சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 10.11.17

  • எமெனில் சவூதி அரசு மேற்கொள்ளும் மனிதாபிமானம் இல்லாத செயலின் மூலம் யூத அரசு போல செயல் படுகின்றது.
  • பிரக்சிட்டினால் (Brexit) முடக்கத்தில் இருக்கும் பிரிட்டன்
  • பசிபிக் கூட்டாண்மையை தொடர விரும்பிய அமெரிக்காவின் ரகசிய எண்ணத்தை சீற்குழைத்தது கனடா.

எமெனில் சவூதி அரசு மேற்கொள்ளும் மனிதாபிமானம் இல்லாத செயலின் மூலம் யூத அரசு போல செயல் படுகின்றது.

எமெனில் சவூதி அரசின் போர், காசாவில் யூதர்கள் செய்யும் அக்கிரமங்களை நினைவூட்டுவதாகவே இருக்கின்றன. ராய்டர்சின் அறிவிப்பின் படி:

(உணவு மற்றும் பொருள்கள் செல்ல)  தடை விதிக்கப்பட்ட நிலபரப்புகளில் ஒரு சில பகுதிகளை சென்றவாரம்  மீண்டும் கைப்பற்றிய  ஹௌதி இயக்கத்தின் மீது சவூதி தலைமையிலான ராணுவ கூட்டமைப்பு தாக்குதல் நடத்தின. இச்சூழ்நிலையில்  இதர துறைமுகங்களும் மூடப்பட்டால்,   பஞ்சமும் சுகாதார சீரழிவும் ஏற்படும் அபாயம் இருப்பதாக உதவி வழங்கும் நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.    

ரியாதை நோக்கி வந்த ஏவுகணையை சவூதி அரேபியா தடுத்தற்கு பிறகு, ஈரானிடமிருந்து ஆயுத தளவாடங்கள் ஹௌதி மக்களுக்கு செல்லாமல் இருக்க, எமனின் தரை வழி, வான் வழி, கடல் வழி பாதைகள் அனைத்தையும் முடக்கப் போவதாக கடந்த திங்கட்கிழமை ராணுவ கூட்டமைப்பு தெரிவித்தது.  

சென்ற வியாழகிழமை உணவு மற்றும் பொருளுதவிகள் செல்லும், ‘அல் வாதியா (al Wadea) எல்லையை உள்ளடக்கிய, சவூதி-ஆதரவு அரசின் பிடியில் இருக்கும்  கிழக்கு எமன் மீண்டும் திறக்கப்பட்டன என எமென் அதிகாரி ஒருவரும்  அங்கிருந்தவர்களும் கூறினர்.

‘(உணவு தளவாடங்கள் செல்ல) எமெனுக்கு  முழுமையான தடை விதிக்கப்பட்டால் பல லட்ச மக்கள் இறக்கக்கூடிய கடும் பஞ்சம் வர வாய்ப்புள்ளது’ என ஐநா அறிவித்துள்ளது. ஏதெனில் (Aden) அரசு கட்டுப்பாட்டில்  உள்ள தெற்கு துறைமுகம் சென்ற புதன்கிழமை திறக்கப்பட்டன. ஆனால் ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் இன்னும் மூடப்பட்டுதான் இருக்கின்றன.     

மேற்கின் சிந்தனையான  ‘முழு போர் (total war)’ என்ற திட்டத்தை பின்பற்றுவதில் சவூதியும்  யூத அரசும் ஒன்று தான். இப்போரின்படி, ஒரு அரசு  போராளிகளுக்கு எதிராக மட்டும் சண்டை போடுவதில்லை. மாறாக அவர்கள் பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த மக்களையும் அடக்குமுறை படுத்தும் .

இதில் மோசமான விஷயம் என்னவென்றால், எவர்கள் மீது சவூதி அரசாங்கம் கடும்போக்கை கையாளுகின்றார்களோ, அவர்கள் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாமை ஏற்று கொண்டவர்கள் என்பது தான்.

