சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 02.12.2017

  1. யூத அரசின் தலைநகரமாக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  2. மியான்மரிலிருந்து வெளியேறிய போப் இறுதியாக ‘ரோஹிங்க்யா’ என்ற வார்த்தயை உபயோகித்தார்.
  3. பிட்காயினை கட்டுபடுத்துவதில் திணறும் மேற்கு
  4. வீடியோவிற்கு மறுட்வீட் செய்த டிரம்பை பிரிட்டனிற்கு அழைக்க கூடாது என சர்ச்சை
  5. மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர், ஈரானின் ஸ்திரதன்மையை கெடுக்கும் முயற்சிக்கு எச்சரிக்கை.
  6. ரோஹிங்கிய அகதி பிரச்சனையை சர்வதேச சமூகம் தீர்த்து வைக்க வேண்டும் என போப் அறிக்கை

1) யூத அரசின் தலைநகரமாக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யூத நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேத்திற்கு மாற்றும் சட்ட மசோதாவை கடந்த 1995 ல் அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்தது. அன்றிலிருந்து அமெரிக்காவின் ஒவ்வொரு அதிபர்களும் இதை தள்ளுபடி செய்து வந்துள்ளனர். இதில் அதிபர் டிரம்ப், ‘தான் பதவிக்கு வந்தால் தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவேன்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். இருப்பினும் பதவிக்கு வந்த பிறகும் இச்சட்டத்தை கடந்த ஜூன் மாதத்தில் தள்ளுபடி செய்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது தனது வாக்குறுதியை நிறைவேற்ற வெள்ளைமாளிகையின் உயர்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Huffington Post நாளிதளின் படி:
வரும் வாரத்தில் அதிபர் டிரம்ப் ஜெருசலம் தொடர்பான அமெரிக்காவின் முக்கிய திட்டத்தை அறிவிக்க உள்ளார் என எதிர்பார்க்கபடுகின்றது. இம்முடிவு இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு மத்தியில் உள்ள பிரச்னையின் அமைதி பேச்சுவார்த்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவருக்கு முன்னர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்ட எல்லா வேட்பாளர்கள் போலவே டிரம்பும் ‘இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேத்தை அங்கீகரிக்கவும், அமெரிக்க தூதரகத்தை டேல் அவிவிலிருந்து ஜெருசேலத்திற்கு மாற்றவும்’ தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இம்முடிவு இஸ்ரேலிய அரசிற்கும் அமெரிக்காவில் உள்ள கன்செர்வேடிவ் கட்சியார்களுக்கும் சந்தோஷம் அளிக்ககூடியதாக இருக்கும். அதேசமயத்தில்,பாலஸ்தீனிய மக்களின் கடும் கோபத்தை தூண்டக்கூடியதாகவும், இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி பேச்சு வார்த்தையில் கடும் பின்னடைவை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கும்.

பதவிக்கு வந்து ஆரம்ப காலத்தில் இவ்வாகுறுதியை கண்டுகொள்ளாதவராக இருந்தார். ஆனால் வருகின்ற வாரம் இச்சட்டத்தை தள்ளுபடி செய்ததற்கு தவணை நாள் முடிவுக்கு வர இருப்பதால், இத்திட்டத்தை நிறைவேற்ற வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் டிரம்பிற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். சென்ற வார பேட்டியில் துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், இம்மாற்றத்தை கொண்டு வர அதிபர் டிரம்ப் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார் என கூறினார்.
இவ்வளவு காலம் இந்த விஷயத்தை அமெரிக்க தள்ளிபோட்டதே, அமெரிக்காவும் மேற்கும் முஸ்லிம் உம்மத்தின் எழுச்சியை பார்த்து எந்தளவுக்கு பயப்படுகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. அதே போல, யூத அரசை ஆதரிப்பது அமெரிக்காவிற்கு தன்னுடைய நலனை பாதுகாப்பதில் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான் அமெரிக்கா, யூத அரசை நிரந்தரமாக ஒதுக்கிவிட முடியாது என்பது உணர்ந்துள்ளது.

