சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

போப் பிரான்சிஸும் டொனால்ட் டிரம்பும் இன்றைய மேற்கத்திய காலனித்துவ நாணயத்தின் இரண்டு பக்கங்களாவர்

இரண்டு பேரில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், பிரான்சிஸ் இஸ்லாமீதுள்ள வரலாற்று ரீதியான சிலுவை வெறுப்பை வெளியே காட்டாமல் மறைத்து வைத்துள்ளார்.

28/11/2017 அன்று உலகின் 1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மியான்மருக்கு பயணம் செய்தார். பிறகு,யாங்கோனில் 150,000 கத்தோலிக்கர்களுக்கு திறந்தவெளி ஜெபத்தை வழங்கினார். மியான்மர் இராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு நாட்டிலிருந்து அகற்றப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் இவரது வருகை சர்வதேச கவனத்தை செலுத்தும் என அதிகளவில் கருதப்பட்டது. ஆனால், இந்த நயவஞ்சக கிறிஸ்துவ தலைவர் ரோஹிங்யா முஸ்லிம்களைப் பற்றி பகிரங்கமாகக் குறிப்பிடுவதை தவிர்த்துவிட்டார், இதில் ஆச்சரியமும் இல்லை. தனது உரையில் பௌத்த வெறியர்களை மகிழ்விக்க ‘ரோஹிங்கியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவுமில்லை, கொலைகார பர்மிய இராணுவத்தின் கொடூரமான படுகொலையைப் பற்றி எதுவும் குறிப்பிடவுமில்லை.

இதற்கு முன் ரோஹிங்கியாக்களை “எங்கள் ரோஹிங்கியா சகோதர சகோதரிகள்” என்று குறிப்பிட்ட இவர் இப்பொழுது எதுவும் பேசாமல் இருந்ததால் தனது போலித்தனமான தார்மீக உயர் நிலையைக் இழந்தது மட்டுமல்லாமல், முஸ்லிம்களின் தாக்குதலுக்கு பொறுப்பான இரத்தம் நிறைந்த கைகளைக் கொண்ட இராணுவ தளபதி மின் ஆங்க் லாயிங்க் (Min Aung Hlaing)-யை சந்தித்தப்போதும் இராணுவப் படுகொலை பற்றி எதுவும் கேட்காமல் இருந்தது அவரது நயவஞ்சகமான இருமுகம் அம்பலப்படுத்தியது.

ரோஹிங்கியாக்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றச்சாட்டுகள் வந்தபோது மியான்மர் அரசையும் இராணுவத்தையும் ஆதரவளித்த மியான்மரின் சகிப்புத்தன்மையற்ற பௌத்த துறவி, சிட்டகு சயாதாவ் (Sitagu Sayadaw) யையும் அவர் சந்தித்தார். மேலும், போப்பின் ஆழ்ந்த நயவஞ்சகத்தனம் அங்கு முடிவடையவில்லை, படுகொலைக்கு மௌனமாக இருந்த சூகியை விமர்சிப்பதற்கு பதிலாக பல்லாண்டுகளின் இராணுவ சர்வாதிகாரத்திற்குப் பின் பல்வேறு குழுக்களுக்கிடையில் சமரசம் செய்த முயற்சிகளுக்காக தன் ஆதரவத்தை கொஞ்சம் கூட வெட்கப்படாமல் போப் தெரிவித்தார். போப்பின் வருகை, கூட்டங்கள் ,பேச்சுகள் ஆகிய அனைத்துமே மேற்கு காலனித்துவவாதிகள் மற்றும் அவர்களின் கைக்கூலிகளின் ஏமாற்றும் பேச்சுகளிலிருந்தும் துரோகத்தனமான குணத்திலிருந்தும் பிரதிபலித்தது.

