சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அணைத்து பிரச்சினையின் தாயாக உள்ள பிட்காயின் (Bitcoin)

ப்ளூம்பெர்க் குறிப்பிடத்தக்க தலைப்பு செய்தியை 13 டிசம்பர் 2017 அன்று வெளியிட்டது : ” பிட்காயினின் 8.7 % வீழ்ச்சி என்பது அதனுடைய சாதனை ஓட்டத்தை ஒப்பிடும்போது அற்பமான விஷயம்” மற்றும் தற்போது பிட்காயின் எதிர்காலத்தை அறிமுகப்படுத்தியத்தின் மூலம்  முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த நாள் முதலே ,மற்ற தலைப்பு செய்திகள் பிட்காயினின் ஆபத்தை பற்றியோ “பிட்காயின் வரலாற்றின் மிகப்பெரிய மாயை” அல்லது அதனுடைய முதலீடு திறன் பற்றியோ “பிட்காயின் ஒரு மில்லியன் டாலரை எட்டும் என தொழிலதிபர் கூறுகிறார்”  என வெளிவர தொடங்கியது.  எனவே இதனுடைய உண்மை நிலை என்ன , இது வங்கிகள் மற்றும் உலக பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும் ?

கருத்து:

பிட்காயின் என்பது டிஜிட்டல் நாணயம் , இதனை கிரிப்டோ நாணயம் என்றும் அழைப்பர். இது 2009 ஆண்டு ஒரு சில தெரியப்படாத நபர்களால் அல்லது குழுவால் “பிளாக்செயின்” எனும் வழிமுறையின் மூலம் சில கணினிகளின் இணைப்பின் பரிமாற்றத்தின் மூலம் சடோஷி நாகமோட எனும் பெயரால் உருவாக்கப்பட்டது. அத்தருணத்தில் 2 பிட்காயின்கள் மூலம் ஒரு பீசா வாங்க முடிந்தது, ஆனால் இன்று அதே நாணயத்தின் மதிப்பு 33000 டாலர்களாக உயர்ந்துள்ளது. இன்னும் கூறப்போனால் ப்ளூம்பெர்க் அறிவித்த  8 .7  சதவீத வீழ்ச்சி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டுமே இதனுடைய மதிப்பு மும்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் இதனை வாங்கும் ஆர்வம் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதெனில் இதனை விற்கும் ஆன்லைன் பரிமாற்றங்கள் அவ்வப்போது சேதமடைந்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை அடமானம் வைக்கின்றனர், தங்கள் வாழ்க்கை சேமிப்புக்களையும் இதில் முதலீடு செய்கின்றனர். எதிர்காலத்தில் இதனுடைய வர்த்தக மதிப்பு சூதாட்டத்தில் நிர்ணயிப்பதுப் போல் நிர்ணயிக்கப்படும்.

