சமீப பதிவுகள்

லிபிய அரசியல் அரங்கில் நடைபெறும் நிகழ்வுகள்

கேள்வி:

4/11/2017 அன்று மிடில் ஈஸ்ட் பத்திரிக்கை: “லிபிய இராணுவத்தின் ஒருங்கிணைப்பது குறித்த ஒப்பந்தத்தின் நிறைவேற்றத்துடன் கெய்ரோவில் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்ததாக” செய்தி வெளியிட்டது. லிபிய இராணுவ அதிகாரிகள் 30/10/2017 அன்று தேசிய இராணுவத்தை மறுசீரமைப்பதாக அறிவித்து கெய்ரோவில் ஒன்று கூடினர், ஐ. நா வுக்கான லிபிய தூதர் கஸ்ஸான் சலாம் 21/09/2017 அன்று அவர் முன்மொழிந்து வரும் தீர்வுக்கான திட்டத்தின் அடிப்படையில் சிராஜுடைய அரசு மற்றும் தோப்ரூக் அரசின் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தலைமையேற்று துவக்கி வைத்தார் என்று குறிப்பிட்டனர், ஆனால் டிசம்பர் 17 2015 அன்று நிறைவேற்றப்பட்ட ஸாகிராத் ஒப்பந்தத்தின் பிரிவு 08-ன் மீதான குழப்பத்தின் காரணமாக ஒரு மாதத்திற்கு உள்ளாகவே அது நிறுத்தி வைக்கப்பட்டது. கேள்வி என்னவென்றால்: இராணுவ கூட்டங்களின் துவக்கமானது அரசியல் கூட்டங்கள் தோல்வியடைந்ததாக குறிக்கின்றதா? வேறு வகையில் கூறுவதென்றால், அரசியல் பேச்சுவார்த்தையின் தோல்விக்கு பிறகு பிரிவு 08-க்கு தீர்வு ஒன்றை காண்பதற்காக இந்த இராணுவ பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன என்பதை குறிக்கின்றதா? மேலும், ஸாகிராத் ஒப்பந்தம் நிறைவேறிய பின்னர் இந்த இரண்டு ஆண்டுகளில் புதியதாக என்ன நடந்தது, இரு தரப்பினரும் அப்போது ஒப்புக்கொண்ட விஷயத்தில் இப்போது ஏன் கருத்து வேறுபாட்டை கொண்டிருக்கின்றனர்?!

பதில்:

புதிதாக எதுவும் நடந்துவிடவில்லை! இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட அதேசமயத்தில் சர்ச்சைக்கான விதையானது அங்கு இருந்து வந்தது, இரு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு நோக்கங்களுடன் கையெழுத்திட்டன. நாம் இதை தெளிவாக புரிந்துகொள்வதற்காக வேண்டி கீழ்வரும் விஷயங்களை நாம் வழங்குகிறோம்:

1. கத்தாஃபியின் சகாப்தத்தில், செயல்பட்டுக் கொண்டிருந்த அரசியல் வட்டமானது பிரித்தானியருக்கு விசுவாசமாக இருந்தது, அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு அங்கு திறம்பட இருக்கவில்லை. கத்தாஃபியின் ஆட்சி முடிவடைந்த போதும், அதனுடைய வேர் அங்கு நீடித்திருந்து அதை பிடுங்கி எடுக்காத காரணத்தால் அதனுடைய பழைய அரசியல் வர்க்கமானது மீண்டும் நிறுவப்பட்டது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு விசுவாசமான அரசியல்வாதிகள் ஒரு திரனான இருப்பை அங்கு கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகத்தான் அங்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தேர்தல் நடத்தி அங்கு ஒரு அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் அமைப்பது என ஐரோப்பா விரும்பியது ஏனெனில் அங்கிருந்த பழைய அரசியல் வட்டம் கொண்டிருக்கும் செல்வாக்கின் காரணமாக முடிவுகள் அதற்கு சாதகமாக இருக்கும் என அது எதிர்பார்த்தது. அமெரிக்கா பிரிட்டனுக்கு விசுவாசமான அரசியல் வட்டத்தை எதிர்கொள்ளும் வகையிலான ஒரு அரசியல் வட்டத்தை உருவாக்கும் வரை அங்கு நடைபெறக்கூடிய தேர்தலை தடுக்க நாடியது. ஆக ஐரோப்பாவின் நாட்டம் என்னவாக இருக்கிறதென்றால் அரசியல் தீர்வை முடுக்கி விடுவது, மாறாக அமெரிக்காவிற்கோ ஒரு புதிய அரசியல் வட்டத்தை உருவாக்கும் வரை தீர்வை தள்ளி வைக்க வேண்டும் என்பதாக இருக்கின்றது மேலும் இந்த வட்டத்தை ஏற்படுத்துவதற்கு இராணவத்தை உபயோகிப்பதை தவிர அதற்கு வேறு வழிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது, ஏனெனில் இது தான் அமெரிக்காவுடைய பழக்கமாகும்.

