டுள்ளதாக கூறினர். இவர் ‘மான்செஸ்டர் மாலை’ செய்திதாளில் இந்த ஒப்பந்தம், தன் குழந்தைகளை பார்க்கவேண்டும் என்பதால் இவர் மீது திணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது வெறுப்பும் விடாப்பிடித்தனமும் கொண்டது என கூறியுள்ளார். என் குழந்தைகள் மீது அறிவற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர் இதன் முடிவே இது என கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்காக 13 முறை அவர் நீதிமன்றம் சென்றுள்ளார். கடந்த சந்திப்பில் தன் குழந்தைகள் மீது இஸ்லாத்தை பற்றி பேசும் பொது அழுத்தம் கொடுக்க கூடாதென கட்டளையிடப்பட்டுள்ளார் ஏனெனில் இந்த குழந்தைகள் சேவையாகம் இவர் குழந்தைகளை முஸ்லிம்களாக கருதவில்லை [மூலம்: தி இன்டெபேன்டென்ட்].

இந்த நீதிமன்ற தீர்ப்பு, சில நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்பெயினில் முஸ்லிம்கள் கிருஸ்துவ மதத்திற்கு கட்டாயப்படுத்தி மாற்றப்பட்ட நிகழ்வை நினைவூட்டுகிறது. 500 ஆண்டுகளுக்கு பிறகு, இதே நிலைய இங்கிலாந்தில் மீண்டும் வருவதாக தெரிகிறது

2.சவூதி அரேபியாவில் நடைபெறும் அதிரடி நடவடிக்கை இளவரசரின் ஆட்சியின் மீதுள்ள இறுக்கமான பிடிப்பை உணர்த்துகிறது .

எதிரிபரத அதிரடி நடவடிக்கையின் மூலம் சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் தன்னுடைய எதிர்கால சிம்மாசனத்தின் மீதுள்ள இறுக்கமான பிடிப்பையும், வெறுமேனு எண்ணெயின் வருமானத்தை மட்டும் நம்பியிருக்கும் நிலையை மாற்றியமைப்பதாகவும் உள்ளது. பதிரோனு இளவரசர்கள், நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பல அரச குடும்பத்தினர் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர், இதை அரசு ஊடகங்கள் மிகப்பெரிய ஊழல் ஆய்வேன்னு கூறியுள்ளது. கைதுசெய்யப்பட்டவரில் ஒருவர் இளவரசர் அல்வாலீட் பின் தழல், 62, உலகிலுள்ள பெரும் செல்வந்தர்களில் ஒருவர், மேற்குலகில் பெரும் நிறுவனங்களான சிட்டி குரூப், ஆப்பிள் ட்விட்டர் போன்றவற்றில் பங்குகளை வைத்துள்ளார். இவர்கள் அனைவரும் ரியாத்தில் உள்ள சொகுசு விடுதிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இதை போன்ற ஒரு சம்பவம் சவுதி அரேபியாவில் நடைபெற்றதில்லை என டேவிட் ஓட்டுவேன் அமெரிக்காவின் அறீவு ஜீவுகளில் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த அரசு ஆழம் தெரியாமல் காலைவிடுவதாக கூறியுள்ளார். இந்த கைது நடவடிக்கை ஊழல் எதிர்ப்பு குழுவை சல்மான் நிறுவியுள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களில் நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 32 வயதுள்ள இளவரசர் சல்மான் தன்னுடைய தந்தைக்கு பிறகு தன்னுடைய ஆட்சியின் முழு அதிகாரத்தை பெரும் வகையில் நடைபெற்றுள்ளது. டேவிட் ஓட்டுவேன் கூறுகிறார், இதன் மூலம் இளவரசர் இந்த எண்ணெய் வளம் மிக்க நாட்டின் முழு அதிகாரத்தை பெற எந்த நடவடிக்கையையும் எடுக்க தயாராகியுள்ளார் என கூறுகிறார். சவூதி அரேபியாவின் மிக பெரும் எண்ணெய் நிறுவனம் அராமக்கோ, 5 சதவீத பங்கை பொது சந்தையில் விற்க இருக்கும் நிலையில் இந்த கைதுகள் நடைபெற்றுள்ளது .

