சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இஸ்லாத்திலிருந்து வெளியேற எத்தனிப்பவர்களை கிலாஃபத் எவ்வாறு எதிர்கொள்ளும்?

சமயத்திலிருந்து வெளியேறுதல் எனும் விஷயமானது இஸ்லாமிய சித்தாந்தத்தை பாதுகாப்பது சம்மந்தமான சட்டங்களின் ஒரு பகுதியாக அமைகிறது. அதேபோல் முதலாளித்துவமும் கம்யூனிசமும் தத்தமது சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான பொறிமுறையை கொண்டுள்ளன எனவே அதை வலுவிழக்கச் செய்யும் விதமாக தமது குடிமக்களில் எவரேனும் முயற்சி செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை அவை எடுத்து வருவதை நாம் காணலாம். இந்த பின்னணியின் அடிப்படையில் தான் சமயத்திலிருந்து வெளியேறுதல் குறித்தான இஸ்லாமிய சட்டங்களை புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அடிப்படையில் இஸ்லாத்தில் நுழைவதென்பது ஒரு ஒப்பந்தத்தில் நுழைவது போன்றாகும். அதில் நுழைவதற்கு எவ்விதமான நிர்ப்பந்தமும் கிடையாது. மக்கள் தங்களது சுயவிருப்பின் அடிப்படையிலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதில் வலுக்கட்டாயம் இல்லாத காரணத்தால் அறிவுப்பூர்வமாக நம்பிக்கை கொள்ளுதல் என்பது மேலோங்கியிருக்க வேண்டும் ஏனெனில் குறிப்பாக சுயவிருப்பம் கொண்டு இஸ்லாத்தில் நுழையும் எவரேனும் இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் அவர் மீது மரண தண்டனை விதிக்கப்படும் என்று நன்றாக அறிந்திருக்கும் காரணத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேற முடியாது என்பதை அறிவார் – எனவே இது அறிவார்ந்த ரீதியில் நம்பிக்கை கொள்ளும் தேவையை உறுதி படுத்துகிறது. அதேபோல் இந்த சித்தாந்தத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக எவரேனும் வெளிப்படையாக முஸ்லிமாக ஆகி அதன்பிறகு அதைவிட்டு வெளியேற நாடுவதை தடுக்கின்றது. சித்தாந்த ரீதியிலான எந்தவொரு அரசும் அதன் அடிப்படைகள் மீது வெளிப்படையாக கேள்வி எழுப்புவதற்கு அனுமதிக்காது ஏனெனில் அது அந்த சித்தாந்தத்தை வலுவிழக்கச் செய்து அதை அகற்றி வேறொன்றின் மூலமாக அதை மாற்றியமைக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்.

கிலாஃபத்தானது ஒரு சர்வாதிகார அரசு கிடையாது. அது தனது குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வை (அதாவது அவர்களுடைய வீடுகளில்) கண்காணிக்காது. ஆகவே கிலாஃபத்தில் உள்ள அனைத்து குடிமக்களும் அவர்களுடைய இலலங்களுக்குள் அவர்கள் நினைத்தவாறு செயல்படுவதற்கும் சிந்திப்பதற்கும் அனுமதியளிக்கப்படுகின்றனர். ஆகவே கிலாஃபத்தில் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி அதை ரகசியமாக வைத்து அல்லது கிலாஃபத்திலிருந்து வெளியேற நாடினால், இஸ்லாமிய அரசு அவர் மீது எந்தவொரு தண்டனையையும் விதிக்காது ஏனெனில் அந்த மனிதர் ஒருபோதும் இஸ்லாமிய சித்தாந்தத்தை வெளிப்படையாக குறைத்து மதிப்பிடவில்லை, இஸ்லாமிய சித்தாந்தத்தை ஒருபோதும் வெளிப்படையாக குறைத்து மதிப்பிடாத மனிதர் மீது அரசு எந்தவொரு தண்டனையையும் நடைமுறைப் படுத்தாது. இஸ்லாமிய ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்ததில் நாம் புரிந்து கொண்டது என்னவென்றால், இஸ்லாத்திலிருந்து வெளியேற வேண்டும் என தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுடைய செயல்பாடுகளும் அவருக்கு அடுத்து வந்த தலைமுறையினரின் (ஸஹாபாக்கள ) செயல்பாடுகளும் விளக்குவது என்னவென்றால் சிறந்த முறையில் பகுத்தறிவு ரீதியிலான ஆதாரங்களை முன்வைத்து அவர்களிடத்தில் தீவிரமான முறையில் விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை அதன்பிறகும் அவர்கள் மனம் மாறவில்லை என்றால் இஸ்லாமிய சித்தாந்தத்தை சிதைக்கும் முயற்சியை மேற்கொண்ட காரணத்திற்காக மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பது தான்.

மரண தண்டனை என்பது இஸ்லாத்திற்கு மட்டும் பிரத்யேகமானது கிடையாது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 38 மாகாணங்கள் மரண தண்ணனையை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலானவர்கள் மரண தண்டனைக்கு ஆதரவாக இருப்பதாக கணக்கெடுப்புகள் நெடுங்காலமாக தெரிவித்து வருகிறது. ஜூலை 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஏபிசி செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பானது 65 சதவீதத்தினர் மரண தண்டனைக்கு ஆதரவாக இருப்பதாகக் கண்டது, இதனுடன் 2000 ஆண்டு முதல் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான கணக்கெடுப்புகள் ‘தேவையான அளவுக்கு மரண தண்டனைகள் அடிக்கடி விதிக்கப்படுவது இல்லை’ என்று அமெரிக்கர்களில் பாதி பேர் நம்புகின்றனர் என்பதை காட்டுகிறது.

பிரிட்டனில் 1998 ஆம் ஆண்டு, “போரின் போது அல்லது உடனடியாக போர் நடைபெறுவதற்கான அபாயம் இருக்கும் சமயம்” தவிர மரண தண்டனையை தடுக்கும் மனித உரிமை மீதான ஐரோப்பிய மாநாட்டின் 6வது குறிப்பை உறுதி செய்வதற்கு சாதகமாக அதன் கீழ் சபை வாக்களித்தது. இன்று பிரிட்டனில் கலகம் செய்வதும் ராஜ துரோகம் செய்வதும் மரண தண்டனையை பெற்றுத்தரக் கூடியதாகும்.

Comments are closed.