சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அல்-குத்ஸ் (ஜெரூசலேம்) யூத தேசத்தின் தலைநகர் அல்ல மாறாக அதன் கல்லறையாகும்!

காஃபிரான காலனியாதிக்கவாதியான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப், புதனன்று மாலை நிகழ்த்திய தனது உறையில் யூத தேசத்தின் தலைநகராக அல்-குத்ஸை அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹிஸ்புத்தஹ்ரீரின் துருக்கி விலாயா, “அல்-குத்ஸ் (ஜெரூசலேம்) யூத தேசத்தின் தலைநகர் அல்ல மாறாக அதன் கல்லறையாகும்!” எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியீட்டை தயாரித்துள்ளது, இது சம்மந்தமாக 15 நகரங்களில் உள்ள 16 வெவ்வேறு மையங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டனர். இந்த செய்தி்வெளியீடானது வியாழனன்று மாலை இஸ்தான்புல்லில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் புர்ஸா நகர மையத்திற்கு முன்பாகவும் வெள்ளியன்று அங்காரா அதானா, தியார்பகிர்/ எர்கானி, பிட்லிஸ் /தத்வான், வேன், மெர்சின், ஹதாயா, கோன்யா, கஹ்ரமன்மரஸ் மற்றும் சான்லியுர்ஃபா ஆகிய இடங்களில் வாசிக்கப்பட்டது. செய்தி வெளியீடு ஒன்று யலோவா மற்றும் அய்தினில் வெள்ளியன்று விநியோகிக்கப்படவிருக்கின்றது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை போன்று துருக்கியிலுள்ள முஸ்லிம்களும் உம்மத்தின் விழுப்புணர்வை கண்டு மனம் நெகிழ்ந்து தாங்கள் தான் அல்-குத்ஸ் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜிதின் உரிமையாளர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்க அதிபரின் இந்த திமிர் பிடித்த அறிவிப்புக்கு பதிலடியாக “இது கிலாஃபா ராஷிதாவை (நேர்வழி பெற்ற கிலாஃபத்) பிரகடணம் செய்யும் நேரம்” என துருக்கிய மக்கள் கூறியுள்ளனர்.

முஸ்லிம்கள் தக்பீரையும் கிலாஃபத்தின் முழக்கத்தினையும் முழங்கிய நிலையில் இந்த செய்தி வெளியீடு வெளியிடப்பட்டது. இந்த செய்தி வெளியீடு பின்வரும் விஷயங்களை வலியுறுத்தியது:

“ஓ முஸ்லிம்களே, அல்-குத்ஸானது இஸ்ரா வல் மி’ராஜ் நடைபெற்ற பூமி என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்றும் அல்-குத்ஸானது முஸ்லிம்களுடைய முதல் கிப்லாவாகும். மற்றும் அது ரசூலுல்லாஹ் ﷺ நம்மிடம் ஒப்படைத்த அமானத்தாகும். ஆகவே, அல்-குத்ஸானது ஒருபோதும் யூத தேசத்தின் தலைநகராகாது, மற்றும் அல்-குத்ஸ் யூத தேசத்தின் தலைநகராக ஒருபோதும் ஆகாது மாறாக அதன் கல்லறையாகும்! என்பதை நாங்கள் மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.

அமெரிக்காவின் திமிர்த்தனமான இந்த முயற்சியின் விஷயமாக வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில் இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்கள் பயம் களந்த தவிப்புடன் அமெரிக்காவை கண்டிக்கும் ஓட்டத்தில் பங்கேற்றனர் என்று குறிப்பிடப்பட்டது: ஓ முஸ்லிம்களே! இஸ்ரா வல் மி’ராஜின் புனித பூமியை ஆக்கிரமித்து இருக்கும் குற்றவாளியான இந்த யூத தேசம் “மத்திய கிழக்கில் இருப்பது அவசியம்” என்று கோரும் இந்த ஆட்சியாளர்கள், நமது நிலத்தை அபகரித்த இந்த தேசத்துடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இந்த ஆட்சியாளர்களால் அல்-குத்ஸை மீட்க முடியுமா?! இந்த வெற்று கண்டனங்களை மட்டும் வைத்துக் கொண்டு எந்த அளவுக்கு இவர்கள் இஸ்லாத்தின் மற்றும் முஸ்லிம்களுடைய எதிரியான டிரம்ப்பையும் இந்த யூத தேசத்தையும் தடுக்க முடியும்? இவர்கள் செய்வது கண்டனத்தைத் தவிர வேறு எதையும் இல்லையா?!