இதன் மூலம் 100 பில்லியன் வருமானம் ஈட்டமுடியும் என்றும் தன்னுடைய 2030 கனவை பொருளாதார ரீதியாக ஆதரவளிக்க முடியும் என நம்புகிறார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் அந்நிய முதலீட்டர்களை 2030 கனவில் கட்டுப்படுத்தக்கூடம் என டேவிட் ஓட்டுவேன் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்னர் டிரம்ப் இந்த பங்குகள் நியூ யார்க் பொருள் சந்தையில் விட டிவீட்டரில் கோரினர். சனிக்கிழமை சல்மான் இந்த ஊழல் எதிர்ப்பு அமைப்பை நிறுவி அறிவித்த செய்தியில் சில பலவீனமான ஆன்மாக்கள் தங்களுடைய சுயநலத்தை முன்னிலைப்படுத்தி நாட்டை பால்படுத்திவிட்டனர் என கூறியிருந்தார் . [மூலம் : யு.எஸ். டுடே]

சவூதி அரசர் இந்த அமைப்புக்கு கைது செய்யும் உரிமையையும் வெளி நாடு செல்ல தடை வங்கி கணக்கை முடக்குதல் போன்ற உரிமைகளை வழங்கியுள்ளார். பில்லியன் கணக்கில் அமெரிக்காவிற்கு சரணடைந்த நிலையில் ராஜ்யத்தின் 2030 கனவு கொடுங்கோன்மையின் ஒருங்கிணைப்பு என்பது தெளிவாகிறது. அரசாள தகுதியான நிலயில் உள்ள நபர்களை கைது செய்ததின் மூலம், சல்மான் தன்னுடைய இருக்கையை உறுதிப்படுத்தி அமெரிக்காவின் நலங்குளுக்கு பில்லியன் கணக்கில் செலவிடவுள்ளார் எனபது தெலிவாகிறது

3.முடிவில்லா போரில் அமெரிக்கா ராணுவம் ஆப்கானில் தொடர்ந்து தங்கவிருக்கிறது

ட்ரம்ப்பின் நிர்வாகம் ஆப்கானை விட்டு வெளியேற எந்த எண்ணமும் கொள்ளவில்லை, ஆனால டொனால்ட் டிரம்ப் தன் தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவோம் என கூறியிருந்தார். ட்ரம்ப்பை பொறுத்தவரை ஆப்கானை பற்றி முழுவதாக கற்று தனது முடிவை மாற்றியதாக தெரிவிக்கிறார். இந்த மாற்றத்திற்கு காரணம், தன்னுடைய உலகளாவிய ஆதிக்கத்தை நிலை பெற செய்ய, ஆப்கானில் போர் தளங்கள் மிக அவசியமாகிறது. ஆப்கான் நாடு, ஆசியாவின் மத்தியில் அமைந்து சீனா, பாக்கிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் எதிர்காலத்தில் போர் செய்ய நேரிட்டால் அமெரிக்காவிற்ற்கு பலமாக அமையும் வகையில் உள்ளது. கடந்த வருடம், ஒபாமா கூறியது போல் படைகளை வெளியேற்றினால், 450 அமெரிக்க போர் தளங்கள் மீண்டும் தாலிபான் கையில் சிக்கிவிடும். இது இந்த முக்கியமான இடமாக உள்ளதால் இது அமெரிக்காவிற்கு பெரும் இழப்பாக அமையும். அமெரிக்க மற்றும் பாக்கிஸ்தான் மத்தியில் இந்த வருடம் பதற்றம் அதிகரித்துள்ளது, ஏனெனில் ஆப்கான் தோல்விக்கு டிரம்ப் பாக்கிஸ்தான் தாலிபான் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதே கரணம் என சாடியுள்ளார். இந்த உறவு சிக்கலால் அமெரிக்க பாகிஸ்தானை கண்காணித்துக்கொள்ள விரும்பும். பிறகு, மறு பக்கம் ஈரான் ஆப்கானின் மேற்கிலிருந்து தாங்கள் தான் அமெரிக்காவின் முதல் எதிரி என்பது போல் செயல்படுகின்றனர். ஒரு வேலை டிரம்ப் ஈரான் மீது போர் தொடுத்தால் ஆப்கான் படைத்தளம் மிக அவசியமாகும். அமெரிக்காவின் நீண்ட கால திட்டம் சீனா மற்றும் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதாகும். இதற்க்கு ஆப்கானில் தங்களுடைய கட்டுப்பாடு மிக அவசியமாகும். ஏனெனில் ஏற்கனவே மத்திய ஆசியாவில் இருந்த வான்வெளி படைத்தளத்தை கிர்கிஸ்தானிடம் ஒப்படைக்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டது. இதுவே ஆப்கான் தாக்குதலுக்கு 2001 ஆம் ஆண்டு உதவியாக இருந்தது. இராக்கில் மட்டும் அமெரிக்கா 505 படைத்தளங்களுக்கு மேற் கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு சீனாவிடமிருந்து போர் எச்சரிக்கை வரும் நிலையில் தங்களின் படை தளங்களை பாதுகாக்கவேண்டும். மாஸ்கோ இந்த அமெரிக்கா ராணுவ அதிகரிப்பின் கவலைகொண்டுள்ளது. மேலும் இந்த படைத்தளங்களில் ஏற்படும் வசதிகளை ரஷ்யா அறிந்துள்ளது. இந்த தளங்கள் எதிரிகளின் மீது பாய்வதற்கு ஒரு படியாக அமைந்துள்ளது.

