சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மதச்சார்பற்ற நாட்டினால் முஸ்லீம் பெண்களை உண்மையில் பாதுகாக்க முடியுமா?

பிரிட்டன் தொலைகாட்சி சேனல் ஒன்று மீண்டும் ஒரு முறை முஸ்லிம் சமுதாயத்தின் இஸ்லாமிய மாண்புகளின் பின்பற்றுதலை தாக்க முயற்ச்சிக்கிறது.

திருமணத்தை அதன் அடிப்படை தூணாகக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் நம்பிக்கையை கொண்ட ஆண்களும், பெண்களும் குடும்ப கட்டமைப்பிற்கு வெளியே உறவுகள் வைத்திருக்க இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, என்பதனை எவரும் அறியாமல் இருக்க முடியாது. ஒரு தாராளவாத (liberal) சமுதாயத்தில், எதுவும் செய்யலாம் என்றிருக்க, இளம் முஸ்லிம் தம்பதிகள் தொடர்ந்து மணவாழ்வில் ஒன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி தளர்வை உண்டாக்கக்கூடிய அறநெறிகளின் அழுத்தங்களுக்கும் ஈடுகொடுக்காமல் அவர்கள் தங்களுடைய நல்ல மாண்புகளை இழக்கவில்லை.

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

”உங்களிலிருந்தே (உங்களுடைய ) ஜோடிகளை, அவர்களின் மூலம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காக உங்களுக்காக அவன் படைத்ததும்; உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் அவன் ஆக்கியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் – நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான அத்தாட்சிகள் இருக்கின்றன “. (அர்ரூம் :21)

ஒரு சமுதாயத்தில், தந்தைமார்களில் கிட்டத்தட்ட எட்டில் ஒருவர் தனது குழந்தைகளுடன் தொடர்பில் இல்லாத நிலையில் இருக்கின்றார்; மேலும், திருமணம் செய்து கொள்ளாமல் மேற்கொள்ளும் உறவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை குடும்ப கட்டமைப்பை முறிப்பதில் பங்களித்துள்ளது. இவ்வாறிருக்க, நமது எதிர்பார்ப்பு என்பது இந்த பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று இருக்கும். ஆனால் அதற்கு மாறாக, மதச்சார்பற்ற (secular) நடைமுறையானது கலாச்சார மாண்புகள் மற்றும் திருமண மரபுகளை சாடி அதன் மூலம் இஸ்லாமைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முற்பட்டுள்ளது; பிற்படுத்தப்பட்ட அடக்குமுறையாக இஸ்லாம் சித்தரிக்கப்பட்டால் மக்கள் அதிலிருந்து பின்வாங்கி விலகிடுவார்கள் எனும் நம்பக்கையில் இதை மேற்கொள்கிறார்கள். இவ்வாறிருந்தும் அவர்களது முயற்சிகள் காலப்போக்கில் மீண்டும் மீண்டும் தோல்வியடைகின்றன. இதன் எளிய உண்மை என்னவென்றால் – அவர்கள் குற்றச்சாட்டுகளின் கவனம் கலாச்சார மரபுகள் மீதானது, இவை பல சமயங்களில் இஸ்லாமிய ஷரீ’அத்தில் [குர்’ஆன் மற்றும் சுன்னா -நபிகளின் போதனைகள்] உள்ள திருமணத்திற்கு சம்மந்தமின்றி அதற்கு எதிராக அமைந்துள்ளது.

நவம்பர் 21ம் தேதி, சேனல் 4ல் “முஸ்லிம் திருமணங்களைப் பற்றிய உண்மை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படமானது எவ்விதத்திலும் இதற்கு வேறுபட்டதில்லை. திருமணத்தை பற்றி இஸ்லாம் என்ன கற்பிக்கிறது என்பதை விட்டுவிட்டு, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில கணவர்களின் மோசமான நடத்தையை பதியவைக்க அதன் தயாரிப்பாளர்கள் முயன்று, அதன்மூலம் நிக்காஹ் ஒப்பந்த முறையையே குற்றம் சாட்டி, என்னவோ இஸ்லாத்தில் முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்கள் உரிமைகள் துஷ்பிரயோகம் அல்லது மறுக்கப்படுவதிலிருந்து அவர்களை பாதுகாக்க வழி இல்லாதது போல் சித்தரிக்கின்றனர்.