முஸ்லிம் உம்மா தன்னுடைய கட்டுபாட்டிலிருந்து தப்பித்து செல்கின்றது  என்ற காரணத்தால், அமெரிக்கா முஸ்லிம் நிலங்களின் மீதான போரை அதிகப்படுத்தியுள்ளது. இதில் சவூதி மற்றும் யூதர்கள் தொடுக்கும் போர்களிலும்  அமெரிக்காதான் பின்னணியாக இருக்கின்றன.

சவூதி அரச குடும்பத்தின் மீதான தற்போதைய களையெடுப்பு, அந்த அரசை இன்னும் உறுதியாக தக்க வைத்து கொள்ள அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையே அன்றி வேறில்லை.

அந்நிய குப்பார்கள் நம்முடைய நிலங்களில் கால்பதிக்க நம்முடைய துரோகி ஆட்சியாளர்களும் கங்கானி அரசியல்வாதிகளும் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.

இவர்களின் அரசுகள் கவிழ்க்கப்பட்டு, இவர்களுடைய சொத்துகள் முடக்கப்பட்டு, நம்முடைய நிலங்களில் இவர்களின் எஜமானர்களின் ஆதிக்கம் துடைத்தெரியப்படும் காலம் வெகு தூரமில்லை.

பிரக்சிட்டினால் (Brexit) முடக்கத்தில் இருக்கும் பிரிட்டன்

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளிவர லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50 வது உறுப்பை (Article 50) வரையறுத்த பிரிட்டிஷின் முன்னால் தூதுவர் தற்பொழுது பிரக்சிட்டையே திரும்ப பெற பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ராய்டர்சின் அறிவிப்பின்படி:

“(பிர்க்சிடில் இருந்து வெளியேறுவது என்ற) விவாகரத்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் இன்னும் திருமண ஒப்பந்தத்தில்தான் இருக்கின்றனர், இதனால் இவர்களுக்கு மத்தியில் சுமூக பேச்சுவார்த்தைக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது” என 1990லிருந்து  1995 வரை ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய தூதராக இருந்த ஜோன் கேர் (John Kerr) லண்டனில் பேசுகையில் கூறினார்.    

மேலும் அவர் கூறுகையில், “நாம் நம்முடைய எண்ணங்களை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்” என கூறினார். உறுப்பு 50 ன்  சட்ட வரைமுறை பிரிட்டனில் தவறுதலாக எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதைப் பற்றி அவர் கூறுகையில்,”இதை பற்றி பிரித்தானிய மக்கள் தெரிந்து கொள்வது அவர்களின் உரிமையாகும் : அவர்கள் இதில் திசை திருப்பப் படக்கூடாது” என கூறினார்.   

பிரித்தானிய முதல்வர் தெரேசா மே, உறுப்பு 50 ஐ செயல் முறை படுத்தும் திட்டத்தை துடங்கிய நேரத்தில்  பாராளுமன்றத்தில் அவர் கூறுகையில்  “இதிலிருந்து பின் வாங்கும் சூழ்நிலை இருக்காது” என அவர் கூறினார்.   சென்ற வெள்ளிகிழமை இதனை உறுதி படுத்தும் விதமாக, “மார்ச் 29 2019, சரியாக இரவு 11:00 மணியளவில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்” என அவர் கூறினார்.  

சென்ற வருடம் ஜூன் மாதம் நடந்த பொது வாக்கெடுப்பில் 51.9 சதவீத மக்கள் ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் 48.1 சதவீத மக்கள் ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்றும் வாக்களித்திருந்தனர். 

பிரக்சிட் ஆதரவாளர்கள் கூறுகையில் ‘ஒன்றியத்திலிருந்து வெளியேற எடுக்கும் முயற்சிகளை தடுப்பது ஜனநாயகத்திற்கு முரணானதாகும்’ என கூருகின்றனர். அதே சமயத்தில், இதனை எதிர்ப்பவர்கள் கூறுகையில்,’ வெளியேறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவெடுக்கும் முழு உரிமை நாட்டிற்கு இருக்கிறது’ என கூருகின்றனர்.

