சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அல்-குத்ஸ் (ஜெரூசலேம்) – முதல் கிப்லாஹ்

பால்ஃபோர் ஒப்பந்தத்தின் நூற்றாண்டு விழா முடிந்த கையோடு டிசம்பர் 6, 2017 அன்று அதிபர் டிரம்ப் அமெரிக்க தூதரகத்தை டெல் அவீவிலிருந்து ஜெரூசலேத்திற்கு நகர்த்துவதாக அறிவித்து ஜெரூசலேத்தை யூத அரசுடைய தலைநகராக அங்கீகரித்தார். இந்த அறிவிப்பானது கிளிண்டன் நிர்வாகத்தால் 1995 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக அமைந்தது. பாலஸ்தீனர்களுக்கும் சியோனிஸ்ட்டுகளுக்கும் இடையேயான அமைதி நடவடிக்கையில் இறுதி கட்டமாக இதை பயன்படுத்த வேண்டும் என எண்ணியிருந்த காரணத்தால் இந்த திட்டம் 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது.

தலைநகர் எங்கிருந்த போதிலும், 1967-ல் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகள் ஏற்படுத்துவது எனும் தீர்வை ஏற்றுக்கொள்வது இஸ்லாமிய நிலப்பரப்புகளின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்வது போல் ஆகும் மற்றும் அது முஸ்லிம்களுக்கு துரோகம் இழைப்பதை போன்றாகும். இந்த அறிவிப்பு ஜெரூசலேத்தின் யதார்த்தத்தை மாற்றப்போவதில்லை. அது 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது மற்றும் இந்த அறிவிப்பானது முஸ்லிம்கள் படும் அவமானத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்து நூறு வருடங்களாக, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற காலனியாதிக்க சக்திகள் பாலஸ்தீன முஸ்லிம்களின் அவல நிலையைக் கண்டு முதலைக் கண்ணீர் வடித்து, அதேநேரத்தில் கொல்லைப்புறத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் புன்னகைத்து வரும் முஸ்லிம் உலகிலுள்ள அதன் கைப்பாவை ஆட்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

ஊழல்மிக்க எகிப்திய அரசு தான் 1967-ல் காஸா பகுதியை விட்டுக்கொடுத்தது மற்றும் 1978-ல் சட்டவிரோத சியோனிச அரசுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றில் அது கையெழுத்திட்டது. துரோகமிக்க ஜோர்டானிய அரசு தான் ஜெரூசலேத்தையும் புனிதமிகு மஸ்ஜித் அல்-அக்ஸாவையும் சியோனிச ஆக்கிரமிப்பாளர்களிடம் விட்டுக்கொடுத்தது. துரோகமிக்க சிரிய அரசு தான் 1967-ல் கோலன் ஹைட்ஸை சட்டவிரோத சியோனிச அரசுக்கு விட்டுக்கொடுத்தது, இவ்வாறிருந்தும் இன்று அதன் முழு பலத்துடன் முஸ்லிம்களை எதிர்த்து சண்ணையிட்டு வருகிறது. சவூதி அரேபியா சட்டவிரோத சியோனிச அரசுடன் கொள்றைப்புற வழியாக ராஜாங்க உறவுகளுக்கான பாதைகளை திறந்திருப்பதாக சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் எர்துகன் இந்த அறிவிப்பானது சிவப்புக் கோட்டை மீறும் விதத்தில் உள்ளது என்று கோரும் அதேவேளையில் இந்த சியோனிச அரசு பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது எண்ணிலடங்காத அளவுக்கு அத்துமீறல்களை செய்திருந்த போதும் இராஜாங்க மற்றும் பொருளாதார உறவுகளை தொடர்ந்து பேணி வருகிறார். இந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் நடப்பு நிலையை தொடர்ந்து நீடித்திருக்கச் செய்யவும் மற்றும் அரசியல் ஆதாயம் அடைவதற்காக வேண்டியும் அவர்களுக்கு வசதியான நேரத்தில் இஸ்லாமிய உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். யதார்த்தத்தில் அவர்கள் இந்த சியோனிச அரசை தக்கவைத்தும் மற்றும் பாதுகாத்தும் வருகின்றனர். பாலஸ்தீனம் இன்னமும் ஆக்கிரமிப்புக்கு கீழ் இருப்பதற்கான ஒரே காரணம் என்னவென்றால் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கூட்டுச்சதி தான்.

(مَن كَانَ يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ وَالَّذِينَ يَمْكُرُونَ السَّيِّئَاتِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَمَكْرُ أُولَٰئِكَ هُوَ يَبُورُ)

“எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் அளவில் செல்கின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்து கின்றான். (நபியே!) எவர்கள் (உங்களுக்குத்) தீங்கிழைக்க சதி செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்.(அல்குர்ஆன் : 35:10)

அல்- குத்ஸ் இஸ்லாமிய அகீதாவுடன் பின்னிப் பினையப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும், இது இஸ்ரா வல் மி’ராஜின் பூமியாகும், இது ரசூலுல்லாஹ் (ஸல்) அனைத்து நபிமார்களுக்கும் தலைமையேற்று தொழ வைத்த இடமாகும், இது உமர் இப்னு அல்- கத்தாப் (ரலி) விடுவித்த பூமியாகும், இது சலாஹுத்தீன் அல்- அய்யூபி அவர்களால் சிலுவை யுத்தக்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பூமியாகும் மற்றும் இது 1901-ல் கலீஃபா இரண்டாம் அப்துல் ஹமீதால் சியோசினர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்ட பூமியாகும். யதார்த்தநிலை என்னவென்றால் பாலஸ்தீனம் ஒரு இஸ்லாமிய நிலப்பரப்பாகும் மற்றும் அது இதற்கு முன் இஸ்லாமிய அரசின் அமைதியையும் சாந்தியையும் அனுபவித்த நிலப்பரப்பாகும். இதுவொரு முஸ்லிம் நிலப்பரப்பாகும் இதை எடுத்துக்கொள்வதற்கான உரிமை எவருக்கும் இல்லை.

முஸ்லிம்கள் டிரம்ப்பினது நிர்வாகத்திடமோ அல்லது எந்தவொரு மேற்கத்திய அரசாங்கித்திடமோ அந்த தலைநகரை அங்கீகரிப்பதை நிறுத்த வேண்டும் என கேட்கக்கூடாது. அதேபோல் முஸ்லிம் உலகிலுள்ள துரோகம் நிறைந்த ஆட்சியாளர்களிடம் முஸ்லிம்களின் சார்பாக செயல்படுங்கள் என்று கேட்டுக்கொள்வது என்பதும் வீணானதாகும். முஸ்லிம்கள் இதை ஒரு இஸ்லாமிய பிரச்சனையாக பார்க்க வேண்டும் மற்றும் முஸ்லிம்கள் இந்த பாலஸ்தீன பிரச்சனைக்கு தவறான மதசார்பற்ற மற்றும் இஸ்லாமல்லாத தீர்வுகளை தூக்கி எறிவதற்கும் நபித்துவ வழிமுறையிலான நேர்வழி பெற்ற கிலாஃபத்தின் கீழ் முஸ்லிம் உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை அமைப்பதற்கு கோரவும் மற்றும் அதற்காக உழைத்திடவும் தக்க தருணம் இதுவே ஆகும்.

Comments are closed.