சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற இஸ்லாமிய உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்: ஆதரவாக இருக்கிறோம் என்கிற பொய்யின் கீழ் பாலஸ்தீனத்தை விட்டுக்கொடுக்க வலியுறுத்தி அதன் காரியத்தை கைவிடுவது

13/12/2017 புதனன்று, துருக்கி அதிபர் எர்துகனின் அழைப்பின் பேரில் துருக்கியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளுடைய கூட்டமைப்பின் அவசர உச்சி மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாடானது ஜெரூசலேமை யூத தேசத்தின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புடைய முடிவின் காரணமாக நடைபெறுகின்ற நிகழ்வுகளை பரிசீலனை செய்வதற்காக கூட்டப்பட்டது. டிரம்ப்புடைய அறிவிப்பு அமைதிக்கான முயற்சிகளுக்கு வேண்டுமென்றே தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நலன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் இந்த உச்சி மாநாட்டின் இறுதி ஆவணம் உறுதி செய்தது; இதில் பங்கேற்றவர்கள் இரு தேசத்தை அமைப்பது எனும் அடிப்படையில் ஒரு நீதமான மற்றும் முழுமையான அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் மற்றும் ஒரு மூலோபாய தேர்வாக – சர்வதேச பரிந்துரையின் அடிப்படையிலும், 2005-ம் ஆண்டு மக்காவில் நடைபெற்ற சிறப்புவாய்ந்த இஸ்லாமிய உச்சி மாநாட்டில் ஏற்று செயல்படுவதாக உறுதியளித்த 2002 அரபுடைய அமைதி முயற்சியை கடைபிடிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அறிவித்தனர்.

இவ்வாறு முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்கள் “இது இந்த நூற்றாண்டின் அறை” என்று அப்பாஸ் கூறியதை போன்று டிரம்ப் அவர்களை ஓங்கி அறைந்த நிலையிலும் வெட்கமில்லாமல் தொடர்ந்து வழிகேட்டிலும், சதி செய்த நிலையிலும், மற்றும் முஸ்லிம்களுடைய புனிதத்தை விட்டுக்கொடுத்தும் வருகின்றனர்; அவர்களுடைய நிர்வாணத்தை அரைகுறையாக மறைத்து வந்த மல்பரி இலையை (கோவணம்) கூட அவர்களுடைய மக்களுக்கு முன்னால் அவர் உருவி விட்டுள்ளார். மேற்கிடமிருந்து இது போன்ற அறைகளை வாங்கியும் அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும் மற்றும் சர்வதேச சட்டத்தையும் மற்றும் விட்டுக்கொடுக்கும் படியான அதன் தீர்வுகளையும் பற்றிக்கொண்டு தங்களுடைய துரோகத்தை இந்த ஆட்சியாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பின் மூலமாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தின் பிரச்சனையில் குற்றவாளியான டிரம்ப்புடன் குற்றம் புரிவதில் போட்டியிட்டு வருகின்றனர். பாலஸ்தீனத்தின் பிரச்சனையில் இவர்களுடைய பங்கு மிகவும் அபாயகரமானது ஏனெனில் ஒருபுறம் அவர்கள் அல்-குத்ஸ் மற்றும் பாலஸ்தீனத்தின் பக்கம் இருப்பதாக கோருகிறார்கள் அதேசமயம் இதற்கு அடிப்படையான ஒரு தீர்வை அடைவதிலிருந்து உம்மத்தை வழிகெடுத்து இந்த பிரச்சனையை முடித்து வைக்க நாடுகிறார்கள்.

