சமீப பதிவுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். ன் ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட்டது பீபீசி

செய்தி:

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டு படைகளின் வழிகாட்டுதலின் பெயரில் , ரக்கா நகரத்தை கட்டுபடுத்திக் கொண்டிருக்கும் குர்து படைகளின் உதவியுடனும், நூற்றுக்கணக்கான ஐ.எஸ். போராளிகள் அவர்களுடைய குடும்பங்களுடன் ரக்கா நகரத்திலிருந்து வெளியேற்ற நடந்த ரகசிய ஒப்பந்தத்தை பீபீசி நிறுவனம் வெளியாக்கியுள்ளது.

(http://www.bbc.co.uk/news/resources/idtsh/raqqas_dirty_secret)

ரக்காவின் வீழ்ச்சி ஐ.எஸ்.ஐ.எஸ் ன் இறுதி கோட்டையின் வீழ்ச்சியாகவும் மேற்கு கூட்டணியின் பெரும் வெற்றியாகவும் கூறப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வெற்றியில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ வீழத்த மேற்குலகம் கடும் சிக்கல்களை சந்தித்ததாக புரளிகள் பரவலாக கூறப்பட்டு வந்திருந்த சூழ்நிலையிலும், பீபீசியின் இந்த புது வெளியீடு, ஐ.எஸ்.ஐ.எஸ் ற்கும் மேற்கிற்கும் உண்டான தொடர்பில் ஆழ்ந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கருத்து:

யூப்ரடீஸ் நதிக்கரையின் வடக்கு பகுதியிலிருக்கும் போர்சூழ்ந்த தப்கா நகரத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களை பாதுகாப்பாக வெளியேற்ற, அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். ற்கு எதிராக சண்டை போட்டு கொண்டிருக்கும் Syrian Democratic Forces (SDF) என்ற படையுடன் லாரி ஓட்டுனர்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட செய்தியை பீபீஸி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி லாரி ஓட்டுனர்கள் அக்டோபர் 12 ஆம் தேதி குறிப்பிட்ட இடத்தில் அந்த குடும்பங்களை காப்பாற்ற கூடியபோது, அதிர்ச்சி தரும் செய்தி அவர்களுக்கு காத்திருந்தது. அப்பொழுது தாம் பொய் கூறப்பட்டிருக்கின்றோம் என்பதை அவர்கள் உணர ஆரம்பித்தார்கள்.

அதாவது சரக்கு வண்டியில் நூற்றுகணக்கான ஐ.எஸ். போராளிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் அவர்களின் ஆயுதங்களையும் ஏற்றி செல்ல வேண்டும், அதுவும் மூன்று நாள் செல்ல கூடிய ஆபத்தான பிரயாணம் என்ற அதிர்ச்சி செய்திதான் அது.

ஓட்டுனர்கள் பீபீசி நிறுவனத்தால் பேட்டி எடுக்கப்பட்டனர், இந்த விஷயம் ரகசியமாக இருக்க பல ஆயிரம் டாலர்கள் கொடுக்க வாக்களிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. நான்கு மாத சண்டையில் நகரமே கடும் சேதத்திலிருக்கும் சூழ்நிலையில், உள்ளூர் அதிகாரிகளின் உதவியோடு, ரக்காவிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதே இந்த ஒப்பந்தமாகும்.

அமெரிக்காவோ, பிரிட்டிஷோ அல்லது SDF படையோ இதை ஒத்துகொள்வதாக இல்லை. இதனை உலகிலிருந்து மறைக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருகின்றன. ஆனால், வண்டியை ஓட்டி செல்லும் நபர்களிடமும், அந்த ஒப்பந்தத்தை பேசிய நபர்களிடமும் பீபீசி நிறுவனம் பேட்டியெடுத்து இதனை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.

