சமீப பதிவுகள்

பாகிஸ்தானின் FATA பகுதிகளை KPK மாகாணத்துடன் வெறுமென இணைத்து விட்டாலே மாற்றத்தை கொண்டுவர முடியாது

ஜம்ரரூத் நகரத்தில் இந்த மாதம் இளைஞர் மாநாடு ஒன்று நடைப்பெற்றது. அதில், “கூட்டாட்சியால் நிர்வகிக்கப்பட்ட பழங்குடிப் பகுதிகளிலிருந்து” (FATA – Federally Administered Tribal Areas) “எல்லைக்குட்பட்ட குற்றங்கள் ஒழுங்குமுறை” (FCR – Frontier Crimes Regulations) என்னும் கொடுரமான சட்டங்களை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கவும், கைபர் பக்துன்க்வா (Khyber Pakthunkhwa) மாகாணத்துடன் FATA வை உடனுக்குடனே இணைக்கவும் பேச்சுவார்தைகள் நடந்தன. அதற்கு பின், நவம்பர் 12 ஆம் தேதியிலிருந்தே இந்த இணைப்புக்கான வாக்குவாதம் தீவிரமான முறையில் கைபர் பக்துன்க்வாவில் தொடர்ந்தது. FATA பகுதிகளிலிருந்து FCR சட்டங்களை ஒழித்து அப்பகுதிகளுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க நேரம் வந்துவிட்டது என்று தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினரான ஷாஜி குல் கூறினார். மேலும், FATA வின் பழங்குடியினர் FCR ஐ நிராகரித்து, நாட்டின் அரசியலமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கருத்து:
வடமேற்கு பாக்கிஸ்தானில் ஏழு பழங்குடி நிறுவனங்கள் (மாவட்டங்கள்) மற்றும் ஆறு எல்லைப்புற பிராந்தியங்களை உள்ளடக்கிய அரை தன்னாட்சியை கொண்ட ஒரு பழங்குடிப் பகுதி (semi-autonomous tribal region) தான் இந்த FATA. இப்பகுதி நேரடியாக பாகிஸ்தானின் மத்திய அரசாங்கத்தால் FCR என தனிப்பட்ட சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த கடுமையான மற்றும் கொடூரமான சட்டங்கள் முஸ்லிம் இந்தியாவின் முந்தைய காலனித்துவ ஆக்கிரமிப்பாளரான பிரத்தானிய இராஜியத்தால் உருவாக்கப்பட்டவை. தனது ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பஷ்தூன் பழங்குடி மக்களை நசுக்குவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தினார்கள். இது 1877 ஆண்டின் கொலைகார சித்திரவதைச் சட்டத்திலிருந்து (Murderous Outrages Act 1877) உருவாக்கப்பட்டது.

தனிநபர்களின் குற்றங்களுக்காக முழு குடும்பத்தை அல்லது பழங்குடி உறுப்பினர்களை கூட்டாக தண்டனையை விதிக்க FCR அனுமதிக்கிறது. அதோடு, குற்றம் சாட்டப்பட்டவரை நீதித்துறையின் மூலம் விசாரணை மேற்கொள்ளும் உரிமையும் மறுக்கின்றது. எந்த ஒரு குற்றத்தை குறிப்பிடாமல் மத்திய அரசால் விதிக்கப்பட்ட சந்தேக நபர்களை பழங்குடியினரின் தலைவர்கள் ஒப்படைத்தால், குற்றத்தை நிருபிக்கும் பொறுப்பு தலைவர்களே ஏற்பார்கள், அப்படி நிருபிக்கவில்லை என்றால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இப்பிராந்தியத்தில் தனக்கிருந்த எதிர்ப்பை முற்றிலும் ஒடுக்குவதில் பிரிட்டன் வெற்றிபெறவில்லை என்றாலும், இச்சட்டங்களை உருவாக்கி ஆப்கானிஸ்தானில் அமைதியின்மையிலிருந்து தாங்கல் மண்டலத்துக்கு கொண்டுவந்தது. இறுதியில், பிரித்தானிய படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மறுபடியும் இந்த இடத்துக்கு வர அவர்களுக்கு துணிச்சல் வரவில்லை.

