சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ரோஹிங்யாவின் துயரம்

நவம்பர் 16 அன்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மியான்மரின் இராணுவம் தங்களது நாட்டிலுள்ள ராக்கைன் மாநிலத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து வருவதின் ஒரு பகுதியாக ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது முறைபடுத்தப்பட்ட மற்றும் “பரந்த அளவிலான கற்பழிப்பு” செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. “எனது உடல் முழுதும் வலிக்கின்றது: பர்மாவில் ரோஹிங்கியா பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை”, எனும் தலைப்பிலான அறிக்கையானது வங்காளதேசத்திலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் சுகாதார சேவைகள் செய்துவரும் மனிதாபிமான அமைப்புக்களின் 17 பிரதிநிதிகள் மற்றும் 52 பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் எடுக்கப்பட்ட பேட்டியை அடிப்படையாக கொண்டது அதில் 29 நபர்கள் தாங்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக கூறினர், ஒரு சம்பவத்தைத்தவிர மற்ற அனைத்தும் கூட்டு கற்பழிப்பாகும். இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு ஆய்வில் 15 வயதுடைய ஒரு ரோகிங்கிய பெண்ணை மியான்மர் இராணுவத்தினர் நிர்வாணப்படுத்தி அவளுடைய வீட்டிலிருந்து அருகிலுள்ள ஒரு மரத்திற்கு இழுத்துச் சென்று 10 நபர்கள் கற்பழித்துள்ளனர். பௌத்த ராணுவ வீரர்கள் தங்களுடைய இளம் சிறார்களின் தலையை பிடித்து மரத்தில் கடுமையாக மோதினார்கள் எனவும், தங்களுடைய குழந்தைகளையும் வயது முதிர்ந்த பெற்றோர்களையும் எரிந்து கொண்டிருக்கும் வீட்டிற்குள் தூக்கி எறிந்தனர் எனவும் மற்றும் தங்களுடைய கணவர்களையும் சுட்டு கொன்றனர் எனவும் பேட்டியளித்தவர்களில் பலர் விவரித்தனர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் அவசரகால பெண்ணுரிமைகள் சம்மந்தமாக ஆராய்ச்சி செய்பவரும் இந்த அறிக்கையின் ஆசிரியருமான ஸ்கைய் வீலர், “ரோஹிங்கியா மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் முக்கியமான மற்றும் பேராபத்தை ஏற்படுத்தும் அம்சமாக கற்பழிப்பு விளங்குகிறது” எனக்கூறினார். வங்காளதேசத்து அகதிகள் முகாம்களில் உள்ள பிற ரோஹிங்கிய பெண்களும் சிறுமிகளும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, உருச்சிதைவுகள் செய்யப்பட்டு, ஆடைகளை களைந்து அவமானப்படுத்தபட்டு இன்னும் அவர்களுடைய மார்பகங்களை கத்திகளால் வெட்டப்பட்டு, தங்களது கணவர் மற்றும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் முன் கற்பழிக்கப்பட்டு, இன்னும் அவர்களுடைய பிறப்புறுப்புகளில் கூர்மையான மரக்குச்சிகள் மற்றும் துப்பாக்கிகளால் சொறுகப்பட்டு, அதே சமயத்தில் அவர்களால் கற்பழிக்கப்பட்டதன் விளைவாக உதிரப்போக்கு ஏற்பட்ட நிலையில் கடுந்துயருடன் மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக அச்சுறுத்தும் மற்றும் நம்பத்தகாத பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது என அவர்கள் அனுபவித்த சித்திரவதைக் கதைகளை நினைவு கூர்ந்தனர். அதேபோல் ரோஹிங்கிய பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட வீடுகளுக்குள் அவர்கள் பூட்டப்பட்டனர். மேலும், அக்டோபர் மாதத்தில், மெடிசின்ஸ் ஃபிரான்டியர்ஸ் எனும் தொண்டு நிறுவனம், வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாமில் வசிக்கும் பெண்கள் மீது மியான்மரில் கட்டவிழ்க்கப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கற்பழிப்பின் காரணமாக ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சையளித்த பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 வயதுக்கு உட்பட்டோர் எனவும் சிலர் 10 வயதுக்கு உட்பட்டோர் எனவும் அறிவித்துள்ளது.

