சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இங்கிலாந்தில் பசி

லண்டனில் உள்ள பத்தில் ஒரு குடும்பம் தங்களுடைய உணவுக்காக தொண்டு நிறுவனங்களையே சார்ந்திருக்கின்றன என்றும் கிறிஸ்துமஸ் வரை உணவு விநியோகம் செய்வதற்கு உணவு வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிரமப்படுவதாக தற்போது வெளிவந்த புள்ளிவிவரம் கூறுகின்றது. லண்டனில் உள்ள நான்கில் ஒரு பெற்றோர் ஒருவர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாததைப் பற்றி கவலைப்படுகின்றனர் என்று இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, அதே நேரத்தில் ஐந்தில் ஒரு பகுதியினர் தங்களுடைய வீடுகளுக்கு வெப்பமூட்டுவதா அல்லது தங்களுடைய குடும்பத்திற்கு உணவளிப்பதா என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலையிலுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.(இன்டிபென்டன்ட்)

ஒவ்வொரு நாளும் 500,000 குழந்தைகள் வெறும் வயிற்றில் பள்ளிக்கு செல்கின்றனர் என்கிற செய்தியை வெளியிட்டதற்கு பின்னர் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் ஃபெலிக்ஸ் திட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படவிருக்கும் உணவுகளை அதன் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கும் விதமாகவும் அதன் தற்போதைய நடவடிக்கையில் குழந்தைகளின் பசியை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த திட்டமானது நன்கொடைகளை அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது மற்றும் உணவு வீணாகுவது மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் டன் அளவுக்கு உணவு வீணாக்கப்படுகிறது என்றும், 2016-ல், 400 மில்லியன் எண்ணிக்கையிலான உணவை தயாரிக்க உதவும் உணவுத் தானியங்களை குப்பைகளில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு மிகுதியாகவும் வீணாக்கப்பட்டும் இருக்கும் நிலையில் மக்களில் ஏழ்மையில் உள்ளவர்கள் ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் பசியை எதிர்கொண்டு வருகின்றனர். இளம் ஒற்றைத் தாய்மார்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக வேண்டி தங்களுடைய ஒரு வேளை உணவை தவிர்த்து வருகின்றனர் மற்றும் பத்தில் ஒரு பெற்றோர் உணவு வங்கிகள் அல்லது தொண்டுகள் இல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்கவே முடியாது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான உணவை வழங்க முடியாத காரணத்தால் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 870,000 குழந்தைகள் ஒவ்வொரு இரவும் பசியோடு தூங்கச் செல்கின்றனர்.

உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதாரமாக இங்கிலாந்து விளங்கி வரும் நிலையில், ஏன் இந்த அவலநிலை, தொண்டு நிறுவனங்கள் ஏன் அரசாங்கத்தின் வெற்றிடத்தை நிரப்புகின்றன?
சில பிரச்சாரகர்கள் இந்த கேள்விகளை எழுப்பும் வேளையில் மற்றும் ​​உணவு விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் பணியை தொண்டு நிறுவனங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ​​முதலாளித்துவத்தின் தோல்வியடைந்த செயலாக்க அமைப்பு மிகவும் தெளிவாக அம்பலமாகி வருகிறது என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஆண்டு உணவு வங்கிகளை அணுகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ட்ரூசெல் ட்ரஸ்ட்டிலிருந்து வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. பொருளாதாரம் மேலிருந்து கீழ் நோக்கி பாய்கிறது எனவும் இந்த வழிமுறையானது மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உதவி புரியும் என்றும் முதலாளித்தும் தவறான வாதத்தை வைக்கின்றது. உணவு பற்றாக்குறை என்பது இல்லவே இல்லை என்றும் மேலிருந்து கீழ்நோக்கி பாயும் பொருளாதாரமும் நடைமுறையில் இல்லை என்பதையும் தற்போதய சூழ்நிலை தெரிவிக்கின்றது!

பசி, படைப்பாற்றல் மற்றும் வளர்ச்சியை நசுக்குகிறது, அதை எதிர்கொள்ளும் ஆட்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.இவை அனைத்தையும் கண்டுணர்தாலும், அரசாங்கத்தால் அதற்கான உண்மையான தீர்வு என்பது வழங்கப்படவில்லை. மதீனா நகரில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, உமர் இப்னு அல் கதாஃப் (ரழி) அவர்கள் கலீஃபாவாக தமது குடிமக்கள் மீது ஏற்பட்ட பிரச்சனையை எதிர்கொள்ள உயர்ந்தெழுந்தார்கள். அரேபியாவுக்கு உணவு தானியங்களை அனுப்புமாறு தனது வாலிகளுக்கு ஆணையிட்டார்கள். சிரியா, ஈராக், எகிப்து போன்ற இடங்களில் இருந்து ஒட்டகங்களில் பெருஞ்சுமையாக உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய தேவையுடைய பொருட்களும் வந்து சேர்ந்தது.

அரசாங்க அளவில் உணவுப் பொருட்கள் சமைக்கப்பட்டன, மதீனாவில் தஞ்சம் அடைந்த அனைவருக்கும் அரசாங்க செலவில் தினமும் உணவு பரிமாறப்பட்டன. ஒரு கணக்கின் படி நாள்தோறும் 40,000 பேருக்கு மேல் உணவு பரிமாறப்பட்டன. பிரிட்டனுடைய பிரதம மந்திரியும் இதர தலைவர்களும் அவர்களுடைய குடிமக்களின் வேதனையை உணராத போது, உமர் (ரலி) இந்த பஞ்ச காலத்தின் போது மாமிசத்தை அல்லது வெண்ணையை சாப்பிட மறுத்தார்கள். உமர் (ரலி) அவர்களுடைய வயிறு இரைச்சலிடும், ஆனால் அவர்கள்: “வயிறே நீ விரும்பும் அளவுக்கு இரைச்சல் போட்டுக்கொள், ஆனால் இந்த பஞ்சம் நீடித்திருக்கும் வரை, உன்னை நான் எந்தவிதமான சுவைநயமிக்க உணவையும் அருந்த விடமாட்டேன்.” எனக் கூறினார்கள்.

இந்த உதாரணமானது குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சரியான இஸ்லாமியத் தலைமைத்துவம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது; அதாவது பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் இந்த பிரச்சனை முடியும் வரை ஓய்வெடுக்காமல் இருந்தது.

நபித்துவத்தின் வழிமுறையிலான கிலாஃபா ராஷிதாவால் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய செயலாக்க அமைப்பு மீண்டும் வரும்போது மனிதனுடைய தேவைகளை உணர்ந்து, வளங்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி அதன் குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். இந்த தீர்வு நம்பிக்கையை அளிக்கும் மற்றும் தோல்வியுற்ற முதலாளித்துவ நாடுகளில் வாழும் மக்களுக்கு வழிகாட்டும் ஒளியாக அறிமுகப்படுத்தும் இன் ஷா அல்லாஹ்.

Comments are closed.