சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள்

1979-ல் ஈரானிய புரட்சி நடைபெற்றதிலிருந்து ஷி’ஆ மதகுருமார்கள் ஈரானிய வெகுஜனங்களிடத்தில் புனிதத்தன்மைக்கு நெருங்கிய தங்களுடைய அந்தஸ்தை அவர்களை கட்டுப்படுத்துவதற்கும், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், சியோனிச மற்றும் அமெரிக்க திட்டத்திற்கு எதிராக நிற்கும் இஸ்லாத்தின் முன்னணி வீரராக ஈரானிய அரசு விளங்குவதாக அவர்களை நம்ப வைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன் யதார்த்தமானது அரேபிய தீபகற்பத்தில் இப்னு சவூதின் அரசை போன்று அது நிறுவப்பட்ட நாள் முதல் இந்த ஈரானிய மதகுருமார்களின் அரசு அமெரிக்க நலன்களை காப்பதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஈரானிய ஆதரவு இல்லாமல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பும் அதனைத் தொடர்ந்து அதன் மீதான ஆக்கிரமிப்பும் நடைபெற்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்பது அறவே கிடையாது, அப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களுக்கு தளவாடங்கள் சென்றடைவதை தடுக்கும் விதமாக ஈரான் தனது மேற்கு எல்லையை மூடியது. மேலும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதனை தொடர்ந்து ஈராக்கிய முஸ்லிம்களின் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கர நிகழ்வுகளும் இந்த குருமார்களுடைய அரசின் ஆதரவு இல்லாமல் நிகழ்த்தி இருக்கவே முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக சிரியாவின் கொடுங்கோலனுக்கு ஆதரவாக இந்த ஈரானிய அரசின் தலையீடானது இந்த மதகுருமார்களின் அரசுடைய புரட்சிகரமான கோஷங்களின் வெறுமையையும் மற்றும் யூத அரசுக்கு எதிராக இருப்பதாக செய்து வந்த பாசாங்கையும் தோலுரித்துக் காட்டியது. சியோனிச அரசை அழிப்பதற்கான விருப்பத்தை கொண்டிருப்பதாக கூச்சலிட்டு வரும் இந்த அரசு 50 வருடங்களுக்கும் மேலாக சியோனிச அரசை காக்கும் வண்ணமாக அதன் வடக்கு எல்லையை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருந்த அல்-அசாதின் அரசுக்கு தனது ஆதரவை எதற்காக அளிக்க வேண்டும்?

சிரியாவில் இந்த மதகுருமார்களின் அரசின் தலையீடானது அமெரிக்காவுடனான அதன் சிநேகத்தையும் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு இந்த குருமார்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து வருவதை குறிப்பிட்டு காட்டுகிறது. அமெரிக்காவுக்கு அல்-அசாதின் அரசை காப்பாற்றுவது எந்த அளவுக்கு முதன்மையாக இருக்கின்றது என்றால் டமாஸ்கஸில் விரைவாக கவிழ்ந்து வரும் அரசை காப்பாற்றும் அவசரத்தில் அது சட்டத்துக்கு புறம்பான ஹிஸ்புல்லாஹ் (ஈரானுடைய பதிலாள்) வின் போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுவதற்கான வழிவகைகளை எளிதாக்கியதோடு மட்டுமல்லாமல் வேகமாக குறைந்து வரும் அல்-அசாதின் இராணுவத்தை நிரப்ப ஹஜா(Z)ரா மற்றும் பாகிஸ்தானிலுள்ள ஷிஆக்கள் கொண்டு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒரு கொலம்பிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் மூலமாக ஈரானுக்கு 1.7 பில்லியன் டாலர்களை பணமாக அமெரிக்கா அனுப்பி வைத்தது. இந்த பணப் பட்டுவாடாவை தொடர்ந்து சிரியாவில் அமெரிக்காவின் தலைமையிலான ஊடுருவலுக்கு செலவு செய்வதற்கு ஏதுவாக 33.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தது.