பொது வாக்கெடுப்பிற்கு பிறகு நடந்த அரசியல் குழப்பத்தில் பிரித்தானிய முதல்வராக வந்த தெரேசா மே சென்ற மாதம் கூறுகையில், ‘பிரிட்டன்  உறுப்பு 50 ஐ  திரும்பபெறாது’ என கூறினார்.  

நீண்ட காலமாக பிரித்தானிய  அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரட்டை வேடம் போட்டு வந்துள்ளது. அது ஒன்றியத்தில் இருக்க விருப்பம் தெரிவித்ததே, உள்ளே இருந்து கொண்டு அதற்கு தொல்லை கொடுக்கத்தான். இதனால் பிரித்தானிய அரசியல் தரத்தில், ஒன்றியத்தை ஆதரிப்பவர்களும் அதனை எதிர்ப்பவர்களும் தேவைப்பட்டனர் (உருவாகினர்).  ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு ஆதரவாகவே பொது வாக்கெடுப்பு இருக்கும் என ஆரம்பத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டது. அரசு இதனை தவறாக கணித்துவிட்டது, அதனால் வாக்கெடுப்பில் தோற்றுவிட்டது. அன்றிலிருந்து அரசு குழப்பத்திலேயே இருக்கின்றது.

மேற்கத்திய அரசுகள் தங்களுடைய உள்நாட்டு பொது கருத்தில் ஆதிக்கம் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் சிக்கல்களை சந்திக்கின்றனர். முஸ்லிம்கள், மேற்கு அரசுகளின் இயலாமையை பார்த்து,  தங்களுடைய விவகாரங்களை தாங்களே  பார்த்து கொள்வதற்கு உண்டான அறிகுறிகள் அதிகம் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அடிமை போக்குள்ள முஸ்லிம் கங்காணி ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இதனை உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்.

பசிபிக் கூட்டாண்மையை (Trans-Pacific Treaty,TTP ) தொடர விரும்பிய அமெரிக்காவின் ரகசிய எண்ணத்தை சீற்குழைத்தது கனடா.

The Australian என்ற பத்திரிக்கையின் படி:

ஆஸ்திரேலியா பிரதமர் மல்கம் தர்ன்புல் (Malcolm Turnbull) கூறுகையில் “11 நாடுகள் கொண்ட பசிபிக் கூட்டாண்மையை உறுதிசெய்யும் சந்திப்பில், தான் விலகி கொண்டது எதற்கு என்று கனடா பிரதமர் ஜஸ்டின் திருடே (Justin Trudeau) விளக்கமளித்தாக வேண்டும்” என கூறினார்.    

“சரியான தருணத்தில் அவர் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் விலகிகொண்டதும், அதற்கு   அவர் கூறிய காரணமும், கண்டிப்பாக இதைபற்றி அவரிடம் யாரவது கேட்டே ஆக வேண்டும்.” என அவர் கூறினார்.  

தர்ன்புல் கனடா பிரதமர் திருடேவுடன் வெள்ளிகிழமை நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை பற்றி கூறிகையில் அது ‘வெளிப்படையான’ சந்திப்பு என கூறினார். 

“எங்களுக்கு மத்தியில் நல்ல ஒரு வெளிப்படையான கலந்துரையாடல் நடைபெற்றது. நான் எப்பொழுதுமே ஆஸ்திரேலியாவின் நலனுக்காகவே குரல் கொடுப்பேன்” என அவர் கூறினார்.

வணிக உச்சி மாநாட்டின்   இறுதி கட்ட தீர்மானம் நிறைவேற்றப்படும்போது,  இறுதிநிமிட தேவைகைளை முன்வைத்து சந்திப்பில் கலந்து கொள்ளாமல் கனடா விலகிக் கொண்டது. இது  அனைத்து நாட்டு பிரதிநிதிகளையும் கோபம் அடைய செய்தது. மேலும் இத்தீர்மானம்  நிறைவேறும் என்று எதிர்ப்பார்த்திருந்த உலக தலைவர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது.