இன்ஷா அல்லாஹ், மேற்குலகம் பயப்படுவது போல முஸ்லிம் உம்மத் எழுச்சி பெற்று, தன்னுடைய சத்திய மார்க்கத்தை நடைமுறைபடுத்தக் கூடிய அரசை மறுநிர்மாணம் செய்யும். இதன் மூலம் மேற்கின் ஏகாதிபத்திய ஆதாயத்தையும் அதனை செயல்முறைபடுத்தும் மேற்கத்திய பாதுகாவலர்களையும் முஸ்லிம் உலகிலிருந்து துடைத்து எறியப்படும். ,

2) மியான்மரிலிருந்து வெளியேறிய போப் இறுதியாக ‘ரோஹிங்யா’ என்ற வார்த்தயை உபயோகித்தார்.

ரோஹிங்ய முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொள்ளப்பட்டு பலர் நாடு கடத்தப்பட்டதை அமைதியாக வேடிக்கை பார்த்த மேற்கு, இறுதியாக தன்னுடைய மத குருவான, ரோம கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிசை மியான்மருக்கும் வங்காள தேசத்திற்கும் சுற்று பயணமாக அனுப்பியுள்ளது. மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று அதிகமாக வலியுருத்தகூடிய போப், மியான்மரில் இருக்கும்பொழுது ரோஹிங்ய மக்களை பற்றி ஒருவார்த்தைகூட பேசவில்லை. இறுதியாக வங்காள தேசத்திற்கு சென்றதற்கு பிறகே ரோஹிங்ய மக்களை நினைவு கூர்ந்துள்ளார்.

The Salt Lake Tribune என்ற பத்திரிக்கையின் படி:
வங்காள தேசத்தில் அகதிகளாக இருக்கும் ரோஹிங்ய மக்கள், அவர்கள் படும் இன்னல்கள் துயரங்களுக்காக போப் பிரான்சிஸ் கடந்த வெள்ளிகிழமை பாவ மன்னிப்பு கோரினார். இதில் சில தினங்களுக்கு முன் மியன்மாரில் இருக்கும்பொழுது ‘ரோஹிங்யா’ என்ற வார்த்தையை உச்சரிக்காதவர் தற்பொழுது வங்காள தேசத்தில் உச்சரித்தார்.

ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை, அவர்களின் கரங்களை பிடித்து, அவர்களின் இன்னல்களை கேட்டு, அவர்களுக்கு பாவ மன்னிப்பு கோரி தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார். பூமியில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்காக முஸ்லிம் , இந்து, கிருஸ்தவ புத்த மத தலைவர்கள் கூட்டத்தில் பாவமன்னிப்பு கோரினார். இறுதியாக இதில் ரோஹிங்ய மக்களின் பெயரையும் குறிப்பிட்டார்.

“கடவுளின் இருத்தல் இன்று ‘ரோஹிங்கியா’ மக்களுடன் இருக்கிறது” என கூறினார்.
போப்பின் ஆதரவு வருகையில் முஸ்லிம்களுக்கு எந்த தேவையும் இல்லை.உண்மையில் அவருக்கு ரோஹிங்கிய சம்பவத்தில் அக்கறை ஏதும் இருந்தால், அவர் அமெரிக்காவுக்கு எதிராகவே குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில் அமெரிக்காதான் மியன்மாரில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆங் சண் சூகி தலைமையிலான குடியரசை ஆதரிக்கின்றது. மியான்மரில் சூ கியை நிலைபெற செய்வதன் மூலம் அருகிலிருக்கும் சீனாவுக்கு எதிராக அதனை செயல்பட வைக்க முடியும். இதில் மனித உயிர்களின் இழப்பைப்பற்றிய கவலை அமெரிக்காவிற்கு ஒரு துளி கூட இல்லை. அதனுடைய செயல்கள் எல்லாம் பிராந்தியத்தின் மூலோபாய திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கின்றது.

முஸ்லிம்களின் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள போப் பிரான்சிசிற்கு எந்த தேவையுமில்லை. உண்மையான, சிந்தாந்தமுள்ள தலைமைத்துவம் முஸ்லிம்களிடம் ஏற்கனவே இருக்கின்றது, அது இன்ஷா அல்லாஹ் எங்களின் விவகாரங்களை பார்த்துக்கொள்ள மீண்டும் எழுச்சிபெறும். மாறாக, போப் தன்னுடைய மேற்கின் நிலையை பார்க்கட்டும். மதசார்பற்ற முதலாளித்துவ கொள்கையை ஏற்றுகொண்டு, உள்ளூரிலும் வெளியூரிலும் மதத்திற்கு எதிரான போரை தொடங்கியுள்ளது. இந்த மோசமான சித்தாந்தமே இன்று உலகில் மக்கள் சந்திக்கும் எல்லா கஷ்ட்டங்களுக்கும் அடிப்படை காரணமாகும்.

