சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மரண தண்டனையை கிலாஃபத் கொண்டிருக்குமா, ஒருவேளை இதுபோன்ற தீர்ப்புகள் தவறாக ஆகிவிடம் பட்சத்தில் அதன் நிலை என்னவாகும்?

நீதியை நிலைநாட்டுவது, சமூகத்தை பாதுகாப்பது மற்றும் தடைகள் ஏற்படுத்துவது குறித்து மேற்கு கொண்டிருக்கும் கண்ணோட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இஸ்லாமிய கண்ணோட்டமானது அதிலிருந்து வித்தியாசமானது. எந்தவொரு விதிமீறல்களை இஸ்லாம், சமூக அழுத்தம் மூலமும், மற்றும் சட்டவிரோத செயல்களை பரிந்துரைக்கப்பட்ட தண்டனை வழங்குவதன் மூலமும், சரி செய்ய முயலும். எனினும் எந்தவொரு தண்டனை வழங்குவதாக இருந்தாலும் அதை மெய்பிப்பதற்கு அதிகப்படியான ஆதாரம் தேவைப்படுகிறது, இங்ஙனம் இஸ்லாம் குற்றவாளிகள் மட்டுமே தண்டனை பெறும் வகையில் உறுதி செய்கிறது. ஒரு ஹதீதை ஆதாரமாக கொண்ட இஸ்லாத்தில் சட்டமியற்றும் கொள்கையானது ஒரு நிரபராதியை சிறையில் அடைப்பதை விட ஒரு குற்றவாளியை வெளியே விடுவது சிறந்ததாகும்.

Comments are closed.