சமீப பதிவுகள்

பாப்வா கீனியில் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் முடிவில்லா வன்முறை செயல்கள்

பாப்வாவின் வளங்களை சுரண்டும் அமெரிக்காவுக்கு சொந்தமான சுரங்கத்தின் 51% பங்குகளை திரும்பப் பெறுவது குறித்தான பிரச்சனைக்கு மத்தியில், கணவர்களின் துணையற்ற நிலையில் குடும்பத்தின் முதுகெலும்பாக மாறியிருக்கும் பல பாப்வா பெண்களை சமூக மற்றும் வறுமையிலான பிரச்சனைகள் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுடைய கணவர்களை சிறைபிடிக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டு அல்லது அவர்கள் காணாமல் போன நிலையில் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதனோடு பிபீஎஸ்-ன் 2017-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, வறுமையில் வாழும் குழந்தைகளின் விகிதங்கள் பாப்வா மாகாணத்தில் அதிகப்படியாக இருக்கின்றது, மேற்கு பாப்வா மற்றும் கிழக்கு நூஸா டெங்காராவில் முறையாக 35.57% மற்றும் 26.42% ஆக உள்ளதாக அறிவிக்கிறது.

அதேவேளையில் மகளிர் மேம்பாட்டு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சரான யோஹன்னா சூசனா யெம்பைஸ், செவ்வாயன்று பாப்வா மாகாணத்திலுள்ள லேம்பங் எனுமிடத்தில் மாணவர்களை சந்தித்து பேசும் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இந்தோனேசியாவில் அதிக அளவில் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைச் செயலானது பாப்வாவில் இன்னமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது என கூறினார் (ரிபப்லிகா, 17/10). இதற்கு முரணாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இது போன்றதொரு வாக்குமூலம் பாப்வாவை பூர்வீகமாகக் கொண்ட மந்திரியிடமிருந்து வந்தது. பாப்வாவின் அதிகப்படியான குடும்ப வன்முறைக்கு பாப்வாவின் மக்களுடைய மதுவை விரும்பக்கூடிய பரம்பரை பழக்கம் தான் காரணம் எனவும் இதன் காரணமாக குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்,

கருத்தாக்கம்:

இந்தோனேசியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகளை கையாள்வதற்கு ஒரு பாப்வ பெண் அமைச்சரை ஜோகோவி அரசாங்கம் நியமித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மிகவும் அப்பாற்பட்டு, பிரச்சனைகளானது அதேபோன்று நீடித்து வருகிறது. மறுபுறம் வளம் நிறைந்த பாப்வ நிலப்பரப்பிலிருந்து பாப்வாவின் சொத்துக்களை உறிஞ்சும் ஃபரீபோர்ட் எனும் அமெரிக்காவுக்கு சொந்தமான சுரங்க நிறுவனத்தை வெளியேற்ற முடியவில்லை. மார்ச் 2015 அன்று, பாப்வாவின் எல்ஷாம் (ELSHAM) கல்வி நிறுவனம் பாப்வ பெண்கள் அனுபவிக்கும் வன்முறையானது வெறுமனே குடும்ப வன்முறைக்கு மட்டும் தொடர்புடையதானது அல்ல என்கிற புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதையும் தாண்டி பெண்கள் மீது இராணுவ வீரர்கள் நிகழ்த்தும் வன்முறையானது பெண்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 2012-2014 வரை பாப்வாவில் 234 நபர்கள் கொல்லப்பட்டதாக, 854 காயமடைய செய்ததாக மற்றும் 880 நபர்கள் கைது செய்யப்பட்டதாக என இராணுவத்தினரின் வன்முறை தொடர்பாக 389 வழக்குகள் உள்ளன என எல்ஷாம் புள்ளிவிவரம் அறிவிக்கின்றது.

பாப்வ மக்களின் நிலங்களை கைப்பற்றுவதற்காகவும் பாப்வ இயற்கை வளங்களை சுரண்டுவதற்காகவும் அந்நிய பெருநிறுவனங்களுடன் இந்தோனேசிய பாதுகாப்புப் படைகள் பக்கபலமாக நிற்கின்றது. அமுங்மே பழங்குடியினரின் நிலப்பரப்புகளை ஃபரீபோர்ட்-மெக்மோரன் நிறுவனம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக அபகரித்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய மிஃபீ (MIFEE – Merauke Integrated Food and Energy Estate) திட்டத்திற்காக அவர்களுடைய பூர்வீக நிலங்களை அரசு கைப்பற்றியதன் காரணமாக அநிம்-ஹா (மெராவ்கெ) நிலப்பரப்பை சார்ந்த பெண்கள் மற்றும் மிருகங்கள் அவர்களுடைய நிலங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும், ஆற்றுப்படுகைகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். ஸினார் மாஸ் டிபிகே-க்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர்களை பனை மர பயரிடுவதற்கென அரசு கைப்பற்றியதன் காரணமாக மாம்பெராமோ-டாமி (கீரோம், ஜெயபுரா) பகுதியை சார்ந்த பெண்களும் தங்களுடைய நிலங்கள், கிராமங்கள் மற்றும் இறைச்சி மற்றும் காய்கறிகளுக்கு ஆதாரமாக விளங்கிய காடுகளை இழந்துள்ளார்கள் (நேஷனல் ஆஃப் பாப்வா சாலிடாரிடி – NAPAS, 2013).

