சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இராணுவங்களை ஒன்று திரட்டி, ஜெரூசலேத்தை விடுவித்து யூத அரசை வேருடன் அகற்றுவதே டிரம்புக்கு தரக்கூடிய ஒரே பதிலடியாகும்

அமெரிக்க அதிபர் டிரம்ப் 6/12/2017 புதனன்று யூத தேசத்தின் தலைநகராக ஜெரூசலேத்தை அறிவித்து அதனோடு அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் திட்டங்களை தொடங்கி வைத்தார், இந்த நடவடிக்கைகள் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது எனவும் அமெரிக்கா அமைதியை நோக்கி எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக கடந்த தசாப்தங்களில் இதுவரை முன்னிருந்து செயல்பட்டு வந்தததிலிருந்து பின்வாங்குவதை குறிப்பதாகவும் உள்ளது என்று பாலஸ்தீன அரசின் அதிபர் அப்பாஸ் கூறினார்….

இந்த முஸ்லிம் உம்மத் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அமெரிக்காவின் நாசம் விளைவிக்கும் தொடர் குற்றங்களினால் அதாவது இராணுவ ரீதியாக முஸ்லிம் உலகின் பகுதிகளை ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும் மில்லியன் கணக்கில் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றியும் மற்றும் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் இராணுவம், அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக ஆதிக்கத்தை கொண்டுள்ளதன் காரணமாக உம்மத்திற்கு துயரத்தையும் வருந்தத்தக்க அளவிலான வாழ்வை வாழும் அளவுக்கும் உம்மத்திற்கு அபாயத்தையும் பாதுகாப்பின்மையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன புனித பூமியில், பாலஸ்தீனம் முழுவதையும் அபகரித்துக் கொண்ட யூத தேசத்தின் தலைநகராக ஜெரூசலேசத்தை அறிவித்த டிரம்ப்புடைய இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா பாலஸ்தீனத்திற்கு எதிரான தனது குற்றங்களுடன் புதியதொரு குற்றத்தை சேர்த்துள்ளது, இந்த அறிவிப்பு தெரிவிப்பது என்னவென்றால் இந்த ஆக்கிரமிப்பை நீட்டித்திருக்கச் செய்வது மற்றும் இதை ஆக்கிரமித்து வரும் யூத அரசுக்கு பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் ரீதியிலான உதவிகளை தொடர்ந்து வழங்கும் என்பது தான். இந்த செயல்பாடு அமெரிக்கா தனது எதிரி எனும் உண்மையையும் தனக்கு எதிராக இரவும் பகலும் சூழ்ச்சிகளை திட்டமிட்டு செயல்படுத்தும் கடுமையான ஒரு எதிரி என்கிற உம்மத்துடைய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டியதை அவசியமாக்குகிறது. அதனோடு அதை துடைத்தெரிவதற்கும், அதன் தூதரங்களை மூடுவதற்கும் மற்றும் இஸ்லாமிய உலகின் மீதான அதன் அனைத்து செல்வாக்கையும் மற்றும் மேலாதிக்கத்தையும் அப்புறப்படுத்துவதற்குமான தேவையும் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கின்றது.