லாரி ஓட்டுனர்களில் ஒருவரான அபு பவ்ஜி கூறுகையில் “நாங்கள் ரக்காவில் நுழைந்த போது பெரும் பீதிக்கு உள்ளானோம்”. “நாங்கள் SDF நபர்களுடன் நகரத்திற்கு சென்றிருக்க வேண்டும், ஆனால் நாங்கள் தனியாகவே சென்றோம். அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் தங்களுடைய இடுப்பில் ஆயுதங்களுடன் காத்திருந்தனர். பிறகு அவர்களுடைய ஆயுதங்களை வண்டியில் ஏற்ற ஆரம்பித்தனர். இந்த ஒப்பந்தத்தில் ஏதாவது தவறு நடந்திருந்தால், அவர்கள் எங்களை வண்டியுடன் சேர்த்து வெடிக்க வைத்திருப்பார்கள். அவர்களின் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்கொலை பெல்ட் அணிந்திருந்தார்கள்”. என அவர் கூறினார். ரக்காவின் விஷயம் ஊடகங்களின் காதுகளுக்கு எட்டாமல் SDF படை பார்த்துக்கொண்டது.

எனவே ஐ.எஸ்.ஐ.எஸ் ன் தப்பித்தல் தொலை காட்சிகளில் வெளிவராமல் பார்த்து கொள்ளப்பட்டது. பீபீசியினால் ரகசியமாக எடுக்கப்பட்ட காணொளியின்படி, லாரிகள் ஆயுதம் ஏந்திய நபர்கள் உள்ளடக்கிய வண்டிகளை இழுத்து சென்றன. பாதுகாப்பிற்காக மட்டுமே ஆயுதங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் இருந்தும், அவர்கள் தங்களால் முடிந்த அளவு அதிகமான ஆயுதங்களை வண்டியில் ஏற்றி சென்றனர். பத்து லாரிகள் முழுக்க ஆயுதங்களும் வெடி பொருட்களும் ஏற்றி செல்லப்பட்டன. பீபீசியின் விசாரணைக்கு பிறகு கூட்டணி படை இந்த ஒப்பந்தத்தை பற்றி, அது நடந்தது என ஒப்புக்கொண்டுள்ளது. 3500 குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 250 போராளிகள் ரக்காவிலிருந்து வெளி ஏற்றப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உருவெடுத்த நாளிலிருந்தே, அவர்களின் நோக்கத்தை பற்றி நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக, ‘அவர்கள் மேற்கு எதிரிகளின் கூட்டணியை தாக்காமல், முஸ்லிம்களை மட்டும் தாக்கியது ஏன்?’ என்ற கேள்வியும் இதிலடங்கும். பஷார் அல் அசாத் அழிவின் விழிம்பில் இருக்கும் பொழுது இவர்கள் சிரியாவில் தோன்றினார்கள். பிறகு அசாதிற்கு எதிரான கிளர்ச்சி படையுடன் இவர்கள் சண்டை போட துவங்கினர். இது அசாதின் இடத்தை தக்க வைக்க பெரிதும் உதவியது.

ஐ.எஸ்.ஐ.எஸ் மொசூலை படை எடுக்கும்பொழுது, அங்கிருந்த ஈராக் படைகளுக்கு ‘ஆயுதங்களை அப்படியே விட்டு விட்டு , நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸிடம் ஒப்படைக்கச் சொல்லி பாக்தாதிலிருக்கும் மூத்த அதிகாரிகளிடமிருந்து கட்டளை வந்ததையும் நாம் அறிவோம். மேற்கின் வான் விமானங்கள் மூலம் கட்டுபாட்டில் இருந்த ஈராக்-சிரியா பகுதிகளில், ஐ.எஸ். போராளிகள் சுதந்திராமாக திரிந்த பொழுது, அந்த விமானங்கள் அவர்களுக்கு எதிராக சில தாக்குதல்கள் மட்டுமே நடத்தியிருந்ததையும் நாம் அறிவோம். தற்பொழுது ரக்காவிலிருந்து அவர்களை விடுவிப்பது, அவர்களின் தேவை மேற்கிற்கு இன்னும் தேவைப்படுகின்றது என்பதையே குறிக்கின்றது.

Comments are closed.