சமீப பதிவுகள்

தீர்வு கிழக்கிலோ அல்லது மேற்க்கிலோ (அமைப்பு முறைகளில்) இல்லை மாறாக இஸ்லாமில் மட்டும் தான் உள்ளது

07/11/2017 அன்று டேனிஷ் TV2 தொலைக்காட்சி நிலையம் “காணாமல் போன பெண்கள்” என்ற பெயரில் ஒரு புதிய ஆவணப்படம் ஆரம்பித்தது. இந்த படத்தின் தொடர் நிகழ்ச்சிகளில், வீட்டை விட்டு தப்பி ஓடிய பெண்களை திரும்ப வளர்ப் பதற்காக தன் தாய்நாட்டிற்கு (குறிப்பாக முஸ்லிம் நாடுகள்) கொண்டுவந்தும் மறுபடியும் தப்பி சென்றனர். இப் பெண்களின் நிலையைப் பற்றி பின்தொடரலாம் என்று கூறி ஆரம்பித்துள்ளனர்.

கருத்து:

இந்த தொடரின் முதல் கதை மிகவும் உணர்வுப்பூர்வமாகஇருந்தது. இது கொலை, துன்புறுத்துதல், அடைத்து வைத்தல் ஆகியவற்றை கொண்ட ஒரு பயங்கரமான கதையாக இயக்கியுள்ளார்கள், இனி வரப்போகும் கதைகளும் இது போலவே தான் இருக்கும் என தெரிகின்றது. என்னதான் கொடூரமானதாக மற்றும் சோகமானதாக இந்த கதைகள் இருந்தாலும், இதைப் பற்றி பல விஷயங்களை மனதில் வைத்திருப்பது அவசியம்.

இந்த படம் மற்றும் இதுப்போன்ற தொடர்களின் உண்மையான நோக்கம் நடைமுறையில் உள்ள விஷயங்களை விளக்கி காட்டுவதல்ல மாறாக அரசியல் சூழ்ச்சிகளை நோக்கமாக கொண்டுள்ளது. டேனிஷ் பொது சேவை தொலைக்காட்சி நிலையம் “என் மகள் இல்லாமல் இல்லை” (Not Without My Daughter) என்ற திரைப்படம் வெளிவந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு மக்கள் மத்தியில் எழுந்தன. இதிலும் ஒரு அரசியல் நோக்கத்தை நாம் கண்டோம்.

இதுப்போன்ற காட்சிகளை பார்த்து, இஸ்லாமை கண்டு பயந்து நடுங்கும் ஆட்கள் எல்லாம் இஸ்லாம் ஒரு வன்முறை, அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை கொண்டுள்ள மார்க்கம் என கோபத்தில் சப்தமிடுபவர்கள் இருப்பார்கள். இதுக்கேத்த மன்னிப்புக் கோரும் முஸ்லிம்களும் “ஒரு சமூகமாக இதுப்போன்ற நம் குறைபாடுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், மேலும் இதுப்போன்ற கெட்ட விஷயங்கள் நடைபெறாமல் இருக்க நம்மை சீர்திருத்திக்க வேண்டும் என்பார்கள்.

ஆனால், உண்மையில் தீர்வு கிழக்கிலோ அல்லது மேற்கிலோ (அமைப்பு முறைகளில்) இல்லை மாறாக இஸ்லாமிய அமைப்பு முறையில் மட்டும் தான் உள்ளது. உலகின் சில பகுதிகளில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றதும், தாழ்ந்தவர்களாக கருதப்படுகின்றதும் மற்றும் வெவ்வேறு கலாச்சார பிரச்சனைகள் இருப்பது நிஜம் தான். இவ்விஷயங்களை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது தவறும், உண்மையை மறுப்பது போல் ஆகிவிடும். ஆனால், இதுக்கெல்லாம் இஸ்லாமை பழி சுமத்தக் கூடாது, அதேப்போல் மேற்கத்திய சுதந்திரங்களும் இதுக்கு தீர்வளிக்கவே முடியாது.

டேனிஷ் காவலாளிகளின் கருத்தின் படி, கௌரவத்துக்காக குடும்பமே தன் வீட்டுப் பெண்களை கொலைச் செய்யும் கொலைகள் (honor killings) “இஸ்லாமிய” குடும்பங்களில் மிக குறைவாக தான் நிகழ்கிறது மாறாக “கிழக்கத்திய கலாச்சாரங்களை” கொண்ட குடும்பங்களில் அதிகமாக ஏற்படுகின்றன என கருதுகிறார்கள். பெண்களின் ஒடுக்குமுறையையும், அவர்களை தாழ்ந்தவர்களாக கருதும் சிந்தனைகளையும் இஸ்லாம் வந்து தான் மாற்றியது. ஐரோப்பா இருண்ட காலங்களில் இருக்கும்போது

பெண்களுக்கு ஆத்மா இருக்கா/இல்லையா?, பெண்கள் உண்மையாகவே மனிதர்கள் தானா? என்று விவாதம் செய்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஸ்லாம் தான் பெண்களின் நிலையை உயர்த்தியது. மேற்கத்திய மதிப்புகளும் அதன் சுதந்திரமும் உலக பிரச்சனைகளுக்கு தீர்வாக இன்னும் எதுவும் வழங்கவில்லை, குறிப்பாக பெண்களின் பிரச்சனைகளுக்கு, இதற்கு பல ​​ஆதாரங்கள் உள்ளன அவையெல்லாம் பார்த்தாலே புரியும்.

கிழக்கிலும் மேற்கிலும் பெண்களின் ஒடுக்குமுறை பிரச்சனைகளை இஸ்லாமால் மட்டுமே தீர்க்க முடியும். ஏனெனில், அது மட்டும் தான் மனிதர்களுக்குபெண்கள் உட்பட, அவர்களின்உறவுகளுக்கு, உறவுகளில் ஏற்படுகின்ற குறைப்பாடுகளையும் மற்றும்முரண்பாடுகளையும்எவ்வாறுதீர்க்கவேண்டும்என்பதற்க்கெல்லாம் திர்வுக் கொடுக்க முடியும்.

Comments are closed.