2. அமெரிக்கா தனது நலனுக்காக சேவை புரிவதற்காக வேண்டி லிபியாவின் அதிகாரியான ஹஃப்தரை லிபியாவில் பணிபுரிய அனுப்பி வைத்தது, அவர் எத்தகையவரென்றால் அவருடைய சுயவிவரமானது அவருடைய விசுவாசம் அமெரிக்காவுக்கு இருப்பதாக அறிவிக்கிறது. அவர் மற்றும் ஏறக்குறைய 300 லிபிய இராணுவ வீரர்கள் மார்ச் 1987-ல் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர், பிறகு 1990-ல் அவருடைய விடுதலைக்காக மத்திய புலனாய்வுத் துறையின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்கா சாடு நாட்டுடன் இடைத்தரகு செய்தது. அதன் பிறகு அமெரிக்க வானூர்தி மூலம் ஹஃப்த்தர் ஜெ(z)ய்ருக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார் அதன் பிறகு அமெரிக்காவில் அவருக்கு அரசியல் புகலிடம் அளிக்கப்பட்டது, அங்கு அவர் வெளிநாட்டிலிருந்து செயல்படும் லிபிய எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார். ஆக அதற்கு பின்னர் 20 ஆண்டுகளை அவர் அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாகாணத்தில் கழித்தார், அங்கு அவருக்கு சி.ஐ.ஏ வால் கொரில்லா போர்ப் பயிற்சியளிக்கப்பட்டது, மேலும் பிப்ரவரி 17-ல் (பிப்ரவரி 2011) தொடங்கிய புரட்சி வரை அவர் லிபியாவுக்கு திரும்பவில்லை. அமெரிக்கா லிபியாவில் இராணுவத்தின் (வெற்றிகரமான) மூலம் தனது காலடியை பதிப்பதற்காகவும் ஒரு புதிய அரசியல் வட்டத்தை உருவாக்குவதற்காகவும் அவரை லிபியாவுக்கு அனுப்பி வைத்தது மேலும் அவருக்கு ஆயுதங்களையும் நிதிகளையும் நேரடியாகவும் அல்லது எகிப்திலுள்ள தனது முகவர் சிசியின் மூலமாகவும் அனுப்பி வைத்தது. ஹஃப்தர் செயல்படுகின்ற வகையிலான ஒரு செல்வாக்கை பெறுவதற்காக காத்திருந்து அதுவரை லிபியாவில் எந்தவொரு அரசியல் தீர்வும் ஏற்படாத வகையில் அமெரிக்கா தடுத்து வந்தது. திரிபோலி முழுக்க ஐரோப்பாவுக்கு குறிப்பாக பிரிட்டனுக்கு ஆதரவான அரசியல் வட்டத்தை கொண்டிருந்த காரணத்தால் அவர் தனது கவனத்தை கிழக்கு நோக்கி செலுத்தி வந்தார், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு லிபியாவின் கிழக்குப் பகுதியில் அதிகாரத்தை நிறுவுவதில் வெற்றியடைந்து தொப்ரூக் பாராளுமன்றத்தில் ஆதிக்கத்தை செலுத்தும் அளவுக்கு முன்னேரினார்.

3. 2015-ல், நிலவி வந்த அரசியல் வட்டத்தின் யதார்த்தம் மாற்றப்படுவதற்குள் ஒரு அரசியல் தீர்வை கண்டெடுப்பதற்கு அந்த வருட இறுதிக்கு மேல் காத்திருக்கக் கூடாது என ஐரோப்பா நாட்டம் கொண்டிருந்தது. ஐரோப்பா தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக தனக்கு விசுவாசமான ஒரு தூதரை லிபியாவுக்கு அனுப்பி வைப்பதில் கவனம் செலுத்தியது, இதனையடுத்து வெற்றிகரமாக லியோனை அங்கு அனுப்பி வைத்தது உடனே அவர் அங்கு அரசியல் தீர்வை நோக்கி தனது பிரச்சாரத்தை தொடங்கினார் பாதுகாப்பு சபையில் அதற்கு ஆதரவான ஒரு சூழலை ஏற்படுத்துவதிலும் அதேசமயம் இந்த அரசியல் தீர்வை நிராகரிக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்துவதிலும் அவர் வெற்றி கண்டார். மறுபுறம், அமெரிக்கா இந்த விஷயத்தை வேறு கோணத்தில் எண்ணியது, இந்த பிரச்சாரத்திற்கு பின்னர் ஏற்படவிருக்கும் அரசியல் தீர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தனக்கு ஆதரவாக இல்லை என்பதாக கண்டது அதேசமயம் அந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வது அல்லது நீக்குவது எனும் அடிப்படையில் அதில் அதிகாரம் செலுத்தும் வகையில் இந்த ஸாகிராத் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்று திட்டமிட்டது, அவ்வாறே அது நடைபெற்றது. ஆக, இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 08 ஆனது இராணுவ அதிகாரத்தின் கட்டுப்பாட்டை குறித்தானது. ஹஃப்தர் ஒரு அமெரிக்க முகவர் என்பதனையும் மற்றும் இராணுவ தளபதியாக அவர் இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புவதையும் ஐரோப்பிய சமூகம் அறிந்திருந்தது இதன் காரணமாக அவர்கள் பிரதம மந்திர சிராஜ் தங்களுக்கு விசுவாசமாக இருக்கின்ற காரணத்தால் இந்த ஒப்பந்தத்தை இராணுவமானது பிரதம மந்திரியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்குமாறு தீட்டினர். ஹஃப்தர் இராணுவத்தில் ஒரு செயல்படும் சக்தியாக உருவாவதில் வெற்றியடையவும் மற்றும் திரிபோலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலும் ஐரோப்பிய அரசியல் வட்டத்துக்கு எதிராக நிற்கக்கூடிய ஒரு செயல்படும் அரசியல் வட்டத்தை அவர் உருவாக்கும் வரையிலும் இந்த ஒப்பந்திற்கு இடையூறு செய்வதற்கு இந்த ஒப்பந்தம் நல்லதொரு வாய்ப்பாக இருப்பதாக கருதிய அமெரிக்காவுக்கு இந்த பிரிவு ஒரு முட்டுக்கட்டையாக விளங்கியது.