சொற்திறன் மிக்க கோஷங்களும் போலியான ஆத்திரத்துடன் கூடிய அலறல்களும் ஈரானுடைய இந்த மதகுருமார்களின் கோர முகத்தை மறைக்க முடியாது, சிரியாவில் 5,00,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, யமனில் நடைபெறும் உள்நாட்டு போர் மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் பிரிவனைவாத போரினால் தினமும் கொல்லப்பட்டு வருவது ஆகியவை இந்த குருமார்களின் அரசுடைய கொள்கைகளின் விளைவினாலும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதற்காக வேண்டி செய்யப்பட்ட அதன் ஊடுருவலினால் ஏற்பட்ட பின்விளைவுகளில் சிலவாகும்.

மத்திய கிழக்கில் உள்ள இதர அரசுகளை போன்று தமது ஆட்சி நீடித்து இருப்பதே அதன் மிகமுக்கிய நோக்கமாகும். இதர காரணங்களை அது இரண்டாம்பட்சமாக தான் கருதுகின்றது. ஈரான் 350 பில்லியன் டாலர்களை கொண்டு மத்திய கிழக்கில் மூன்றாம் பெரிய பொருளாதாரமாக விளங்கும் நிலையில் இந்த மதகுருமார்கள் மற்றும் அவர்களுடைய கைக்கூலிகளின் கையாடல்கள் மற்றும் தவறான நிர்வகித்தல் மற்றும் அமெரிக்க நலன்களை பாதுகாப்பதற்காக வேண்டி இந்த குருமார்கள் நடத்திய ஊடுருவலின் காரணமாக ஏற்பட்ட செலவினங்கள் ஆகியவை ஈரானிய வெகுஜனத்தை வறுமை நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. அதிக அளவிலான நிதிகளை அமெரிக்கா அதற்கு வழங்கிய நிலையிலும் கடந்த 10 வருடங்களில் ஈரானிய குடும்பங்களின் சராசரி வாழ்க்கை நிலை 30 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 26,000 அளவுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த குருமார்களின் அரசு இப்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை அமெரிக்க/சியோனிச/வஹ்ஹாபிய சூழ்ச்சிகளாக சித்தரித்தாலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை இந்த கூற்றை பொய்யாக்குகிறது, ஆர்ப்பாட்டக்காரர்களில் பெருமளவில் இந்த மதகுருமார்களின் பிரிவினைவாத மற்றும் தேசியவாத கொள்கைகளினால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர்.

ஈரானிய மதகுருமார்களின் அரசும் இப்னு சவூதின் அரசும் அமெரிக்காவுடைய ஆதரவை பெறுவதற்காக ஒருவரை மிஞ்சி ஒருவர் தாராளவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வருகின்ற நிலையில், இந்த நாடுகள் மிகவும் கேவலமான முறையில் அமெரிக்காவுக்கு அடிபணிந்து நடந்தாலும் முஸ்லிம்களின் நிலையானது நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது, எந்த அளவுக்கு என்றால் எந்தவொரு தேசமும் மேற்கத்திய தடையுத்தரவினாலும் வர்த்தக கொள்கைகளினாலும் வறுமை நிலைக்கு இட்டுச்சென்று அதை தரைமட்டத்திற்கு கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல் இதற்கு மாறாக மேற்கத்திய காலனியாதிக்கத்தை எதிர்த்தெறிவதற்கு இஸ்லாத்திற்கும் மற்றும் முஸ்லிம்களின் நலன்களுக்காக செயல்படும் ஒரு கலீஃபாவின் கீழ் உலகளாவிய அளவில் ஒன்றிணைந்த ஒரு உம்மத்தினால் மட்டுமே முடியும்.

1- http://www.newsweek.com/hezbollah-cocaine-smuggle-united-states-obama-751928

2- https://www.cbsnews.com/news/u-s-paid-1-3-billion-to-iran-two-days-after-cash-delivery/

Comments are closed.