பிட்காயின் என்பது ஒரு மாற்று வழிமுறை மேலும் அதன் மூலம் நாம் பொருட்களையும் சேவைகளையும் வாங்க முடியும். அரசியல் தத்துவர்கள் பிட்காயின் தற்போதைய வங்கி முறையை குலைத்துவிடும் என்றும் தற்போதைய அரசு நிர்ணய நாணயத்தின் மதிப்பை இழக்க வழிவகுக்கும். இந்த அதிகமாக மதிக்கப்படக்கூடிய கிரிப்டோ நாணயங்கள் இந்த சீர்கெட்ட முதலாளித்துவ வங்கிமுறையை கீழறுக்க கூடியதென்றபோதிலும் , அரசாங்கம் பல முறைகளில் இதனை கட்டுப்படுத்தவும் வழியுள்ளது. அமெரிக்கா பெடரல் வங்கி பிட்காயின் மாற்று நிலைகளில் அதில் ஈடுபடுவர்களின் பெயரை வரி பற்றிய காரணங்களுக்காக கேட்டுள்ளது. மேலும் அவர்களே இத்தகைய கிரிப்டோ நாணயங்களை உற்பத்தி செய்வதை பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளனர்,. தற்போதய அரசு நிர்ணய நாணயங்களுக்கு நிகராக இருப்புகளை அரசாங்கம் வைத்திருக்க வேண்டும் ஆனால் இத்தகைய நிலை தனியார் கிரிப்டோ நாணயங்களுக்கு கிடையாது. இதனுடைய நிறுவனர் சடோஷி நாகமோட என்பவர் ஒரு மர்மமானவர் எனினும் செல்வத்தை பெருக்க வேண்டும் என்ற பேராசையே பிட்காயினின் மதிப்பு  கூட காரணமாகிறது. அதிகமானோர் பிட்காயினை குமிழி என்றும் அது கூடிய சீக்கிரம் உடையும் என காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிட்காயினை வாங்கும் அதிகமான மக்கள் அதனை பெரும் லாபத்திற்கு விற்பதற்காகவே காத்திருக்கின்றனர், இதில் லாபம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பினும், இதன் மதிப்பை வலு சேர்க்க எந்த ஒரு ஆதரவுமில்லை அல்லது இதனை வாங்க போதிய மக்கள் இல்லாதபோது இதனை புதிதாக வாங்க வைக்க முடியாது. அரசு நாணயங்களும் வீழ்ச்சிப்பெரும் அபாயம் இருப்பினும் , அரசு வங்கிகள் குறைந்தளவாவது அதற்கு நிகரான இருப்பை வைத்திருக்கும். ஆனால் பிட்காயின் அத்தகைய நிலையை கொண்டதல்ல. தங்கத்துடைய மதிப்பு 2011  ஆண்டு கூடிக்கொண்டு சென்ற போது அதுவும் ஒரு குமிழி(bubble) என்று கூறியிருந்தனர், அதனுடைய வீழ்ச்சி 2012  ஆம் ஆண்டு ஏற்பட்ட போதும் , அதனுடைய மதிப்பு பெருமளவு குறையவில்லை. தங்கத்தை மக்கள் ஆபரணமாக பயன்படுத்துவதினால் அதன் விலை வீழ்ந்தாலும் ஒரு வர்த்தக பொருளாக உள்ளதால் அது வலுவாக உள்ளது. ஆனால் பிட்காயின் ஒரு நிஜ மதிப்பை பெறவில்லை, எனவே இதன் மதிப்பு எந்த அளவேனும் உயரலாம் அதேநேரத்தில் மதிப்பில்லாமல் விழலாம். எனவே இத்தகைய நிலையற்ற தன்மை இதனை ஒரு நலிந்த நாணயமாகவும் ஒரு ஆபத்தான முதலீடாகவும் சித்தரிக்கிறது.

எனவே முதலாளித்துவ வங்கி நாணயங்கள் பிடியிலிருந்து தப்பிக்க நினைப்போருக்கு மாற்று, பிட்காயின் அல்ல, தங்கத்தையும் வெள்ளியையும் அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாணய அமைப்பு முறையாகும். பிட்காயின் தற்போதைய நாணயத்துக்கு சவாலாக அமையும் என நினைப்பது சரி தான். ஆனால் அது பிட்காயினின் வளர்ச்சியால் அல்ல வீழ்ச்சியால். அதிகமான மக்கள் இதனை லாபத்தின் நோக்கத்தோடு தொடர்ந்து வாங்கும்போது இதனுடைய மதிப்பு வரலாறு காணாத அளவு உயரும் மேலும் அதன் உச்சத்திலிருந்து வீழ்ச்சிபெறும்போது, உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்கு சந்தை வீழ்ச்சி , ரியல் எஸ்டேட் வீழ்ச்சி , பொருட்கள் வீழ்ச்சி என இதற்க்கு முன்பு பல வீழ்ச்சிகள் ஏற்பட்ட போதிலும் அதனை குறிக்கும் ஒரு உண்மையான ஒரு விஷயம் இருந்தது அதனை கொண்டு மீண்டும் ஒரு வருமானத்தை பெருக்கும் வழியிருந்தது, எனவே இதனுடைய மதிப்பு வீழ்ச்சியடைந்த போதிலும் ஏதேனும் ஒரு மதிப்பு இவைக்கு இருந்தது. ஆனால் பிட்காயின் வீழ்ச்சி பெற்றால் ஒரு மதிப்பும் மிச்சம் இருக்காது.

Comments are closed.