பாலஸ்தீனத்தின் விஷயத்தில் பாதுகாப்பு சபையின் சர்வதேச தீர்மானங்கள், மற்றும் அரபுடைய அமைதி முயற்சி, மற்றும் அங்கு முழுமையான அமைதியை ஏற்படுத்துவது மற்றும் 78% நிலப்பரப்பின் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக ஆக்கியதை அங்கீகரித்ததற்கு அப்பாற்பட்டு 1967-ல் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளின் அடிப்படையிலான ஒரு பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவது மற்றும் அல்-குத்ஸை கிழக்கு மேற்காக பிரிப்பது, மற்றும் யூதர்களின் ஆதிக்கத்தை அனுமதிப்பது மற்றும் மறுமலர்ச்சியை தடுக்கும் அல்லது அதன் கண்ணியத்தை மீண்டும் பெறுவதிலிருந்து தடுத்து வரும் உம்மத்தின் உடலிலிருக்கும் விஷம் தோய்ந்த கத்தியின் விஷயத்தில் அவர்கள் கடைபிடிக்கும் நிலைக்கு நாம் எவ்வாறு அர்த்தம் கொள்வது?! டிரம்ப்புடைய சமீபத்திய அறிவிப்பானது அல்-குத்ஸை முழுமையாக சொந்தம் கொண்டாடும் உரிமையை யூத தேசத்திற்கு அளிப்பதை நாடுகிறது. முஸ்லிம் ஆட்சியாளர்கள் வெளியிட்ட ஆவணமும் அமைதி முயற்சியை கடைபிடித்தலும் மற்றும் இரு தேசம் உருவாக்குதல் எனும் தீர்வானது மேற்கு ஜெரூசலேம் என்று அவர்கள் அழைப்பதை உள்ளிட்டு பாலஸ்தீனத்தின் முக்கால் பகுதியை யூதர்கள் சொந்தம் கொண்டாடும் உரிமையை தர நாடுகிறது!!!

நிச்சயமாக, முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய துரோகத்தை தீவிரப்படுத்தியுள்ளனர் மற்றும் பாலஸ்தீனத்தை ஒரு நாளின் சில மணி நேரங்களில் மீட்கும் வல்லமையை கொண்ட இராணுவங்களையும் படைகளையும் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் சரணடையக்கூடிய வகையில் ஏமாற்றும் வகையிலான தீர்வுகளை நோக்கி அழைப்பதிலிருந்து ஒருபோதும் அவர்கள் தங்களை தடுத்துக் கொள்ளவில்லை, (பயங்கரவாதம்) மற்றும் (தீவிரவாதத்திற்கு) எதிரான போர் என்று அவர்கள் இந்த ஆவணத்தில் வலியுறுத்தியது இஸ்லாத்தை குறித்தானது, அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கடுமையான போரையும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு அமைதியான மற்றும் சட்டப்பூர்வமான போராட்டத்தையும் செய்ய நாடுகிறார்கள்!!

அவர்களுடைய இறுதி மூச்சு வரையிலும் அல்லது அவர்களுடைய முகத்திலுள்ள கடைசி துளி நீர் இருக்கும் வரையிலும் முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்கள் உம்மத்தின் பிரச்சனைகளையும் அதன் புனிதத்தையும் தொடர்ந்து சரணடைய செய்வார்கள் என்பதும், அதன் பிரச்சனைகளுக்கான உண்மையான தீர்வை நோக்கி செல்வதிலிருந்து உம்மத்தை வழிகெடுக்கவும், மக்களை அவற்றிலிருந்து திசை திருப்பி முஸ்லிம் நிலப்பரப்புகளில் ஆக்கிரமிப்பை ஆதரிக்கவும் அது தொடர்ந்து நீடித்திருக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுக்களையும் தந்திரங்களையும் கடைபிடிப்பார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. பாலஸ்தீன பிரச்சனைக்கான ஒரு முறையான தீர்வு என்னவென்றால் யூதர்களின் பிடியிலிருந்து அதை முழுமையாக விடுவிப்பதாகும். படைகளை அனுப்பி இந்த ஆக்கிரமிப்பின் கோட்டைகளை தகர்த்தெரிந்து அல்-அக்ஸா மஸ்ஜிதை தூய்மைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்; இதற்காக இராணுவங்களிலுள்ள நம்பிக்கையுடைய மற்றும் உண்மையுள்ளவர்கள் அதை விடுவிப்பதன் நன்மதிப்பை பெறவும் பாலஸ்தீனத்தின் முழுவதிலிருந்தும் இந்த குற்றம்பிடித்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடச் செய்யவும் மற்றும் வழிகெடுத்து தீங்கிழைக்கும் இந்த ஆட்சியாளர்களிடமிருந்து உம்மத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உடனடியாகவோ அல்லது பிறகோ அதை நோக்கி நகர வேண்டும்.

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انفِرُواْ فِي سَبِيلِ اللّهِ اثَّاقَلْتُمْ إِلَى الأَرْضِ أَرَضِيتُم بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الآخِرَةِ إِلاَّ قَلِيلٌ﴾

“நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!”
(அல்குர்ஆன் : 9:38)

Comments are closed.