ஒரு முழு சமூகத்தின் மீதான இத்தகைய தவறான பிரதிநிதித்துவம் மற்றும் அப்பட்டமான அவதூறை கண்டு யாரும் ஆச்சரியப்படக் கூடாது, இது தற்பொழுது மதச்சார்பற்ற தாராளவாத உயர்தட்டினர் (secular liberal elite ) அமைதியாய் எடுத்துக் கொண்ட நடைமுறையாகிவிட்டது, ஏனெனில் வளரும் இஸ்லாமிய எழுச்சியை கண்டு அவர்கள் மிகவும் அஞ்சுகின்றனர், இதற்காக சிறிதும் வெட்கமின்றி பொய் பிரச்சாரம் மற்றும் வதந்திகளை பரப்புகின்றனர்.

அந்நிகழ்ச்சி பெண்ணிய செயற்பாடுகளுடன் சரியாக பொருந்தி இஸ்லாமிய மாண்புகளை ஆண் ஆதிக்கம் கொண்டதாக சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இஸ்லாத்திற்கு எதிரான, குடும்ப வாழ்விற்கு எதிரான உலக சிந்தனையான “பெண்ணியத்தின்” பக்கம் ஈர்க்க செய்யப்பட்ட பயனற்ற முயற்சியாகும். இஸ்லாத்திற்கு நேர் முரணாக இருக்கும் இந்த பாதையை பெண்கள் எடுக்க துவங்கினால் அவர்கள் இஸ்லாமிய படிப்பினைகளை விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையே.

ஆணும் பெண்ணும் ஒன்றே, இஸ்லாம் போன்ற மதம் ஆண்களால் துவக்கப்பட்டது எனவே பெண்களை காட்டிலும் ஆண்களை சிறப்பிக்ககிறது என்னும் பொய்யான கோட்பாட்டின் மீது கட்டப்பட்ட மிகவும் ஆபத்தான, வழுக்கும் சரிவு பாதையே “பெண்ணியம்” / “Feminism”.

இஸ்லாத்தை பொறுத்தவரை, பெண்ணியத்தின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. “இஸ்லாம்” என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்தது, எந்த ஒரு தனி மனிதரின் கண்டுபிடிப்பு அல்ல. முக்கிய அடிப்படையில், இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமானவர்கள் என்றே கருதுகிறது: ஆண்கள், பெண்கள் ஆகியோரை அல்லாஹ் தனது அருள்மறை, குர்ஆனில் பொதுவான கடமைகள், உரிமைகள், மற்றும் தடைகளை கொண்டு ஏவுகிறான். ஆண்களும், பெண்களும் அவன் ஏவியவற்றிக்காக கேள்வி கேட்கப்படுவார்கள், அவன் ஏவப்படாதவற்றிக்கு கேள்வி கேட்கப்பட மாட்டார்கள். ஒருவர் மற்றவரை விட சிறந்தவரோ, முக்கியத்துவம் வாய்ந்தவரோ அல்ல.

நபி (ஸல) கூறினார்கள், “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர். ஆட்சியாளர் ஒரு பொறுப்பாளர் (தனது மக்களுக்கு), மற்றும் ஒரு ஆண் தனது குடும்பத்தினரின் பொறுப்பாளர், ஒரு பெண் தனது கணவரின் வீட்டிற்கும் அவரது குழந்தைகளுக்கும் பொறுப்பாளர், எனவே உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்”.

எனினும், ஆண்களையும் பெண்களையும், ஒரு சில விஷயங்களில் அல்லாஹ் வெவ்வேறு விதமாகவே பார்க்கின்றான், எனவே அல்லாஹ்வின் நுண்ணிய ஞானத்தின் படி அல்லாஹ் ஆணையும், பெண்னையும் சில விஷயங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளான், சில விஷயங்களில் வெவ்வேறாக ஆக்கியுள்ளான்.