அமெரிக்கா இங்கு இருப்பதை நியாயப்படுத்த தொடர்ந்து தீவிரவாதிகளை அழிக்கிறோம், ஆப்கான் படைக்கு பயிற்சி அளிக்கிறோம் என கூறிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, 2010 முதல் இல்லாத வகையில் அதிகமான குண்டுகளை செப்டம்பர் மாதம் அமெரிக்கா பயன்படுத்தியள்ளது. மேலும் தரை படை எண்ணிக்கையை 8500 யில் இருந்து 12500 ஆகா உயர்த்தியுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இதற்க்கு கரணம் தாலிபான் தாக்க தொடங்கியுள்ள அமெரிக்க படைத்தளங்களை பாதுகாக்கவாகும். ஆனால், இந்த வியூகம் அமெரிக்காவிற்கு பாதகமாக மாறக்கூடும். இவர்களின் இந்த குண்டு வீசி தாக்குதலால், பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, அமெரிக்க கூட்டுப்படையின் மீது மக்களுக்கு மேலும் அதிருப்தி ஏற்படும். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா நாங்கர்ஹர் பகுதியில் வீசப்பட்ட 16 மில்லியன் டாலர் மதிப்புள்ள குண்டுகளால் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆப்கானை அமெரிக்கா வெறும் ராணுவ பயிற்சிக்காகவும் தன்னுடைய ராணுவ பலத்தை சோதிப்பதற்காகவே பயன்படுத்துகிறது. இந்த தாக்குதலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் உள்ள பகை இன்னும் அதிகரிக்கிறது,[மூலம் : தி இன்டெபேனென்ஸ்]

அமெரிக்காவின் இந்த கனவு ஒரு போதும் பலிக்காது. அமெரிக்காவின் உண்மையான நோக்கம் கிலாபா வருவதை தடுப்பதாகும். இந்த கிலாபா அரசையே மக்கள் விரும்புகின்றனர்

4.சோமாலியாவில் அமெரிக்கா குண்டுகளை போடா தொடங்கியுள்ளது

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை படி சோமாலியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது முதன் முறையாக வெள்ளிக்கிழமை குண்டுகளை போட தொடங்கியுள்ளது, இது ஈராக் மற்றும் சிரியாவில் ஏற்பட்ட போராளிகளுக்கு எதிரான வெற்றியை தொடர்ந்து நடந்துள்ளது. பல தீவிரவாதிகள் சில மணி நேரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா ராணுவம் அணைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு தீவிரவாதிகளை செயலிழக்க செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது, இது சோமாலியா அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு ஏற்பட்டதாகும். இது டிரம்ப் தன்னுடைய ட்விட்டரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதலை இன்னும் அதிகமாகியுள்ளோம் என குறிப்பிட்டிருந்த சில மணி நேரங்களில் நடந்தது. இது சிரியா மற்றும் ஈராக் மீதான தாக்குதலை குறிக்கிறதா என யூகித்து கொண்ட நிலையில் இந்த சோமாலியா தாக்குதல் இதனை தெளிவாகியுள்ளது.