3) பிட்காயினை கட்டுபடுத்துவதில் திணறும் மேற்கு

டிஜிட்டல் பணம் என்று சொல்ல கூடிய பிட்காயினின் விலை தற்பொழுது கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதன் மதிப்பு சுமார் $11,000 டாலர் வரை உயர்ந்துள்ளது. இது மேற்கத்திய அரசுக்கு கவலையை அளிக்ககூடியதாக இருந்தாலும், வலைதளம் சம்பந்தமான இந்நிகழ்வுகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவில் தலைசிறந்த சிக்காக்கோ மேற்கான்டில் எக்ஸ்சேஞ்சு(Chicago Mercantile Exchange) உள்பட இரண்டு அமெரிக்க எக்ஸ்சேஞ்சுகள் பிட்காயினை ஏற்றுகொள்ளும் நிலையில் உள்ளது. இது நிதி கட்டுபாட்டு நிறுவனங்களை ஏய்ப்பும் மோசடியும் நிறைந்த சூழ்நிலைக்கு இழுத்து செல்லும் என சந்தேகத்திற்குரியவர்கள் கூறுகின்றனர்.

ஆபத்திற்குரிய இந்த டிஜிட்டல் நாணயத்தை சில முக்கிய நிதி நிறுவனங்கள் அங்கீகரிப்பதன் மூலம், இன்னும் பல முதலீட்டாலர்களை சந்தையில் இதன் பக்கம் கவரக்கூடியதாக இருக்கின்றது. இது நிதி கட்டுப்பாட்டாளர்கள் பிட்காயின் என்றால் என்ன என்று வரையரைப்பதற்கு முன்பாகவே நடக்கும் நிகழ்வாக எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் டிசம்பர் 18 ல் சி.எம்.இ. நிறுவனம்(CME Group Inc.) இவ்வொப்பந்தத்தை தொடங்கவுள்ளது. அதுபோல், Cboe Global Markets Inc. என்ற நிறுவனம் இதன் தொடக்க தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நாணய ஒப்பந்தத்தை தொடங்குவதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற சுய அங்கீகாரத்தை(self-certification) அமெரிக்காவின் எதிர்கால பொருள் வர்த்தகத்திற்கான நிறுவனத்திற்கு (U.S. Commodity Futures Trading Commission) முன்பாக இவ்விரு நிருவனங்களும் கடந்த வெள்ளிகிழமை வாக்குறுதி கொடுத்ததற்கு பிறகே இவர்களுக்கு இம்முறையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் பிட்காயினின் விலை சரசர வென உயர ஆரம்பித்தது.

பிட்காயின் சமூகம் மத்திய வங்கிகளுக்கு கட்டுபடாத சமூகமாகும். எனவே, இதுவரை நூற்றாண்டு காலமாக தேசத்தின் பியட் நாணயத்தை (fiat currencies) கட்டுபடுத்தி வந்த மேற்கத்திய முதலாளிகளின் முயற்சிக்கு இது மாற்றமான ஒன்றாகும். இதற்கு முன்னர் நாணயம் தங்கத்தின் மத்திப்பீட்டு அளவிற்கு அச்சிடப்பட்டன அதனால் பெரும் பணவீக்கம் இல்லாமல் இருந்தது. மேலும் அதனால் காசுகளை தவறாக கையாள முடியாமல் இருந்தது. தற்பொழுது வளர்ந்து வரும் பிட்காயின் வளர்ச்சி, மீண்டும் மத்திய வங்கிகளின் ஆதிக்கத்தில் இல்லாத பழைய நாணயத்திற்கு திரும்பி செல்வதின் அவசியத்தை குறிக்கின்றது.