இந்நிகழ்சியின் தரம் குறைந்த இஸ்லாமிய சமுதாயத்தை கலைக்கும் முயற்சி மற்றும் இஸ்லாத்தின் உண்மையை பற்றிய அதன் அப்பட்டமான அலட்சியம் ஒரு புறம் இருக்க, நிகழ்ச்சியின் முடிவில் சொல்லப்பட்ட பரிந்துரைகள் சுதந்திர மதச்சார்பற்ற மேல்தட்டோரின் கைவண்ணத்தை அம்பலப்படுத்துகிறது. இவ்வாறிருக்க, அது ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது, முரணாக, அது நம்மை உண்மைக்கு வழிநடத்தும், ஒரு கணம் நாம் சிந்தித்தால்.

وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

“…அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர்; அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான், (எனினும்) அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் மிகவும் மேன்மையுடையவன் “. (அன்ஃபால்: 30)

பொய்யான இஸ்லாமிய தோற்றம் கொண்ட திருமணங்களிருந்து முஸ்லிம்களை ‘பாதுகாக்க’ பிரிட்டிஷ் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரை உண்மையான தீர்வு அல்ல, இது கோழிகளை நரி பாதுகாக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. ஒருசில முஸ்லிம்கள் உடனடி தீர்வு என்று இத்தகையவையினால் தூண்டப்படலாம், ஆனால் நாம் அனைவரும் உணர வேண்டியது பிரிட்டிஷ் அமைப்பு இங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு எவ்வித அதிக அக்கறையும் காட்டவில்லை, அவர்கள் யமன், மியான்மர், சிரியா மற்றும் ஈராக் ஆகியவற்றில் அவர்களின் மோசமான வெளியுறவு கொள்கையின் நேரடி விளைவாக பரிதவிக்க விடப்பட்டுள்ள லட்சக் கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு காட்டும் அக்கறை தவிர்த்து. வெறும் வெளித்தோற்றத்தில் பாதுகாப்பும், கண்ணியமும் உள்ள பிரிட்டனில், போராடும் பெண்களுக்கு அவர்களின் எந்த மாற்றமும் சமமே. அதன் தாராளவாத மதிப்புகளால் (liberal values) சமத்துவமின்மை, சுயநலம், பெண்களுக்கு எதிரான வெறுப்பு, துன்புறுத்தல்கள், வீட்டுக் கொடுமைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் ( domestic violence ) ஆகியவை பெண் சமுதாயத்திற்கு எதிராக நிகழும் குற்றங்கள் மிக சில.

மதச்சார்பின்மையின் தாராளவாத திருமண ஒழுங்குமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், மக்களுக்கு நல்லிணக்கம் கொண்ட வாழ்க்கையை வழங்க தவறிவிட்ட ஒரு முறையை தான் ஒருவர் ஏற்கிறார். இங்கிலாந்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான வீட்டுக் கொடுமைகள் மற்றும் இன்னபிற அவநடத்துதல்களின் கூடுதலான அளவினால் நிம்மதியற்ற திருமண வாழ்வில் போராடும் பிரிட்டன் பெண்களை கருதும் ஒருவர் தாராளவாத சமுதாயம் தீர்வாக முன்வைக்கும் எதையும் எடுத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரிட்டனில் திருமண வாழ்க்கைக்குள்ள ஒரு பொதுவான நெருக்கடியால் விவாகரத்து மிகவும் பரவலாக உள்ளது, இதனால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனகசப்பு – குறிப்பாக குழந்தைகள். இவை இணக்கமான திருமணங்களை உருவாக்குவதில் மதச்சார்பற்ற அமைப்பின் தோல்வியை பிரதிபலிக்கிறது – இதில் பெண்ணிய கொள்கைகளுக்கும் சரிசமமான பங்கு உண்டு, இது தம்பதிகளுக்கு இடையே உரிமைகள், பொறுப்புகள், பங்களிப்புகள் தொடர்பான குழப்பங்களுக்கும் மோதல்களுக்குமே வழிவகுத்துள்ளது. இத்துடன் மற்றவர்களுடைய “பொருத்தமான” வாழ்வை ஊடகங்கள் முழுதும் பரப்பி, மக்கள் அவர்களின் மணவாழ்வில் தொடர்ச்சியான அதிருப்தி கொள்ள அழைப்பு விடுக்கின்றனர். இப்படிப்பட்ட செல்லரிக்கும் சிந்தனைகள் ஆண் பெண் உறவினை சேதப்படுத்துகிறது, நிச்சயமாக நாடாளுமன்றமே தொந்தரவுகளின் குகையாக இருந்து, அதன் நிர்வாகமும் வக்கிரகுணத்திற்கு கண்மூடித்தனமாய் உள்ளது.