இந்த உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும், அனைத்து உலகத் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் சபையும், இம்மனிதர்கள் படும் துயரங்களின் இந்த நம்பிக்கையற்ற காட்சியை கண்டு வருகிறது, மனிதகுலத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் மிகவும் பயங்கரமான அட்டூழியங்கள் மற்றும் குற்றங்கள் பற்றிய அறிக்கைகளை படிக்கின்றன மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தை சிதைக்கும் விதத்திலான இனப்படுகொலைகளின் கதைகளை செவியுறுகின்றனர் இருந்தும் அவர்கள் நம் ரோஹிங்கிய சகோதர சகோதரிகள் மீது விழுந்திருக்கும் இத்துன்பத்தை தடுத்து நிறுத்த எதுவும் செய்யக்கூடாது என்று முடுவெடுத்து துளிகூட அசையாமல் அப்படியே நிற்கின்றனர். ஐ.நா வுடைய பாதுகாப்புக் குழு நவம்பர் மாதம் சந்தித்தபோது, அவர்களுடைய எந்தவொரு தார்மீக மனசாட்சியையும் கொண்டிருக்காத பர்மிய அரசாங்கத்திடம் “ராக்கைன் மாகாணத்தில் இதற்கு பிறகு அதிகப்படியான இராணுவ சக்தியை பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்ததோடு இந்த பேரச்சமூட்டும் நிகழ்வுகளுக்கு வெறுமனே வெத்துவார்த்தைகளை கொண்ட அறிக்கைகளை வெளியிடுவது மட்டும் தான் அவர்களுடைய அதிகப்படியான பதிலாக இருந்தது.

இந்த மாதம் ஏசியன் உச்சி மாநாட்டில் தலைவர்கள் கூடியபோது, ரோஹிங்ய பிரச்சனை பற்றி எதுவும் பேசாமல் அமைதியை காத்தனர். அமெரிக்க அரசுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கடந்த வாரம் மியான்மருக்கு சென்றிருந்த போது அந்நாட்டில் நிலவும் சூழலை இனப்படுகொலை நடைபெறுவதாக கூட அறிவிக்கவில்லை அதேநேரம் அந்த அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராக பரந்த அளவிலான தடையை விதிப்பதற்கு எதிராக அறிவுறுத்தினார். ஆனால் இவ்வனைத்தையும் விட வேதனை தரும் விஷயம் என்னவென்றால் நமது உம்மத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த இரத்தக்களரி மற்றும் கொடிய குற்றங்களை கண்டு முஸ்லிம் உலகிலுள்ள ஆட்சியாளர்களின் மற்றும் அரசுகளின் மயான அமைதி தான் – நம்பிக்கையாளர்களின் உயிர்களை பாதுகாக்கும் எந்தவொரு பொறுப்பை எடுப்பதில் இருந்தும் இந்த ஆட்சியாளர்களும் அரசுகளும் தங்களது கைகளை கழுவிக் கொண்டனர்.

இன்று, நாம் எந்தவொரு அரசியல் அல்லது பொருளாதார பலனும் இல்லாமல் அடக்குமுறையில் ஆளாக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக எந்த அடியும் எடுத்து வைக்காத மனித உயிர் மற்றும் கண்ணியத்தின் பெருமதிப்பை உதாசீனப்படுத்தும் முதலாளித்துவ மேலாதிக்கத்தை கொண்ட உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆக முஸ்லிம்களில் சிலர் அவர்கள் முஸ்லிம்களிடத்தில் உண்மையான கவலை கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்த பின்பும் இவர்கள் நம்பிக்கையாளர்களை காப்பாற்றுவார்கள் என தவறான நம்பிக்கையை கொண்டு எதற்காக இன்னமும் ஐ.நா அல்லது மேற்கத்திய அரசுகள் அல்லது முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களிடத்தில் திரும்புகிறார்கள்? நிச்சயமாக, நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தின் உண்மையான இஸ்லாமிய தலைமைத்துவம் தான் இந்த உம்மத்தின் கண்ணியத்தையும் இரத்தத்தையும் பாதுகாக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இருக்க முடியாது ஏனெனில் அது நம்பிக்கையாளர்களின் உயிரின் மீது உண்மையான கவலையை கொண்டிருக்கும் மற்றும் அவர்கள் மீது எவ்விதமான தீங்கிலிருந்தும் பாதுகாப்பதை அல்லாஹ் (சுபு) இந்த தலைமையின் மீது கடமையாக்கியுள்ளான். இதை 9-ம் நூற்றாண்டின் கலீஃபா, அல்-மு’தஸிம் பில்லாஹ் நிரூபித்துள்ளார், அவர் ரோமப் படைவீரரால் கைப்பற்றப்பட்டு அத்துமீறப்பட்ட முஸ்லிம் பெண் ஒருவரை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையை கொண்ட மாபெரும் படையொன்றை திரட்டி மீட்டெடுத்தார். இன்று அந்த கிலாஃபத் இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான நமது முஸ்லிம் சகோதரிகள் உலகெங்கிலும் அத்துமீறப்படுகிறார்கள் இருந்தும் அவர்களுடைய அழுகையை எந்த தேசமும் கவனிக்க மறுக்கிறது!

Comments are closed.