மத்திய வங்கிகளும் ஃபியட் நாணயமும் தான் முதலாளித்துவ பொருளாதார கொள்கையின் இரு பெரும் கேடுகளாகும். இதன் மூலமாகவே சில முதலாளித்துவ வாதிகள் மக்களின் ஏனைய சொத்துகளை எடுத்து கொண்டு பதிலுக்கு வெத்து நாணயங்களையும் கடன் சுமைகளையும் கொடுக்க முடிந்தது. நபிவழியில் மறுநிர்மாணம் செய்யப்படும் கிலாஃபா மட்டுமே உண்மையான நாணயத்தை கொண்டுவந்து, ஷரியா வழிநடத்திய தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். மேலும் இதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ வங்கிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க முடியும்.

4) வீடியோவிற்கு மறுட்வீட் செய்த டிரம்பை பிரிட்டனிற்கு அழைக்க கூடாது என சர்ச்சை

டிரம்ப் பிரிட்டனுக்கு வருகை தர அழைப்பு விடுத்ததை திரும்ப பெற கோரி உள்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது ஏனெனில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ட்விட்டரில் பகிர்ந்ததை அடுத்து டொனல்ட் டிரம்ப் பதிலடி கொடுக்கும் விதமாக சில வெள்ளை இனவாத குழுவின் வீடியோக்களை பகிர்ந்து தெரேசா மேயின் பக்கத்தில் மறு ட்வீட் செய்ததேயாகும்.

இப்பிரச்சனை பிரிட்டன் அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை பெற்று தந்துள்ளது, இருப்பினும் கடந்த வியாழக்கிழமை பிரிட்டன் அரசு அமெரிக்காவுடன் இன்னும் ‘விஷேஷ உறவுகள்’ வைத்திருப்பதாக கூறியுள்ளது. அதிபர் டிரம்புடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள சென்ற காலங்களில் பிரதமர் மே கடும் முயற்சியை எடுத்திருந்த பொழுதும், அது அவருடன் பொது விவாத்ததிற்கே இழுத்து சென்றுள்ளது.

ஜோர்டானுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மே இதை பற்றி கூறுகையில் ‘இப்பிரச்சனையை தாம் சுமுகமாக முடிக்க விரும்புவதாகவும், அதிபர் டிரம்ப் தவறு செய்திருந்தாலும் அவர் தம் நாட்டிற்கு வருகை தருவதில் எந்த மாற்றமும் இல்லை’ என கூறினார்.
இதை பற்றி அவர் செய்தியாளர்களுக்கு கூருகையில்,” ’பிரிட்டன் ஃபர்ஸ்ட்’ என்ற (இனவாத நிறுவனத்திடமிருந்து) மறு ட்வீட் வந்ததை தவறு என நான் உறுதியாக கூறுவேன் ” என கூறினார். மேலும் அவர் கூறுகையில்,”(டிரம்ப்) தன் நாட்டிற்கு வருகை தரும் அழைப்பு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் அவர் வரும் தேதி இன்னும் முடிவாக்கப்படவில்லை” என கூறினார்.
பிரிட்டன் ஃபர்ஸ்ட் என்ற இன வாத குழு பகிர்ந்த மூன்று வீடியோக்களுக்கு அதிபர் டிரம்ப் மறு ட்வீட் செய்தது, பிரிட்டனில் உள்ள அரசியல்வாதிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இதைபற்றி கடந்த வியாழகிழமை பாராளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்தினர்.

அரசி இரண்டாம் எலிசபெத் தலைமைதாங்கும் இந்த வருகை, அரசிக்கு பெரும் இழிவை ஏற்படுத்தும் என்று கூறி இவ்வருகை ஏற்பாட்டை கைவிட வேண்டும் என எதிர்கட்சி அரசியல்வாதிகள் கூறினர்.

லேபர் கட்சியை சார்ந்த ஸ்டீபென் டாட்டி(Stephen Doughty) கூறுகையில் அதிபர் டிரம்ப் இதுபோன்ற வீடியோக்களை பகிர்வதன் மூலம் தன்னை ஒரு ‘இனவாதியாக, ஆளுமையற்றவராக, சிந்தனையில்லாதவராக அல்லது மூன்றும் கலந்தவராக’ காட்டி கொள்கிறார். டென்னிஸ் ஸ்கின்னர்(Dennis Skinner) அவரை பற்றி கூறுகையில் அவர் ‘ஒரு ஃபாசிஸ அதிபர்’ என கூறினார்.
இதற்கு முன்னர் லண்டன் தாக்குதலில் ஏற்கனவே அதிபர் டிரம்புடன் சர்ச்சைக்குள்ளான லண்டன் மேயர் சாதிக் கான் ட்விட்டரில் கூறுகையில் ‘அதிபர் டிரம்பை பிரிட்டனின் எந்த ஒரு அரசு பயணத்திற்கும் அழைப்பு விடுக்க கூடாது, அது ஒரே ஒரு விழாவாக இருந்தாலும் சரியே’ என கூறினார்.