4. ஸாகிராத் ஒப்பந்தம் 2015-ன் பிந்தய பகுதியில் நிறைவேற்றப்பட்டதிலிருந்து நிலவும் யதார்த்தம் இது தான், எதுவும் பெரிதாக மாறவில்லை, ஆகவே இரு தரப்பினருடைய எண்ணங்கள் மற்றும் அவர்களுடைய அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களில் புதிதாக எதுவும் இல்லை. லிபியாவின் விஷயம் சம்மந்தமாக ஸாகிராத் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது கேட்கப்பட்ட கேள்விக்கு நாம் ஏற்கனவே பதிலளித்துள்ளோம் அதில் இதுபற்றி எவர் கவனித்து இந்த விஷயத்தை பின்தொடர்ந்து வந்தனரோ அவர்களுக்கு இந்த விஷயத்தை தெளிவாக்கினோம்:

– 3/6/2014 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “லிபியாவிலுள்ள அரசியல் வட்டமானது பிரஞ்ச்சுடைய சிறிய அளவிலான பங்கேற்புடன் பிரிட்டனால் தயாரிக்கப்பட்டது என்பதனையும் அது லிபியாவில் பிரிட்டனுக்கு விசுவாசமான அரசியல் வட்டத்திற்கு வலு சேர்க்கக்கூடியதாகவும் அது எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் சில “சுயேட்சைகளுடன்” ஐரோப்பிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அதனை தொடர்ந்து சூழ்நிலைகள் ஸ்திரத்தன்மை அடைந்து அமெரிக்காவின் லட்சியங்களுக்கு முடிவு கட்டும் என்று குறிப்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அது கத்தாஃபியின் ஆட்சிக்கு பிறகு பெரும்பான்மையான செல்வாக்கை பெறுவதற்கு அதன் இராணுவ செல்வாக்கை பயன்படுத்த விரும்பியது அங்கு ஐரோப்பிய சூழல் இன்னமும் நிலவி வருகின்ற இப்போதுள்ள சூழலில் தேர்தல்கள் நடத்துவதன் மூலம் அந்த செல்வாக்கை அடைய முடியாது என்றும் அது தனது நடவடிக்கைகளை இராணுவ ரீதியாக மேற்கொண்டு லிபியாவில் நிலவும் சூழலை அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருக்குமாறு மாற்றியமைத்து அதன் பிறகு தேர்தல்கள் நடத்தலாம் என்று நினைத்தது. தன்னிடமுள்ள வளத்தை வேறு விதத்தில் பயன்படுத்தவும் மற்றும் அரசியல் அரங்கில் அமெரிக்கா மட்டும் ஆதிக்கத்தை கொள்வதற்காகவும் அது முடியாத பட்சத்தில் ஐரோப்பாவுடன் கூட்டு சேர்ந்து கொள்வதற்காகவும் மற்றும் ஐரோப்பாவை இந்த அரங்கில் முழுமையான ஆதிக்கத்தை பெற்று விடாமல் செய்வதற்காகவும்… வேண்டி அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ஐரோப்பாவின் ஆதரவாளர்களை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் தேசிய காங்கிரஸின் ஆதிக்கத்தில் இருக்கும் அப்போதுள்ள நடைமுறைநிலைக்கு எதிராக இராணுவப்புரட்சிக்கு நிகரான ஒரு காரியத்தை செய்வதற்கு இராணுவ அதிகாரி ஒருவரை நியமித்தது. இதன் காரணமாகவே, அமெரிக்காவுக்கு தனது விசுவாசத்தை வெளிக்காட்டும் சுயவிவரத்துடன் ஹஃப்தர் தனது அடியை எடுத்து வைத்தார்…”