உண்மையில், பாப்வ பெண்கள் பாப்வாவில் கட்டவிழ்த்து விடப்படும் பல அடுக்குகளை கொண்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அது மூன்று முக்கிய அடுக்குகளை கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது:

இதன் முதல் அடுக்கானது பாப்வாவில் சுய இன்பத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கச் செய்யும் தாராளவாத மற்றும் சுய காமவெறிபிடித்த கலாச்சாரத்தை வளர்க்கும் மதசார்பற்ற முதலாளித்துவ விழுமியங்களை கொண்டு விஷமூட்டியதன் காரணமாக சிதைந்து போன குடும்பங்கள் மற்றும் சமூகத்திலிருந்து வருகின்றது, ஆக பாப்வாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வதற்கு முக்கிய காரணியாக மதுவை சுட்டிக் காட்டுவதென்பது இயல்பானது தான். பாப்வ பெண்களை பெரும்பாலும் சிதைக்கக்கூடிய இவையனைத்தும் மற்றவர்கள் மீது எவ்விதத்திலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொருட்படுத்தாமல் சுயநல விருப்பங்களை துரத்துகின்ற தாராளவாத மனநிலையின் காரணமாக நிகழ்வதாகும்.

இதன் இரண்டாம் அடுக்கானது இந்தோனேசிய அரசின் இயலாமையாகும் அது பாப்வாவின் இயற்கை வளத்தை அந்நிய தனியார் பெருநிறுவனங்களிடம் ஒப்படைத்து அதன் காரணமாக பாப்வாவில் பெருமளவிலான வறுமையை உண்டாக்கி மற்றும் பெண்களை சுரண்டுவதன் மூலமும் மற்றும் கூட்டு வன்முறைக்கு ஆளாக்கப்படுவதன் மூலமும் படுகுழிக்கு தள்ளக்கூடிய குறைபாடுள்ள பொருளாதார கொள்கையை வகுக்கின்றது. இந்தோனேசிய அரசு அந்நிய பெருநிறுவனங்களிடத்தில் குறிப்பாக பி டி ஃப்ரீபோர்ட்டிடம் மிகவும் தாழ்ந்து போயுள்ளது. ஃப்ரீபோர்ட்டின் பங்குகளில் 51 சதவீதத்தை திரும்பச் செய்வதில் வெற்றி பெற்றிருந்த அதேவேளையில் ஃப்ரீபோர்ட் மெக்மோரனின் தலைவர் ரிச்சர்ட் அத்கரின் மகனுடைய கடிதம் ஒன்று பொதுமக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டது. அரசு முன்வைத்த முதலீடுகளை திரும்பப்பெறும் பொறிமுறையை ஃப்ரீபோர்ட் நிராகரித்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஃப்ரீபோர்ட் அதைபற்றி எதுவும் பேசாமல் இருக்கச் செய்வதற்காக வேண்டி, நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி அமெரிக்க அவசரமாக சுரங்க உரிமையாளரின் வரிகளை நீக்கும் சட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.