இவ்வனைத்தும் இஸ்லாத்திற்கு நேர்மாறாக உள்ளவை; வலுவான இணக்கமான திருமணங்களுக்குள்ள முழுமையான, அனைத்து விஷயங்களையும் அடக்கிய விரிவான சட்டங்களை கொண்டது இஸ்லாம். இருபாலருக்கும் இடையே போட்டி, பொறாமை என்ற பெண்ணியத்தின் விளைவு போல் இல்லாமல், ஒருவர் மற்றவரை முழுமைபடுத்தும் தெளிவாக வரையறுக்கப்பட்ட முறையாக உள்ளது.

இவை எல்லாவற்றிலும் முக்கியமான கேள்வி என்னவென்றால், இஸ்லாம் எவ்வாறு பெண்களை போலி திருமணங்கள், பலதார மணம், வீட்டுக் கொடுமைகள், மற்றும் பிற குடும்பக் குற்றவியல்கள் இருந்து பாதுகாக்கும்? இதன் பதிலோ வேதனையான உண்மையாகும். மார்க்க கோட்பாடுகளுக்கு அதன் சட்டங்களை போட்டு, நடைமுறைப்படுத்தி சமுதாயப் பிரச்சனைகளை தீர்க்க, அரசாங்கம் என்ற நிறுவனத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்கான நபி வழியில் மீதுள்ள கிலாஃபத் தற்போதைய முஸ்லிம் நாடுகளில் இல்லை, மாறாக மதசார்பற்ற அரசாட்சிகள் (secular kingdoms), கூட்டாட்சிகள் (emirates), சர்வாதிகாரம் மற்றும் குடியரசுகளை இங்கு அமைத்து, ஆதரித்து வருகிறது பிரிட்டன் போன்ற காலனித்துவ அரசுகள். இவர்களும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு சமமாக மோசமாகவே உள்ளனர், இதன் எளிய காரணம் இவர்கள் இஸ்லாமிய சட்டத்தின்படி ஆட்சி செய்யவதோ அல்லது நீதிவழங்குதோ இல்லை .

நிச்சயமாக மீண்டும் கிலாபத் அமைக்கப்படுவதன் மூலம் தான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்களுக்கு உண்டான உரிமைகளும், கண்ணியமும், பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியும்; அப்பொழுது இஸ்லாமிய சமுக அமைப்பு (Islamic Social System) நடைமுறை படுத்தப்பட்டு, ஆண்கள் மற்றும் பெண்களின் சமூக வாழ்கை நீதியான முறையில் சீர்ப்படுத்தப்படும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “திருமணத்திற்கு பின் ஒரு மனிதன் தன் ஈமானில் பாதியை பூர்த்தி செய்கிறான், எனவே மற்றொரு பாதி விஷயத்தில் அவன் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்” . மேலும் நபி (ஸல) கூறினார், ” ஒழுக்கத்தில் மிக சிறந்தவர், ஈமான் கொண்டோரில் மிக சிறந்தவர் ஆவார் ” மற்றும் “மணைவியிடத்தில் சிறந்தவர் உங்களில் சிறந்தவர் ஆவார் “.

நபி (ஸல்)அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள், ஹிந்த் பின் உத்பா நபியிடம் (ஸல்) வந்து, ” ஒ அல்லாஹ்வின் தூதரே, அபு சுஃபியான் ஒரு தாராள மனது இல்லாத மனிதர், நான் அவரிடம் இருந்து எனக்காக எடுப்பதை தவிர என்னிடம் எதுவும் இல்லை”. அதற்கு நபி (ஸல்) கூறினார்கள், ” உனக்கும் உன் பிள்ளைக்கும் தேவையான அளவை நியாயமாக எடுத்துக்கொள்ளலாம்.”