– 11/4/2015 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “இந்த விஷயத்தை ஐரோப்பா அறிந்துள்ளது; அதாவது பேச்சுவார்த்தையை கவிழ்க்க அமெரிக்கா செயல்படுகிறது என்று, இதன் காரணமாக அது பெர்னார்டினோ லியோன் எனும் நம்பகத்தனமையுடைய ஐரோப்பிய தூதரை முதலில் நாடியது. அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்காக வேண்டி பெர்னார்டியோ லியோன் செயல்பட தொடங்கினார்; மார்ச் 2015-ல் முடிவடையும் தனது பணியின் முதற் காலகட்டத்திலேயே இப்பணியை முடித்து வைப்பதே அவருடைய பிரதான கவலையாக இருந்தது பிறகு அவருடைய பணிக்காலம் பாதுகாப்பு சபையின் தீர்மாண எண் 2213-ன் படி செப்டம்பர் 15, 2015 வரை நீட்டிக்கப்பட்டது… ஜெனீவாவில் தொடங்கி பின்னர் லிபயாவுக்கு மாற்றி அதன் பின்னர் மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவுக்கு மாற்றி அதன்பின்னர் திரும்பவும் மொராக்கோவில் பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர் தனது பணியின் முதற்காலகட்டத்திலேயே முடித்து வைக்கும் அவசரத்தில் செயல்பட்டார். மொராக்கோவில் 12/03/2015, வியாழனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில், தொப்ரூக் பாராளுமன்ற உறுப்பினர்கள் லிபிய தரப்பினருக்கிடையேயான அரசியல் ஆலோசனைகள் மீண்டும் தொடக்கப்படுவதை ஒரு வாரம் கழித்து அதாவது 19/03/2015 அன்றைய தேதிக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்… ஒரு அரசியல் தீர்வை வெகுவிரைவில் காண்பதற்கான முக்கியத்துவத்தை நோக்கி லியோன் கவனம் செலுத்தினார்… அதனோடு 16/3/2015 அன்று ஐரோப்பிய கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து வருவதாக எச்சரித்தது. அது குறிப்பிட்டதாவது, “அரசியல் ஒப்புதல் ஒன்று ஏற்படாத பட்சத்தில் அது லிபியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும். தேசிய ஒருமைப்பாட்டு அரசு ஒன்று உருவாக்குவது குறித்தும் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான ஒரு ஒப்பந்தம் ளற்பட்ட உடனே ஐரோப்பிய கூட்டமைப்பு லிபயாவுக்கான தனது ஆதரவுக்கரத்தை உறுதிபடுத்த விரும்பும்” (ஜெர்மன் நியூஸ் ஏஜென்சி 16/3/15)

– மற்றும் 19/1/2016 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “அரசியல் மையம் அல்லது அதில் பெரும்பான்மையானவை தனது பக்கம் இருப்பதாக பிரிட்டன் அறிந்துள்ளது, ஆகையால் லியோனின் முன்மொழிதலின் பிரகாரம் அமையும் எந்தவொரு இடைக்கால அரசும் தனது பக்கம் இருக்குமென மீண்டும் உறுதி செய்தது இதன் காரணமாக ஸாகிராத் ஒப்பந்தத்தை துரிதப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை லியோனின் காலகட்டத்தில் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தது. அது முடியாதபோது அவருக்கு பதிலாக காப்லர் நியமிக்கப்பட்டு பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்பட்டது. தனது விருப்பத்திற்கேற்ப மீண்டும் இந்த ஒப்பந்தம் முழுமையாக வடிவமைப்பதற்காக வேண்டி இந்த ஒப்பந்தத்தை முழுமையாக தடைசெய்வதற்கான மற்ற செயல்களுடன் ஒரு செயலாக இந்த திருத்தங்களானவை மீண்டும் அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட்டது என்பதை பிரிட்டன் உணர்ந்தது. அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஹஃப்தரின் இராணுவ செயல்பாடுகளின் விளைவுகளால் ஒரு புதிய அரசியல் வர்க்கத்தை உருவாக்கிய பின்னர் இது நடைபெற்றது. ஆகையால் பிரிட்டன், எதிர்பாராத வேறு எந்த நிகழ்வும் நடைபெறுவதற்கு முன்னர் அவசரமாக இந்த ஒப்பந்தத்தை திருத்தங்களை ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என பிரிட்டன் நாடியது ஆகவே அதை நிறைவேற்றுவதற்கான செயலை துரிதப்படுத்தியது மற்றும் அது இறுதி ஒப்பந்தத்தை 17/12/2015 அன்று மொராக்கோவிலுள்ள ஸாகிராத்தில் நிறைவேற்றுவதற்கு விரும்பியது அதை சட்டப்பூர்வமாக்குவதற்காகவும் சர்வதேச அளவில் ஒப்புதலைப் பெறுவதற்காகவும் பாதுகாப்பு சபையை அது அணுகியது மற்றும் இறுதி ஒப்பந்தம் குறித்த முடிவுகளுக்கு ஆதரவாக வரைவு தீர்மானம் எண் 2259- ஐ சமர்ப்பித்தது… அமெரிக்காவின் ஒப்பந்தங்களை தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளே பிரிட்டனை அவசரப்படுத்தியது… லிபிய கவுன்சிலின் பிரதநிதிகளின் தலைவருடைய முன்னால் ஆலோசகரான ஈஸா அப்துல் கய்யூம், அல் காத் அல் அரபி தொலைக்காட்சியில் 13/12/2015 அன்று “இந்த பிரச்சனைக்கு விரைவான ஒரு தீர்வு காண்பதற்கு பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆர்வம் கொண்டிருக்கும் அளவுக்கு அமெரிக்கா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதை அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கெர்ரியின் பேச்சுக்கள் தெளிவாகக் காட்டுகிறது…”.

