சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 06.12.2017

  1. எமெனின் முன்னால் அதிபர் ஸாலிஹ் சனாவில் கொல்லப்பட்டார்
  2. அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றவுள்ளார்.
  3. மாடிஸ் இன்னும் அதிகம் கட்டளையிட பாகிஸ்தானுக்கு பயணம்

எமெனின் முன்னால் அதிபர் ஸாலிஹ் சனாவில் கொல்லப்பட்டார்

அரபு புரட்சியின் விளைவாக தற்போதைய ஆட்சியாளரும் கொல்லப்பட்டு விட்டார்.எமெனில் உள்ள சனாவின் தலைநகரத்தை கைப்பற்றியதற்கு பிறகு முன்னால் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹுடன் ஹௌதி குழுக்கள் கூட்டுறவு வைத்திருந்தனர். பிறகு ஏற்பட்ட சர்ச்சையில் ஸாலிஹ் ஆதரவாளர்களுக்கும் ஹௌதி குழுக்களுக்கும் நடந்த சண்டையில் ஸாலிஹ் கொல்லப்பட்டார். டிசம்பர் 2 ஆம் தேதி ஸாலிஹ் ஹௌதியுடனான கூட்டுறவை முடித்துகொண்டு, சவூதியுடன் பேச்சு வார்த்தைக்கு தான் தயாரென வெளிப்படையாக அறிக்கை விடுத்திருந்தார், இதனால் ஹௌதியுடனான கூட்டணியை விட்டும் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். இதுபோன்ற எமெனி சண்டைகளை அவர் கடந்த நாற்பது வருடங்களாக பார்த்து வந்துள்ளார். அங்குள்ள குடியின மக்களின் உறுதியான ஆதரவை பெற்றுகொண்டதன் மூலம் ஹௌதியுடனான கூட்டுறவை இவரால் ஏற்படுத்த முடிந்தது. ஆனால் டிசம்பர் 2 ல் இவர் விட்ட அறிக்கைக்கு பிறகு சனாவை சுற்றியுள்ள ஏழு முக்கிய இன மக்களும் இவருடைய பக்கம் ஆதரவாக இருப்பதை விரும்பாமல், முடிவில் என்னதான் நடக்கும் என வேடிக்கை பார்த்து கொண்டிருக்க ஆரம்பித்தனர். கிட்டதட்ட ஒரு அரை சகாப்தமாக நடந்து கொண்டிருந்த இந்த பிரச்சனையில் ஸாலிஹ் கொல்லப்பட்டது புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரச்சனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பிராந்திய சக்திகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றவுள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வாரம் மஹ்மூத் அப்பாஸிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தான் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றப்போவதாக கூறியுள்ளார். இந்த உரையாடலை அப்பாசின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசேலேத்தை அமெரிக்கா அங்கீகரித்தால் இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளை தாம் முரித்துக்கொள்ளபோவதாக துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை பற்றி அதிபர் டிரம்ப் திங்கட்கிழமையே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் உலக தலைவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததால் இதனை அவர் சில நாட்களுக்கு தள்ளிவைத்திருந்தார். தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசியே டிரம்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். இவருக்கு முன்பிருந்த மற்ற அதிபர்கள் போலவே இவரும் இஸ்ரேலுக்கு நற்சான்றையும் ஆதரவையும் தர விரும்புகிறார்.

மாடிஸ் இன்னும் அதிகம் கட்டளையிட பாகிஸ்தானுக்கு பயணம்

பிரதமர் காகான் அப்பாசியையும் ராணுவ தளபதி கமர் பஜ்வாவையும் சந்திப்பதற்கு முன்பாகவே, தான் எதற்காக பாகிஸ்தானுக்கு செல்கிறேன் என்பதை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் அறிவித்துள்ளார். அவர் என்ன நோக்கத்திற்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அவருடன் சேர்ந்து அமெரிக்க அதிகாரிகள் உட்பட அனைவரும் ,ஆப்கானில் அமெரிக்க தோற்று கொண்டிருக்கும் காரணத்தால், பாகிஸ்தான் தன்னுடைய பங்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர். ‘நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்களா இல்லையா?’ என தெளிவாக அவர் பாகிஸ்தானிடம் கேட்கப்போவதாக செய்திகள் வெளியாயின. இதற்கு பாகிஸ்தானின் பதில் என்னவாக இருக்கும் என்பது தெரிந்த விஷயமே.இருப்பினும்,அமெரிக்காவின் நடவடிக்கை சிறிது தட்டி கொடுத்தும், சிறிது மிரட்டியும் வேலை வாங்ககூடிய நடவடிக்கையாக (carrot and stick approach) இருக்கின்றது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிர வாதிகளின் அடைக்கலஸ்தலத்தை அந்நாட்டு அரசு அழிக்காவிட்டால் பேராபத்து இருக்கின்றதென சி.ஐ.ஏ வின் நடத்துனர் மைக் பாம்பியோ (Mike Pompeo) எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் ராணுவ தலைவர்களும் அமெரிக்காவுடன் சேர்ந்து அயராது உழைத்து வருகின்றனர். இவ்வாட்சியாளர்கள் அமெரிக்காவை சந்தோசப்படுத்த தன்னுடைய சொந்த நாட்டையே பேராபத்தின் பக்கம் இழுத்து சென்று விட்டனர்.

Comments are closed.