பிரிட்டனில் நாங்கள் எங்களின் உண்மையான இஸ்லாமிய வாழ்வை இங்குள்ள மலிவான மதச்சார்பற்ற சமுதாயத்தின் தரத்திற்கு தோதாக மாற்றுதற்கு அதிகதிகமான அழுத்தத்திற்கு உள்ளாகிறோம், குறிப்பாக இத்தகைய வெக்கமில்லா நிகழ்ச்சியின் மூலமாக. அவர்கள் கூறுவதில் கடுகு அளவு உண்மை இருந்தாலும் நமக்கு பொய்யை உண்மையிலிருந்து பிரிக்க தெரிய வேண்டும், சமைப்பதற்கு முன் அரிசியில் இருந்து சிறு கற்களை பிரிப்பது போல். இந்த மதச்சார்பற்ற மேல்தட்டினர் ஒரு சிறிய பொய்யினை நுழைக்க நூறு உண்மையை சந்தோஷமாக சொல்வார்கள். இவர்கள் கூறும் எல்லா அழுகிய பொய்கள், தீய திணிப்புகள், மேலும் தீர்வு என முன்மொழிந்தவைகளை நாம் எடுத்துக்கொள்ள ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது, ஏனெனில் இது அல்லாஹ் தனது நபிக்கு(ஸல்) அருளிய தூய வழிமுறைகளை மனிதகுலம் இப்பொது சந்திக்கும் எல்லா துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமான மனிதன் உருவாக்கிய அழுகிய சிந்தனைகளுக்கு மாற்றியமைக்கும் பாதையாகும்.

அபு ஹுரைரா (ரலி) மீண்டும் மீண்டும் திருடும் ஒருவனை பிடித்தார், ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் கூறிய சாக்குகளை கேட்டு பரிதாபப் பட்டார். கடைசியில் நபி (ஸல்) அவரிடம் கேட்டப்போது, ” நேற்றைய தினம் என்னசெய் தான் நீர் சிறைப்பிடித்தவர் ?” நான் கூறினேன், “அல்லாஹ் எனக்குப் பயன் தரக்கூடிய சில வார்த்தைகளை அவன் எனக்கு கற்றுக் கொடுத்து அதற்காக நான் அவனை விட்டுவிட வேண்டும், என்று கூறினான் ” என்றேன். நபி (ஸல்) “அவை யாவை? ” என்று கேட்டார்கள். நான் கூறினேன், ” அவன் என்னை நோக்கி, ‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போதெல்லாம், ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஆயத்-அல்-குர்சியை ஓதுங்கள், அல்லாஹ் உங்களுக்கு ஒரு பாதுகாவலரை அமைப்பான், அவர் உங்களுடன் இருப்பார், மற்றும் எந்த ஷைத்தானும் உங்களை காலை வரை தீண்டாது“. நபி (ஸல்) கூறினார்கள், “அவன் உண்மையை பேசினான், அவன் ஒரு முழுமையான பொய்யன் என்றாலும் “. இந்த மூன்று இரவுகள் நீங்கள் யாரிடம் பேசினீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா, ஓ அபூ ஹுரைரா? ” என்றார்கள். ” இல்லை “என்றார் அபூ ஹுரைரா. நபி (ஸல்) கூறினார், ”அது ஷைத்தான்“.

அவர் சத்தியத்தை பேசினாலும், ஷைத்தானிடமிருந்து ஆலோசனையைப் பெற நாம் தயாரா? அதே அடையாளமாய், மதச்சார்பற்ற நாடுகளில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வு கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும், நாம் நம்முடைய இஸ்லாமிற்க்கு மாற்றாக ஒரு மதச்சார்பற்ற தீர்வைக் கொண்டுவரும் எவரிடமும் தீர்வு காண நாம் தயாராக இருக்க கூடாது.

Comments are closed.