இதன் மூன்றாம் அடுக்கானது பாப்வா நிலப்பரப்புகளின் மீதான மேற்கத்திய அடிமைத்தனமாகும், குறிப்பாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பாப்வாவின் இயற்கை வளத்தின் மீது ஆர்வம் கொண்டு ஆயிரக்கணக்கான பெண்களை இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மேற்கத்திய பூலோக அரசியல் போராட்டத்தில் பலியாக்கி வருகின்றன. அங்கு நீடித்துவரும் இந்த மோதல் மற்றும் இராணுவ நடவடிக்கையின் காரணமாக பல பாப்வ பெண்கள் தங்களுடைய கணவர்களை இழந்துள்ளனர். பசிபிக் பகுதியில் உள்ள மேலனேசிய இனத்தை சார்ந்த நாடுகளின் கூட்டுறவை பலப்படுத்துவதன் மூலமும் இன மற்றும் கலாச்சார வேற்றுமைகளால் ஆன பிரச்சனைகளை ஏற்படுத்தி பிரிவினைவாத இயக்கங்களை கொண்டு பாப்வாவை இந்தோனேசியாவிலிருந்து பிரிப்பதற்கு மேற்குலகம் முயன்று வருகிறது. இந்த பிரவினைவாத முயற்சியை மூன்று கூறுகளைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது அதாவது ஆயுதமேந்திய இயக்கங்களை உபயோகிப்பது, இராஜதந்திர மற்றும் அரசியல் வழிகளை மேற்கொள்வது இதில் அடங்கும். இது இந்தோனேசியா போன்று முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்தும் அவர்களுடைய முயற்சிகளில் ஒன்றாகும் மற்றும் ஃப்ரீபோர்ட் மூலமாக பாப்வாவிலிருந்து இயற்கை வளத்தை சுரண்டும் அவர்களுடைய முயற்சிகளில் ஒன்றாகும்.

இந்த அடுக்கடுக்கான வன்முறைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்! இது பாப்வ பெண்களுக்காக ஒரு மாற்று தீர்வை தேடும் நேரமாகும். ஏன் இந்த தீர்வு இஸ்லாமிலிருந்து வந்ததாக இருக்கக்கூடாது? நெடுங்காலமாக இந்த தேசத்தின் ஆட்சியாளர்கள் முதலாளித்துவ பாங்கிலான அங்கிங்கு ஒட்டுப்போடும் மதசார்பற்ற தீர்வை மட்டுமே நம்பியிருக்கின்றனர், மாறாக பாப்வ நிலப்பகுதியானது நூ வார் என்று அறியப்படும் இஸ்லாமிய நிலப்பகுதியாகும். இந்த நூ வார் நிலப்பகுதியில் 500 வருடங்களுக்கு முன்பிலிருந்து இதுவரை இஸ்லாமிய அழைப்புப்பணியின் செயல்பாடு இருந்துள்ளதை நாம் உணரலாம். நூ வார் எனும் பெயரானது அந்நேரத்தில் அங்கு விஜயம் புரிந்த முஸ்லிம் வியாபாரியால் சூட்டப்பட்டது. இஸ்லாம் இங்கு 1214-ம் வருடத்தில் வருகை புரிந்தது மாறாக மற்ற மதங்கள் (ஆன்மீகவாதம் மற்றும் இயற்கை வழிபாடு தவிர) 20-ம் நூற்றாண்டு வாக்கில் தான் அடியெடித்து வைத்தன. நூ வார் எனும் பெயர் ஒளியை குறிக்கின்றது.

ஆகவே பாப்வ பெண்களின் பிரச்சனையை இஸ்லாத்தை கொண்டு தீர்த்து வைப்போம்! அநீதி மற்றும் அடிமட்ட அளவிலிருந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை துடைத்தெரிவதில் தொடங்கி குடும்ப உருவாக்கத்தை பலப்படுத்தி மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமுடைய சமூகத்தை உருவாக்கி, பிறகு வளங்களை சரிசமமாகவும் நீதமாகவும் விநியோகிக்கும் இன, நிற, மத, குழு அல்லது இதர சமயத்தின் அடிப்படையில் அல்லாமல் பாகுபாடின்றி அனைவருக்கும் நீதத்தை வழங்கும் மற்றும் தேசத்தின் வளங்களை மக்களுடைய செழுமைக்காகவும் அவர்களுடைய நலன்களுக்காகவும் கையாளும் ஒரு சக்திவாய்ந்த அரசை முடுக்கிவிட வேண்டும். மேலும் பலமான அரசு ஒன்று நடைமுறையில் இருக்குமாறு செய்து – அந்த அரசானது தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய எந்த விதமான அந்நிய ஊடுருவலையும் தடுக்கும் ஒரு சுயாதீன மற்றும் முன்னோடி அரசாக இருக்கும்; உண்மையில் அது மக்களுடைய விவகாரங்கள் மற்றும் நலன்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் பாதுகாவலராக முழுமனதுடன் ரா’ஈயாக (பொறுப்பாளர்) செயல்படும் ஒரு அரசாகும். இவையனைத்தும் அல்-கிலாஃபா ராஷிதா என்றழைக்கப்படும் இஸ்லாமிய அரசின் கட்டமைப்புக்கு கீழ் இஸ்லாமிய செயலாக்க அமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே யதார்த்தநிலைக்கு கொண்டுவர முடியும்.

ஃபிகா கொமாரா

Comments are closed.