அமெரிக்காவுக்கு இந்த குற்றவாளிகளான ஆட்சியாளர்களின் கட்டுப்படுதலும் மற்றும் அதற்கு முன்னால் செயலற்றுப் போயிருக்கும் பாலஸ்தீன அரசும் இல்லையென்றால் அமெரிக்கா இந்த விரோதப் போக்கை முஸ்லிம் உம்மத் மீது செலுத்துவதற்கு ஒருபோதும் துணிந்திருக்காது. அதற்கும் மேலாக, அவர்கள் தங்களுடைய தேசங்களை அதற்காக திறந்து விட்டு உம்மத்திற்கு எதிரான அதனுடைய போருக்காக பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை செய்து அதற்கு ஆதரவளித்து வருகின்றனர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்துள்ள யூத அரசான அதன் கூட்டாளியின் நலனுக்காக பாலஸ்தீனத்தை கலைக்கும் இந்த புனித பூமியின் பிரச்சனை உட்பட முஸ்லிம்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அதனை சாட்சியாளராக ஆக்கியுள்ளனர். பாலஸ்தீன அரசின் அதிபர் உட்பட புனித ஜெரூசலேம் குறித்து குற்றஞ்சாட்டியும் கண்டனத்தை மட்டும் தெரிவித்து கண்ணீர் வடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் தான் அதனை இழந்ததற்கும் மற்றும் நாம் இதுவரை அடைந்துள்ள இழிவு நிலைக்கும் காரணமானவர்கள், இதன் விளைவாக ஆணவமிக்க அமெரிக்க காஃபிர் நம்மிடம் வந்து அவனுக்கு சொந்தமான வயல்களில் ஒன்றை போன்று நமது இடத்தை தீவிரவாத யூத அரசுடைய தலைநகராக ஆக்கியுள்ளான். தங்களுடைய விசுவாசத்தை அவருக்கு கொடுத்துள்ள மற்றும் அவருடைய கட்டளைக்கு ஏற்றவாறு தங்களை சமர்ப்பித்து கீழ்படிந்து நடக்கும் இந்த தகுதியற்ற ருவய்பித ஆட்சியாளர்களை அவர் இதில் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியினராக இந்த பாலஸ்தீன நிலப்பரப்பின் உண்மையான சொந்தக்காரர்களான இந்த பாலஸ்தீன மக்கள் அமெரிக்கா தான் உண்மையான எதிரி என்றும் இந்த யூத தேசமானது அதன் தறிகெட்ட கள்ளப்பிள்ளை என்றும் அதை வளர்த்து மற்றும் அது தான் அதன் மீது அக்கறை கொள்கின்றது என்பதையும் நன்கறிவர். ஆகவே, இந்த உம்மத் அமெரிக்காவுடன் ஒருபோதும் சாய்ந்ததில்லை மற்றும் பாலஸ்தீனத்தின் புனித பூமியின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுப்பதற்கான அங்கீகாரத்தை பாலஸ்தீன அரசுக்கோ அல்லது இந்த ஆட்சியாளர்களுக்கோ ஒருபோதும் வழங்கியதில்லை, ஏனெனில் பாலஸ்தீனம் என்பது அதன் கொள்கையின் ஒரு பகுதியாகும்:

سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

“(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 17:1)

உம்மத் தனது ஆட்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் தனக்கு எதிராக சதி செய்யும் வில்லன்களின் அடிமைகள் என்பதனை உணர்ந்துள்ளது மற்றும் அது இந்த பாலஸ்தீன பிரச்சனைக்கு ஜெரூசலேம் மற்றும் பாலஸ்தீனத்தின் அனைத்து பகுதியையும் விடுவிக்க மற்றும் யூத தேசத்தை நிர்மூலமாக்க தமது நாவுகளில் தக்பீர் மற்றும் தஹ்லீலை ஓதும் உம்மத்தின் இராணுவங்களை நகர்த்துவது எனும் அடிப்படையான ஒரு தீர்வை அது எதிர்நோக்கியுள்ளது. மேலும், அதற்கென இந்த உம்மத்தும் அதற்கு முன்னணியில் நின்று ஹிஸ்புத்தஹ்ரீரும் நபித்துவ வழிமுறையிலான கிலாஃபா ராஷிதாவை (நேர்வழி பெற்ற கிலாஃபத்) நிர்மாணித்து இஸ்லாமிய அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இந்த அரசானது, அமெரிக்காவை இஸ்லாமிய நாடுகளிலிருந்து வெளியேற்றி கடல் கடந்துள்ள அதன் உறைவிடத்திற்கு திருப்பி அனுப்பி அது இஸ்லாமிய நாடுகளில் கொண்டிருக்கும் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து மற்றும் இவ்வுலகிலிருந்து அதன் தீங்குகளை விடுபடச் செய்யும், அமெரிக்கா மற்றும் மேற்குலகு தீங்கிழைக்க நாடிய போதிலும் இன் ஷா அல்லாஹ் இது விரைவில் நடைபெறும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَىٰ أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ * فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ فَيُصْبِحُوا عَلَىٰ مَا أَسَرُّوا فِي أَنفُسِهِمْ نَادِمِينَ
“நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.

(நபியே!) எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கின்றதோ அவர்களிடம் (தோழமை கொள்ளவே) அவர்கள் விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அன்றி “(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு யாதொரு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசக் கருத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.(அல்குர்ஆன் : 5: 51-52)

Comments are closed.