சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 08.11.17

1. முடியாட்சியில் போர்

சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்த தன் குடும்பத்தினர் மீது களையெடுப்பை நிகழ்த்தியுள்ளார். புதுமையாக உருவாக்கியுள்ள ஊழல் எதிர்ப்பு குழுவின் சார்பில் அரச குடும்பத்தை சார்ந்த பலரை கைது செய்துள்ளார். அரசர் சல்மான் 2015 ஜனவரி மாதம், அரசர் அப்துல்லாஹ்வின் மறைவுக்கு பின்னர் பொறுப்பேற்றார். ஆனால் திரைக்கு பின்னால் பல நடவடிக்கையை மேற்கொண்டு தன்னுடைய மகன் சல்மானை அடுத்த அரசராக்க முயற்சியை மேற்கொண்டார். நவம்பர் 4 2017 அன்று இந்த விஷயம் வெளிச்சதிற்கு வந்துள்ளது. இதில் முக்கிய கைது மிதாப் பின் அப்துல்லா, அரசு பாதுகாப்பின் அமைச்சர். சவூதி அரேபியா முடியாட்சியாக உருவானது முதல் பதவியே முக்கியமாக கருதப்பட்டது. இப்பொழுது இந்த முடியாட்சி அதற்குள்ளேயே போரை சந்திப்பது போல் தெரிகிறது

2.பாரடைஸ் நாளிதழின் புதிய செய்தி

ஜெர்மனிய செய்தி தாள் 13.4 மில்லியன் ஆவணங்களை கசிய விட்டிருக்கிறது. இதில் அரசியல்வாதிகள் பிரபலங்கள் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரின் பொருளாதார விஷயங்கள் அடங்கும். இங்கிலாந்து ராணி, கனடாவின் பிரதமர் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி போன்றோருடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் சார்ந்த ஆவணங்களில், துருக்கி நாட்டின் பிரதமர் பின்னாலி இடிரீம் இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர் அடங்கியுள்ளது. முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் ஷவுகத் அஜிஸ் (2004 – 2007 ) அவர்களின் பெயரும் அடங்கும். இவர் தன் பொறுப்பு வகிக்கும் காலத்திற்கு முன் 1999 ஆண்டு மேற்கொண்டுள்ள விவகாரங்கள் வெளிவந்துள்ளது, ஆனால் இதை பற்றி இவர் பிரதமராக இருக்கும் பொது வெளிப்படுத்தவில்லை

3.கசிய பட்ட ஜேர்மன் ஆவணங்கள் ஐரோப்பிய யூனியனின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது

ஜெர்மனி ராணுவம் 2040 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் நடக்கக்கூடிய ஆறு மோசமான நிகழ்வுகளை குறிப்பிடுகிறது. இந்த ஆவணம் படி பல ஐரோப்பிய நாடுகள் சீர்குலைந்து பிரச்சனையில் வீழ்ந்து ரஷ்யாவுடன் சேரக்கூடும் . 2040 வியூகம் என்ற தலைப்பில் 102 பக்க ஆவணத்தில் ஆறு வகையான பிரச்சனைகளை பேசியுள்ளனர். இந்த கசிந்த பக்கங்களில் ஐரோப்பிய சமூகம் உடைவதை பற்றிய ஜெர்மனியின் கவலைகளை தெரிவிக்கிறது. இதில் கிழக்கு மேற்கு பிரச்சனையிலிருந்து பல துருவ ஐரோப்பாவாக ரஷ்யாவின் அரசியல் அல்லது பொருளாதார மாதிரியை பின்பற்ற கூடும். இத்தகைய ஒரு நிகழ்வை ‘ ஐரோப்பாவின் சீர்குலைவு மற்றும் ஜெர்மனியின் சுதாரித்த நிலை’ என்ற தலைப்பில் பல வருடங்களாக உலகிலுள்ள நிலையற்ற தன்மையை குறிப்பிடுகின்றனர். இதில் பல நாடுகள் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதையும் இந்த அமைப்பின் விரிவாக்குதல் பனி முடிவுபெறுவதையும் சுட்டிக்காட்டுகிறது . இதையே பல துருவ போட்டி என குறிப்பிடுகின்றனர் . இதன் படி பல ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து ரஷ்யாவிற்கு நெருக்கமான நிலைக்கு சென்று விடும். ஜெர்மனி ராணுவம் கூறிய அணைத்து விஷயங்களும் 2040 ஆம் ஆண்டுக்குள் சத்தியமாக காணப்படுகிறது.

Comments are closed.