எதிர்தரப்பினர் மட்டுமல்ல,ஆளுங்கட்சியினரிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மேயின் கன்செர்வடிவ் குழுவின் உறுப்பினர் சாஜித் ஜாவித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஆக, என்னையும் என்னை போன்றவர்களையும் வெறுக்ககூடிய, பகைமையுணர்வு கொண்ட இனவாத அமைப்பின் கண்ணோட்டத்தை அமெரிக்க அதிபர் ஆதரிக்கிறார். அவர் தவறில் இருக்கிறார் இதை நான் கண்டும் காணாதவாறு இருக்க முடியவில்லை” என கூறியுள்ளார்.

சென்ற வியாழகிழமை பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஆம்பர் ருத்(Amber Rudd), தன்னுடைய சக அரசியல்வாதியான பீட்டர் போனின்(Peter Bone) கருத்தை ஆதரித்து கூறுகையில், பலர் டிரம்பின் கருத்தை பகிர்வார்கள் என்பதனால் அவர் தன்னுடைய பதிப்பை அழித்து விட வேண்டும் என கேட்டு கொண்டார். இப்பிரச்சனையை பெரிசு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
“அதிபர் டிரம்ப் பிரிட்டன் பர்ஸ்ட் குழுவின் வீடியோவிற்கு மறுட்வீட் செய்தது தவறாகும்” என ருத் (Rudd) பாராளுமன்றத்தில் கூறினார். “அதேவேலையில், பிரட்டன் அமெரிக்காவுடன் பாதுகாப்பு மற்றும் உளவு ஒத்துழைப்பு வைத்திருப்பதை அரசியல் வாதிகள் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரிட்டன் ஃபர்ஸ்ட் மறு ட்வீட்டை பற்றி என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பிரதமர் மேயின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “அதிபர் இவ்வாறு செய்தது தவறாகும்” என வெறும் டிரம்ப் தெரேசா மேயின் ட்விட்டர் பக்கத்தில் மறு ட்வீட் அளித்ததற்கு மட்டும் பதில் கூறினார்.

தெரேசா மெயின் ட்விட்டர் பக்கத்தில் “என்னை கண்காணிக்க வேண்டாம். தங்கள் நாட்டில் நடந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது கவனம் செலுத்துங்கள், நாங்கள் நல்லதையே செய்கிறோம்” என அதிபர் டிரம்ப் பதில் ட்வீட் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

[Source: Boston Globe]

பிரிட்டன் சமூகத்திற்கு எதிராக நாலாபுறமும் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும், பிரதமர் மே அமெரிக்காவுடனான ‘விஷேஷ உறவை’ மேம்படுத்த கூடியவராகவே இருக்கிறார். தற்பொழுது பிரிட்டனிற்கு ஐரோப்பிய ஐக்கியத்திடமும் அமெரிக்காவிடமும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது உலக அரங்கில் பிரிட்டன் தன்னுடைய பங்கை பெரிதும் குறைக்க கூடியதாக இருக்கும்.

5) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர், ஈரானின் ஸ்திரதன்மையை கெடுக்கும் முயற்சிக்கு எச்சரிக்கை.

பிராந்தியத்தில் ஈரான் ஸ்திரதன்மையை கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்வதை பற்றியும் அதன் வாண்வெளி ஏவுகணை சோதனை பற்றியும் பிரித்தானிய பிரதமர் கடந்த வியாழகிழமை கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஈராக் மற்றும் சவூதி அரேபியா சென்று மன்னர் சல்மானையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் சந்தித்து விட்டு திரும்பி வரும் வேலையில் ஜோர்டானின் தலைநகரமான அம்மானில் இதை அவர் கூறினார்.அவர் கூறுகையில்,”தாயிஷும் அசாதின் அரசு மட்டும் அருகிலுள்ள சிரியாவின் ஸ்திரதன்மைக்கு பங்கமாக இல்லை.”

“சிரியாவில் அமைதியை நிலைநிறுத்துவதை விட பிராந்தியத்தில் தன்னுடைய பங்கை கொடுக்கவும், ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்கவுமே ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது” என அவர் கூறினார்.