– மற்றும் 12/3/2016 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “இந்த “அமெரிக்காவின்” தடங்கலுக்கு காரணம் என்னவென்றால், லிபியாவில் அப்போதிருந்த அரசியல் மேடையில் வீற்றிருந்தவர்களில் பெரும்பாலானோரை கத்தாஃபியின் சகாப்தத்தில் மீதமிருந்தவர்களை அதாவது ஐரோப்பாவுக்கு விசுவாசமானவர்களை கொண்டிருந்தது தான்… இந்த புதிய மந்திரிசபை போன்று எந்தவொரு மந்திரிசபையின் உருவாக்கமும் இந்த அளவீட்டுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும் என்பதை குறிக்கின்றது. அதேநேரம் அமெரிக்கா ஹஃப்தர் மற்றும் அவரைச் சுற்றியுள்ள இராணுவத்திலுருந்து ஒரு குழுவை நம்பியிருக்கின்றது… இதன் காரணமாகவே ஆட்சியில் தனக்கு பெரும் பங்கு கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் ஒரு அரசு உருவாகும் வரை இந்த அரசியல் தீர்வை ஹஃப்தர் மற்றும் அதற்கு கீழ்படிபவர்கள் மூலம் இராணுவ தலையீட்டின் மூலமாக தன்னால் இயன்ற அளவுக்கு அமெரிக்கா தடுத்து வருகிறது… இதற்கு முரணாக ஐரோப்பா அங்குள்ள அரசியல் மேடையில் தனது கட்டுப்பாட்டை அல்லது ஆதிக்கத்தை இன்னும் கொண்டிருக்கும் காரணத்தால் இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் அரசு ஒன்றை அமைப்பத்து அதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்குமான செயலில் ஈடுபட்டு வருகின்றது, இதற்கான அறிகுறிகள் எண்ணிலடங்கானவை. பிரித்தானிய அயலுறவு அமைச்சர் பிலிப் ஹேமண்ட், 19/02/2016 அன்று அல்ஜீரியாவுக்கு விஜயம் செய்து அதன் அயலுறவு அமைச்சர் ராம்தானே லமம்ராவை சந்தித்து “லிபியா சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு மிகவும் சரியானதொரு தீர்வாக இராணுவ தலையீடு அமையாது என வலியுறுத்தி அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்காக வேண்டி கோரிக்கை விடுத்தார். (அல்ஜீரியன் நியூஸ், 19/02/2016)”

5. ஆகவே, 2015 டிசம்பர் மாதம் ஸாகிராத் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அல்லது அதற்கு முன்னிருந்து இதை கண்காணித்து வரும் அனைவருக்கும் தனக்கு விசுவாசமான அரசியல் வர்க்கம் இருக்கும் காரணத்தால் ஐரோப்பா இந்த தீர்வு குறித்து அவசரப்படுவதும், அதேநேரத்தில் தனது கருவிகள் மூலம் இராணுவ அதிகாரத்தை செயல்படுத்தி பிறகு ஒரு புதிய அரசியல் அதிகாரத்தை உருவாக்கும் வரை அமெரிக்கா இதற்கான தீர்வை அடைவதிலிருந்து தடுத்து வருவதும் தெளிவாகியிருக்கும்… இதன் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன; சில நேரம் தீர்வை நோக்கி நெருங்கி வந்தும் பிறகு அதிலிருந்து விலகி சென்றும் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு பேச்சுவார்த்தையை ஆரம்பித்த ஒரு மாதம் கழித்து தொப்ரூக் குழு பின்வாங்கியது பிறகு அவர்கள் பேச்சுவார்த்தையிலிருந்து நீக்கப்பட்டார்கள்… சலாம் எல்லோரையும் சந்தித்து இங்கிருந்தும் அங்கிருந்தும் பரிந்துரைகளை முன்மொழிந்து மற்றும் அவர்கள் பின்வாங்கியதையும் அவர்களுடைய குறிப்புகளுடன் துனீசியாவிலிருந்து லிபியாவுக்கு திரும்பியதை நியாயப்படுத்தினார்… இரு தரப்பினருக்கிடையேயான ஒப்பந்தத்தின் இறுதி தீர்வுக்கு அவர்களுக்கு பின்னாலிருக்கும் சர்வதேச சக்திகளின் ஒப்புதல் தேவைப்படும் என்பதை அநேகமாய் அறிந்திருப்பார், அவர்களுக்கு பின்னாலிருப்பவர்கள் சம்மதிக்கும் வரை அதை கஸ்ஸான் சலாமும் கொண்டிருக்க மாட்டா் அதில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளும் கொண்டிருக்க மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் தங்களுக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகளுடன் ஆலோசனை செய்வதாக பாசாங்கு செய்து இந்த பின்வாங்குதலும், நீக்கலும் துனீசியாவிலிருந்து லிபியாவுக்கு திரும்புதலும் அமைந்தது.

