சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஆப்பிரிக்காவில் மீண்டும் தன்னுடைய அதிகாரத்தை முத்திரையிட்டதின் மூலம் அமெரிக்காவை பிரிட்டன் வென்றுள்ளது

ஆப்பிரிக்கா கண்டத்தை கைப்பற்றுவதில் ஏற்படும் மோதல், ஜனநாயகத்தை நிர்பந்திக்க நினைக்கும் அமெரிக்காவிற்கும் தற்போதைய நிலைமையையே சிறு மாற்றத்தோடு தக்க வைக்க நினைக்கும் பிரிட்டனுக்கும் மேலோங்கியுள்ள நிலை, மக்கள் எதிர்பார்க்கும் நிஜ மாற்றத்தை விட்டு திசைதிருப்பக்கூடியதாகும்.

கருத்து

ஆப்பிரிக்கா நாடுகள் போலி சுதந்திர நாடுகள் , அவைகளின் உள்ளூர் மற்றும் வெளியூர் கொள்கைகள் அனைத்தும் அவர்களின் காலனிய முதலாளிகளிடமிருந்து வந்தவை. எனவே நேரடியாக ஆப்பிரிக்கா அரசியல்வாதிகள் காலனிய முதலாளிகளின் கைக்கூலிகளாக செயல்படுவர். பிரிட்டன் உட்பட அணைத்து மேற்கத்திய காலனி ஆதிக்க நாடுகளும் ஆப்பிரிக்காவை மறைமுகமாக அவர்களின் கங்காணிகள் மூலம் ஆள தீர்மானித்தன . இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

முதலாவதாக இரண்டாம் உலகப்போரின் மூலமாக தங்களுக்குண்டான நஷ்டத்தை இடுக்கட்டுவதாகும்

இரண்டாவதாக சுதந்திரத்திற்க்காக அழைக்கும் மக்கள் உணர்வுகள் ஏற்படும் தீய உறவுமுறையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகும்

பிரிட்டன் ஆப்பிரிக்காவில் தன்னுடைய கொள்கைகளை சீர்திருத்திக்கொண்டிருந்த நிலையில் , அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சாதகப்படுத்தி, ஒரு படி முன்னேறி ஆப்பிரிக்காவில் தன்னுடைய கொள்கைகளை திணித்து பிரிட்டனுக்கு சவாலை கொண்டுவந்தது. அமெரிக்கா ஜனநாயகம் மற்றும் பல கட்சி கொள்கைகளை கொண்டு வர பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் பிடியிலுள்ள நாடுகளில் அழைப்புவிடுத்தது. தன்னுடைய காலணிகளை உறுதியாக பற்றிப்பிடிப்பதின் மூலமாக சர்வதேச அளவில் தங்கள் செல்வாக்கை நிலைபெற செய்ய பிடிவாதம் பிடிக்கும் பிரிட்டனுக்கும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வழிகளின் மூலம் ஆதிக்கத்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அரசியல் ரீதியாக தாக்குதல்கள் நடக்க காரணமாக இவை இருந்தது. 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் பிரிட்டன் இன்னும் தன்னுடைய ஆப்பிரிக்கா அரசியல் தந்திரத்தை இழக்காமல் அமெரிக்க சூழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பதை இந்த இரண்டு நாடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