இரவு விருந்து கூட்டங்களை நடத்துவதை தவிர வேறெந்த செல்வாக்கையும் அதிகாரத்தையும் கொண்டிராத இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பினால் (OIC) என்ன செய்து விட முடியும், இந்த யூத தேசத்திற்கும் டிரம்புக்கும் எதிராக என்ன பதிலடியை அதனால் கொடுக்க முடியும்? இவர்கள் தான் இஸ்ரா வல் மி’ராஜின் பூமியை பாதுகாக்கப் போகிறார்களா? இவர்கள் தான் மஸ்ஜித் அல்-அக்ஸாவை விடுவிக்கப் போகிறார்களா?

ஓ முஸ்லிம்களே, அதற்கு தீர்வானது, “அல்-குத்ஸ் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜிதின் மீட்பானது: அல்-அக்ஸா சிறைப்பட்டிருக்கும் போது எவ்வாறு நான் புன்னகைத்திருப்பது? என்று கூறிய ஸலாஹுத்தீன் அய்யூபியை போன்ற மற்றும் அல்-குத்ஸை விடுவித்த ஸய்யதினா உமர் (ரலி) போன்ற ஒரு நேரிய கலீஃபா போன்ற, உமர் (ரலி) இந்நகரத்தில் நுழையும் போது அவர்களிடம் இவ்வாறு கூறப்பட்டது:

ஒட்டகங்களை விகாரமாக பார்க்கும் தேசம் இது, நீங்கள் ஏன் குதிரையை ஓட்டிச் செல்லக்கூடாது எனக் கேட்ட போது; அவ்வாறு செய்ய மறுத்து அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக, அல்லாஹ் இஸ்லாத்தைக் கொண்டு நம்மை கண்ணியப்படுத்தி இருக்கின்றான். அல்லாஹ் நம்மை கண்ணியப்படுத்திய ஒன்றை தவிர்த்து வேறு எதிலும் நாம் நமது கண்ணியத்தை நாடினால் அல்லாஹ் நம்மை இழிவு படுத்தி விடுவான்”. மற்றும் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு வழங்குமாறும் அதற்கு பகரமாக கனிசமான அளவு பொற்காசுகளை தருவதாகக் கூறி யூதர்கள் கேட்டதற்கு அதற்கு பதிலாக “அந்த இடம் தனக்கு சொந்தமுடையதல்ல என்பதையும் அது ஒட்டுமொத்த உம்மத்திற்கு சொந்தமுடையது என்றும் சுட்டிக்காட்டி இந்த நிலத்திலிருந்து ஒரு அங்குலத்தைக் கூட நான் விற்க மாட்டேன்” என்று பதிலளித்த அப்துல் ஹமீது போன்று விவேகமுள்ள, நுண்ணறிவுள்ள தலைவர்களால் மட்டுமே மீட்டெடுக்கப்படும். ஆம் முஸ்லிம்களே: அல்-குத்ஸானது வெறும் வார்த்தகளை கொண்டு மீட்டெடுக்க முடியாது, மாறாக செயல்களின் மூலம் மட்டுமே…

இந்த செய்தி வெளியீடு பின்வரும் பிரார்த்தனையுடன் முடிவு பெற்றது: “ஓ எமது இறைவனே! கிலாஃபா ராஷிதாவை நிர்மாணிப்பதற்காக எங்களை தயார் செய்வாயாக, மற்றும் குஃப்பார்களுக்கு அஞ்சாத அல்லாஹ் سبحانه وتعالى வை மட்டுமே அஞ்சும் கலீஃபாக்களை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக,வெறும் வார்த்தைகளை விடுவதோடு மட்டுமல்லாமல் படைகளை நகர்த்தக்கூடிய ஆட்சியாளர்களை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக, அல்-குத்ஸ் ஆக்கிரமிப்பில் இருக்கும் வரை தங்களை புன்னகைப்பதிலிருந்து தவிர்த்து கொள்ளும் தலைவர்களை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக, யூதர்களின் கைகளில் அல்-குத்ஸ் இருக்கும் அருவருப்பான நிலையிலிருந்து தூய்மைப் படுத்தாமல் தங்களுடைய முகாம்களுக்கு திரும்பிச் செல்லாத இராணுவத்தை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக மற்றும் 55 ஆண்டு காலம் அல்-குத்ஸை பாதுகாத்து வந்த ஹசன் அல்-அன்பாஷி போன்ற வீரர்களை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக. யா அல்லாஹ் முஸ்லிம்களுடைய படைகளை ஒன்றிணைப்பாயாக, அவர்களுடைய சொற்களையும், செயல்களையும் இதயங்களையும் ஒன்றிணைப்பாயாக. மற்றும் நபித்துவ வழிமுறையிலான இஸ்லாமிய அரசான கிலாஃபா ராஷிதாவை (நேர்வழியிலான கிலாஃபத்) நிர்மாணிப்பதற்காக எங்களுடைய எண்ணங்களை ஒன்றிணைப்பாயாக.

Comments are closed.