– ஸாகிராத் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்காக துனீசியாவில் அரசு உயர்மட்ட குழுவுடனான பேச்சுவார்த்தைகளில் இரண்டு சுற்றுகள் முடிந்திருந்த நிலையில் லிபிய அரசு பிரதிநிதிகள் குழு எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல் வெளியேறினர் என அல்-ஜசீராவின் செய்தியாளர் கூறினார்… இருப்பினும் பிரிவு 08-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்கியமே இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும், இதுபற்றி இன்று காலை நடைபெற்ற அமர்வில் உரத்த சப்தமிட்டு விவாதிக்கப்பட்டது எனவும் அப்போது ஜனாதிபதி மன்றம் மற்றும் அரசுக்கு இடையேயான பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது எனக் கூறினார். (அல்- ஜசீரா, 16/10/2017)… திங்களன்று (16/10/2017) இரு பிரதிநிதிக் குழுக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது எதனால் என்று மதிப்பீடு செய்வதற்காக துனீசியாவிலுள்ள ஐ.நா தூதரகத்தின் தலைமையகத்தில் ஐ.நாவுக்கான லிபிய தூதர் கஸ்ஸான் சலாம் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின் இரு தலைவர்களான மூஸா ஃபரஜ் மற்றும் அப்துல் சலாம் நாஸிஹ் இடையே நடைபெற்றது என அல்- ஜசீராவுக்கு செய்தி கிடைத்தது (அல்- ஜசீரா, 17/10/2017)… மேலும் லிபியாவிலுள்ள ஐ.நா தூதரகம் லிபிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினருக்கும் அன்று நடைபெறவிருக்கும் அவர்களுடைய சந்திப்பில் அவர்களுக்கு இடையே ஒருமித்த அபிப்ராயம் கொள்வதற்கான குறிப்புகளையும் மற்றும் வேறுபாடு கொள்வதற்கான குறிப்புகளையும் வரைவது தொடர்பாக விவாதிப்பதற்கான ஆவணம் ஒன்றை ஒப்படைத்தது மற்றும் அதுபற்றி அவர்களுடைய கருத்துக்களை தனித்தனியே அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டது என துனீசியாவிலுள்ள அல்- ஜசீராவின் செய்தியாளர் செய்தி வெளியிட்டார். (அல்- ஜசீரா, 18/10/2017)… துனீசியாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், சலாம் துனீசியாவிலுள்ள அரசு உச்ச மன்றத்தின் இடைத்தரகர்களும் லிபிய அரசின் பிரதிநிதிகளும் தங்களுக்கிடையே சில இடங்களில் புரிந்துணர்வையும் ஒப்புதலையும் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார், அது ஐக்கிய நாடுகள் சபை நீக்க விரும்பும் பிரிவு 08 உட்பட நிலவி வரும் வேற்றுமைகளை குறிப்பிட்டு அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பதற்கு ஞாயிறன்று லிபியாவுக்கு திரும்புமாறு அவர்களிடம் கோரியது. (அல்- ஜசீரா, 24/10/2017).