பாகிஸ்தானை உருவாக்கிய பிறகு, வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிர்கின்ற ஒரு தளமாக FATA பகுதிகள் இருந்தன. FATA வின் முஸ்லிம்கள் பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த விதத்திலேயே சோவியத் ரஷ்யா படையெடுப்பையும் எதிர்த்தனர், இப்படைகளும் பிரித்தானியர்கள் போலவே பின்வாங்கி திரும்பவில்லை. அமெரிக்க படையெடுப்புக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டதிலிருந்து மீண்டும் FATA முக்கிய பகுதியாக மாறியது. இதற்காக, பாகிஸ்தானின் தலைமையில் அமெரிக்காவின் கைக்கூலிகள் காலனித்துவ ஒடுக்குமுறைகளின் நிலைப்பாட்டை ஏற்று, எதிர்ப்பை காட்டியதுக்கும் தாக்குதல்களை செய்ததுக்கும் பழங்குடி முஸ்லிம்களுக்கு கூட்டு தண்டனைகளைத் தொடங்கினர். இதனால் பழங்குடிப் பகுதிகள் தலைகீழாக மாறி, பெரிய அளவில் அகதி நெருக்கடி ஏற்பட்டது. இப்பொழுது, அமெரிக்க கைக்கூலிகள் முஸ்லிம்களின் எதிர்ப்பை ஒடுக்கும் வேலையை அதிகரிக்க விரும்புகின்றனர். அதனால், பழங்குடி பிராந்தியங்களில் மத்திய பாதுகாப்பு அமைப்பு முறைகளை நிரந்தரமாக நிறுவுவதற்கு, பழங்குடி பகுதிகளிலிருந்து FCR யை நீக்க வேண்டும் என்ற ஒரு போலிக்காரணத்தை உருவாக்கி, இதன் மூலம் அப்பகுதியை அரசியலமைப்பின் கீழ் கொண்டுவர விரும்பிகிறார்கள்.

அமெரிக்க தன் திட்டங்களை நிறைவேற்றுகிறது, வழக்கம்போல் பாகிஸ்தானிய ஆட்சியாளர்களும் அமெரிக்க செய்கின்ற மாற்றங்களை பாகிஸ்தானின் நலனுக்காக தான் என மக்களிடம் சித்தரிக்கிறார்கள்.மற்ற இடங்கள் அனுபவிக்கும் அதே நீதி உரிமைகள் FATA வின் முஸ்லீம்களும் அனுபவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே, 24/01/2017 ஆம் தேதிக்குப் பிறகு FATA வின் இணைப்பு துவங்கியபோது, உலகின் மற்ற நாடுகள் அனுபவிக்கும் அதே உரிமைகளை FATA வின் முஸ்லிம்களுக்கும் வழங்க விரும்புவதாக மத்திய அரசு கூறியது. அதற்கு பின், அக்டோபர் 17, 2017 அன்று, தேசிய நடைமுறை குழு சட்ட மந்திரியை FATA சீர்திருத்தங்களின் மசோதாவை பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றும் பணியை அளித்தது. அதோடு, தற்போதைய நீதிச் சட்டங்களை FATA க்கு அமல்படுத்த, சட்டம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அப்பகுதிகளில் தொடங்கியது.

நிச்சயமாக ஆட்சியின் இந்த செயல் முட்டாள்தனமானது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் எந்தவொரு உரிமையும் “அனுபவிக்க” இல்லை என்று பாகிஸ்தான் முழுவதும் பார்த்தாலே புரியும். முஸ்லிம்கள் FATA வினுள்ளே இருந்தாலும் சரி வெளியே இருந்தாலும் சரி, FCR யின் கீழ் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஜனநாயகம் இருக்கும் வரை முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மறுக்கப்படுவார்கள். பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள் இழுக்கப்படுகின்ற நிலையில் தற்போதைய மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நீதித் தன்மையே முஸ்லிம்களுக்கு தருகின்ற அநீதிக்கான காரணமாகும், குறைந்த செலவில் நல்ல கல்வி, அணுகக்கூடிய சுகாதார பராமரிப்பு, நிரந்திர பாதுகாப்பு மற்றும் ஒரு நிலையான வாழ்க்கை போன்ற பெரும்பாலான உரிமைகள், செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் அடகுகின்ற தற்போதைய முதலாளித்துவ முறையின் கீழ் ஒருபோதும் அடைய முடியாது.

இந்திய துணைக்கண்டத்தின் முஸ்லிம்கள் தன் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் இஸ்லாமை முழுமையாக செயல்படுத்த இஸ்லாத்தின் கீழ் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தானை உருவாக்க போராடினார்கள்.

இன்று FATA , கைபர் பக்துன்க்வா மற்றும் பாகிஸ்தானின் மற்ற முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் கிலாஃபாவை மீண்டும் நிலைநிறுத்தவதற்காக வேலை செய்ய வேண்டும். அதன் கீழ் வாழ்ந்தால் மட்டுமே மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் தனக்கு தேவைப்படும் உரிமைகள் மற்றும் கடமைகளை முழுமையாக அனுபவிக்க முடியும்.

لِلّٰهِ اِلَّا الْحُكْمُ اِنِ
அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை (12:67)

ஷாஸாத் ஷேக்

Comments are closed.