“ஈரானின் இந்த ஸ்திரதன்மையை கெடுக்கும் முயற்சி சிரியாவில் மட்டுமல்ல, அதனையும் தாண்டி இதன் செயல்பாடுகள் இருக்கின்றன. இதற்கு முன்னர் ஈரான் அணு ஆயுதம் பெற முயற்சி செய்ததன் மூலம் சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாடு அமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது, இதனால் உலக பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருந்து வந்தது” என அவர் கூறினார்.

எனினும், 2015 ல் ஈரானுடன் போடப்பட்ட அணு ஒப்பந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார். இதன் மூலம் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை நீக்கப்பட்டு, ஈரானின் அணு ஆயுத திட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. “இவ்வொப்பந்தம் 13 வருட இராஜதந்திரத்தின் உச்சநிலையாகும், மேலும் இவ்வொப்பந்தம், ஈரானின் அணு திட்டத்தை ராணுவ விஷயத்திலிருந்து திருப்ப எடுக்கப்பட்ட பெரும் முயற்சியாகும். நமது பாதுகாப்பிற்கு இது முக்கிய அம்சமாகும்.” என அவர் கூறினார். ஆனால் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic missiles) சோதனையை பற்றி கூறுகையில், ‘அணு ஒப்பந்தம் ஈரானின் அச்சுறுத்தலிலிருந்து வெறும் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கின்றது’ என அவர் கூறினார். “இதில் ஏமனும் உள்ளடங்கும், ஹுதிகள் சவூதிக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் நடத்துவது ஏற்புடையதாக இல்லை” என அவர் கூறினார்.
“நேற்று இரவு ரியாத்தில் இளவரசர் முகமது பின் சல்மானுடன் நான் சந்திக்கையில் இவ்விஷயத்தில் நாம் இருவரும் சேர்ந்து வேலை செய்வதாக நாங்கள் ஒத்து கொண்டோம்.(ஹௌதிக்கு) இந்த ஏவுகணை எங்கிருந்து வந்தது என்பதை பற்றிய ஐநாவின் விசாரணையை நான் வரவேற்கிறேன். இதன் முடிவில் சர்வதேச சமுதாயம் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும்.” என அவர் கூறினார்.

சவூதி தலைமையிலான படை ஏமெனில் உள்ள ஈரான் ஆதரவு கொண்ட ஹௌதி படையின்மீது கடந்த மார்ச் 2015 லிருந்து போர் புரிந்து வருகின்றது. இப்போரை பற்றி ஐநா கூறுகையில் இது உலகின் மோசமான மனித குல பிரச்சனையாகும் என அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 6 ல் ஹௌதியாளர்கள் ரியாதுக்கு ஏவுகணை அனுப்பியதை சவூதி தடுத்த பிறகு, ஏமெனில் உள்ள வான், கடல், தரை வழிப்பாதைகள் அனைத்தையும் சவூதி தலைமயிலான படை தடுத்திருந்தது. அன்றிலிருந்து சில நேரங்களில் மட்டும் தளங்கள் திறக்கப்பட்டன. பிரித்தானிய பிரதமர் ஜோர்டனுக்கு பயணம் மேற்கொண்டதையடுத்து ஏமெனை பற்றி பிரித்தானிய பாராளுமன்றத்தில் அவசர விவாதங்கள் நடைபெற்றன.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைவர் கன்சர்வடிவ் அமைச்சர் டாம் டுகேந்தாத்(Tom Tugendhat) கூறுகையில், “மத்திய கிழக்கு நேசர்களை ஈரானின் அக்கிரமத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்” என கூறினார். “இவ்விஷயத்தில் ரியாதை மட்டும் குறை சொல்வது தவறாகும், உண்மையில் தெஹ்ரானில் எடுக்கும் முடிவுகள் கூட அப்பிராந்தியத்தில் நடக்கும் பிரச்சனைக்கு காரணமாகும்.” விவாதத்தில் அமைச்சர் ஆண்டிரிவ் ‘ஏமெனில் மோசமான மனிதகுல பிரச்சனை இருப்பதாகவும், சென்ற வருடம் தான் ஏமன் சென்றிருந்தபோது அங்குள்ள நிலைமை தமக்கு பெரிதும் வருத்தம் அளிப்பதாகவும்’ கூறினார்.
[Source: Arab News]

மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கம் குறைவது பிரிட்டனுக்கு வருத்தமளிக்க கூடியதாக இருக்கின்றது, அதிலும் குறிப்பாக லெபனான், ஈராக்,சவூதி அரேபியா , எமன் போன்ற நாடுகளில் தன்னுடைய கைப்பாவைகலுக்கு ஆதரவு அளிக்க முடியாமல் தவிக்கின்றது. டிரம்பின் தலைமயிலான அமெரிக்கா பிரிட்டனின் கண்காணிகளை கவனமாக கவனித்து வருவது பிரிட்டனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த கூடியதாக இருக்கின்றது.

6) ரோஹிங்கிய அகதி பிரச்சனையை சர்வதேச சமூகம் தீர்த்து வைக்க வேண்டும் என போப் அறிக்கை

மியான்மரில் ராணுவத்தால் துரத்தி அடிக்கப்பட்ட சுமார் 620,000 சிறுபான்மை முஸ்லிம்கள் வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் சென்ற வியாழக்கிழமை அங்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ரோஹிங்கிய பிரச்சனையில் சர்வதேச சமூகம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

ஆனால் இக்கருத்தை அவர் மியான்மர் சென்று வந்ததற்கு பிறகு கூறினார். அவர் மியன்மார் சென்றிருந்த போது கயிற்றில் மேல் நடப்பது போல ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான ராணுவத்தின் இன சுத்திகரிப்பை பற்றி எந்த வார்த்தையும் பேசாமல் கவனமாக பார்த்துகொண்டார். இதை பற்றி அவர் குரல் கொடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் அழுத்தத்தையும் மீறி அவர் இப்படி நடந்து கொண்டார்.

அவர் கூறுகையில்,” அதிகப்படியான மனித உயிர்களின் இறப்பு, நம்முடைய சகோதர சகோதரிகளின் மோசாமான வாழ்க்கை தரம் அதிலும் குறிப்பாக பெண்கள் குழைந்தைகள் அகதிகள் முகாம்களில் நெரிசலான சூழ்நிலையில் இருப்பது போன்ற இப்பிரச்சனையின் ஆழத்தை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது” என கூறினார்.

“இம்மோசமான பிரச்னைக்கு சர்வதேச சமூகம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும், அது பெரும் மக்களை வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் தீர்வு காண்பது மட்டும் போதாது, அவசர தேவையில் ரோஹிங்கிய மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வங்காள தேசத்திற்கு பொருளுதவி அளிப்பதும் இதிலடங்கும் ” என பிரமுகர்களிடமும் அதிகாரிகளிடமும் அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ராகின் மாகணத்தில் நடந்த வன்முறையினால் பெரும் மக்கள் நாடு கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது எல்லை அருகில் இருக்கும் வங்காள தேசம் அவர்களை ஏற்றுகொண்டதற்கு போப் பாராட்டு தெரிவித்தார்.

அதே வேலையில் மியான்மரில் அவர் இருந்த பொழுது, ‘ரோஹிங்கியா’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘ராகின் மாகாணத்து அகதிகள்’ என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள கதோலிக கிருஸ்தவர்களுக்கு புத்தர்களால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தால் இவ்வாறு பெயர் குறிப்பிட அவர் வலியுறுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. 31 ஆண்டுகாலத்தில் வங்காள தேசத்திற்கு பயணம் செய்த முதல் போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[Source: The Dawn]

மேற்கத்திய தலைவர்களில் போப் உட்பட எல்லோரும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிகொள்வது முஸ்லிம் உலகிற்கு வெக்க கேடான விஷயமாகும். ரோஹிங்கிய பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கின்றது, அது நேர்வழிபெற்ற கிலாஃபாவை கொண்டு வர இஸ்லாமிய உலகம் இரு உழைப்பு எடுப்பதாகும். கிலாஃபா ராஷிதாவின் மூலம் இஸ்லாமிய உலகின் ராணுவங்கள் ஒன்றிணைக்கப்பட்டு எந்த நாடெல்லாம் சிறுபான்மையான முஸ்லிம்களை துன்புருத்துகிறார்களோ அவர்களின் அழிச்சாட்டியத்தை அடக்குவதாகும்.

Comments are closed.