6. ஆகையால், ஹஃப்தர் இராணுவ நடவடிக்கையில் கவனம் செலுத்தினார், இது ரகசியமாக இருக்கவில்லை. ஹஃப்தரின் இராணுவ நடவடிக்கை மற்றும் கஸ்ஸான் சலாமின் ஆதரவின் கீழ் 21/9/2017 அன்று தொடங்கிய ஜனாதிபதி மன்றத்திற்கும் தொப்ரூக் பாராளுமன்றத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவருடைய பேச்சுக்களும் இராணுவ நடவடிக்கையை மையப்படுத்தியே இருந்தது அதேநேரம் அவருடைய பேச்சுக்களின் போதான கேள்விகளானது பேச்சுவார்த்தைகளின் திறன் குறித்து கேள்வி எழுப்புவதாக இருந்தது. அல்- ஜசீரா 14/10/2017 அன்று வெளியிட்ட செய்தியில்: பேச்சுவார்த்தையை ஐ.நா பரிந்துரைத்த வழியில் மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியுமா என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கலீஃபா ஹஃப்தர் கேள்வி எழுப்பியுள்ளார்… பெங்காசியில் நடைபெற்ற முதல் பாதுகாப்பு மாநாட்டில் ஹஃப்தர் தனது உரையில் இந்த அரசியல் பிரச்சனைக்கு இப்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே தீர்வு என்று மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய அறிகுறிகள் எதுவும் இல்லை எனக் கூறினார். அவர் அரசியல் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக இராணுவம் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைகள் உட்பட “மக்களுடைய விருப்பத்துக்கு இசைந்து கொடுக்கும்” மற்ற வழிமுறைகளை முன்வைத்தார். ஹஃப்தர் 2017 ஆகஸ்டு மாதத்தின் இடையில் லிபிய தேசத்தில் இராணுவம் முழு கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் வரை நாங்கள் எங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தீர்மானித்து இருக்கிறோம்…” என அறிவித்தார். (மிடில் ஈஸ்ட், 15/8/2017).

ஆகவே, இந்த அரசியல் தீர்வை தலைமையேற்று நடத்துவதற்காக வேண்டி இராணுவ தீர்வின் பக்கம் கவனம் செலுத்தும் செயலானது அமெரிக்காவுடைய லிபியாவின் காரியத்தில் மையமாக விளங்குகிறது; அது தனது இராணுவ கட்டுப்பாட்டிற்கான வாய்ப்புகளை அதிகரித்து அதன் பின்னர் அங்கு ஐரோப்பிய ஆதிக்கத்தை விட பலமான ஒரு அமெரிக்க ஆதிக்கத்தை கொண்டதொரு தீர்வை நிறைவேற்றும் வரை வரும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தடுத்து வருகிறது. அதாவது அமெரிக்கா அரசியல் தீர்வை தான் தலைமையேற்று நடத்துவதற்காக இராணுவ தீர்வில் கவனம் செலுத்தி வருகிறது, அதற்குரிய அனைத்து முயற்சிகளையும் அது எடுத்து வருகிறது… ஆக, அது இராணுவத்தில் ஹஃப்தருடைய செல்வாக்கு அதிகரிப்பதை உறுதி செய்யும் விதத்தில் இராணுவ சந்திப்பு ஒன்றை கெய்ரோவில் நடத்துவதற்கான வாய்ப்பை கண்டபோது அது ஹஃப்தரிடம் அதை 30/10/2017 அன்று நடத்த கட்டளையிட்டது. இதனடிப்படையில் லிபிய இராணுவ தரப்புகளிடையேயான சந்திப்பு கெய்ரோவில் நடைபெற்றது, அதில் இடம்பெற்றிருந்த தரப்புகள் அனைத்தும் ஹஃப்தருக்கு ஆதரவை அளிக்கக்கூடிய அல்லது அவரை எதிர்க்காதவைகளாக இருந்தது… அந்த சந்திப்பு 02/11/2017 அன்று நிறைவு பெற்றது: லிபிய இராணுவ அமைப்புகளை ஒன்றினைப்பதற்கான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை லிபிய அதிகாரிகளுக்கு இடையே கெய்ரோவில் நடைபெற்றது, அது நேற்றைய முன்தினத்தின் மாலையில் முடிவுற்றது, 2011 முதல் இராணுவ மற்றும் பாதுகாப்பு குழப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த லிபிய இராணுவத்தின் ஒருங்கினைப்பு மற்றும் லிபிய அரசுடனான அதன் உறவு குறித்த விஷயங்களில் ஏறக்குறைய ஒரு இறுதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று மிடில் ஈஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு செய்தி கிடைத்துள்ளது. (மிடில் ஈஸ்ட், நவம்பர் 2017). இது அமெரிக்காவின் கருவிகளான எகிப்தும் ஹஃப்தரும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளதை குறிக்கின்றது அங்கு பெருமளவிலான நிலப்பரப்பை குறிப்பாக கிழக்கு மற்றும் எண்ணைப் பகுதியில் கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்டு ஐரோப்பா தனது நலன்களில் (பிரிட்டனிடமிருந்தும் சிலவற்றை பிரான்ஸ் மற்றும் இத்தாலியிடமிருந்தும்) சிலவற்றை அவருக்கு விட்டுக்கொடுக்கும் அளவுக்கு எதிர்கொள்வதற்கு கடினமான ஒரு நபராக விளங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