ஆசியா பசிபிக் நாடுகளான 11 நாடுகளின் வணிக அமைச்சர்களும்  பசிபிக் கூட்டாண்மை பேச்சுவார்த்தையில் மீண்டும் இன்று அமர்ந்தனர். பிறகு ஒப்பந்தத்தின்  ‘முக்கிய அம்சங்களில்’ அவர்கள்  ஒத்துப்போகினர்.

அமெரிக்கா இல்லாத புது கூட்டமைப்பான TPP11 (பசிபிக் கூட்டாண்மை 11) யை இம்முயற்சி உருவாக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

கடந்த வெள்ளி கிழமை நடந்த சந்திப்பில், ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் அனைத்து நாடுகளும் ஒத்து போகி விட்டதாகவும், இன்னும் சில பிரச்சனைகளை தீர்க்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர்கள் கூறினர். 

இருப்பினும், அறிவிப்பாளர்களின்படி, இதில் எந்த ஒரு காலவரையளவும் நிர்ணயம் செய்ய வில்லை என்பது தெரிய வருகின்றது. 

ஆஸ்திரேலியா அதிகாரிகள் இதை பற்றி கூறுகையில் ‘இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது’ என கூறினர்.

முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வொப்பந்தத்தை கொண்டுவர அயராது முயற்சி செய்து வந்தார். ஆனால் அமெரிக்காவின் வெகுஜன கருத்தை இதற்கு ஆதரவாக கொண்டு வர முடியவில்லை. அதனால் சென்ற 2016  தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு அதிபர் வேட்பாளர்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதில் தற்போதைய அதிபர் டிரம்பும் ஒருவராகும். இதனால் தான் இன்று வரை அவர் ‘முதலில் அமெரிக்கா’ என்ற கொள்கையை ஆசியாவிலும் நடைமுறைபடுத்துகிறார். மேலும் டிரம்ப் அதிபரான பிறகு TTP (பசிபிக் கூட்டாண்மை) யிலிருந்து அமெரிக்காவை வெளியேரவும்  செய்தார்.

இருப்பினும், TTP என்ற கூட்டாண்மை, சீனாவிற்கு எதிரான பிராந்திய குழுவை அமைப்பதன் மூலம்,  அமெரிக்காவின்  நலனையே பாதுகாக்க கூடியதாக இருக்கின்றது. ஆக, ஆஸ்திரேலியா பிரதமர் தர்ன்புல் அமெரிக்காவின் திட்டத்தையே செயல் படுத்துவதாக தெரிகின்றது. அதாவது சீனாவை தனிமைப்படுத்துதல், இதில் அமெரிக்கா கலந்து கொள்ளாவிட்டாலும் சரியே. ஆனால் இதில் மேற்கத்திய நாடுகள் கடுமையான முரண்பாடுகளை கொண்டுள்ளனர். அதனாலேயே கனடா பிரதமர் திருடே சந்திப்பில் கலந்து கொள்ளாமல் ஒப்பந்தத்தில் இடையூறு செய்துள்ளார்.

உண்மை என்னவெனில், அந்நிய குஃப்பார்கள் ஒருவருக்கொருவர் பகைமையை கொண்டுள்ளனர். முஸ்லிம்களின் ஆதிக்கம் இல்லாததன் காரணத்தினால் தான், அவர்கள் உலகை கட்டுபடுத்த முடிகின்றது. இன்ஷா அல்லாஹ், வெகுவிரைவில் நேர்வழிபெற்ற கிலாபாவை முஸ்லிம் உம்மத் மறுநிர்மாணம் செய்வதன் மூலம், அந்நிய குஃப்பார்களை ஒன்றுமில்லா செல்லா காசுகளாக மாற்ற முடியும். 

Comments are closed.