உண்மை என்னவென்றால், டொனால்ட் டிரம்ப் போலவே போப் பிரான்சிஸும் ஒரு மதச்சார்பற்ற முதலாளித்துவ சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்த சித்தாந்ததுக்கு வரலாற்று ரீதியாக இஸ்லாமிய அரசியல் அச்சுறுத்தலாக இருந்தது, குறிப்பாக 1453 ல் கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தின் கடைசி அடையாளத்துக்கு மரண அடிக்கொடுத்து கான்ஸ்டாண்டிநோப்பிளை வென்றெடுத்த சுல்தான் முஹம்மத் அல்-ஃபாத்திஹின் பிரபலமான வரலாறு. அந்நாளிலிருந்தே, இஸ்லாமால் தோற்கடிக்கப்பட்ட பயம் அனைத்து மேற்கத்தியவாதிகளின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

ஆகவே, கடந்தக்காலத்தில் இவருக்கு முன் இருந்த பென்டிக்ட் XVI போப்பிடமும் ஏமாற்றும் நிலைப்பாட்டை நாம் கண்டோம், ஒரு தருணத்தில் கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை கொண்டுவர வேண்டும் என்று சொல்லி, மறு தருணத்தில் இஸ்லாத்தைப் பற்றி வெறுப்பை உண்டாக்கி, புனித ஜிஹாதை வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு சமமானதாக சித்தரித்தார். இன்றைய காலக்கட்டத்தில் நாணயத்தின் ஒரு பக்கம் டிர்ம்பும் மறு பக்கம் போப் பிரான்சிஸும் உள்ளன. இவர்களில் ஒரு வித்யாசம், டிரம்ப் வெளிப்படையாக இஸ்லாமின் மீது வெறுப்பை காட்டுகிறார், போப் தன் அசிங்கமான, முட்டாள்தனமான மற்றும் வரலாற்று ரீதியான இஸ்லாமீதுள்ள வெறுப்பையும் மற்றும் பயத்தையும் உள்மனதில் மறைத்து வெளியில் நல்லவர் போல் இனிப்பாக பேசி நடிக்கிறார்

எனவே, 30/11/2017 அன்று வங்காளதேசத்தில் போப் பிரன்சிஸின் மூன்று நாள் பயணமும், ரோஹிங்கியா அகதிகளுடன் சந்திப்பும் பங்களாதேச முஸ்லிம்களின் மத உணர்வுகளை சுரண்டுவதற்காக மேற்கத்திய யுக்தியின் ஒரு பகுதியாகும். பயண நோக்கங்களில் “கலப்பு நம்பிக்கை உரையாடல்” அழைப்பு முக்கிய குறிக்கோளாக இருந்தது. இது இஸ்லாமை அழிக்க உண்டாக்கிய நவீன மேற்கத்திய சிந்தனையாகும். இஸ்லாம் மற்றும் குஃப்ர் மத்தியில் உள்ள உண்மையான சித்தாந்தப் போராட்டத்தை மறைக்க, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் யூத மதத்தை ஒன்றாக சேர்த்து “ஒரே ஆப்ரஹமின் மதம்” என்று கூறி அழைப்பதாகும். மேற்குலகின் இஸ்லாத்துக்கு எதிரான போருக் கிடையில், முஸ்லிம் நாடுகளிலுள்ள மேற்கத்திய ஆதிக்கத்தை இன்னும் அதிகப்படுத்த போப்பின் இது ஒரு கேவலமான முயற்ச்சியாகும். ஒரு இடத்தில் மேற்கத்திய காஃபிர் தன் பிராந்திய கூட்டாளிகளோடு முஸ்லிம் நாடுகளில் படுகொலைகள் நடத்த, இன்னொரு இடத்தில் போப் பிரான்சிஸ் போல குஃபார்களின் மதசார்பற்ற மதக்கூலி “கலப்பு நம்பிக்கை உரையாடல்” என்ற பெயரில் முஸ்லிம்களின் சிந்தனையை அழித்து, இஸ்லாமை மேலோங்க வைக்கும் பணியிலிருந்து அவர்களை அகற்றிவைக்கும் வேலையை செய்துவருகிறார். மியான்மர் முஸ்லிம்களுக்கு இந்த போப் பிரான்சிஸின் துரோகத்தை அல்லாஹ் (சுபு) வெளிப்படுத்தியுள்ளான், இன்னும் என்னதான் இவர் கஷ்டப்பட்டு முஸ்லிம்களை திசைத்திருப்ப நினைத்தாலும், நபி (ஸல்) முறையில் இரண்டாவது கிலாஃபா ராஷிதாவை நிறுவ முஸ்லிம்கள் மறுமலர்ச்சி அடைவதை ஒருபோதும் அவரால் தடுக்க முடியாது.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.(அஸ்-ஸஃப் – 8,9)

Comments are closed.