முதலாவதாக கென்யா, உறுதியான பிரிட்டன் காலனியான இந்நாடு தற்போது உஹுரு முய்கை கென்யாட்டாவ் என்பவரால் ஆளப்படுகிறது, இவர் பிரிட்டனின் முதல் கங்காணியான ஜோமோ கென்யாட்டாவின் மகன். கென்யாவில் அரசியல் மாற்றத்திற்க்கான அழைப்பு மேலோங்கியிருந்த நிலையில் , ஆகஸ்ட் 8 தேர்தலுக்கு பின் இந்த போராட்டம் வன்முறையாக மாறி பிரிட்டனின் கையிலிருந்து கென்யா நழுவ அதிக சாத்தியமிருந்தது. இந்த வன்முறையின் விளைவாக அமெரிக்காவின் கைக்கூலியாக ரைலா ஓடிங்காவின் கை ஒங்கக்கூடியதாக இருந்தது. இதனால் பிரிட்டன் தன்னுடைய அரசியல் தந்திரத்தை பயன்படுத்தி உலகுக்கு முன்னோடியாக ஜனநாயகத்தை மதிக்க கூடியவர்களாக தன்னை காட்டிக்கொள்ள திட்டம் தீட்டியது. இந்த திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் 8 நடந்த தேர்தலை தனது கைக்கூலி ஆட்சியாளரின் மூலமே ரத்து செய்தது. அதேவேளையில் தன்னுடைய கைகூலியின் மூலம் தாங்கள் சட்ட சுதந்திரத்தை மதிப்பதாகவும், இவற்றின் ஆட்சியில் உள்ள குறைகளை தானாக தெரிவிப்பதாகவும், இத்தேர்தலில் குளறுபடி என அவர் தன்னுடைய சுய குறைகளை வெளிப்படுத்த இயன்றதை பிரிட்டன் மேற்கொண்டது. இவை அனைத்தும் தன்னுடைய கங்காணியான உஹுரு கென்யாட்டாவின் நலனுக்காக மேற்கொண்டவை. இதனால் தேர்தல் வெற்றிக்கு பிறகும் அந்த தேர்தலை ரத்து செய்த ஒரு சிறந்த தலைவராகவும் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் கென்யாட்டா சித்தரிக்கப்பட்டார். இதன் மூலம் அமெரிக்காவின் ஆசை நிராசையானது, இதன் மூலம் அவர்களின் கங்காணியான ரைலா ஓடிங்கா மறு தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவு செய்ய போதிய பணம் பெற்றிருக்கவில்லை. இதனால் ரைலா மறு தேர்தலுக்கும் போட்டியிடாமல் சுதந்திரமான தேர்தல் மற்றும் வரையறை ஆணையத்திற்க்காக குரலெழுப்பினார். இறுதியில் அவர் மறு தேர்தலிலிருந்து விலகினார், இதன் மூலம் உஹுரு கென்யாட்டா மீண்டும் வெற்றிபெற்று நவம்பர் 28 ஆம் நாளில் பதவியேற்றார். இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த தேர்தலுக்காக தன்னை தயார் படுத்திக்கொள்ளும் நிலை மட்டுமே ரைலா ஓடிங்காவிற்கு மிஞ்சியது.

இரண்டாவது நாடு ஜிம்பாப்வே , இதுவும் உறுதியான பிரிட்டன் காலனி நாடு, இது எமர்சன் நங்ககவா , நீண்டகாலமாக ஜனாதிபதியாக உள்ள ராபர்ட் முகாபேவின் தோழர் மூலம் வழிநடத்தப்படுகிறது . நாட்டின் பொருளாதார சீர்கேட்டின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 40 சதவீதம், விவசாயம் 51 சதவீதம் மற்றும் தொழில் உற்பத்தி 47 சதவீதம் குறைந்துள்ளதால், அரசியல் மாற்றத்திற்கான அழைப்பு உச்சத்தில் இருந்த நிலையில் , பிரிட்டன் தந்திரமாக ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆப்பிரிக்கா தேசிய யூனியன் தேசப்பற்று இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தியது. இந்த பிளவின் மூலம் நிஜ மாற்றத்தை விட்டு மக்களை திசை திருப்பி சின்ன மாற்றத்தை கொண்டுவர பிரிட்டன் தீர்மானித்தது. இதன் திட்டம் என்னவெனில் ராபர்ட் முகாபேவின் மனைவியான கிரேஸ் முகாபேவை ஒரு பதவிவெறிபிடித்த பெண்ணாகவும் தன்னுடைய கணவனுடைய சீரற்ற உடல்நிலையை சாதகப்படுத்தி பதவிக்கு வர நினைப்பவராகவும் சித்தரித்தனர். இதை காரணமாக கொண்டு பிரிட்டன் கட்டுப்பாட்டில் இயங்கும் இவர்களின் ராணுவத்தை கொண்டு ரத்தமின்றி பதவிமாற்றத்தை கொண்டுவந்தனர். இதன் மூலம் எமர்சன் நங்ககவா ஜிம்பாப்வேவின் மூன்றாவது ஜனாதிபதிக பொறுப்பேற்றார். இவரின் வெற்றியை மக்கள் கொண்டாடி அவரின் துவக்க உரை நிகழ்ந்த 24 நவம்பர் 2017 அன்று தலை நகரான ஹராரே மைதானத்தில் மக்கள் அவரின் கவர்ச்சிகரமான பேச்சை கேட்டு மதிமயங்கினர். அமெரிக்கா அவர்களின் கைக்கூலியாக மோர்கன் சிவன்கிறாய் மூலமாக என்ன செய்வதென தெரியாமல் தலையை பேய்த்துக்கொண்டது. இதன் மூலம் மீண்டும் பிரிட்டன் அமெரிக்காவை தந்திரமாக வென்றுள்ளது.

Comments are closed.