சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

யமனின் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ஹதி புதிய எழுச்சிக்கான அழைப்பு விடுத்துள்ளார்

யமன் நாட்டு முன்னாள் தலைவர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் கொல்லப்பட்டதற்குப் பின்னர், தலைநகர் சனாவில் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு யமன் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதி, ஹௌதி போராளிகளை எதிர்த்து யமன் மக்கள் எழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அலி அப்துல்லாஹ் சாலிஹ், 2011 கிளர்ச்சிக்கு முன்பு வரை, 30 ஆண்டுகள் யேமெனை ஆட்சி செய்துள்ளார், தலைநகர் சனாவிற்கு வெளிப்புறத்தில் உள்ள சோதனை சாவடியில் அவர்மீது நடைபெற்ற ஆயுத தாக்குதலில் உயிர் இழந்துள்ளார்.

சவுதி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாகக் கிளர்ச்சியாளர்களுடன் உறவுகளை அவர் முறித்துக் கொண்டார். இந்த துரோக செயலுக்காகவே அவர் ஹௌதி போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார். அரபு லீக் இந்தக் கொலைக்கு கண்டனம்தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் ஹௌதியை ஒரு “பயங்கரவாத அமைப்பாக” முத்திரை குத்தியது. (அல் ஜசீரா நியூஸ்)

கருத்து:

இங்குப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், அல்லாஹ் அவர்களின் பக்கம் தான் இருக்கிறான், அவர்கள் தான் உம்மத்தே முகமத் என்று கூறுகின்றனர். ஆனால் இவர்கள் அவர்களின் இனத்தையும் பிரிவையுமே, அல்லாஹுவையும், முஹம்மது நபி க்கும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மேலாகக் கருதுகின்றனர். அவர்கள் தங்கள் சகோதரர்கள், தந்தை, தாய்மார்களைப் படுகொலை செய்கிறார்கள். இது நிச்சியமாக இஸ்லாமியா மார்க்கத்தின் அடிப்படையில் அல்ல.

யாத்ரிப் நகரத்தில் இஸ்லாம் வருவதற்கு முன்னாள் அறியாமை காலத்தில் அன்ஸார்கள் அவர்களுக்குள் பேரிட்டுகொண்டதற்கும் இன்று இங்கு நிகழ்வதற்கும் என்ன மாற்றம் உள்ளது?.

முஸ்லிம்கள் கொல்லப்படுவதையும், துயரப்படுவதையும், கண்டு மகிழ்பவர்கள் தான் இவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய உம்மத்தின் எதிரிகள், அல்லாஹ் மற்றும் அவன் ரஸூலின் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) எதிரிகள்.
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” – சமுதாயம் – (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள். (21:92)

إِنَّ هَٰذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ

ரசூலுல்லாஹ்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக அபு ஹுரைரா (ரா) அறிவிக்கின்றார் “ஒரு முஸ்லிமின்இரத்தம், மரியாதை, சொத்து ஆகியவை இன்னுமொரு முஸ்லீம் துளையிடமுடியாத ஒன்று”. (ஸஹீஹ் முஸ்லீம்).

அவர்கள் கேட்க மாட்டார்களா? நம்மை படைத்தவன் நமக்கு அறிவுரை வழங்குவதற்கு அவனுடைய தூதரை அனுப்பவில்லையா?, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எழும் மோதல்களை எப்படித் தீர்த்துக்கொள்வது என்றுவழிகாட்டவில்லையா? அல்லாஹ் (சுபஹானஹு தாள) கட்டளையிடுகின்றான்,முஃமின்களுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டால், அல்லாஹு மற்றும் அவனுடைய ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மிடம் திரும்புங்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.(4:59)

இவர்கள் யாருக்கு விசுவாசமாக உள்ளனர் இவர்களின் பழங்குடிவாதத்திற்கா, பிரிவினை வாதத்திற்கா அல்லது இஸ்லாமிய எதிரிகளுக்கா? இவர்கள் அல்லாஹ்வின் (சுபஹானஹு தாள) அடிமைகள் இல்லையா?

ஷைத்தான் ஏற்படுத்தும் குழப்பங்கள் மற்றும் மனிதர்கள் செய்யும் சதி வேலைகளை எதிர்த்து நாம் ஒரு உம்மத்தாக உறுதியாகச் செயல்பட்டால் இன்று நம் நிலைமை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள் ? எந்த சக்தியாலும் நம்மைஎதிர்த்திருக்க முடியாது. தீனுள் இஸ்லாம் அறிவுறுத்தும் கட்டளைகளை பின்பற்றிருந்தால் சிரியா, பாலஸ்தீனம் போன்றஅணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்திருக்கும்.

நீங்கள் உண்மையில் அல்லாஹ் சுபஹானஹுதலாவை நேசிப்பவர்களாகவும், அவனை அஞ்சுபவர்களாகவும் இருந்தால், அவனது ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நேசிப்பவர்களாக இருந்தால், அல்லாஹுவை அஞ்சுங்கள்அவனுக்கு அடிபணியுங்கள். ஒரே இஸ்லாமிய கொள்கை, ஒரே குர்ஆன்னை பின்பற்றும் நாம், நமது உம்மத்திற்கு மத்தியில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை இன்றே நிறுத்தவேண்டும்.

Comments are closed.