முஸ்லீம் நாடுகளின் மீதான தாக்குதலை அமெரிக்கா விரைந்து செயல்படுத்துகிறது, ஓவர் குறிப்பிட்ட கூட்டத்தினரை அல்லது நபர்களை குறிவைத்து தாக்குவதாக கூறினாலும் அமெரிக்கா முஸ்லிம்களின் நிலங்களை அபகரிக்கவே இந்த தாக்குதல்கள் மேலும் அமெரிக்காவிற்கு எதிராக கிளம்புவோர் ஒரு கூட்டத்தினரை சார்ந்தோர் அல்லர் மாறாக ஒட்டுமொத்த உம்மாவின் முஜாஹிதீன்களும் எழுகின்றனர். உண்மையில் முஸ்லீம் உம்மத் அமெரிக்காவின் எண்ணங்களை கண்டறிந்து அதை நிராகரித்துள்ளது. சிலர் அமெரிக்காவிற்கு எதிராக போராட தொடங்கியுள்ளனர், சிலர் அரசியல் ரீதியாக முஸ்லீம் அரசாங்கத்தை நிறுவ பாடுபடுகின்றனர்.

5.ஐரோப்பாவில் உள்ள ஹகுயி நீதிமன்றம் அமெரிக்கா ஆப்கானில் நிகழ்த்திய கொடுமைகளுக்கு தண்டனை கோருகிறது

வாஷிங்டன் போஸ்ட் அறிவித்த செய்தியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் ஆப்கானில் நடை நடைபெறும் போர் குற்றங்களுக்கு அமெரிக்க படைகளின் மீது விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கூறியிருந்தார். பல வருடங்களாக அமெரிக்கா படைகளால் ஆப்கான் மக்கள் துன்பத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். பாடோ பென்ஸோட என்கிற வழக்கறிஞர் முன்பு தலைமை வழக்கறிஞர் பதவி வகித்தவர், இவர் தன்னுடைய அறிக்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற குற்றங்கள் நடை பெற்றதாக நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறினார். பத்தாண்டுகளுக்கு மேலாக ஆப்கான் போர் நடைபெற்று வரும் நிலையில் அபு கரைப் போன்ற சிறை சாலைகளில் நடைபெறும் குற்றங்கள் தெளிவான நிலையில் இப்போது தான் இவர்கள் மீது விசாரணை மேற்கொள்ள வேணுண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இத்தகைய நீதிமன்றங்கள் உண்மையை நிலை நாட்டுவது போல் நாடகம் மட்டுமே நடத்துகின்றனர்.

மேற்குலகம் போர் நெறிமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்து உள்ளனர், இத்தகைய நெறிமுறைகளை சிலுவை யுத்தம் தொடங்கியபோது முஸ்லிம்களை பார்த்து வியந்து, ஸலாஹுத்தீன் போன்றவர்கள் அவர்களுக்கே கதாநாயகனை போல் தோற்றுவித்தனர்

6.இந்தோனேஷியா கணக்கெடுப்பின் படி அதிகமான மாணவர்கள் கிலாபத்தை விரும்புகின்றனர்

ரியூட்டர்ஸ் செய்தியில் :
இருபது சதவீத கல்லூரி மாணவர்கள் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள இந்நாட்டில் கிலாபத்தை விரும்புகின்றனர் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்த கருத்து கணிப்பில் 4200 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. நான்கில் ஒரு மாணவர்கள் இஸ்லாமிய அரசை நிலை நாட்டை போர் செய்யவும் தயாராகவுள்ளனர்.

அரசின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் எந்த அமைப்பையும் தடை செய்யும் அரசாணை வெளியான நிலையில், கிலாபத்தை நிலைநாட்ட அமைதியான முறையில் செயல்படும் ஹிஸ்புட் தஹ்ரீர் முதல் அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா முஸ்லீம் உலகை விட்டு வெகு தொலைவில் இருப்பினும், இஸ்லாமிய மறுமலர்ச்சி முஸ்லீம் உம்மா முழுவதும் ஒரே உடலாக பாதிக்கப்படு அதனால் மீழ்ச்சியை மேற்கொள்ள விரும்புவதை குறிக்கிறது.

மேற்கத்தியர்கள் அறிவார்ந்த போரில் முஸ்லிம்களிடம் தோல்வியை உணர்கின்றனர். எனவே இப்போது மாற்று வழியில் இஸ்லாத்தை தடுக்க முயல்கின்றனர் எனவே முஸ்லீம் ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுத்து முஸ்லீம் இயக்கங்களை தடை செய்கின்றனர். அல்லாஹீன் நாட்டப்படி இஸ்லாமிய அரசை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த படி நிலைநாட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Comments are closed.