இருப்பினும் இந்த பிரச்சனை முடிவுற்றதாக அர்த்தமில்லை ஏனெனில் ஐரோப்பாவும் லிபியாவில் தனது படைகளை கொண்டுள்ளது அதேபோல் அது அரசியல் செயல்பாடுகளில் அமெரிக்காவை விட தந்திரம் மிக்கது… ஆக, லிபியாவுடைய பிரச்சனையானது ஒருபுறம் அமெரிக்கா மற்றும் அதன் கருவிகள் மறுபுறம் ஐரோப்பா மற்றும் அதன் கருவிகள் என இவ்விரண்டுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்… மேலும் இந்த பிரச்சனையின் தீப்பிழம்புகளை லிபியர்கள் தங்களது கைகளில் ஏந்தி நின்று சன்டையிடுவார்கள்…

7. முஸ்லிம்களுடைய பிரச்சனைகளை அவர்களுடைய எதிரிகளின் கைகளால் அல்லாமல் முஸ்லிம்களுடைய கைகளால் தான் தீர்க்கப்பட வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும், மற்றும் அதற்கான தீர்வானது அல்லாஹ்(சுபு) யாருக்கு எளிதாக்கி இருக்கின்றானோ அவர்களால் எளிதாக அடைய முடியும். இதுபோன்ற தீர்வுக்கான ஆயுதமானது அல்லாஹ் (சுபு) வுக்கு மறைவாகவும் வெளிப்படையாகவும் உண்மையாய் இருப்பது மற்றும் சொல்லிலும் செயலிலும் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு நேர்மையாக இருப்பதாகும், பிறகு இந்த பேரம் பேசுபவர்கள் தாங்கள் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களுடைய காலகட்டத்தில் வென்றெடுக்கப்பட்டதில் இருந்து அதன் மக்கள் அனைவரும் முஸ்லிம்கலாகவும் மற்றும் அதன் பிரச்சனை அனைத்துக்கும் தீர்வாக அல்லாஹ் (சுபு) உடைய வேதம் மற்றும் அவனுடைய தூதர் (சல்) அவர்களின் வழிமுறையாக இருக்கும் ஒரு பழம்பெரும் இஸ்லாமிய அரசுக்கு முன்னால் நிற்பதையும் அதற்கும் குஃப்பாரிய காலனியாதிக்கவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் உணர்வார்கள்,

[وَلا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لا تُنْصَرُونَ]

“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.

(அல்குர்ஆன் : 11:113)

இறுதியாக, நாம் முன்பு என்ன கூறினோமே அதையே மீண்டும் வலியுறுத்துகிறோம்: உலகெங்கும் நீதத்தையும் நண்மையையும் ஏந்திச்சென்று இஸ்லாத்துடைய பரவலுக்கு தொடக்கப் புள்ளியாக விளங்கிய இஸ்லாமிய நாடுகள், நம்மை கொல்வதற்கு போட்டியிடும் போர்க்களமாக மாறியுள்ளது மற்றும் நமது செல்வங்களை சூறையாடி வரும் மற்றும் குஃப்பாரிய காலனயாதிக்கவாதிகள் அவர்களுடைய கரத்தினால் மட்டுமல்லாமல் நம்மவர்களில் இருந்து அவர்களுக்கு கைப்பாவைகளாக செயல்படுபவர்களின் கரங்களால் நாம் சிந்தும் ஒவ்வொரு உதிரத்துளிகளை கண்டு மனமாற நகைப்பதை காண்கையில் மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இந்த குஃப்பாரிய காலனியாதிக்கவாதிகள் நமது எதிரிகளாவர்; ஆகவே நம்மை கொல்வதற்காக அவர்கள் செயல்படுவது நமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை, ஆனால் லிபியாவுடைய எதிரெதிர் அணியினர் சிலர் அமெரிக்காவுடன் நட்பு கொண்டும் சிலர் ஐரோப்பாவுடன் நட்பு கொண்டு இஸ்லாத்திற்காகவும் அல்லாஹ் (சுபு) வுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காகவும் அல்லாமல் குஃப்பாரிய காலனியாதிக்கவாதிகளின் நலன்களுக்காக தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்வது ஆச்சர்யத்தை அளிக்கின்றது… இது பெரும்பாவங்களில் ஒன்றாகும், முஸ்லிம்கள் தங்களுக்குள் கொலை செய்வது என்பது இஸ்லாத்தில் மாபெரும் குற்றமாகும்.

ரசூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள்,

“كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُُ”

“ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் உயிர் மற்றும் அவருடைய செல்வம் மற்றும் அவருடைய கண்ணியத்தில் அத்துமீறுவது தடுக்கப்பட்டதாகும்” (அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது) மேலும் ரசூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள்,

 «لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عِنْدَ اللَّهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ»
“அல்லாஹ்வுக்கு இந்த உலகை அழிப்பது என்பது ஒரு முஸ்லிம் கொல்லப்படுவதை விட பெரிதல்ல.” (அப்துல்லாஹ் இப்னு அம்ரிடமிருந்து அந்-நசயீயில் அறிவிக்கப்பட்டுள்ளது)

﴿إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ﴾

“எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கின்றாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கின்றது.” (அல்குர்ஆன் : 50:37)

Comments are closed.